CNI.Coimbatore

CNI.Coimbatore

Share

ஒரே கிறிஸ்து - ஒரே கிறிஸ்தவம்

05/04/2026

வணக்கம்!

கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆசியுடனும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் வழி நடத்துதலுடனும், கழகமெனும் விருட்சத்தின் வேர்களாம் முன்னோடிகள் மற்றும் கோடான கோடி உடன்பிறப்புகளின் ஒத்துழைப்புடனும்,தொகுதி மக்களின் ஏகோபித்த பேராதரவுடனும் இன்று(04-04-2026) காலை 11 மணிக்கு,
மாநகராட்சி மண்டல அலுவலகம் -2 இல், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை
தாக்கல் செய்கிறேன்.

கழக அடலேறுகளாம் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

அலைகடலென திரண்டு வாரீர்.

அயராத உழைப்பால் திராவிட திசைகாட்டி தளபதி அவர்களின் 2.0 ஆட்சி, மீண்டும் அமையப்போவதை உறுதிப்படுத்துவோம்!
வென்று காட்டுவோம்!! #ஸ்டாலின்_தொடரட்டும்


.0

#தலைவர்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#திருச்சிகிழக்கு_திமுக_வெற்றிபெறட்டும்
.0

05/04/2026

✝️ இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் ✝️

மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த நம்பிக்கையின் நாள் –
அதுவே ஈஸ்டர் தினம்! 🌅

இது கிறிஸ்தவர்கள் கொண்டாடும் மிக முக்கியமான திருநாளாகும்.
இந்நாளில், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று நம்பப்படுகிறது.

🌿 ஈஸ்டர் தினத்தின் முக்கியத்துவம்:

மரணத்தை வென்ற உயிர்த்தெழுதல் – நம்பிக்கையின் சின்னம்

இருள் முடிந்து வெளிச்சம் தொடங்கும் நாள்

பாவ மன்னிப்பு மற்றும் புதிய வாழ்வு குறிக்கும் நாள்

அன்பு, சமாதானம், மன்னிப்பு ஆகியவற்றின் நினைவுநாள்

✨ ஈஸ்டர் நமக்கு சொல்லும் செய்தி: “எந்த சிரமம் இருந்தாலும், அதன் முடிவில் வெற்றி உண்டு!”
“இருள் நீங்கும்… ஒளி உதிக்கும்!”

💐 இந்த புனித நாளில்,
உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம், அமைதி, நம்பிக்கை நிரம்பி வழியட்டும்!

🙏 உயிர்த்தெழுந்த ஆண்டவர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கட்டும்!

He is Risen! ✝️✨
Hope is alive… Love has won…
Let this Easter fill your heart with joy, peace & new beginnings 💛🌸

31/03/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!

தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!

தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄

08/03/2026

“வலிமையும் கௌரவமும் அவளுடைய ஆடை;
வரப்போகிற நாளைப் பற்றி அவள் மகிழ்கிறாள்.”

நீதிமொழிகள் 31: 25

இன்று உலக மகளிர் தினம் 🌷
தேவன் வேதாகமத்தில் பல மகத்தான பெண்களை எழுப்பி, அவர்களின் வாழ்க்கையின் மூலம் உலகத்திற்கு ஒரு பெரிய சாட்சியை கொடுத்தார்.

📖 மரியா (Mary) – தாழ்மையும் கீழ்ப்படிதலும் கொண்ட பெண்.
தேவனுடைய சித்தத்தை ஏற்று, இரட்சகரை உலகத்திற்கு கொண்டு வந்த ஆசீர்வதிக்கப்பட்ட பெண்.

📖 எஸ்தர் (Esther) – தைரியமும் நம்பிக்கையும் கொண்ட ராணி.
தன் ஜனங்களை காப்பாற்ற தேவன் பயன்படுத்திய வீரமான பெண்.

