பகவத் கீதை பாராயணம்

பகவத் கீதை பாராயணம்

Share

பகவத் கீதையையும், கிருஷ்ண பக்தியையும் சமுதாயத்தில் பரப்புவதே இந்த குழுவின் நோக்கம் ஆகும்

28/12/2025

குவலயாபீடம் யானையின் முற்பிறவி

ஆதாரம் :- ஸ்ரீ கர்க ஸம்ஹிதை

பஹுலாஸ்வன மன்னர் .நாரதரிடம், நாரதரே! குவலயாபீடம் யானை முற்பிறவியில் யாராக இருந்தது? எப்படி யானைப் பிறவியை அடைந்தது? எந்தப் புண்ணியத்தால் ஸ்ரீ கிருஷ்ணனுடன் கலந்தது ? என்று கேட்டார்.

நாரதர் கூறினார், மகாபலி சக்ரவர்த்திக்கு மந்தமதி என்ற ஒரு புதல்வன் இருந்தான். பேருருவம் கொண்ட பலசாலியானஅவன் லக்ஷ் யானை பலத்தோடு திகழ்ந்தான்.

ஒருமுறை அவன் ஸ்ரீ ரங்கநாத க்ஷேத்திரத்திற்கு யாத்திரை கிளம்பினான். க்ஷேத்திர தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் இடையில் மந்தமதி ஒரு யானையைப் போல வேகத்தோடு கைகளை அசைத்து கொண்டு மக்களை நசுக்கியவாறு சென்று கொண்டிருந்தான். அவன் கைகளின் வேகத்தால். யாத்திர்களிடைய சென்று கொண்டிருந்த வயதான த்ரித முனிவர் , அவன் கையசைவின் வேகத்தால் கீழே விழுந்துவிட்டார். கோபமடைந்த அவர் பலிகுமாரனுக்கு சாபமளித்தார்.

த்ரித முனிவர் கூறினார்: " ஸ்ரீ ரங்கநாத க்ஷேத்திரத்திற்கு பகவான் ஶ்ரீரங்கநாதரை தரிசிக்க வந்த யாத்திரீகர்களை மதங்கொண்ட யானையை போல நீ அனைவரையும் நசுக்கியவாறு சென்று கொண்டிருக்கிறாய். முட்டாளே, துர்புத்தியுடையவனே நீ யானையாககடவாய் என்று சபித்து விட்டார். இவ்விதம் சபிக்கப்பட்ட உடனேயே மந்தமதி ஒளியிழந்து அவனது உடல் பாம்பு தோலைப்போல விடுபட்டு கீழே விழுந்துவிட்டது. முனிவரின் பிரபாவத்தை அறிந்துகொண்ட அரக்கன் உடனே கைகுவித்து வணங்கினான்

மந்தமதி, முனிவரை வலம்வந்து வணங்கி " முனிவரே/க்ருபாசிந்தோ (கருணைக்கடலே) தாங்கள் பிராமண சிரோமணியான யோகீந்திரர். இந்த யானைப் பிறவியிலிருந்து எனக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்பதைக் கூறுங்கள். இன்று முதல் தங்களைப் போன்ற மகாத்மாக்களை ஒருபோதும் அவமதிக்க மாட்டேன். தேவா தங்களைப் போன்ற முனிவர்கள் சாபம், வரம் இரண்டையும் அளிக்க வல்லவர்கள் ஆகவே தயை கூர்ந்து கருணை காட்டுங்கள் என்று வேண்டினான்.

