வெள்ளைக்குதிரை இதழ்

வெள்ளைக்குதிரை இதழ்

Share

தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத்தின் அதிகாரபூர்வ இதழ் வெள்ளைக்குதிரை

13/11/2025

திமுக75 அறிவுத்திருவிழா | அம்பேத்கர் - பெரியார் வழித்தடத்தில் | எழுத்தாளர் மதிவண்ணன் உரை

திமுக75 அறிவுத்திருவிழா | அம்பேத்கர் - பெரியார் வழித்தடத்தில் | எழுத்தாளர் மதிவண்ணன் உரை 12/11/2025

திமுக75 அறிவுத்திருவிழா : அம்பேத்கர் - பெரியார் வழித்தடத்தில்.... எழுத்தாளர் மதிவண்ணன் உரை

திமுக75 அறிவுத்திருவிழா | அம்பேத்கர் - பெரியார் வழித்தடத்தில் | எழுத்தாளர் மதிவண்ணன் உரை TO subscribe Vellaikkuthirai Magazine: https://docs.google.com/forms/d/e/1FA... Follow us on:Website: https://vellaikkuthirai.com/ Face book: https://www.fac...

19/01/2025

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பாதுகாப்புப் பேரணியில் தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம், அதன் தலைவர் எழுத்தாளர் மதிவண்ணன் தலைமையில், பொருளாளர் தம்பி வழிநடத்தலோடு சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்ட பேரணியின் காட்சிகள் இவை.

#அருந்ததியர்பேரணி #உள்இடஒதுக்கீடுபேரணி #சனவரி6 #அருந்தியர்கள் Guhanதமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்ஆதித்தமிழர்பேரவைவேலன் மாதாரிபழ.பேரறிவாளன் திராவிடத் தமிழர் கட்சிஆதித்தமிழர் பேரவை தமிழ்நாடு

Photos from வெள்ளைக்குதிரை இதழ்'s post 07/01/2025

2025ம் ஆண்டிலும் அருந்ததியர்களின் யாதர்த்த நிலை என்ன என்பதை உணர்த்தும் செயல் இது.

அருந்ததியர்களின் உள் இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் நோக்கிலும், அம்மக்களிடையே அரசியல் எழுச்சியை ஏற்படுத்தவும், அரசியல், அதிகார பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அம்சங்களை முன்னிறுத்தி அறவழியான பேரணியை அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை எழும்பூரில் 6.1.2025 அன்று மாபெரும் பேரணி நடைபெற்றது. பாமர மக்களின் பாதங்கள் சென்னை சாலை மிடுக்காய் அணிவகுத்தனர், அரசியல்-அதிகார வெளிச்சம் வேண்டி அவர்கள் ஒங்கி ஒலித்த குரல்கள், அனைவரையும் எழுச்சியில் ஆழ்த்தியது.

ஆனால், பத்திரிக்கை, காட்சி ஊடகம் இம்மக்களுக்கு ஆதரவாக ஒரு செய்தியினை கூட பதிவிடவில்லை. சந்தையூர் நிகழ்வு தொடங்கி இந்த பேரணி வரை மைய நீரோட்டம் ஊடகங்களின் நிலைப்பாடு அருந்ததியர்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. சாதியின் பெயரால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புறகணிப்பு என்பதை மட்டுமே அனுபவித்த மக்கள், இப்போது ஊடகங்களாலும் புறகணிக்கப்படுகிறார்கள்.

இந்த பேரணி தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகம் / பத்திரிக்கை:
சன் நியூஸ்
ஹிந்து தமிழ் திசை ( புகைப்படம் மட்டும்)

செய்தி வெளியிடாத ஊடகங்கள் :
புதிய தலைமுறை
தந்தி டிவி
நியூஸ்7
நியூஸ் தமிழ் 24/7
கலைஞர் செய்திகள்
நியூஸ்18
மாலைமுரசு
ராஜ் டிவி

செய்தி வெளியிடாத பத்திரிகைகள் :
தினதந்தி
தினமலர்
தினமணி
தினகரன்
Times of India
The Hindu
Indian express

இதற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? இந்த செயல் எதை உணர்த்துகிறது? நாம் என்ன செய்ய போகிறோம்?

