🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
_*சரி என்றோ தவறு என்றோ யாரிடமும் வீண் விவாதம் செய்யாதீர்கள்....*_
_*தவறும் அது சரியே அவரவர் கோணத்தில்....!*_
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
படித்ததில் பிடித்தது
நான் படித்த, எனக்கு பிடித்த செய்திகள?
""உருண்டோடும் உலக வாழ்வில் எத்தனையோ விஷயங்கள் கால வெள்ளத்தில் கரைந்து போகின்றன...!""தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்""
இன்றைய சிந்தனை
பழகியதற்கான பலனை அடைந்த பின்பு தான், சிலர் விலகுவதற்காக காரணங்களைத் தேடுவார்கள்.
ஒருவரிடம் நமக்கு உரிமைகள் அதிகமாகும் போது தான் அவர்களை பிரிவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகமாகின்றன.
வெட்டப்படும் வரை அனைத்து ஆடுகளும் அன்பு காட்டியே வளர்க்கப்படுகின்றன.
நிம்மதியாக வாழ எல்லாவற்றையும் மன்னித்து வாழ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. சிலவற்றை மறந்தும் கூட நிம்மதியாக வாழலாம்.
- (ப/பி)
🙏🏽 *இனிய காலை வணக்கம்* 🙏🏽
வாழ்க்கையில் நாம் எல்லோரும் அதிக பாடம் கற்று கொள்ளலாம்..,
புத்தகத்தில் இருந்து அல்ல நாம் பழகும் மற்றும் பயணிக்கும் மனிதர்களிடம் இருந்து...
காலை வணக்கம் 🙏
*_கடந்து போனதை நினைத்து_*
*_கவலை வேண்டாம்.......!!_*
*_கவலை வேண்டாம்_*
*_என்பதற்காகதான்_*
*_அது கடந்து போனது.........!!_*
🙏*"காலை வணக்கம்,* *இன்றைய நாள் இனிதாக வாழ்த்துக்கள்*🙏
வரலாறு எப்போதுமே விசித்திரமானது. சிலரை அது தவறான காரணங்களுக்காகக் கொண்டாடும், உண்மையான காரணங்களை மறைத்துவிடும். அப்படியான ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் தவறுதான் ’ஹெடி லாமர்’ (Hedy Lamarr).
1930-40களில் ஹாலிவுட் சினிமாவின் பொற்காலம் அது. கருப்பு வெள்ளைத் திரையில் ஒரு தேவதை போலத் தோன்றியவர் ஹெடி லாமர். ஆஸ்திரியாவில் பிறந்து ஹாலிவுட்டுக்கு வந்த அவரை, உலகம் எப்படி அழைத்தது தெரியுமா?
’உலகின் மிக அழகான பெண்’ (The Most Beautiful Woman in the World).
அவருடைய படங்களைப் பார்க்க மக்கள் தியேட்டர்களில் குவிந்தார்கள். அவருடைய சிகை அலங்காரத்தை, அவருடைய நடையைப் பெண்கள் காப்பி அடித்தார்கள். ஆண்கள் அனைவரும் ஹெடி லாமரை நினைத்தே தூக்கத்தைத் தொலைத்தார்கள். சுருக்கமாகச் சொன்னால், அவர் ஒரு கனவுக்கன்னி.
ஆனால், அந்தப் பேரழகு, அந்த மினுமினுக்கும் சினிமா வாழ்க்கை - இவை எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு அபாயகரமான, கூர்மையான அறிவியல் மூளை ஹெடி லாமருக்கு இருந்தது யாருக்கும் தெரியாது.
ஷூட்டிங் முடிந்ததும், மற்ற நடிகைகள் பார்ட்டிகளுக்குச் செல்வார்கள், கிசுகிசு பேசுவார்கள். ஆனால் ஹெடி லாமர், நேராகத் தன் வீட்டுக்குச் செல்வார். அங்கே அவருக்கு ஒரு சிறிய ஆய்வகம் இருந்தது. அந்த அறையில் எதையாவது வரைந்து கொண்டும், புதிய இயந்திரங்களை வடிவமைத்துக் கொண்டும் இருப்பார்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், உலக ஆண்கள் அனைவரையும் அவரை நினைத்துக்கொண்டு படுக்கையில் புரண்டுகொண்டிருக்க, ஹெடி லாமர் மட்டும் தனது தேடலில் தீவிரமாகத் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தார்.