நாரதர் கூறுகிறார்: "மன்னா! அந்த அரக்கனால் மகிழ்விக்கப்பட்ட முனிவர் த்ரிதரின் கோபம் தணிந்து, பின்னர் அந்த அரக்கனிடம் கூறினார் 'அரக்கனே என் சொல் பொய்யாக முடியாது. இருந்தாலும் உன் பக்தியால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். ஆகவே தேவர்களுக்கு அரிதான ஒரு திவ்ய வரமளிக்கப் போகிறேன். கவலைப் படாதே. ஸ்ரீஹரியின் நகரமான மதுராபுரியில் ஸ்ரீ கிருஷ்ணன் கையால் உனக்கு முக்தி கிடைக்கும், ஐயப்படாதே. என்று கூறினார். மேலும் அதே மந்த மதி எனும் அரக்கனே விந்திய மலை மீது குவலயாபீடம் என்னும் பெயரில் பிரசித்திபெற்ற யானையாக இருந்தான் தனியாக இவன் ஒருவனே பத்தாயிரம் யானைகளுக்குச் சமமானவனாக இருந்தான். அவனை ஜராசந்தன் லக்ஷம் யானைகள் மூலம் பிடித்தான். அரசே பின் அந்த யானையை கம்சனுக்கு வரதட்சணையாக அளித்துவிட்டான்.

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் குவாலயபீட யானையை கொல்லுதல்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கம்சனை வதம் செய்ய மதுராபுரிக்கு வந்தார் மல்யுத்த களத்தில் ஒலித்த பறைகளின் ஓசையை கேட்டு கிருஷ்ணரும் பலராமரும் வேடிக்கை பார்க்க அங்கு சென்றனர். மல்யுத்த மண்டபத்தின் வாயிலில் குவலையாபீட என்ற மாபெரும் யானை ஒன்று, பணியாளர்களின் கவனிப்பில் நிறுத்தப்பட்டிருந்தது. வழியை வேண்டுமென்றே மறைக்கும் நோக்கத்தில் யானை நிறுத்தப்பட்டிருப்பதை உணர்ந்த கிருஷ்ணர், கர்ஜிக்கும் குரலில், யானையின் காவலரிடம், "கயவனே, வழியை மறித்தால் உன்னையும் உன் யானையையும் யமலோகம் அனுப்புவேன்" என்று கூறினார்.

கிருஷ்ணரால் அவமதிக்கப்பட்ட காவலன், கோபமடைந்து தன் திட்டப்படி, கிருஷ்ணரை தாக்கும்படி யானைக்கு உத்தரவிட்டான். தவிர்க்க முடியாத மரணத்தை போல யானை கிருஷ்ணரை நோக்கி முன்னேறி, தன் துதிக்கையால் அவரை பிடிக்க முயற்சித்தது. கிருஷ்ணர் சாமர்த்தியமாக யானையின் பின் பக்கம் சென்று தப்பித்து கொண்டார். இதேபோல் யானையின் ஒவொரு தாக்குதல்களுக்கும் கிருஷ்ணர் தப்பிப்பதும் பதில் தாக்குதல் செய்வதுமாக இருந்தார். தம் சிறு வயதில் கன்றுகளின் வாலை பிடித்து இழுத்தது போல யானையின் வாலையும் பிடித்து இப்படியும் அப்படியும் இழுத்தார். யானை மிகவும் அலைக்கழிக்கப்பட்டு கோபமுடன் இருந்தது. பாகன் மேலும் விரட்டியதால் ஆவேசத்துடன் கிருஷ்ணரை நோக்கி பாய்ந்தது. கிருஷ்ணர் யானையின் துதிக்கையை பிடித்து இழுத்து, யானையையும் பாகனையும் கீழே வீழ்த்தினார். பின்பு யானையின் மீது ஏறி தாவி குதித்து யானையையும் பாகனையம் கொன்றார். முனிவர் கூறியபடி யானையின் ஜீவன் ஶ்ரீ கிருஷ்ணரில் கலந்து விட்டது.

யானையை கொன்ற பிறகு கிருஷ்ணர் அதன் ஒரு தந்தத்தை எடுத்து தோளின் மேல் வைத்து கொண்டார். பலராமர் அதன் மற்றோரு தந்தத்தை எடுத்து தன் தோளின் மீது வைத்துக்கொண்டு. நண்பர்கள் புடை சூழ அவர்கள் மல்யுத்த களத்தினுள் பிரவேசித்தார்கள்.