#அருந்தியர்கள் #அருந்ததியர்பேரணி #உள்இடஒதுக்கீடுபேரணி #சனவரி6 Rani Guhan வெள்ளைக்குதிரை இதழ் பழ.பேரறிவாளன் திராவிடத் தமிழர் கட்சி தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம் ஆதித்தமிழர் பேரவை தமிழ்நாடு ஆதித்தமிழர்பேரவை வேலன் மாதாரி

Photos from தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்'s post 07/01/2025
04/01/2025

காலத்தால் கைவிடப்பட்டு ஏதிலிகள் ஆனோம்
சமுகநீதியின் கரம்பற்றி தட்டு தடுமாறி எழுந்து போகும் பயணத்தில் முதுகுத்துப் பின்னிருந்து குத்தும் துரோகிகளின் சதிகளை வென்று வாகை சூடுவோம்

உள் ஒதுக்கீட்டை பாதுகாக்காவும் அரசியல் அதிகாரப் பதிவிகளில் அருந்ததியருக்கு உரிய பங்கை வலியுறுத்தியும் அணியணியாய் திரண்டு பேரணியாய் ஒருங்கிணைவோம்.

அழைக்கிறார் புருஷோத்தமன், தலைவர் அருந்ததி கட்சி, சென்னை

பேரணி தொடங்கும் இடம் : எழும்பூர் எல்.ஜி.சாலை சந்திப்பு, சென்னை

பேரணி நிறைவு : இராஜரத்தினம் மைதானம், எழும்பூர், சென்னை

தேதி : 6.1.2025
நேரம் : காலை 10 மணி
#அருந்தியர்கள் #அருந்ததியர்பேரணி #உள்இடஒதுக்கீடுபேரணி #சனவரி6

04/01/2025

அன்பிற்குரிய அருந்ததிய உறவுகளுக்கு வணக்கம்!

நடைபெற இருக்கின்ற 2025 ஜனவரி 6-ம் தேதி அருந்ததிய உள்ஒதுக்கீடு பாதுகாப்பு பேரணி தலைவர் அதியமான் அய்யா அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளதால் இப்பேரணிக்காக தமிழ்நாடு சாக்கிய அருந்ததிய சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் ம. மதிவண்ணன் ஐயா அவர்களின் ஆதரவின் பேரில் குதிரைக்கல்மேட்டில் திரு.K.S.செங்கோடன், மற்றும் M.ராகசேகர் மற்றும் குதிரைக்கல் மேடு அருந்ததிய தோழர்களின் ஆதரவோடு மற்றும், ஊராட்சிக்கோட்டை, சங்கரகவுண்டர்பாளையம், கெம்மியம்பட்டி, சென்னம்பட்டி, பெரியாண்டிபாளையம், சாமியம்பாளையம், ஐயம்பாளையம், ஆகிய தோழர்களின் ஆதரவோடும் இப்பேரணியை சிறப்பிக்க KKC - பேருந்தில் 55- தோழர்களின் ஆதரவோடும் இப்பயணம் நடைபெற உள்ளது. இது போல அனைத்து அனைத்து அருந்ததிய சொந்தங்களும் அனைத்து ஊர்களில் இருந்தும் இது போன்று முயர்ச்சி செய்யுங்கள் வெற்றி பெருவீர்கள். உள் ஒதுக்கீடு பேரணியின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
#அருந்தியர்கள் #அருந்ததியர்பேரணி #சனவரி6 #உள்இடஒதுக்கீடு

04/01/2025

#அருந்தியர்கள் வந்தேறிகள் அல்ல....

