Annai children's Home

Annai children's Home

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Annai children's Home, Social service, Nellikuppam, Cuddalore.

26/05/2026

📢 *100% கட்டணம் இல்லா குழந்தைகள் இல்லம்.*
ஆண் குழந்தைகளுக்கான கல்வியுடன் கூடிய *உண்டு உறைவிடம் குழந்தைகள் இல்லம்.*
தகுதி :
* 1ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை
* பெற்றோரை இழந்தவர்கள்
* ஒற்றைபெற்றோரை கொண்டவர்கள்
* பாதுகாப்பற்ற சூழலில் வாழும் ஆண் குழந்தைகள்.
_இவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்._

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அல்லது உங்களுக்கு தெரிந்த குடும்பங்களில் இத்தகைய குழந்தைகள் இருந்தால் தயவு செய்து இந்த தகவலை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

*_என்றென்றும் அறப்பணியில்_ ...!!!*

அன்னை குழந்தைகள்
இல்லம்
நெல்லிக்குப்பம்
கடலூர் மாவட்டம்
சேவைகளுக்கு அழைக்க...!!!
☎️9345761880

16/05/2026
16/05/2026

10 குழந்தைகளின் ஜூன் மாத உணவுத் தேவைக்கான அன்பான வேண்டுகோள்
“அன்னை குழந்தைகள் இல்லத்தின்” அன்பு வணக்கம் எங்களது அன்னை குழந்தைகள் இல்லத்தில் தங்கிப் படித்து வரும் 10 குழந்தைகள் தற்போது கோடை விடுமுறைக்காக தங்களது உறவினர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். பள்ளி திறப்பை முன்னிட்டு, வருகிற ஜூன் 1-ஆம் தேதி அவர்கள் மீண்டும் இல்லத்திற்குத் திரும்பி தங்களது கல்வியைத் தொடர உள்ளனர். குழந்தைகள் இல்லம் திரும்பியவுடன் அவர்களுக்கான ஆரோக்கியமான மற்றும் தடையற்ற தரமான உணவை உறுதி செய்ய நாங்கள் தற்போதே முன்கூட்டியே திட்டமிட்டு வருகிறோம். ஜூன் மாதத்திற்கான உணவுப் பொருட்கள் மற்றும் மளிகைத் தேவைகளை முன்கூட்டியே சேகரிக்க உங்களைப் போன்ற நல் உள்ளங்களின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது
எங்களின் தற்போதைய மளிகைத் தேவைகள்: மளிகைப் பொருட்கள்: அரிசி, பருப்பு, எண்ணெய், சிறுதானியங்கள் போன்ற பொருட்களை நேரடியாகவோ அல்லது ஆன்லைன் (Online Delivery) மூலமாகவோ உங்களால் இயன்றதை வழங்கலாம்.
உணவு நிதியுதவி: ஒரு குழந்தையின் 1 நாள் உணவுச் செலவு: ₹ 155 ஒரு மாத உணவுச் செலவு: ₹ 4650 பத்து குழந்தைகளின் 1 நாள் உணவுச் செலவு: ₹ 1550 ஒரு மாத உணவுச் செலவு: ₹ 46500
உங்களால் இயன்ற எந்தவொரு சிறிய தொகையும் வரவேற்கப்படுகிறது. குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உங்களது பங்களிப்பு எப்போதும் ஒரு பெரிய தூணாக இருக்கும்.
இந்த விடுமுறை காலத்திலேயே இதற்கான ஆயத்தங்களைச் செய்ய உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
"உங்களின் ஒரு சிறிய உதவி, இந்த 10 குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்யும்!"
வங்கி கணக்கு விவரங்கள்:
வங்கி பெயர் : இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்
கிளை : நெல்லிக்குப்பம்
கணக்கு எண் (A/C No) : 276502000000219
IFSC Code : IOBA0002765
GPay எண் : 9345761880
மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்:
நன்றி
இல்ல நிர்வாகம்

06/04/2026

கடலூர் மாவட்ட குழந்தைகள் இல்லத்தின் குழந்தைகளின் உயர் கல்விக்கான ஒரு நாள் ஆலோசனை பயிற்சி கடலூர் CEO அலுவலகத்தில் நடைபெற்றது இதில் அன்னை குழந்தைகள் இல்லத்தின் குழந்தைகள் நல அலுவலர் கலந்து கொண்டார்

04/04/2026

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நடத்திய குழந்தைகள் இல்ல மாணவர்களின் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அன்னை குழந்தைகள் இல்ல மாணவர்கள் கலந்து கொணடனர் இந்நிகழ்ச்சியில் அன்னை அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் திரு. இராம. அலெக்ஸாண்டர் அவர்கள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்பாளர் திரு .ராஜேஷ்குமார் அவர்கள் முன்னாள் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் திரு. ஹென்றி அவர்கள் மற்றும் கடலூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Want your business to be the top-listed Government Service in Cuddalore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Nellikuppam
Cuddalore
607105