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஹரே கிருஷ்ண🙏

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

06/11/2025
Photos from பகவத் கீதை பாராயணம் 's post 19/05/2025

இன்றைய கீதை

Photos from பகவத் கீதை பாராயணம் 's post 17/05/2025

இன்றைய ஸ்ரீ மத் பாகவதம்....

15/05/2025

பகவத் கீதை உரைக்கப்பட்ட சூழ்நிலை
பெருமளவில் வெளியிடப்பட்டு படிக்கப்பட்டுள்ள பகவத் கீதை,
உண்மையில் மஹாபாரதத்தின் (பழங்கால உலக வரலாற்றைப் பற்றி
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இதிகாசத்தின்) ஒரு பகுதியாகும்.
மஹாபாரதம், தற்போதைய கலி யுகம் வரை நடைபெற்ற எல்லா
நிகழ்ச்சிகளையும் விளக்குகின்றது. இந்த யுகத்தின் ஆரம்பத்தில்,
ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பகவான் கிருஷ்ணர்,
பகவத் கீதையை தனது நண்பனும் பக்தனுமான அர்ஜுனனிடம்
கூறினார்.
பகவத் கீதை,மனிதர்கள் அறிந்த தத்துவ, மத உரையாடல்களில்
மிகச்சிறந்ததாகத் திகழ்கிறது. திருதராஷ்டிரரின் நூறு மகன்களுக்கும்
அவர்களது சகோதரர்களான பாண்டுவின் மகன்களுக்கும் இடையே
நடைபெற்ற மாபெரும் போருக்குச் சற்று முன்பு இஃது உரைக்கப்கக்கப்பட்டது.
திருதராஷ்டிரரும், பாண்டுவும் குரு
வம்சத்தில்
பிறந்த சகோதரர்கள்.
அந்த வம்சம் பூலோகம் முழுவதையும் ஆட்சி செய்த பரத
மன்னரிடமிருந்து வருவதாகும். எனவே, இக்காவியம் மஹாபாரதம்
என்று பெயர் சூட்டப்பட்டது. மூத்த சகோதரரான திருதராஷ்டிரர்
குருடராகப் பிறந்த காரணத்தினால், அவருக்குச் சேர வேண்டிய
அரியணை இளைய சகோதரரான பாண்டுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாண்டு இளம் வயதில் மரணமடைந்ததால், அவரது ஐந்து
குழந்தைகளும் - யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்-
அப்போது மன்னராகப் பொறுப்பேற்றிருந்த திருதராஷ்டிரரின்
பாதுகாப்பின்கீழ் வந்தனர். இதனால் திருதராஷ்டிரரின் மகன்களும்,
பாண்டுவின் மகன்களும் ஒரே விதமான செல்வச் செழிப்புடன்
வளர்க்கப்பட்டனர். அனைவருமே தேர்ச்சி பெற்ற துரோணரிடம்போர்க்
கலையைக் கற்றனர்.

பாட்டனார் பீஷ்மரிடமிருந்து
அறிவுரைகளைப் பெற்றனர்.பாண்டவர்களை எவ்வாறு
இருப்பினும், திருதராஷ்டிரரின் மகன்கள், குறிப்பாக துரியோதனன்
வெறுத்தான், பொறாமையுடன் இருந்தான்.
குருடராகவும் பலவீன மனமுடையவராகவும் திகழ்ந்த திருதராஷ்டிரர்,
பாண்டுவின் மகன்களுக்குப் பதிலாக, தனது மகன்களே அரியணை
ஏற வேண்டுமென விரும்பினார்.
எனவே, துரியோதனன் திருதராஷ்டிரரின் சம்மதத்துடன் பாண்டுவின்
இளம் மகன்களைக் கொல்லத் திட்டங்கள் தீட்டினான்.