📖 ரூத் (Ruth) – விசுவாசமும் விசுவாசத்திற்கான நிலைத்தன்மையும் கொண்ட பெண்.
அவள் தேவனை நம்பியதால், ஆசீர்வாதத்தின் தலைமுறையில் இடம் பெற்றாள்.

🌸 இவ்வாறு தேவன் பெண்களை
அன்பின் கருவியாகவும்,
ஆசீர்வாதத்தின் வாயிலாகவும்,
சாட்சியின் பாத்திரமாகவும் பயன்படுத்துகிறார்.

✨ அனைத்து பெண்களுக்கும்
உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்!

டாக்டர்.இனிகோ இருதயராஜ்
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்,

தலைவர் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்





Photos from CNI.Coimbatore's post 10/11/2025

ஒரே கிறிஸ்து! ஒரே கிறிஸ்தவம்!!
அனைவருக்கும் வணக்கம்!!
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் *மாண்புமிகு முனைவர் திரு.S.இனிகோ இருதயராஜ்* அவர்களின் வழிகாட்டுதலின்படி *பொதுச் செயலாளர் திரு.ஜான் பிரகாஷ்* அவர்களின் அறிவுறுத்தலின்படி
கோவை மாவட்டத்திற்கு நமது இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் தயாநிதி அவர்கள், மாநில அமைப்பு செயலாளர் அண்ணன் டேவிட் சாலமன் அவர்கள்,மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அண்ணன் ஜேக்கப் சரவணன் அவர்களும் 06/11/2025ஆம் தேதி (வியாழக்கிழமை) வருகை தந்தனர்.
அன்று மாலை அவர்களின் தலைமையில் கோவை மத்திய மாவட்டத்தின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அவர்களை மண்டல செயலாளர் வழக்கறிஞர் திரு ஜெரோம் ஜோசப் அவர்கள் வரவேற்று மரியாதை செலுத்தினர்.மத்திய மாவட்ட செயலாளர் திரு.ஜான் சார்லஸ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
அதில் மாநில சிஎஸ்ஐ துணை பொறுப்பாளர் டாக்டர் ப்ரீத்தி கெரோலின், மாநில தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் திரு.A.M.வினோத்,கோவை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.ரீகன், ITவிங் அமைப்பாளர் தன்யா ஜெயக்குமார்,மகளிர் அணி அமைப்பாளர் ஸ்டெப்பினா ரோஸ், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நன்றி.🙏
வினோத்.A.M
மாநில துணைச் செயலாளர் IT WING.
98949-89008.

Photos from CNI.Coimbatore's post 07/11/2025

ஒரே கிறிஸ்து! ஒரே கிறிஸ்தவம்!!
கோவை மண்டல
**கொங்கு மண்டல போதகர்கள் கூடுகை** நடைபெற்றது.
இக்கூட்டதில்...கொள்கை பரப்பு செயலாளர் போதகர் தயாநிதி,
மாநில செயற்குழு உறுப்பினர் சத்திய பால்,
மாநில அமைப்பு செயலாளர் திரு.டேவிட் சாலமன்,
தகவல் தொழில்நுட்பம் அனி செயலாளர் ஜேக்கப் சரவணன்,
மண்டல செயலாளர் வழக்கறிஞர் ஜெரோம்,
கோவை மத்திய மாவட்ட செயலாளர் சார்லஸ்,
கோவை மேற்கு மாவட்ட செயலாளர் ரீகன்,
ஆகியோர் பங்கேற்றனர்

நன்றி.🙏
வினோத்.A.M
மாநில துணைச் செயலாளர் IT WING.
98949-89008.

31/10/2025

ஒரே கிறிஸ்து! ஒரே கிறிஸ்தவம்!

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்டம் நடத்திய சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்கம் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற்றது.

நம்முடைய இயக்கத்தின் தலைவர் மாண்புமிகு அண்ணன் டாக்டர் இனிகோ இருதயராஜ் (MLA) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ தலைவர்களும் நமது இயக்கத்தின் அனைத்து மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும், தமிழகத்தின் அனைத்து மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.

