SDPI Nellai ZONE

Directions

SDPI Nellai ZONE 𝗦𝗢𝗖𝗜𝗔𝗟 𝗗𝗘𝗠𝗢𝗖𝗥𝗔𝗧𝗜𝗖 𝗣𝗔𝗥𝗧𝗬 𝗢𝗙 𝗜𝗡𝗗𝗜𝗔

30/09/2026

அரசு விழாக்களில் மதச்சார்பின்மை காக்கப்பட வேண்டும்! -தமிழக அரசுக்கு SDPI கட்சி வலியுறுத்தல்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயல் தலைவர் அச. உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகச் சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் தனுஷ்கோடியில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில், பாஜக ஆளும் வடமாநிலங்களில் நடைபெறுவது போல 'ராம் யாத்ரா' என்ற பெயரில், குழந்தைகளுக்குக் காவி உடை அணிவித்து நாட்டியாஞ்சலி நடத்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. பன்மைத்துவமும் சமூக நல்லிணக்கமும் ஆழமாக வேரூன்றிய தமிழக மண்ணில், இந்துத்துவ அடையாளங்களை முன்னிறுத்தி அரசு விழாவாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அரசு நிர்வாகமே நேரடியாக இத்தகைய நிகழ்வை முன்னெடுத்திருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது.

அனைத்து மதங்களையும் சமமாகப் பாவிப்பதும், அரசு நிர்வாகத்தை மத அடையாளங்களிலிருந்து விலக்கி வைப்பதுமே மக்களாட்சியின் அடிப்படை நெறி. சுற்றுலாத் துறை போன்ற பொது நிர்வாக அமைப்புகள், குறிப்பிட்ட அடையாளத்துடன் கூடிய மதச் சடங்குகளையோ, வழிபாட்டு வடிவங்களையோ அரசு விழாக்களாக மாற்றுவது பன்முகத்தன்மையைச் சிதைக்கும் செயலாகும்.

தமிழகத்தின் நீண்டகால அரசியல் மரபில் மதச்சார்பற்ற மாண்புகள் உறுதியாகப் பேணப்பட்டு வந்த சூழலில், தற்போதைய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இடம் கொடுத்திருப்பது ஜனநாயக சக்திகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, தமிழ்நாடு அரசு மதச்சார்பற்ற கட்டமைப்பைப் பலவீனப்படுத்தாமல், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களை உணர்ந்து, எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் அரசு இயந்திரத்தின் மூலம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

30/09/2026
29/09/2026

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், வாக்குரிமையைப் பாதுகாக்கவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் SDPI கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, SDPI கட்சியின் குஜராத் மாநிலத் தலைவர் முஃப்தி அப்துல்லா உட்பட கட்சித் தொண்டர்களை குஜராத் காவல்துறை கைது செய்தது.

#மக்கள்உரிமை #வாக்குரிமை #ஜனநாயகம் #தேர்தல்_ஆணையம் #குஜராத் #அகமதாபாத்

29/09/2026

Normalising the harassment, selective targeting of mosques and Muslims is a threat to India’s constitutional values.

How can it ever be justified to Bulldoze or target one community’s place of worship to facilitate the religious interests or processions of another community?

The events surrounding the removal of a portion of the historic Shahi Masjid in should not be viewed in isolation, the removal of portion of Ujjain's historic Shahi Masjid in the name of road widening ahead of the 2028 "Simhastha Kumbh Mela" raises an important question. The issue is not development, the issue is targeting the Worship places( and ), Islamic religious practices and Muslim youth who stood against injustice especially in states like Madhya Pradesh, Uttar Pradesh, Assam and more were mostly BJP ruled states.

India’s youth cannot be silent spectators. No religion should be made to feel unsafe and no place of worship should be treated as expendable for the sake of another community’s religious procession or political mobilisation.

In a constitutional democracy, no religion should have to surrender its places of worship, dignity or rights to accommodate another religion. Young Democrats appeal the youth of India to reject the normalisation of harassment, discrimination and communal intimidation against Muslims and religious minorities regardless of who is targeted. The courage to defend constitutional rights must be stronger than the fear of speaking up.

29/09/2026

ராயபுரத்தில் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை சாலையைச் சீரமைக்கக் கோரி SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!

