ஒவ்வொரு இந்திய குடிமகனும் பார்க்க வேண்டிய பாடல் 🔥
Full Song: https://youtu.be/pN5GtAdZOR4?si=3WZELaT4UdNoN-tN
மாற்றம் ஒன்றே மாறாதது
தீதும் நன்றும் பிறர் தர வாரா...
திருமுருகா✨️
முருகா 🙏🏻✨️
எப்படி இருந்தாய் நீ...!
என் உயிரோடு ஒன்றி
கோபுர உச்சியில் அமர்ந்தென்னை
ஆட்சி அல்லவா செய்தாய்...!
இது ஒன்றும் காலப்போக்கில்
காலத்தின் கட்டாயத்தால் மறைந்த
காயம் அல்ல...
என் உயிரில் ஒட்டி
அறித்துக்கொண்டிருக்கும் உன்னை
என்னிலிருந்து அழித்தொழித்தலையே
என் வாழ்நாள் லட்சியமாய்
கொண்டல்லவா உன்னை கருவறுத்திருக்கிறேன்...
நிதானமாய்
ஒவ்வொரு செல்லில் இருந்தும்
உன்னை பிரித்தெடுத்து,
உன் மீதான எண்ணங்களை
மாற்றியமைத்து,
எனக்கு இழைக்கப்பட்ட
அத்தனை அநீதிகளையும்
பக்குவமாய் எடுத்துரைத்து,
ஈவு இறக்கமின்றி
என்னுள் படிந்த உன்னை
ரத்தமும் சதையுமாக
அகற்றி இருக்கிறேன்...
நீ இருந்த தடம் கூட தெரியாமல்
என்னை புதுபித்து இருக்கிறேன்...
இப்போது மிஞ்சி இருப்பது வெறும் அனுதாபம் மட்டுமே.....
-மகிழினி
நீ செய்த பாவங்களை
அறிந்து, உணர்ந்து, முழு மனதுடன் வருந்தி, இறைவனிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேள்...
அவர் உன்னை மன்னித்து விடுவார்.
ஆனால்...
அதே மன்னிப்பை,
மனமுருகி,
உன்னால் வஞ்சிக்கப்பட்டவரிடம் கேள்.
ஏனெனில்,
அவரின் மன்னிப்பே
உன் பாவங்களை பாதியாக குறைக்கும்.
ஏன் தெரியுமா?
ஆழமாக காயப்பட்ட ஒருவரின் வலி,
எதையும் மாற்றும் வல்லமை உடையது…
அதை இறைவனாலும் முழுவதுமாக தடுக்க முடியாது.
எங்கு விதைத்தமோ…
அங்கு தானே அறுக்க வேண்டும்.
அதுவே வாழ்க்கையின் கர்ம விதி...
"இறைவன் மன்னிப்பை தருவார்… ஆனால் நீ காயப்படுத்திய நெஞ்சு மன்னித்தால் தான், உன் பாவம் குறையும்."
-மகிழினி
20/08/2024
எப்போதாகினும் உன் நினைவில் நான் இருப்பேன் என்ற கற்பனையில் சிலாகித்துக் கொள்கிறேன் 😀😀😅
True 💯
🤞🏻
குடும்பம் ❤️
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Delhi