சித்தப்பா விதுரர் மற்றும் பகவான் கிருஷ்ணரின் உதவியினால் மட்டுமே
பாண்டுவின் மகன்கள் அத்திட்டங்களிலிருந்து தங்கள் வாழ்வைக் காக்க முடிந்தது.

பகவான் கிருஷ்ணர் சாதாரண மனிதரல்ல-அவரே முழுமுதற்
கடவுள். அவர் இப்பூமிக்கு இறங்கிவந்து மற்றொரு வம்சத்தின்
இளவரசரைப் போல வசித்து வந்தார். அக்கதாபாத்திரத்தில்,
பாண்டுவின் மனைவியும் பாண்டவர்களின் தாயுமான குந்தி
(பிருதா), அவரின் அத்தை. எனவே, உறவினர் என்பதாலும்,
தர்மத்தை நித்தியமாகக் காப்பவர் என்பதாலும், கிருஷ்ணர்
பாண்டுவின் தர்ம புதல்வர்களுக்கு சாதகமாக இருந்து அவர்களைக்
காத்தார்.

இறுதியில், தந்திரக்காரனான துரியோதனன் பாண்டவர்களை
சூதாடும்படி சவால் விட்டான். விதிவசத்தால் நிகழ்ந்த அப்போட்டியில்,
துரியோதனனும் அவனது சகோதரன்களும், கற்பும் பக்தியும்
நிறைந்த பாண்டவர்களின் மனைவியான திரௌபதியை
கையகப்படுத்தினர்.

மேலும், இளவரசர்களும், மன்னர்களும் நிரம்பிய அந்த அரசவையில் அவளை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்த
முயன்றனர். தெய்வீகமான முறையில் குறுக்கிட்ட கிருஷ்ணரால்
அவள் காக்கப்பட்டாள். ஆனால் வஞ்சகமாக நடைபெற்ற அந்த
சூதாட்டத்தினால், பாண்டவர்கள் தங்கள் அரசை இழந்து பதிமூன்று
வருடங்கள் நாட்டை விட்டு விலகி வாழ நேர்ந்தது.
வனவாசம் முடிந்து திரும்பிய பாண்டவர்கள் உரிமையுடன் தங்களது
நாட்டைத் திருப்பித் தரும்படி துரியோதனனிடம் கோரினர். ஆனால்
அவனோ கண்மூடித்தனத்துடன் அதற்கு மறுத்தான். இளவரசர்கள்,
'ஆட்சி செய்ய வேண்டும் என்ற கடமைக்காக, ஐந்து பாண்டவர்
களுக்கு ஐந்து கிராமங்களாவது கொடுக்குமாறு வேண்டினர். ஆனால்,ஊசி
நுழையும் அளவு கூட இடம் அளிக்க மாட்டேன் என்று
கர்வத்துடன் உரைத்தான் துரியோதனன்.
இதுவரை நடந்த அனைத்தையும் பாண்டவர்கள் பொறுமையுடன்
தாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது போர் தவிர்க்க
முடியாததாயிற்று.
உலகிலுள்ள அரசர்கள் இரு பிரிவாகப் பிரிந்து. சிலர் பாண்டவர்
பக்கமும் வேறு சிலர் கௌரவர் பக்கமும் சென்றனர். கிருஷ்ணரே
பாண்டு மைந்தர்களின் தூதராக திருதராஷ்டிரரின் சபைக்குச் சென்று
அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவரது அறிவுரை
நிராகரிக்கப்பட்டபோது போர் நிச்சயமாயிற்று.