"எனக்குக் கிளாமர் முகம் காட்டுவதில் ஆர்வமில்லை; என் மூளையைப் பயன்படுத்துவதில்தான் ஆர்வம் இருக்கிறது" என்று பலமுறை சொல்லியிருக்கிறார், ஹெடி லாமர். ஆனால், இந்த உலகம் ஒரு அழகான பெண்ணை அறிவாளியாகப் பார்க்கத் தயாராக இல்லை.
அது இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த நேரம். ஹெடி லாமரின் சொந்த நாடான ஆஸ்திரியாவை ஹிட்லரின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்திருந்தன. ஹெடிக்கு நாஜிக்கள் மீது தீராத கோபம் இருந்தது. அமெரிக்காவுக்கு உதவ வேண்டும் என்று அவர் துடித்தார்.
அப்போது ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. நேச நாடுகளின் (அமெரிக்கா, பிரிட்டன்) போர்க்கப்பல்கள், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்க 'டார்பிடோ' எனப்படும் கடலுக்கு அடியில் செல்லும் ஏவுகணைகளை அனுப்பின. இந்த ஏவுகணைகள் ரேடியோ சிக்னல் மூலம் கட்டுப்படுத்தப்படுபவை.
ஆனால், நாஜிக்கள் புத்திசாலிகள். அவர்கள் அந்த ரேடியோ சிக்னல்களை எளிதாக 'ஜாம்' (Jamming) செய்தார்கள். இதனால் ஏவுகணைகள் திசைமாறிச் சென்று கடலில் வீணாகின. இதைக் கண்டு அமெரிக்க ராணுவம் திணறியது.
இந்தப் பிரச்சினையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த ஹெடி லாமருக்கு ஒரு பொறி தட்டியது.
"நாம் ஏன் ஒரே ஃப்ரீக்வன்சியில் சிக்னலை அனுப்ப வேண்டும்? ஒரே இடத்தில் இருந்தால் தானே எதிரி ஜாம் செய்கிறான்? அந்த ஃப்ரீக்வன்சியை நொடிக்கொரு முறை மாற்றிக்கொண்டே இருந்தால் என்ன?"
இதுதான் அந்த அடிப்படை ஐடியா. இதை ’Frequency-Hopping Spread Spectrum’ என்று சொல்வார்கள்.
எளிமையாகச் சொன்னால், நீங்கள் ரேடியோவில் ஒரு பாட்டு கேட்கிறீர்கள். எதிரி அந்த ஸ்டேஷனை ஜாம் செய்ய வருகிறான். அவன் கண்டுபிடிப்பதற்குள், நீங்கள் அடுத்த ஸ்டேஷனுக்குத் தாவிவிடுகிறீர்கள். அடுத்து அங்கிருந்து இன்னொரு ஸ்டேஷனுக்கு... இப்படித் தாவிக்கொண்டே இருந்தால், எதிரியால் உங்களைப் பிடிக்கவே முடியாது. ஆனால், எந்தெந்த ஸ்டேஷனுக்குத் தாவ வேண்டும் என்ற ரகசியக் குறியீடு உங்களுக்கும், அந்த ஏவுகணைக்கும் மட்டுமே தெரியும்.
ஹெடி லாமர், தன்னுடைய நண்பரும் இசைக்கலைஞருமான ஜார்ஜ் ஆந்தீல் (George Antheil) என்பவருடன் இணைந்து, தானியங்கி பியானோக்களில் (Player Pianos) இருக்கும் துளைகள் கொண்ட பேப்பர் ரோல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை வடிவமைத்தார். 1942-ல் இதற்குப் காப்புரிமையும் (Patent) பெற்றார்.
இந்த மகத்தான கண்டுபிடிப்பை, நாஜிக்களை வீழ்த்தும் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு அமெரிக்கக் கடற்படையிடம் (US Navy) சென்றார் ஹெடி.
அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? சிரித்தார்கள்.
"ஒரு சினிமா நடிகை, அதுவும் இவ்வளவு அழகான ஒரு பெண், எங்களுக்குத் தொழில்நுட்பம் கற்றுத் தருவதா?" என்று நகைத்தார்கள்.
ஆணாதிக்கம் அவர்களின் கண்களை மறைத்தது.
"மேடம், இந்த ரேடியோ வேலையெல்லாம் விடுங்கள். உங்கள் அழகையும், புகழையும் பயன்படுத்தி ராணுவத்திற்கு நிதி (War Bonds) திரட்டிக் கொடுங்கள், அது போதும்" என்று அவரைத் திருப்பி அனுப்பினார்கள். அந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாமலேயே கிடப்பில போடப்பட்டது.
