AGR Educational Trust Erode

AGR Educational Trust Erode

Share

Anything is not Easy , But Everything is Possible....If I can't then who can We take kg's to 12th.. We provide spoken English n smart classes on low fees...

30/11/2023

*_அரசு பொதுத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ,மாணவியர்களுக்கு..!_*

நமது AGR கல்வி அறக்கட்டளை தொடர்ந்து 13 ஆண்டுகளாக 100% வெற்றியை பெற்று வந்துள்ளது. அந்த வகையில் இந்த கல்வியாண்டிற்கும் அதனை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து சிறப்பு பயிற்சிகள், தொகுக்கப்பட்ட தேர்வுகள், சிறப்பு வகுப்புகள் ஆகியன நடத்தப்பட்டு, எந்த கல்வியாண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மாணவச் செல்வங்களாகிய உங்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். அந்த வரிசையில் பொதுத் தேர்வினை திறம்பட எதிர் கொள்ள படிப்பது எவ்வளவு அவசியமோ , அதே அளவு பதற்றமில்லா, தெளிவான மன நிலையும் அவசியம். அதற்கென ஒவ்வொரு ஆண்டும் மன நல ஆலோசகர்கள் , தன்னம்பிக்கை பேச்சாளர்களை அழைத்து வந்து மாணவ,மாணவியர்களுக்கு மன நலம் பேணுதல் குறித்த பயிற்சியும் , தன்னம்பிக்கை சொற்பொழிவும் நடத்துவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான தன்னம்பிக்கை மற்றும் மன நலம் பேணுதலுக்கான பயிற்சியினையும் , சிறப்புரையினையும் KSR பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் இயக்குனரும், தன்னம்பிக்கை பேச்சாளரும் , 11க்கும் மேற்பட்ட சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றியவருமான மதிப்பிற்குரிய முனைவர். R. நந்தகுமார் ஐயா அவர்களும், AJS அறக்கட்டளை தலைவரும் , சமூக செயற்பாட்டாளருமான மதிப்பிற்குரிய பொறியியல் வல்லுனர் உயர்திரு. A.J.சரவணன் ஐயா அவர்களும் வருகின்ற 02/12/2023 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் நமது மாணவச் செல்வங்களிடையே உரையாற்றுவார்கள். வெற்றிக்கு முயற்சியும் , பயிற்சியும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு மன வலிமையும் முக்கியம் என்பதுணர்ந்து பெற்றோர்களும், மாணவ,மாணவியர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற அன்போடு அழைக்கின்றோம்.

இப்படிக்கு ,

AGR கல்வி அறக்கட்டளை நிர்வாகம், ஈரோடு.

12/11/2023

ஆயிரக்கணக்கான தீபங்கள் உங்கள் வாழ்க்கையை முடிவில்லாத மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு மற்றும் மகிமையுடன் எப்போதும் ஒளிரச் செய்யட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், AGR கல்வி அறக்கட்டளையின் அன்பான, மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள்! ❤‍🔥❤‍🔥🎊🎊🎉🎉🪔🪔🪔

Photos from AGR Educational Trust Erode's post 08/10/2023

இன்று நமது டியூசன் மாணவர்களுக்கு பூஜா ஸ்டேனரீஷ் சார்பில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கப்பட்டது. நோட்டு புத்தகங்கள் வழங்க உதவி புரிந்த AJS திரு.சரவணன் ஐயா அவர்களுக்கும், பூஜா ஸ்டேசனரீஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

Photos from AGR Educational Trust Erode's post 06/10/2023

அதிகாலை நடைபயிற்சியும் , உடற்பயிற்சியும் உள்ளத்தையும் உடலையும் சுறுசுறுப்பாக்கும்...10ம் வகுப்பு சிங்ககுட்டிகளுடன் இன்றைய நாள் இனிதாக தொடங்கியது

Photos from AGR Educational Trust Erode's post 05/10/2023

நமது AGR கல்வி அறக்கட்டளையின் இந்த கல்வி ஆண்டு (2023-24) தொடங்கி இன்றோடு 100 நாட்கள் ஆகின்றது. இந்த *100 நாட்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வருகை தந்த 10 ம் வகுப்பு மாணவர் இனித் மணி* அவர்களை பாராட்டி *பாராட்டு சான்றிதழ், பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.* வெற்றியின் இரகசியமே தொடர்ச்சியான பயிற்சியும் முயற்சியும் தான். அதன் முதல் படியாக இந்த பாராட்டு சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது. *வாழ்த்துகள் இனித்*. 💐💐💐

Photos from AGR Educational Trust Erode's post 04/10/2023

ஈரோடு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளரும், தற்போதைய சேலம் மதுவிலக்கு காவல் கண்காணிப்பாளரும், நமது AGR கல்வி அறக்கட்டளையின் பேரன்பிற்குரிய வழிகாட்டியுமான *உயர்திரு.வடுகம் சிவக்குமார் IPS* ஐயா அவர்களுக்கு *AGR கல்வி அறக்கட்டளையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.*🙏🏻🙏🏻💐💐🙏🏻🙏🏻

20/09/2023

*_Our little support can turn into big smiles for their life_*

18/09/2023

*_வினை தீர்க்கும் விநாயகர் துணையாய் நின்று அனைவருக்கும் அருள் புரிய வேண்டுகிறோம். AGR -ன் இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துகள்_* 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Want your business to be the top-listed Government Service in Erode?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


R. N. Pudur
Erode
638005

Opening Hours

Monday 5pm - 9:30pm
Tuesday 5pm - 9pm
Wednesday 5pm - 9pm
Thursday 5pm - 9pm
Friday 5pm - 9pm
Saturday 5pm - 9pm
Sunday 11am - 5:30pm