எழுத்து என்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான ஒன்று - எழுத்தாளர் Mani Mathivannanமதிவண்ணன்.

#அருந்ததியர்கள் வந்தேறிகள் அல்ல...எழுத்தாளர் Mani Mathivannan மதிவண்ணன்.

நன்றி Tamil The Hindu

04/01/2025

தமிழ்நாடு #அருந்ததியர் அருந்ததியர் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் #உள்இடஒதுக்கீடு உள்ஒதுக்கீடு பாதுகாப்பு பேரணி

#அருந்ததியர் எதிர்கால நலனை நெஞ்சில் ஏந்தியபடிய... பேரன், பேத்திகளின் வரும்காலம் வளமகா வாழ்ந்திட வேண்டி கையில் பாதாகை ஏந்த சொல்லி உங்களை சென்னை நோக்கி அழைக்கிறார் இந்த பெரியவர்

அனைவரும் வாருங்கள் நம்முடைய உரிமையை நிலைநாட்ட அருந்ததியர்களே... வாருங்கள்...

பேரணி தொடங்கும் இடம் : எழும்பூர் எல்.ஜி.சாலை சந்திப்பு, சென்னை

பேரணி நிறைவு : இராஜரத்தினம் மைதானம், எழும்பூர், சென்னை

தேதி : 6.1.2025
நேரம் : காலை 10 மணி

#அருந்ததியர் #சனவரி6 #உள்இடஒதுக்கீடுபேரணி #அருந்ததியர்பேரணி

Photos from வெள்ளைக்குதிரை இதழ்'s post 03/01/2025

#தமிழ்நாடு #அருந்ததியர் #கூட்டமைப்பு சார்பாக சென்னையில் நடைபெறும் அருந்ததியர் உள் ஒதுக்கீடு பாதுகாப்பு பேரணியின் #துண்டறிக்கை விநியோகம் #பெருந்துறை யில் முழு வீச்சில் துவங்கி நடைபெற்று வருகிறது.

துண்டறிக்கை ஓரளவிற்கு முழுமையாக தெரியும்படி எனது இருசக்கர வாகனத்தில் ஒட்டி உள்ளேன்.

அடுத்த இரு நாட்களில் குறைந்தபட்சம் ஒரு 1000 நபர்கள் கண்ணிலாவது இந்த துண்டறிக்கை படும் என்று நம்புகிறேன்.

அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு துண்டறிக்கையை ஒட்டி பெருமையடைவதை விட நமது வாகனத்திற்கு வேறு என்ன பெருமை இருந்து விடப் போகிறது?

விருப்பமும் வாய்ப்பும் உள்ள தோழர்கள் பேரணி துண்டறிக்கையை தங்களது வாகனங்களில் மக்கள் பார்வையில் படும்படி ஒட்ட வேண்டுகிறேன்.

நன்றி.....

மா.செல்வராசு

Photos from வெள்ளைக்குதிரை இதழ்'s post 03/01/2025

அருந்ததியர்களின் எதிர்காலத்தை பாதுக்காப்பை உறுதி செய்ய அனைவரையும் அழைக்கிறோம்...
உங்கள் ஒவ்வொருவரின் கால் பாதமும் சென்னையில் பதிய உறுதி ஏற்க வேண்டும்.
நாம் #சனவரி6 அன்று நாம் தரையில் வைக்கும் ஒவ்வொரு அடியும், நம் எதிர்காலத்தை அசைத்து பார்க்க நினைப்பவர்களுக்கு சவுக்கடித்தார் போல் இருக்க வேண்டும்.
அறைகூவுல் விடுக்கிறோம்.. #அருந்ததியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

#சனவரி6 #உள்இடஒதுக்கீடு #அருந்ததியர் #அருந்ததியர்பேரணி #உள்இடஒதுக்கீடுபேரணி Guhan

Want your business to be the top-listed Government Service in Erode?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Erode
638052