ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa

Share

ஒருங்கிணைவோம்...! உரிமை வெல்வோம்..!!!

20/03/2026

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha) - கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் பாரபட்சமான போக்கு!

​கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான சமீபத்திய கலந்தாய்வில் (Counseling) அரங்கேறியுள்ள குளறுபடிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது.

​📍 நடந்தது என்ன?

கடலூர் மாவட்டத்தில் கணினி விவரப் பதிவாளர்களுக்கு (Data Entry Operators) மட்டுமே கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அதே திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணக்காளர்களுக்கு (Accountants) இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து பணி மாறுதல் (Transfer) மூலம் வந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இங்குள்ள கணக்காளர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

​✊ பழிவாங்கும் நடவடிக்கையா?

கடந்த 5 ஆண்டுகளாகச் சங்க ரீதியாகத் திரண்டு, பணியாளர்களின் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் சமரசம் இன்றிப் போராடிய காரணத்தினால், தற்போது திட்டமிட்டே எங்களது உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இது தனிப்பட்ட நபர்களுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உழைப்பையும் கொச்சைப்படுத்தும் பழிவாங்கும் செயலாகும்.

​⚠️ மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு:

மற்ற மாவட்டங்கள் மௌனம் காக்கலாம், ஆனால் கடலூர் மாவட்டப் பணியாளர்களின் பங்களிப்பின்றி எந்தவொரு இலக்கையும் எட்ட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கலந்தாய்வு எங்களது அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகளில் விளையாடுவது கண்டனத்திற்குரியது.
​எங்கள் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்!

பாரபட்சமான போக்கைக் கைவிடுங்கள்! உரிமைகள் கிடைக்கும் வரை எங்களது குரல் ஓயாது.

​ #கடலூர் #ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி #உரிமைப்போராட்டம்
சிகரம் சதிஷ் Anbil Mahesh Poyyamozhi Chief Minister of Tamil Nadu

29/01/2026

ஏன் இந்த போராட்டம் ஆர்ப்பாட்டம்.

இதுவரை போராட்டம் ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் 20 வருடங்களாக சாதித்தது என்ன ?

பணி நிரந்தரத்திற்காக ஏன் இதுவரை இவர்கள் முழு மூச்சில் எதுவும் செயல்படவில்லை .

யாருடைய சுயநலத்திற்காக இவர்கள் அனைவரையும் அடிமைகளாக வைத்துள்ளார்கள் .

1000 குடும்பங்களை வீணடித்து இவர்கள் சாதிக்கப் போவது தங்கள் குடும்பத்திற்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை .

ஏன் சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட நுணுக்கங்களை ஒருபோதும் இவர்கள் அணுக மாட்டுகின்றார்கள்.

இவை அனைத்தும் அந்த சாடிஸ்டிகளுக்கு மட்டுமே தெரியும்.

29/01/2026

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணி புரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணி வரன்முறை செய்ய கோரிக்கை வைக்க வேண்டும் ஏன்என்றால் ஏற்க்கனவே மாவட்ட வேலை வாய்ப்பு துறையின் தற்காலிகத் அடிப்படையில் பணிபுரிந்த தட்டச்சர்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் TNPSC மூலமாக சிறப்பு தேர்வு வைக்க பணி வரன்முறை செய்த அரசாணை வந்துள்ளது (தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வு ஆணையம் அறிவிக்கை 18/2024 நாள் ; 25.11.2024 அதனை அடிப்படையாக வைத்து நாமும் அரசிடம் எங்களுக்கும் சிறப்பு தேர்வு நடத்தி பணி வரன்முறை செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூய மிக குறைந்த ஊதியமே பெற்று வருகிறார்கள் கணக்காளர்கள், கணினி விவர பதிவாளர், ஏனைய பணியாளர்கள் போன்ற பெரும்பான்மையான பணியாளர்களுக்கு 5% சதவீதம் ஊதியம் உயர்வு கிடைத்தால் 800 ரூபாய் இருந்து ரூபாய் 1000 வரை மட்டுமே எந்த பயனும் இல்லை ஆனால் அதிகம் ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட ஊதிய உயர்வு கிடைக்கும்.