உயர்ந்த நீதிக் கோட்பாட்டின்படி வசித்த பாண்டவர்கள், கிருஷ்ணரை
பரம புருஷ பகவானாக அங்கீகரித்தனர்; ஆனால் திருதராஷ்டிரரின்
தீய மகன்களோ அவரை அவ்வாறு அங்கீகரிக்கவில்லை. இருப்பினும்,
விரோதிகள், நண்பர்கள் என்ற பாகுபாடின்றி அவரவர் விருப்பப்படி
போரில் பங்குபெற கிருஷ்ணர் ஒரு வழியை முன்வைத்தார்;
அதாவது, தனிப்பட்ட முறையில் கிருஷ்ணர் போரில் ஈடுபடப்
போவதில்லை-ஆனால். அவரின் படையை விரும்புவோர் அதைப்
பயன்படுத்திக்கொள்ளலாம், மறுபுறத்தில் அவர் ஆலோசகராகவும்
உதவியாளராகவும் விளங்குவார். அரசியல் நிபுணனான துரியோதனன்
ஆயுதம் தாங்கிய கிருஷ்ணரின் படையை உற்சாகத்துடன் எடுத்துக்
கொண்டான், அதே உற்சாகத்துடன் பாண்டவர்கள் கிருஷ்ணரை
ஆலோசகராக ஏற்றுக் கொண்டனர்.
இவ்வாறு. கிருஷ்ணர் புகழ்பெற்ற வில்லாளியான அர்ஜுனனின்
தேரை ஓட்டும் சாரதியானார். இரு படைகளும் அணிவகுக்கப்பட்டு,
போரிட தயாராக இருந்தபோது, திருதராஷ்டிரர் தனது காரியதரிசியான
சஞ்ஜயனிடம், "அவர்கள் என்ன செய்தனர்?” என்று ஏக்கத்துடன்
வினவ, பகவத் கீதை ஆரம்பமாகிறது.
காட்சி இப்போது அமைக்கப்பட்டு விட்டது. தற்போது, இந்த
மொழிபெயர்ப்பு மற்றும் பொருளுரை குறித்த ஒரு சிறு குறிப்பு
மட்டும் தேவைப்படுகிறது.
பகவத் கீதையின் பெரும்பாலான உரையாசிரியர்கள், கிருஷ்ணரை
ஒதுக்கிவிட்டு தங்களது சுயக் கருத்துக்களையும் தத்துவங்களையும்
வடிவமைத்துக்கொள்கின்றனர், மஹாபாரத வரலாற்றை ஒரு கட்டு
கதையாகக் கருதுகின்றனர், மேலும் கிருஷ்ணரை ஏதோவொரு
அறிவாளியின் கருத்தை விளக்குவதற்கான கவிதைப் பொருளாக
அல்லது மிஞ்சிப் போனால் ஒரு வரலாற்று நபராக ஏற்கின்றனர்.
ஆனால் கீதையின் வார்த்தைப்படி, கிருஷ்ணர் என்னும் நபரே பகவத்
கீதையின் சாரமும் இலக்குமாவார்.

இப்புத்தகத்தின் மொழிபெயர்ப்பும் அதனைத் தொடர்ந்து வரும்
பொருளுரையும் இதனைப் படிப்பவர்களை கிருஷ்ணரை நோக்கி
இட்டுச் செல்லும், விலகி அல்ல. எனவே, பகவத் கீதை
உண்மையுருவில் தன்னிகரற்றது. அதுமட்டுமன்றி, முரண்பாடுகள்
ஏதுமின்றி எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருப்பதாலும் இது
சிறப்பு வாய்ந்தது. கீதையைப் பேசுபவரும்
அதன் இறுதிக்
குறிக்கோளும் கிருஷ்ணரேயாதலால், இந்த வெளியீடு மட்டுமே
இம்மாபெரும் சாஸ்திரத்தை தெளிவாக வழங்கும் விளக்கவுரையாகும்.
-iskon Coimbatore

Photos from பகவத் கீதை பாராயணம் 's post 15/05/2025
Photos from பகவத் கீதை பாராயணம் 's post 15/05/2025

துளசியின் மகிமைகள்...

15/05/2025

அனைவருக்கும் வணக்கம்... தமிழ் மக்களுக்காக பகவத்கீதை பரப்பும் இந்த facebook பேஜ் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Annur, Coimbatore
Coimbatore
641697