**மேலே காணப்படுவது நிகழ்வின் வீடியோ பதிவு ஆகும்.**

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்- கோவை மாவட்டம்
வினோத்.A.M
மாநில துணைச் செயலாளர் IT WING.
98949-89008.

Photos from CNI.Coimbatore's post 29/06/2025

ஒரே கிறிஸ்து ஒரே கிறிஸ்தவம்*

*மாண்புமிகு தலைவர் முனைவர் திரு.இனிகோ இருதயராஜ் MLA* அவர்களின் ஆணையின்படியும்,மற்றும்

மாநில பொது செயலாளர் அண்ணன் ஜான் பிரகாஷ், மற்றும் அமைப்பு செயலாளர் அண்ணன் டேவிட் சாலமன் அவர்களின் வழிகாட்டுதலுடன்

நேற்று (28/06/2025) (சனிக்கிழமை) மத்திய மாவட்டம் பொறுப்பாளர்களுக்கான நியமன அட்டை வழங்கும் நிகழ்வு மண்டல செயலாளர் வழக்கறிஞர் திரு.ஜெரோம் ஜோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அதில் மாநில சிஎஸ்ஐ துணை பொறுப்பாளர் டாக்டர் ப்ரீத்தி கெரோலின் மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் திரு.A.M.வினோத் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் திரு.ஜான் சார்லஸ் ,கோவை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.ரீகன் அவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது.இதில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு அவர்களின் நியமன அட்டையை பெற்றுக் கொண்டனர் .

நன்றி.🙏
வினோத்.A.M
மாநில துணைச் செயலாளர் IT WING.
98949-89008.

Photos from CNI.Coimbatore's post 08/06/2025

*ஒரே கிறிஸ்து ஒரே கிறிஸ்தவம்*

அனைவர்க்கும் வாழ்த்துக்களுடன்,.

கோவை மண்டல நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் 07/06/25 அன்று சிறப்பாக கோவையில் நடைபெற்றது.

*மாண்புமிகு தலைவர் முனைவர் திரு.இனிகோ இருதயராஜ் MLA* அவர்களின் ஆணையின்படியும்,மற்றும்

மாநில பொது செயலாளர்,
பொருளாளர்,
முதன்மை செயலாளர்,
துணை தலைவர்கள், அமைப்பு செயலாளர்
கொள்கை பரப்பு செயலாளர், கோவை மண்டல செயலாளர் ஆலோசனையுடன் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்திற்கு இயக்கத்தின் மாநில பொது செயலாளர் அண்ணன் JP அவர்களும், துணை தலைவர் அண்ணன் D.S.அமிர்தம் அவர்களும் , அமைப்பு செயலாளர் அண்ணன் டேவிட் சாலமன் அவர்களும் ,கோவை மண்டல செயலாளர் அண்ணன் Adv.ஜெரோம் ஜோசப் அவர்களும் ,மாநில துணை அமைப்பாளர்கள் Dr.ப்ரீத்தி அவர்களும்,
வினோத் A.M அவர்களும் மற்றும்
மெர்வின் பிரபு அவர்களும்.
மாவட்ட பொறுப்பாளர்கள் ரீகன் அவர்களும், ஜோசப் அவர்களும், டைட்டஸ் அவர்களும்,குணசீலன் அவர்களும்,சகாயநாதன் அவர்களும் பங்கு பெற்று சிறப்புரையாற்றினார்கள்.

இயக்கத்தின் மற்ற பொறுப்பாளர்களும், கிறிஸ்துவ விசுவாசிகளும் பங்கு பெற்று கூட்டத்தை சிறப்பிக்கச் செய்தனர்.

நன்றி.🙏
வினோத்.A.M
மாநில துணைச் செயலாளர் IT WING.
98949-89008.

06/06/2025

கோவை மண்டல நிர்வாவாகிகள் ஆய்வுக் கூட்டம் 07/06/2025 காலை 10.00.

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Coimbatore
641038