தற்பொழுது பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு ரூபாய். 2500 வழங்கியது போல நமக்கும் அனைவருக்கும் ரூபாய் 2500 சமமான ஊதிய உயர்வு வழங்கினால் அனைவரும் பயன்பெறலாம்.

24/08/2025

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மயிலாடுதுறை மாவட்ட கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர் (பொறுப்பு) பணியாற்றிய
திரு கா.மோகன் அவர்கள் இன்று மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம் அவரை இழந்து தவிக்கும் குடும்பதத்திற்கு அனைவரின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
😢😢

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa

01/05/2025

போராட்டங்கள் நடத்தினோம், பொதுக்குழு நடத்தினோம், அமைச்சர் அன்பில் பொய்யாமொழி வந்தார் அடுக்குமொழியில் பேசினார் அழகு தமிழில் பேசினார்.
ஆனால்
திமுக அரசின் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் பேசும் போது பள்ளிகளில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றினோம் என மார்தட்டிக் கொள்ளும் மாண்புமிகு அன்பில் மகேஷ் Anbil Mahesh Poyyamozhi அவர்கள் நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் தேர்தலை கருத்தில் கொண்டு ஒரு சில பண பலன்களை அறிவித்துவிட்டு எங்களைப் போன்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை நடுஆற்றில் தவிக்கவிட்டு இருப்பது எப்படி சமூக நீதியாகும்

ஒன்றிய அரசு தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்விக்கு நிதி வழங்கவில்லை எனவே தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை ஆனால் கலந்தாய்வு கூட நடத்த முடியாத அளவுக்கு நிதி மோசமாக உள்ளதா ? கல்வியில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு கல்வி அமைச்சர் அவர்கள் ஒரு கூட்டத்தில் அறிவித்து ஆறு மாதங்கள் ஆனது ஊதிய உயர்வு வரவில்லை, கலந்தாய்வு வரவில்லை உழைப்புக்கேற்ற ஊதியமும் பெறவில்லை நான் எப்படி எனது சக பணியாளர்களுக்கு மே தின வாழ்த்துக்கள் தெரிவிப்பேன்

தொகுப்பூய பணியாளர்களுக்கு மே தினம் இல்லை, இந்தாண்டு இனிய கருப்பு மே தினம் வாழ்த்துக்கள்.
புதிய தலைமுறை
சிகரம் சதிஷ்
Chief Minister of Tamil Nadu
Udhayanidhi Stalin
M. K. Stalin
Polimer News
Dailythanthi Galatta Media
Asianet News Tamil

16/02/2025

"இந்திய ஒன்றிய அரசின் மத்திய கல்வி அமைச்சர்
புதிய கல்வி கொள்கையை ஏற்கவில்லை என்றால் தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது" கூறியுள்ளார்

தமிழ்நாட்டின் 40 லட்சம் மாணவர்களின் கல்வி நலன் மற்றும் 32,000 பணியாளர்களின் வாழ்வாதாரத்தில் அரசியல் செய்யும்
பாசிச பாஜக BJP INDIA அரசை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் சங்கத்தின் நலச் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்
M. K. Stalin
Udhayanidhi Stalin
Anbil Mahesh Poyyamozhi
Chief Minister of Tamil Nadu
ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa
பள்ளிக் கல்வி துறை தமிழ் நாடு அரசு

12/02/2025

பள்ளிக் கல்வி துறை தமிழ் நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பணியாளர்களின் வாழ்வாதார சம்மந்தமான தங்களது நியாயமான கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற Chief Minister of Tamil Nadu முதல்வர் M. K. Stalin அவர்கள், துணை முதல்வர் Udhayanidhi Stalin அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi முன்வர வேண்டும்

நன்றி மாலைமலர் மற்றும் செய்தி வர உதவிய எனது பள்ளியின் ஆசிரியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa

08/02/2025

பள்ளிக் கல்வி துறை தமிழ் நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்திற்கு நடப்பு ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியையே இதுவரை ஒன்றிய அரசு வழங்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Project approval board (PAB) என்ற அமைப்பு அனைத்து மாநில கல்வித்துறை அதிகாரிகளையும் அழைத்து அந்த ஆண்டிற்கான திட்டங்கள் மற்றும் தேவைப்படும் நிதி (Annual work plan and Budget) குறித்து மாநில அரசின் திட்ட வரைவைப் பெற்று அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யும்.ஆனால் இந்த ஆண்டு PAB Minutes கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே தமிழ்நாட்டிற்கு 1800 கோடி மட்டும் தான் ஒதுக்க முடியும் என ஒன்றிய அரசு சொல்வதாக செய்தி வந்துள்ளது.இது உண்மையென்றால் மிகவும் கண்டிக்கத்தக்க செயல் ஆகும்.
தொடர்ந்து தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவதே இதற்கான தீர்வாகும்.
மற்ற மாநில முதல்வர்களையும்,எதிர்க்கட்சி தலைவர்களையும் ஒருங்கிணைத்து கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தும் முயற்சியை மாண்புமிகு முதல்வர் M. K. Stalin அவர்கள் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும்.

Chief Minister of Tamil Nadu
Udhayanidhi Stalin
Anbil Mahesh Poyyamozhi

திருப்பூர் பழ.கௌதமன் தமிழ்நாடு

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa

Photos from ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa's post 07/02/2025

பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த தொகுப்பூதிய பணியாளர்களுக்கு விருப்ப மாறுதல் கலந்தாய்வு, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்திட கோரிக்கை

கடலூர் .ஜனவரி. 7.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தில் 1495 முழு நேர தொகுப்பூதிய பணியாளர்கள் பணிபுரிபவர்கள் குறித்து அந்தச் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வா. ராஜ்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில்.

கோரிக்கை எண் : 1

தமிழ் நாடு அரசு பள்ளிக் கல்வி துறையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் 1495 முழு நேர தொகுப்பூதிய பணியாளர்கள் மிகுந்த குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வருகிறார்கள். 300 மேற்பட்ட பணியாளர்கள் மாவட்ட விட்டு மாவட்ட சென்று பணி புரிந்து வருகிறார்கள் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான விருப்ப பணி மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என கடந்த 20.10.2024 அன்று திருச்சியில் பொதுக்குழுவில் அறிவித்தார் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்கள் ஆனால் மூன்று மாதம் காலங்கள் கடந்தும் இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை எனவே தொகுப்பூதிய பணியாளர்களுக்கு உடனடியாக விருப்ப பணி மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

கோரிக்கை எண் :2

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு இந்தாண்டு வழங்கப்படாமல் உள்ளது ஒன்றிய அரசு நிதி வழங்கினால் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தனது நிதியிலிருந்து இந்த ஆண்டு தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa சார்பில் கோரிக்கை வைக்கிறோம்

கோரிக்கை எண் - 3

பள்ளி கல்விதுறையில் 1495 முழுநேர தொகுப்பூதிய பணியாளர்கள் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் தொகுப்பூதிய பணியாளர்களை காலமுறை பணி நிரந்தரம் செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu M. K. Stalin அவர்கள் மற்றும் துணை முதல்வர் Udhayanidhi Stalin அவர்கள் ஆவணம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டார்..
சிகரம் சதிஷ்
பள்ளிக் கல்வி துறை தமிழ் நாடு அரசு highlight Facebook

26/01/2025

பள்ளிக் கல்வி துறை தமிழ் நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான விருப்ப பணி மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என கடந்த 20.10.2024 அன்று திருச்சியில் அறிவித்தார் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi ஆனால் மூன்று மாதம் காலங்கள் கடந்தும் இதுவரை நடத்தப்படவில்லை தொகுப்பூதிய பணியாளர்களுக்கு உடனடியாக விருப்ப பணி மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு இந்தாண்டு வழங்கப்படாமல் உள்ளது மத்திய அரசு நிதி வழங்கினால் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் தெரிவித்துள்ளார் ஆனால் தமிழ்நாடு அரசு தனது நிதியிலிருந்து இந்த ஆண்டு தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.