சென்னை ராயபுரம் கல்லறை சாலையில் அமைந்துள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையை உடனடியாகச் சீரமைக்க வலியுறுத்தி, SDPI வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனைக்குச் செல்லும் 50-வது வார்டு சாலையில் குடிநீர் வாரியப் பணிகள் மற்றும் மெட்ரோ நிர்வாகப் பணிகள் முடிவுற்ற பின்னரும், சாலை முறையாகச் சீரமைக்கப்படாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடக்கின்றன. இதனால் சாலை குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதுடன், மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் விபத்து மற்றும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் நிலவுவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் SDPI வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் வண்ணை பஷீர் தலைமையில் நடைபெற்றது. இதில் வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் முகமது அலி, பொருளாளர் கவுஸ் பாஷா, தெற்கு தொகுதி செயலாளர் காஜா மொய்தீன், துணைத் தலைவர் பயாஸ், வட்டத் தலைவர்கள் சுல்தான் கான் (48-வது வட்டம்), அன்சாரி (49-வது வட்டம்), யூசுப் (52-வது வட்டம்), மாவட்ட மகளிரணி தலைவி மெஹர் தாஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை அடுத்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், வாக்குறுதிபடி சாலையை உடனடியாகச் சீரமைக்கத் தவறினால் அடுத்தகட்டமாகப் பெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டது.

29/09/2026

Targeting of the Masjids Must Be Stopped

It has become common news that Masjids in North Indian BJP-ruled states are being systematically targeted. Several incidents of bulldozing and vandalising the Masjids have certainly damaged the secular fabric of the country. Due to these incidents, feelings of insecurity have been created among the minority communities.

Regarding the Shahi Masjid incident in Ujjain, though the situation is now peaceful, the high-handedness and unruly behaviour of the municipal authorities and the police have worsened the situation into a reckless, ruthless and anarchic condition in the city.
SDPI strongly condemns the high-handedness of Police in this incident.

It is the need of the hour that the regime should always work for the inclusiveness of all people and to strengthen the bonding within society. The ruling sections must not resort to divisive motifs and discriminatory policies.

Mohammed Shafi
National Vice President
Social Democratic Party of India

29/09/2026

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி அக்.02-இல் SDPI கட்சி சார்பில் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜனநாயகத்தின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், அவரது பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் அக்டோபர் 02 காந்தி ஜெயந்தி அன்று, தமிழகம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட, தலைமைத் தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் சக தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்புக் கடிதம் தொடர்பான செய்தி, தலைமைத் தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்பதைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. அரசியல் அழுத்தங்களுக்குப் பணிந்து, வாக்காளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் முடிவுகளைத் தொடர்ச்சியாக எடுத்து வரும் தலைமைத் தேர்தல் ஆணையர், அப்பதவியில் நீடிக்கும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டார்.

ஆகவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் சக ஆணையர்களான டாக்டர் சுக்பீர் சிங் சாந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதலோ அல்லது ஆலோசனையோ இன்றி, தலைமைத் தேர்தல் ஆணையரால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR), புதிய வாக்காளர் சேர்ப்பு நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட விதிகள் மாற்றம் உள்ளிட்ட அனைத்து உத்தரவுகளையும், விதி மாற்றங்களையும் தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அத்துடன், ஜனநாயகத்தின் நம்பிக்கையைச் சிதைத்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

வாக்காளர் பட்டியலின் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாக்கவும், அரசியலமைப்பு வழங்கி உள்ள ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டவும் நடைபெறும் இந்த அறப்போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

29/09/2026

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி

திமுக வேட்பாளர் வழ. பரந்தாமன் அவர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட SDPI கட்சியினர்

#தீவிரவாக்குசேகரிப்பு #உதயசூரியன் #திமுக #பரந்தாமன் #கூட்டணி #வாக்குசேகரிப்பு

29/09/2026

Asian Games 2026-ல் வரலாற்று சாதனை
படைத்த தமிழ்நாடு வீரமங்கை ! 🇮🇳🏃‍♀️

பி.டி. உஷாவின் 55.42 விநாடிகள் என்ற 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து, 54.75 விநாடிகளில் ஓடி புதிய தேசிய சாதனை படைத்தார் தமிழ்நாடு வீராங்கனை வித்யா ராம்ராஜ்.

Asian Games 2026-ல் வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு SDPI IT WING தமிழ்நாடு சார்பாக மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 👏🇮🇳

Address

Nagercoil
Kanyakumari

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Nellai ZONE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share