22/03/2026
கரூவை நண்பர்கள் சங்கம்.
Hai Friends in this page... we will use for our business and other doubt sharing area..
22/03/2026
20/12/2025
RTO அலுவலகம் எதிரே உள்ள VRS வேல் திருமண மண்டபம் உரிமையாளர் வெங்கக்கல்பட்டியைச் சேர்ந்த R. சாமியப்பன் அவர்கள் 19-12-25 ம் தேதி இரவு 1030 மணியளவில் இயற்கை எய்திவிட்டார். அன்னாரது இறுதிச்சடங்கு 20-12-25 மதியம் 12 மணிக்கு நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
28/11/2025
ஜவஹர் பஜார் திண்டுக்கல் ரோடு அருள்மிகு செல்வ விநாயகர்....
24/11/2025
கரூர் டு கோவை பொங்கலூர் டோல்கேட் அமலுக்கு வந்தது
18/11/2025
https://whatsapp.com/channel/0029Va9RbMIF1YlVgLuEzw0O/135
*வெண்ணைமலை காத்திருப்பு போராட்டம்*
கரூர் வெண்ணைமலை பகுதியில் வீடுகள், கடைகளை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதை கண்டித்து மக்கள், சர்வ கட்சியினர் கோயில் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம், காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
அப்போது முன்னாள் அமைச்சரும், *அதிமுக மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர்* பேசியதாவது: இனாம் ஒழிப்பு சட்டத்தில் நிலங்களை அன் றைய அரசாங்கம் பட்டா மாறு தல் செய்து தந்து 60 ஆண்டு களுக்கு பிறகு அந்த நிலம் பலரது கைமாறி, ஆயிரக்கணக்கானோர் குடியிருந்து வருகின்றனர்.
அன்று விட்டுவிட்டு, இன்று அறநிலையத்துறை மக்களை துன்புறுத்தும் செயல் கண்டிக் கதக்கது.
பாதிப்பு மக்களுக்கானது, மக்கள்தான் அரசாங்கம்,
நியாயத்தை எடுத்துச் சொல்ல வாய்ப்பு தர வேண்டும்.
கோர்ட் செல்வதற்கும் வாய்ப்பு தராதது சரியில்லை. சிவில் கோர்ட்டுக்கு செல்ல சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத் தரவிட்டுள்ளது. இதுவரை போகாதவர்களுக்கு கோர்ட் செல்ல வாய்ப்பு தரவேண்டும். அதனை தராமல் சீல் வைப்பேன் என்பது கூடாது. கோர்ட் உத்தரவை மதிக்கின்றோம்.
அதே நேரத்தில் அந்த உத் தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. அது இம்மக்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்றும் தெரியவில்லை. நல்ல முடிவு எட்டும் வரை உங்களுடன் அதிமுக துணை நிற்கும் என்றார்.
*காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எம்பி ஜோதிமணி* பேசியதாவது பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளோம். நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். நம் கருத்தைச் சொல்ல இங்கு வரவில்லை. மக்கள் பிரச்னையை தீர்க்கத்தான் வந்துள்ளோம். இதனை கோர்ட்டில் போராடித்தான் தீர்க்க முடியும். இந்த வழக்கை சிவில் கோர் டில்தான் எடுத்திருக்க வேண்டும். ஐகோர்ட் எப்படி எடுத்தது என்று தெரியவில்லை. இந்து சமய அறநிலையத்துறை மத்திய அரசிற்கும், மாநிலத்திற்கும் பொதுவானது. ஐகோர்ட் தீர்ப்பை செல்லாததாக்க வேண்டுமாயின், அது லோக்சபாவால்தான் முடியும்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக முதல்வரிடம் இது குறித்து நான் எடுத்துரைத்தேன் எம்பி கனிமொழியும் தமிழகம் முழுவதும் இந்த பிரச்சினை உள்ளது என்றார் இதிலிருந்து தீர்வு கோர்ட்டில் தான் பெற முடியும் எத்தனையோ வழக்குகள் ஆண்டு கணக்கில் நடந்து வரும் நிலையில் இந்த வழக்கு மட்டும் உடனுக்குடன் எடுத்துக் கொள்ளப்படுவது எப்படி என்று தெரியவில்லை.
வீடு நிலத்துக்கு பட்டா வைத்துள்ளோம் அதுதான் உரிமையானது. இந்த வழக்கை தொகுத்தவரின் பின்னணியில் பெரிய நெட்வொர்க் உள்ளதாக கருதுகிறேன்.
நமக்கு உண்மையான இடத்திலிருந்து நம்மை வெளியேற வேண்டும் என்று யார் சொன்னாலும் குற்றமே நீதிபதிகள் இங்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும் பின்னர் முடிவு காண வேண்டும் இது குறித்து லோக்சபாவில் குரல் எழுத்துவேன் என்றால்.
*திமுக ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி* பேசுகையில் " இந்த பிரச்சனையில் கடந்த இரு ஆண்டுகளாக உங்களுடன் இருந்து வருகிறோம். அதிகரிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு செல்லுங்கள் அல்லது இடம் மாறி செல்லுங்கள் என்று கூட சொல்லி உள்ளோம். மக்களை சந்திப்பது நாங்கள் தான் அவர்கள் அல்ல எந்த ஒரு பட்டாவையும் ஜீரோ மதிப்பு செய்யக்கூடாது என்று இந்து சமய அறநிலை துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது ஆனால் அதற்கு கோர்த்தலை உத்தரவு அளித்துள்ளது சட்ட முறைப்படி எந்த செயல்பாட்டிற்கும் நாங்கள் உதவிட தயாராக உள்ளோம்.
இந்த பிரச்சனை கோர்ட்டில் இருப்பதால் அரசால் தற்போது தனி தீர்மானம் போடுவதற்கு முடியவில்லை தடை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். ஒரு அதிகாரி செய்த தவறால் இப்படி கஷ்டப்படுகிறோம் என்றார்.
*முன்னாள் விஏஓ காமராஜ்* பேசுகையில் வழக்கு முடியும் வரை எந்த ஒரு இடத்திற்கும் சீல் வைக்க மாட்டோம்.எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று அதிகாரிகள் உறுதி தர வேண்டும். கோர்ட் செல்லாதவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்றார்.
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கட்சியினர் என்று நூற்றுக்கணக்கானோர் போராட்ட களத்தில் பங்கு பெற்றனர்.
இந்தப் பிரச்சனைக்கு கரூர் *மாவட்ட அனைத்து பகுதி மக்களிடம் இருந்து ஆதரவு பெருகிக்* கொண்டு வருகிறது.
*We Stand with Vennamalai People*
25/10/2025
https://youtu.be/Snim17jKTZE?si=1HtbXlxORpUo_Xec
கொங்கு திமிருக்கு வரி! | The Untold Story of Thimir Vari | BT Reports In 1942, during the Quit India Movement, the British government imposed a shocking and unique punishment on the people of Coimbatore — a “Thimir Vari”, meani...
Value of education
01/10/2025
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Karur