பள்ளி கல்விதுறையில் 1500 முழுநேர தொகுப்பூதிய பணியாளர்கள் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் தொகுப்பூதிய பணியாளர்களை காலமுறை பணி நிரந்தரம் செய்ய மாண்புமிகு திராவிட மாடல் முதல்வர் M. K. Stalin அவர்கள் மற்றும் துணை முதல்வர் Udhayanidhi Stalin அவர்கள் ஆவணம் செய்ய வேண்டும் என குடியரசு தின நாளில் கோரிக்கை வைக்கிறோம்.

Chief Minister of Tamil Nadu
சிகரம் சதிஷ் Patric Raymond News18 Tamil Nadu : dinakaran daily newspaper

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa - 34/2020

Photos from ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa's post 02/12/2024

இன்று 02.12.2024 பிறந்தநாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அவர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa சார்பில் இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்

"கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப் பெரிய ஆயுதம் " என சமத்துவ பெரியார் Kalaignar Karunanidhi அவர்களின் கொள்கை பிடிப்புடன் இந்தியாவிற்கு முன்மாதிரியான சமத்துவம் சமூக நீதி என மாண்புமிகு முதல்வர் வழியில் எல்லாருக்கும் எல்லாம் என திராவிட மாடல் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களின் துணையுடன் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாளில் கோரிக்கை வைக்கிறோம்.

சமீபத்தில் கடலூர் மாவட்டம், எம்ஜிஆர் நகர் அரசு பள்ளி ஆசிரியருக்கு
"கல்விதாரகை" என விருது வழங்கி ஆசிரியர்கள் கோரிக்கையான சுடிதார் அணிந்து வரலாம் என அரசாணை வழங்கியர் தங்கள் தான்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் "அர்ஜுன் காலனி" என்ற அரசு பள்ளி சுவரில் பள்ளியில் பெயரை அழித்து "மல்லசமுத்திரம் கிழக்கு" என பெயர் மாற்றிய அரசாணை வழங்கியவர் தங்கள் தான்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசாணை 243 அறிவித்திற்கு வழங்கியமைக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப்பட்டது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூபாய் 2500/- ஊதிய உயர்வு வழங்கியமைக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளி சிறப்புபயிற்றுநர்களுக்கு ரூபாய் 5000/- தமிழக அரசின் கூடுதல் நிதியை ஊதிய உயர்வு வழங்கியமைக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப்பட்டது.

மாதிரி பள்ளியில் ஆசிரியரியில்லாத பணியாளருக்கு ஊதிய உயர்வு வழங்கமைக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப்பட்டது.

பள்ளி கல்வி துறை சிறப்பாக செயல்படுத்தும் தாங்கள் கடந்த 20.10.2024 அன்று ஒருங்கிணைந்த அனைத்து ஊழியர் சங்கம் சார்பில் நடத்திய பொதுகுழுவில் அறிவிப்பு செய்த தொகுப்பூதிய பணியாளர்களுக்கு விருப்ப பணி கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்பதை தங்கள் பிறந்த நாளில் (நிதி சாரா) கோரிக்கையாக நிறைவேற்றி தர தங்களை வேண்டுகிறோம்.

சிகரம் சதிஷ் Patric Raymond

Photos from ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa's post 14/11/2024

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளையும்
துறைரீதியாக நேரடிக் களவு ஆய்வு செய்த
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
Anbil Mahesh Poyyamozhi அவர்களின் பணி
இன்னும் சிறக்க வணங்கி வாழ்த்தி மகிழ்கின்றேன்..
ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa

Want your business to be the top-listed Government Service in Cuddalore?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


3rd Street
Cuddalore
607001