IUML Erode District

Call Directions

IUML Erode District இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஈரோடு மாவட்டம்

 # # # தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறுபான்மை மக்களின் நலனையும்,...
12/08/2026

# # # தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறுபான்மை மக்களின் நலனையும், மாநில உரிமைகளையும் கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்ட FCRA மற்றும் NEET தேர்வுக்கு எதிரான தீர்மானத் த்திற்கு ஒன்றிய அரசு உரிய மதிப்பளிக்க வேண்டும்.மாநில சட்டமன்றத்தின் ஜனநாயகத் தீர்மானங்களை புறக்கணிக்காமல்,அவற்றை உடனடியாக பரிசீலித்து,தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் FCRA மற்றும் NEET தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

சிறுபான்மையினர் உரிமை காப்போம்!
மாணவர் நலன் காப்போம்!

21/07/2026
காயிதே மில்லத்தாய் வாழும் முனீருள் மில்லத்,தகைசால் தமிழர் எங்களின் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவர் இந்திய இஸ்லாமியர்...
05/01/2026

காயிதே மில்லத்தாய் வாழும் முனீருள் மில்லத்,தகைசால் தமிழர் எங்களின் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவர் இந்திய இஸ்லாமியர்களின் அரசியல் வழிகாட்டி சமுதாயத் தலைவர் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அருளால் நிறைந்த ஆரோக்கியத்தோடும்,நீண்ட ஆயுளோடும் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இந்த சமுதாயத்திற்கு வழிகாட்டிட வல்ல இறைவனை வேண்டுகிறேன்…
வாழ்க தலைவர் ! வளர்க அவரது தொண்டு !!

 #நன்றி! நன்றி!! நன்றி!!!
21/12/2025

#நன்றி! நன்றி!! நன்றி!!!

மறந்த மகாகவி ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல் நிகழ்ச்சி…30/12/2025 அன்று ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை  சார்பில் மகாகவி ஈரோடு தம...
01/12/2025

மறந்த மகாகவி ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல் நிகழ்ச்சி…

30/12/2025 அன்று ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை சார்பில் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் ஈரோடு தமிழ் இலக்கிய பேரவைவின் துணைத்தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பிரதிநிதியுமான EKM.முஹம்மது தாஜ் முஹைதீன் அவர்கள் தலைமையில் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு
வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள்,ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.வி.சி. சந்தரகுமார் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்ட தங்களின் இரங்கலை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் எம்.முஹம்மது ஆரிப் அவர்கள் கலந்து கொண்டு மகாகவி தமிழன்பன் அவர்கள் தமிழ் வளர்ச்சிக்கும் மற்றும் இலக்கிய துறைக்கும் ஆற்றிய அரும் பணிகள் குறித்து பேசினார் .

*இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர்,* *ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கே.நவாஸ்கனி MP* *அவர்கள் தல...
29/11/2025

*இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர்,* *ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கே.நவாஸ்கனி MP* *அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் மீண்டும் வக்பு வாரியம்!*

*தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக மீண்டும் பொறுப்பேற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர்,* *ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பு அண்ணன் மாண்புமிகு கே. நவாஸ் கனி எம்.பி அவர்களுக்கும், மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!*

#தகவல்_தொழில்_நுட்ப_அணி
#ஈரோடு_மாவட்டம்

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஈரோடு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் நல்லாட்சி நா...
27/11/2025

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஈரோடு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் நல்லாட்சி நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தகவல் தொழில்நுட்ப அணி ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.லுக்மானுல் ஹக்கீம் சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஈரோடு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் நல்லாட்சி நா...
27/11/2025

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஈரோடு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் நல்லாட்சி நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாவட்டச் செயலாளர் எம். முஹம்மது ஆரிப் மரியாதை நிமித்தமாக சந்தித்து தேசியத் தலைவர் பேராசிரியர் கே. எம்.காதர் மொய்தீன் அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியமைக்கும், தமிழ்நாடு வக்பு வாரியம் மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் மராமரித்து பணிகளுக்கான ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக நிதி உதவி வழங்கியமைக்கும்,மேலும் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் மேம்பாட்டுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தார்.மேலும் ஈரோடு மாவட்டம் அளவிலான ஒரு சில கோரிக்கைகளும் முதல்வரிடம் முன் வைக்கப்பட்டது. அதனை கனிவோடு கேட்டுக் கொண்ட முதல்வர் ஆவணம் செய்வதாக உறுதியளித்தார்.இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் திரு சு. முத்துசாமி ,ஈரோடு பாராளமன்ற உறுப்பினர் திரு.பிரகாஷ்,ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு.வி.சி.சந்திரா குமார் மாநில கௌரவ ஆலோசகர் அல்ஹாஜ் இ.கே.எம்.முஹம்மது தாஜ் முகைதீன், மாவட்ட பொருளாளர் இ.கே.எம்.முஹம்மது கலீல்,மாவட்ட துணைத் தலைவர் ஏ.அலாவுதீன் சேட்டு,மாவட்ட துணைச் செயலாளர் பவானி முஹம்மது பாசித்,எஸ்.டி.யூ மாவட்ட தலைவர் ரியாசுதீன் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் பெருந்துறை பிரைமரி செயலாளர் சான் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Address

காயிதே மில்லத் சென்டர், நெ. 3, காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ரோடு, ஈரோடு
Erode
638003

Telephone

+917708014555

Website

Alerts

Be the first to know and let us send you an email when IUML Erode District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share