22/11/2025
தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக குடந்தையில்…
தஞ்சை வடக்கு மாவட்ட கழக அதிகாரப்பூர்வ பக்கம். மண்டிய இருள் கிழிக்கும் மக்களின் எழுச்சி,
மாற்று அரசியலுக்கான மாபெரும் புரட்சி.
22/11/2025
தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக குடந்தையில்…
15/06/2023
கூட்டு குர்பானி
பங்கு தொகை 3000
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், திருபுவனம் கிளை சார்பாக கூட்டு குர்பானிக்கு பங்குகள் பெறப்பட்டு வருகிறது.
மாடு ஒரு பங்கின் விலை 3,000 ரூபாய்
"உமது இறைவனை தொழுது அவனுக்காக அறுப்பீராக!" அல்குர்ஆன் 108:2
தொடர்புக்கு:
A.ஹிபாயத்துல்லா 9092777147
P.அப்துல் ஹாதி 80565 75885
M.மைதீன் 72008 56295
25/11/2022
உதிரம் கொடுப்போம், உயிரைக் காப்போம்
இறைவன் நாடினால்,
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் #தமுமுக நடத்தும்
மாபெரும் இரத்ததான முகாம்
நேரம்: நாளை (26/11/2022) (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை
இடம்: ஊராட்சி நடுநிலை பள்ளி ஆவூர்
(ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதனையும் வாழ வைத்தவர் ஆவார்)
ஆவூர் கிளை
தமுமுக-மமக
தஞ்சை வடக்கு
22/11/2022
இறைவன் நாடினால்...
18/11/2022
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தமுமுக-திருநறையூர்-
நாச்சியார்கோவில் கிளையின் ஒருங்கினைந்த ஆலோசனைக் கூட்டம், இன்று மகரிப் தொழுகைக்கு பிறகு நாச்சியார் கோவில் கிளை தலைவர் எச் ஹாஜா மைதீன் தலைமையில் நடைபெற்றது,
இதில் மமக மாவட்ட துணைச் செயலாளர் எம் நூருல் அமீன் அவர்களும், சவுதி அல் ஹசா நிர்வாகி சாதிக் பாட்ஷா அவர்களும், திருநறையூர் கிளை துணைத் தலைவர் ஆசாரி ராஜ் முஹம்மது அவர்களும், திருநறையூர் மமக கிளை செயலாளர் செல்லப்பா அவர்களும் முன்னிலை வகித்தனர்.
டிசம்பர் 6 கும்பகோணத்தில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு பெரும் திரளாக கலந்து கொள்வது
டிசம்பர் ஆறு ஏன் எதற்கு? தெருமுனை பிரச்சார கூட்டம்
டிசம்பர் 3 அன்று
4 இடங்களில் நடத்துவது என்று
முடிவு செய்யப்பட்டுள்ளது,
தமுமுக & மமக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு எங்கள் கிளையின் சார்பாக வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.
தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும்,
I.M தஞ்சை பாதுஷா அவர்களை
மமக துணை பொதுசெயலாளர் நியமனச் செய்த மாநில தலைமைக்கு எங்கள் கிளையின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவன்,
தமுமுக
தொழில்நுட்ப பிரிவு,
தஞ்சை வடக்கு.
10/11/2022
அனைவருக்கும் தேசிய கல்வி நாள் வாழ்த்துக்கள்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை செய்தி.
👇👇👇
https://m.facebook.com/story.php?story_fbid=683636263124796&id=100044352853233
மமக தகவல் தொழில்நுட்ப அணி
02/11/2022
31/10/2022
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட துணைத் தலைவராக (பண்டாரவாடை) முகம்மது சலீம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
31/10/2022
மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் நியமனம்.
1. நூருல் அமீன் (நாச்சியார்கோவில் )
2.முஜிபுரஹ்மான் (கருப்பூர் )
3. வீரமணி (சுவாமிமலை )
31/10/2022
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் நியமனம்.
1. சேக் அஹமத் (அம்மாப்பேட்டை)
2.பஜ்ஜிருல் நூர் (திருமங்கலக்குடி)
3. இர்ஷாத் அலி (ஆவூர்)
14/09/2022
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
தஞ்சை வடக்கு மாவட்டம் தமுமுக மமக 2022 ஆம் ஆண்டு அமைப்பு தேர்தல்...
14.09.2022 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை தேர்தல் இராஜகிரி கிளை அலுவலகத்தில் தமுமுக மமக மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் P.A.S.ரஹமத் அலி தலைமையில் நடைப்பெற்றது..
இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயலாளரும்
தேர்தல் அதிகாரியுமான
சகோதரர் ஹீசைன் கனி அவர்கள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளரும் மாவட்டத்தின் பொறுப்பாளருமாகிய
தஞ்சை I.M.பாதுஷா மற்றும் மமக மாநில இளைஞரணி துணை செயலாளர் ருசி மைதீன் மற்றும் தமுமுக மமக மாநில செயற்குழு உறுப்பினர்கள்
சல்லி நஜிர் முகம்மது மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் குடந்தை ஜாபர்
முஜிபுர் ரகுமான்
அப்துல் ரகுமான்
முகம்மது சலீம் மற்றும் பேராசிரியர் அவர்களின் நேர்முக உதவியாளர் ரிபாயி தஞ்சை வடக்கு வளைகுடா பொறுப்பாளர் சோழபுரம் சபீர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
கீழ்க்கண்ட நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்..
இராஜகிரி
தமுமுக மமக கிளை தலைவர்
அப்துல் காதர்
இராஜகிரி
தமுமுக கிளை செயலாளர்
முகம்மது ஹனீப்
இராஜகிரி
மமக கிளை செயலாளர்
நஜிர் அகம்மது
இராஜகிரி
தமுமுக மமக கிளை பொருளாளர்
அப்துல் மாலிக்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்....
அல்ஹம்துலில்லாஹ்
இப்படிக்கு
தமுமுக மமக
தேர்தல் பணிக்குழு
தஞ்சை வடக்கு மாவட்டம்.
12/09/2022
தலைமை ஆசிரியருக்கு நினைவு பரிசு வழங்கிய தஞ்சை வடக்கு மாவட்ட திருநறையூர் நாச்சியார்கோயில் தமுமுக.
தமிழக அரசு சார்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு நமது அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி அல்லி ஆறுமுகம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நமது பள்ளியில் கடந்த 7ஆண்டுகளாக கல்விப் பணியை சிறப்பாக செயல்படுத்தி வரும் நாச்சியார்கோவில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை மாவட்டத்தில் முதன்மையான பள்ளியாக மாற்றி வரும் நமது தலைமை ஆசிரியரே ஊக்கப்படுத்தும் விதமாக தமுமுகவின் சமூக நீதி மாணவர் இயக்க சார்பாக தலைமை ஆசிரியை அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினோம்,
மேலும் P. ராஜ் முஹம்மது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார், இந்நிகழ்வில் தமுமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.