வருடங்கள் உருண்டோடின. ஹெடி லாமரின் சினிமா மார்க்கெட் சரிந்தது. அவர் முதுமையடைந்தார், உலகம் அவரை மறக்கத் தொடங்கியது. அவருடைய அந்தக் காப்புரிமையும் காலாவதியானது.
ஆனால், 1960-களில் டிஜிட்டல் யுகம் தொடங்கியபோது, சில விஞ்ஞானிகள் ஹெடி லாமரின் பழைய காப்புரிமையைத் தூசி தட்டி எடுத்தார்கள்.
"அடக்கடவுளே! எவ்வளவு பெரிய தொழில்நுட்பத்தை நாம் வீணடித்திருக்கிறோம்!" என்று அதிர்ந்தார்கள்.
இன்று நாம பயன்படுத்தும் Wi-Fi, Bluetooth, GPS, மற்றும் மொபைல் போன் நெட்வொர்க் (CDMA) என அத்தனை வயர்லெஸ் தொழில்நுட்பங்களுக்கும் அடிப்படை எது தெரியுமா?
அன்று 1942-ல், ’உலகின் மிக அழகான பெண்’ என்று முத்திரை குத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டாரே, அந்த ஹெடி லாமர் கண்டுபிடித்த அதே ’Frequency-Hopping’ தொழில்நுட்பம்தான்!
ஹெடி லாமர் தனது கடைசி காலத்தில் தனிமையில் வாழ்ந்து, 2000-ம் ஆண்டில் மறைந்தார். அவர் இறப்பதற்குச் சில வருடங்களுக்கு முன்புதான் உலகம் அவருடைய பங்களிப்பை அங்கீகரித்து விருதுகள் வழங்கியது.
இன்று ஹெடி லாமரின் அந்தப் பேரழகு காலத்தால் மறைந்திருக்கலாம். ஆனால், அவர் மூளையில் உதித்த அந்தப் பொறிதான் இன்று உலகம் முழுக்க இணையமாகப் பரந்து விரிந்து, உங்களையும் என்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறது.
அடுத்த முறை உங்கள் போனில் Wi-Fi ஆன் செய்யும்போது அல்லது ப்ளூடூத் ஹெட்செட் மாட்டும்போது, ஒரு நிமிடம் இந்த ஹாலிவுட் தேவதையை நினைத்துக் கொள்ளுங்கள்.
அதுவே, அந்தத் தேவதைக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.
*தோல்வியைத் தோளில் சுமக்காதீர்கள்!*
எதுவரினும், கலங்காமல், என்ன நடந்தாலும் தளராமல் ஒருவன் இருக்கிறானோ, அவன்தான் நெஞ்சுறுதி படைத்தவன் என்று கூறுகின்றோம்.
நெஞ்சத்தில் உறுதியும், நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நடையும் வேண்டுமென்று பாரதியார் பாடினார்.
எதிரிக்காகப் பயந்து குகையினில் பதுங்கிய இராபர்ட் புரூசு என்ற மன்னன் சிலந்தி ஒன்று, வலையைப் பலமுறை தட்டியும், சளைக்காமல் கட்டி முடித்ததைப் பார்த்த மன்னன் வெளியே வந்து, அற்பமான ஒரு சிறு பூச்சிக்கு இந்த மனவலிமை உள்ளபோது நாம் ஏன் தயங்க வேண்டும் ?என்று புதுத்தெம்புடன் மன உறுதியுடன் சென்று பகைவரை வெற்றி கண்டான்.
காதலில் தோல்வியுற்றேன் என்று வாழ்க்கையை வெறுக்கும் ஆண், பெண் இருபாலருக்கும், தேர்வில் தோல்வியுற்றேன் என்று மனம் தளரும் மாணவ, மாணவிகளுக்கும் வேலை கிடைக்கவில்லையே என்று விரக்தியடையும் பட்டதாரி இளைஞர்களுக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்.
தானாக விழாத பழத்தைத் தடியால் அடித்தாவது கீழே விழச்செய்ய வேண்டும். முயற்சிக்கு என்றுமே பயன் உண்டு என்பதை மட்டும் எப்பொழுதும் மறந்துவிட வேண்டாம்.
