11/04/2026
வேப்பமரம் இயற்கை குளிர்சாதனம்.
வேப்ப மரம் 55°C முதல் 100° வரையிலான வெப்பநிலையைத் தாங்கும். ஒரு 12 அடி மரம் 3
குளிர்சாதனங்களுக்கு சமமான உற்பத்தி செய்யும் இயற்கையாகவே குளிர்ச்சியை அளிக்கிறது...
11/04/2026
ஒரு வளர்ந்த பெரிய மரத்தின் நன்மைகள்.
ஒவ்வொரு நாளும் சுமார் 380 லிட்டர் தண்ணீரை ஆவியாக்கி வளிமண்டலத்தில் வெளியிடுகிறது.
இந்த விளைவு 5 முதல் 8 ஏர் கண்டிஷனர்களுக்கு சமமான குளிரூட்டும் விளைவை அளிக்கிறது,
மேலும் வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
சுத்தமான சுவாசக் காற்றை நமக்காக இலவசமாக தருகிறது.
தினம் ஒரு மரம் நடுவோம்...
11/04/2026
🌳 *அகலக்குடை மரங்களை (அரசு, ஆல், இலுப்பை) சரியான இடத்தில் நடவும்...*
ஆல், அரசு, இலுப்பை போன்ற மரங்கள் பிரம்மாண்டமாக அகலக்குடை விரித்து வளரக்கூடியவை. முக்கியமாக அரச மரம் மற்ற மரங்களை இரண்டு மரங்கு வேகமாக வளரக்கூடியது. வெறும் 20 வருடங்களில் அதிக நிலப்பரப்பை ஆக்கிரமித்துவிடும். எனவே அதற்கு போதுமான இடவசதி உள்ள சரியான இடத்தை தேர்வு செய்து நடுவது அவசியமாகும். மேலும் மற்ற மரங்களுடன் அரசு மற்றும் ஆல மரங்களை நடும்போது மரத்திற்கு மரம் இடைவெளியை அதிமாகக் கொடுக்கவேண்டும்.
சரியான இட வசதியில்லா நிலத்தில் நடும்போது சில ஆண்டுகளிலேயோ அல்லது வளர்ந்த மரங்களையோ வெட்டும் சூழ்நிலை ஏற்படும்போது, மன வருத்தத்தை அளிப்பதோடு மரம் வளர்ப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியும் வீணாகிவிடும். மரக்கூண்டு அமைப்பது கால்நடை மேய்ச்சலில் இருந்து காப்பாற்றும்.
*அரச மரம் நடுவதற்கு உகந்த இடம்*
குளம் மற்றும் ஏரிக்கரைகள், விசாலமான ஊர் பொது நிலம், விசாலமான கோயில் நிலம், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அகன்ற சாலையோரங்கள் போன்ற இடங்களில் நட்டு வளர்க்கலாம். மேலும் கன்று நட்டு சில வருடங்களுக்கு கன்றுகளை கவனித்து பராமரிக்க உகந்த இடமாக இருக்க வேண்டும்.
*தவிர்க்க வேண்டிய இடங்கள்*
*கட்டிடக்கழிவுகள் கொட்டிய இடம்*
சாலையோரங்கள் மற்றும் ஊர் பொது இடங்களில் கட்டிடக்கழிவுகளை கொட்டி அதன்மேல் சிறிது மண் போட்டிருப்பார்கள், அத்தகைய இடங்களில் மரங்களை நடுவதை தவிர்க்க வேண்டும்.
*குறுகிய சாலைகள் தவிர்க்கவும்*
குறுகிய சாலைகளில் அரச மரம் நடும்போது, சில வருடங்களில் போக்குவரத்திற்கு இடையூராக மரம் வளர்ந்துவிடும் என்பதால் மரத்தை வெட்ட வேண்டிய சூழல் ஏற்படும்.
*சுற்று சுவர் அருகே நடக்கூடாது*
அரச மரங்கள் வேகமாக வளர்ந்துவிடும் என்பதால் பள்ளி, கல்லூரி், கோயில், அலுவலக வளாகங்களில் நடும்போது சுற்று சுவருக்கு அருகில் நடக்கூடாது. சுற்றுச் சுவரில் இருந்து குறைந்த பட்சம் 10 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். சுற்றுச்சுவரை ஒட்டி நடவு செய்தால் 5 - 10 ஆண்டுகளிலேயே சுற்று சுவரை உடைத்துவிடும் என்பதால் அரச மரத்தை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
*தண்ணீர் மற்றும் கழிவு நீர் குழாய் அருகில்*
அரச மரம் உள்ள நிலத்திற்கு கீழே தண்ணீர் குடிநீர் குழாய்கள், கிராம தண்ணீர் குழாய்கள் இருக்கக்கூடாது. எதிர்காலத்தில் அரச மர வேர்கள் குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம்.
