05/03/2024
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தலைமையில் இன்று (5.3.2024) மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், ஈரோடு உள்ளூர் திட்டக் குழுமம்/ மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற, அரசால் இணக்கமளிக்கப்பட்ட ஈரோடு முழுமைத் திட்டத்தின் மீது ஆட்சேபனை சபனை மற்று மற்றும் ஆலோசனை கோருதல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. உடன் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.வ.சிவகிருஷ்ணமூர்த்தி இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.சாந்த குமார், உதவி இயக்குநர்,மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலர் திருமதி.ராணி
உட்பட பலர் உள்ளனர்.
05/03/2024
மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் இன்று (17.02.2024) ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், 46 புதூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இணை ஆணையர் (விற்பனை வரி) ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிட வளாகத்தில் ஈரோடு உள்ளூர் திட்டக்குழுமம்/ மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தின் சார்பில், ஈரோடு முழுமைத் திட்டம் 2041 மீது பொதுமக்களின் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு https://erodedtcp.in என்ற வலையதளத்தில் தங்களது கருத்துக்களை நேரிலோ, எழுத்துப் பூர்வமாகவோ அல்லது இணையதள மூலமாகவோ அல்லது QR Code மூலமாகவோ கருத்துக்கள் தெரிவிக்கும் இணையதள சேவையினை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இஆப., மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம், இணை ஆணையர் (மாநில வரி, ஈரோடு கோட்டம்) திருமதி.லஷ்மி பவியா தண்ணீரு இஆப., ஈரோடு மாநகராட்சி துணை மேயர் திரு.வே.செல்வராஜ், உதவி இயக்குநர், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலர் திருமதி.ராணி உட்பட பலர் உள்ளனர்.