ஒருவன் கண்ணுக்கு வாழ்க்கையெனும் பாதை தடங்கல் இல்லாமல் நீண்ட தூரம் பார்வைக்கெட்டிய மாத்திரத்தில் சுலபமாகக் காட்சியளிக்கின்றது. மற்றவன் பார்வைக்கு அதே பாதை கல்லும் முள்ளும், செடி கொடிகளும் அடர்ந்து காணப்படுகிறது.
அதைக்கண்டு பயப்படாமல் செடி கொடிகளை வாள்கொண்டு வீசியெறிந்து சுத்தப்படுத்தி, பாதையைக் கடந்து செல்வதுதானே மன வலிமை படைத்தவர்களுக்கு அழகு.
சோதனையும், வேதனையும் தாண்டி வெற்றியடைவதுதானே சாதனை புரிந்த வாழ்வாகும்? இப்படிப்பட்ட வாழ்க்கைதான் உயர்ந்த வாழ்வு என அறியவேண்டும்.
யானை மேய்ற காட்டுல ஆட்டுக்குட்டிக்கா தழையில்ல' என்ற பழமொழியை உணர்ந்து பார்த்தல் நன்மை பயக்கும்.
மனதினில் தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.
தோல்வி ஏற்பட்டுவிட்டால் ஒருவன் செய்துவரும் முயற்சியை விட்டுவிட வேண்டுமென்று அர்த்தமல்ல. அதற்கு மாறாக இன்னும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்பதை அது காட்டுகிறது.
ஆமை தன் ஓட்டிலிருந்து தலையை வெளியே நீட்டும் போதுதான் அது இருக்கும் இடத்தை விட்டு முன்னுக்கு நகர ஆரம்பிக்கிறது. இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் வாழ்க்கை நம் வசப்படும். 👍🙏💐
மற்றவர் தவறை கவனித்துக்
கொண்டே இருப்பவர்கள்
தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்
பிரச்சனைகள் உங்களை அடையாளம் காட்டும் கண்ணாடிகள்.
அவைகளுக்கு முகம் காட்டுங்கள், புறமுதுகு காட்டாதீர்கள்.
🙏இனிய காலை வணக்கம் 🙏
யாரையும் காயப்படுத்தவோ குறைத்து நடத்தவோ செய்யாதீர்கள்.....🍁
இன்று நீங்கள் பலம் மிக்கவராக இருக்கலாம்,
ஆனால் நினைவில் கொள்ளுங்கள், காலம் உங்களைக் காட்டிலும் பலம் வாய்ந்தது.....🌳
*இனிய காலை வணக்கம்*
🌅Suprabhatam ☀
How people treat you reveals their character, not your worth.
Protect your peace and remind yourself: you are not defined by anyone else’s behavior.
Keep smiling !!😀
Be happy !!😄
இன்றைய சிந்தனை
நிறை, குறை இரண்டு விதம். நிறை சொல்லும் மனிதர் வாழ்வில் உயர்கிறார். குறை சொல்லும் மனிதன் வாழ்வில் தாழ்கிறார்.
பிறரைக் குறைகூறி பெருமை தேடும் எவருமே, அவரது சொந்த வாழ்வில் மனநிறைவைப் பெறுவதில்லை.
வாழ்க்கையில் நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை விட, நம் வாழ்வில் யார் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
எதை நீங்கள் பிறருக்கு தருவீர்களோ,
அதையே தான் நீங்கள் பெற்றும் கொள்வீர்கள்.
- (ப/பி)
🙏🏽 *இனிய காலை வணக்கம்* 🙏🏽
நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும், வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில்,
கஷ்டப் படுவதற்கு என்ன காரணம்,
என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவீர்கள்!
இது கூடவா,
ஒரு காரணம் என்ற அளவிற்கு உங்களையே ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்,
அந்த காரணம் என்ன?
தினம்தோறும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய தவறு என்ன?
என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
*எவர் ஒருவர் தங்களுடைய சொந்த பந்தங்களை மதிக்காமல் #அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ,*
அவர்களுக்கு #நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் *கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.*
இப்படியாக சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்ப மாட்டீங்கன்னு தெரியும்.
*சாட்சியோடு சொன்னா நம்புவீங்களானு பாப்போம்?*
#எந்த கிரகத்துக்குரிய சொந்த பந்தம் எது என்பதையும் பார்த்துவிடலாம். #
*உங்களுடைய #அப்பாவை நீங்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால்,*
அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை அவருக்கு நீங்கள் கொடுக்கவில்லை என்றால்,
உங்களுக்கு திருமணம் தள்ளிப்போகும்.
வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது.
ஏனென்றால், #அப்பா ஸ்தானத்தை குறிப்பது #சூரியன்.*
*உங்களுடைய #அம்மாவை நீங்கள் மதிக்கவில்லை என்றால்,*
அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால்,
அவர்களை அவமானப்படுத்தி பேசினால்,
கட்டாயம் உங்களின் அழகு குறைய ஆரம்பிக்கும்.
அறிவாற்றல் மங்கிப் போகும்.
குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவீர்கள்.
மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால், * #அம்மா ஸ்தானத்தை குறிப்பது #சந்திரபகவான்.*
*நீங்கள் கணவனாக இருந்தால்,*
ங்கள் வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடு தான் நடத்த வேண்டும்.
மனைவிக்கு மரியாதை இல்லை என்றால்,
உங்கள் வீட்டில் மகாலட்சுமி இல்லை.
வீடு, மனை, வாகனம், சொத்துபத்து சந்தோஷமான வாழ்க்கை, எல்லாவற்றையும் நீங்கள் பெற வேண்டுமென்றால், மனைவிக்கு மரியாதை கொடுக்கவேண்டும்.
* #மனைவி இடத்தை குறிப்பது #சுக்கிரன்.*
*நீங்கள் மனைவியாக இருந்தால்* உங்களுடைய கணவருக்கு கட்டாயம் மரியாதை கொடுக்கவேண்டும். உங்கள் #கணவர் இடத்தை குறிப்பது #குரு.
*உங்கள் வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவ, சந்தோஷம் நிலைத்திருக்க கட்டாயம் மனைவிமார்கள், கணவனை மதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.*
* #தாய்மாமன் ஸ்தானத்தை குறிப்பவர் #புதன்* தாய்மாமன் மட்டுமல்ல,
#அத்தை ஸ்தானத்தையும் குறிப்பதும் புதன் பகவான்.
உங்களது குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், தாய்மாமன்,
அத்தை போன்ற சொந்த பந்தங்களை #மதிப்போடு நடத்த வேண்டும்.
* #சகோதர சகோதரிகளை இழிவாகப் பேசினால்,* #செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் கிடைக்காது.
உங்களால் ஆடம்பர பொருட்களை வாங்கி, நிலம் வீடு போன்ற சொத்துக்களை வாங்கி, கட்டாயம் சேர்க்க முடியாத. வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும்.
#(இது உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கும் பொருந்தும்.
கணவனாக இருந்தால், மனைவியின் சகோதரர் சகோதரிகளையும் மதிக்கவேண்டும்.
மனைவியாக இருந்தால் கணவரின் சகோதர சகோதரியையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.) #
*அடுத்ததாக #பாட்டிமார்களும்_தாத்தாக்களும்.*
இவர்கள் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது சொல்வதற்கு ஆளே கிடையாது.
அதாவது, #ராகு_கேதுவிற்கு உரியவர்கள் இவர்கள்.
ஆகவே, இவர்களை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும்.
முதியவர்களை கஷ்டப்படுத்தினால், நாமும் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதுதான்.
*இப்போதாவது நம்புவீர்களா கஷ்டம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று!*
ஆக மொத்தம் உறவினர்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும்
சண்டை போட்டாலும் ஓருவருக்கொருவர்
பார்க்காமல் பேசாமல் இருப்பதை
தவிர்த்து அவர்களுடன் #அன்புடன்
பழகி அவர்களையும் #சந்தோஷப்படுத்தி
அதன்மூலம் நாமும் #சந்தோஷமாய்_வாழ்வோம்.
நவகிரகங்களும் சந்தோஷப்பட்டு நம் தோஷங்களை களைந்து நமக்கு சந்தோஷத்தைக் கொடுப்பார்கள்..
ஆக 12 கட்டங்களும் 9 கிரஹங்களும் நம்மை சுற்றி நம் வீட்டில்தான் என புரிந்து நடந்தால் வாழ்க்கை சுபீக்ஷமாக இருக்கும் நிச்சயமாய்..!!
09/03/2026
யாரிடமும் சொல்ல முடியாமல், சொல்லவும் தெரியாமல்..மனதுக்குள் நாம் வைத்திருக்கும் வலிகளுக்கு பெயர்தான் 'ஒன்றுமில்லை '..!
காலை வணக்கம் 🙏
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Erode
638012
