CPIM Kovilpatti

Directions

CPIM Kovilpatti Comrades of Kovilpatti

ஏழை எளிய மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த கூறியும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வரும் தொடர...
30/10/2026

ஏழை எளிய மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த கூறியும்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வரும் தொடர் படுகொலைகளை கண்டித்தும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் 15 மையங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

03.11.2026, செவ்வாய்

அனைவரும் திரளாக பங்கேற்பீர்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தூத்துக்குடி மாவட்ட குழு

20/10/2026

🚩

 #கோவில்பட்டி  #இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தனிநபர் புன்செய் இடத்தை அரசு நிலம் என்று தவறாக தகவல் வழங்கிய வருவாய் வட...
13/10/2026

#கோவில்பட்டி #இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தனிநபர் புன்செய் இடத்தை அரசு நிலம் என்று தவறாக தகவல் வழங்கிய வருவாய் வட்டாட்சியர், கோட்டாட்சியரை கண்டித்தும் அந்த இடத்தை மீண்டும் மறு மதிப்பீடு செய்து பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி ஒன்றிய குழு சார்பாக கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் மணி, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் கேபி. ஆறுமுகம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் பிரம்மாண்டமான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன்  தொட...
28/09/2026

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் பிரம்மாண்டமான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது.

23/09/2026

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (AIKS)
31 வது‌ மாநில மாநாடு
2026 செப்டம்பர் 27,28,29
தூத்துக்குடி

செப் 27 பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும்
பேரணி -பொதுக்கூட்டம்
(அண்ணாநகர் 12 வது தெரு துவங்கி விவிடி சிக்னல் வரை)

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
தமிழ்நாடு மாநிலக்குழு

'தமிழ்நாடு இனி இடது பக்கம்' இடதுசாரி கருத்தியலை வலுவாக கொண்டு செல்வோம்!'தமிழ்நாடு இனி இடது பக்கம்' என்ற முழக்கத்தை முன்வ...
05/09/2026

'தமிழ்நாடு இனி இடது பக்கம்'

இடதுசாரி கருத்தியலை வலுவாக கொண்டு செல்வோம்!

'தமிழ்நாடு இனி இடது பக்கம்' என்ற முழக்கத்தை முன்வைத்து திருச்சியில் அக்டோபர் 15ஆம் தேதி இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பேரணி நடைபெறும். இதில் மூன்று கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்கள் கலந்து கொள்வார்கள்.

தமிழ்நாட்டில் இடதுசாரி கருத்தியலை வலுவாக கொண்டு செல்வோம். இந்தப் பேரணி தமிழகத்தை புது அரசியல் திசைவழியை நோக்கி திருப்பும்.

தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர்

கோவில்பட்டி அருகே கிளவிப்பட்டி கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூன...
03/09/2026

கோவில்பட்டி அருகே கிளவிப்பட்டி கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி ஒன்றிய குழு சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமையில் இன்று 03.09.3026 மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், கிளவிபட்டி ஊராட்சி முழுவதும் சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும், அனைத்து தெருக்களிலும் தரமான சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும், மயானம் செல்லும் வழியில் சாலை மற்றும் மயானத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில், துரைச்சாமிபுரம் கிளை செயலாளர் ஈஸ்வரி,மாதர் சங்க ஒன்றிய தலைவர் சித்ராதேவி, கட்டுமான சங்க நகர தலைவர் தம்பிதுரை மற்றும் மாரியப்பன்,மாரிகணேஷ்உட்பட கிளவிபட்டி கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்   சார்பில் ஆகஸ்ட் 26 முதல் 31 வரை மாநில முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று ...
30/08/2026

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 26 முதல் 31 வரை மாநில முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக #தூத்துக்குடி மாவட்டம் #கோவில்பட்டி நகர குழு சார்பில் பாரதி நகர் கிளையில் இன்று 30.08.2026 மாலை நடைபெற்றது.

இதில், நகரக்குழு உறுப்பினர்கள் தினேஷ்குமார், ஜானகி,கிளை உறுப்பினர்கள் மைக்கேல்,வீரக்குமார் வாலிபர் சங்க நிர்வாகிகள் குரு, ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்   சார்பில் ஆகஸ்ட் 26 முதல் 31 வரை மாநில முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று ...
29/08/2026

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 26 முதல் 31 வரை மாநில முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக #தூத்துக்குடி மாவட்டம் #கோவில்பட்டி ஒன்றிய குழு சார்பில் கிளவி பட்டி, கரிசல்குளம், வடக்கு திட்டங்குளம், தெற்கு திட்டங்குளம்,அத்தை கொண்டான், இனாம் மணியாச்சி, ராஜிவ் நகர்,அய்யனேரி ஆகிய கிளைகளில் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, மணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சின்னத்தம்பி, கணேசன், ராமசுப்பு, முத்துச்சாமி, முத்துராஜன் மற்றும் கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Address

Kovilpatti
628501

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Kovilpatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share