*மேல்நிலை மின்கம்பி (Aerial cables)*
பொதுவாக உயரமாக வளரக்கூடிய மரங்கள் என்றால் மேல்நிலை மின் கம்பிகள் (Aerial cables) செல்லாத இடத்தில் நடுவது உகந்தது. அரசமரம் என்றால் சுற்றிலும் கவனித்து நடவேண்டும்.
*நிலத்தடி மின்கம்பி (UG cables)*
நகரங்களில் பல்வேறு கேபிள் இணைப்புகள் இருக்கும். மின்சாரம், தொலைத்தொடர்பு இணைப்புகள் செல்லும் பாதைகளில் அரச மரம் நடக்கூடாது.
*அகலப்படுத்தக்கூடிய சாலைகள்*
சில சாலைகளை அகலப்படுத்துவற்கு திட்டமிட்டிருப்பார்கள், அத்தகைய சாலைகளில் அரச மரங்கள் நடக்கூடாது.
*வேளாண்நிலங்களில் நடும்போது*
பொதுவாக வேளாண் நிலங்களில் ஆல்,அரசு மரங்கள் நடுவதில்லை, எனினும் இலுப்பை மரங்களை வேளாண் நிலங்களில் நடுவார்கள். பழங்களுக்காக இலுப்பை மரங்களை நடவு செய்தால் இரண்டு இலுப்பை மரத்திற்கு நடுவில் 25 அடி இடைவெளி விட்டு நடவேண்டும். ஏனெனில் மரம் பிரம்மாண்டமாக வளரும். மேலும் வேலியோரங்களில் நடவு செய்தால் 20 அடி உள்ளே தள்ளி நடவேண்டும்...
11/04/2026
ஐயா காமராஜ் மற்றும் ஏ பி ஜே அப்துல் கலாம் ஐயா அவர்கள் இறந்த பொழுது அவர்களின் சொத்தின் மதிப்பு...
11/04/2026
பெரிய கடை வீதி - 1946
Big Bazar Street - 1946
11/04/2026
🌍🚆 ஜெர்மனியில் பசுமை புரட்சி ரயில்கள்!
ஜெர்மனியில் தற்போது பயணிகள் ரயில்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பெரிய மாற்றத்தை கண்டுள்ளன. பாரம்பரிய டீசல் எந்திரங்களை மாற்றி, ஹைட்ரஜன் (Hydrogen) எரிபொருள் பயன்படுத்தும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களின் முக்கிய சிறப்பு என்ன தெரியுமா? 🤔
👉 இவை இயங்கும்போது கார்பன் டைஆக்சைடு (CO₂) வெளியிடாது
👉 அதற்குப் பதிலாக வெறும் நீராவி (Water V***r) மட்டுமே வெளியிடுகின்றன
இதனால்,
🌱 காற்று மாசு குறைகிறது
🌱 காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது
🌱 எதிர்கால போக்குவரத்து முறைக்கு ஒரு சிறந்த மாதிரியாக திகழ்கிறது
இந்த புதிய தொழில்நுட்பம், உலகம் முழுவதும் பசுமையான போக்குவரத்துக்கு வழி காட்டுகிறது. இனி வரும் காலத்தில், நாமும் இதுபோன்ற சுற்றுச்சூழல் நட்பு ரயில்களை அதிகமாக பார்க்கலாம்! 🌏💚
22/12/2025
நேற்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழாவில்
தொல் திருமாவளவன் MP அவர்களுக்கும்
கணபதி ராஜ்குமார் MP அவர்களுக்கும் அன்பு பரிசாக மரக்கன்றுகள் வழங்கிய மகிழ்ச்சியான தருணம்...
10/11/2025
பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 விஷயங்கள்
நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள்.
அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.
1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.
2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?
3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.
4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!
5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.
6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.
7. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.
8. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் தெரிந்து கொள்ளட்டும். உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.
9. புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே உங்கள் மகளுக்கு பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.
10. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். வெளியுலகில் எந்த மாதிரி பிரச்சனைகள் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள். மேலும் தற்காப்பு கலைகளையும் சொல்லி கொடுங்க.
11. இன்றைய காலகட்டத்தில் அனைத்து விஷயங்களுக்கும் அடுத்தவர் கையை எதிர் பார்க்க முடியாது. அனைத்து வேலைகளை பற்றியும் சொல்லி கொடுங்க. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள்.
12. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்!