01/06/2026
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே "கும்பகோணம் மாவட்டம்" அமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை!
Chief Minister of Tamil Nadu TVK It Wing Vinoth Ravi Voice Of TVK
கும்பகோணம் என்று சொன்னால் கோடி ஆனந்தமே!
எங்கள் நகரம் கும்பகோணம்!
கோயில்களின் அணிவகுப்பு
எங்கள் நகரத்தின் சிறப்பு!
மகா மகக் குளமும்,
பொற்றாமரைக் குளமும்,
காவேரியுடன் ,வரவேற்கும்.
பள்ளிவாசல்களும்,சர்ச்களும்,
இணைந்து,அழகு சேர்க்கும் !
வெற்றிலைக்கு,
பெயர் பெற்ற நகரம்.
சிற்பத்தோடு,சிகரமிட்டு,
உலகம் முழுதும் புகழ் பாடும்.
வியாபாரச் சந்தையில்
முன்னின்று வழி நடத்தும்,
குடந்தை என செல்லமாய்
அழைக்கப்படும் எங்கள் நகரம்...
தஞ்சையில் ஒரு அங்கம்
01/06/2026
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே "கும்பகோணம் மாவட்டம்" அமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை!
Chief Minister of Tamil Nadu TVK It Wing Vinoth Ravi Voice Of TVK
30/05/2026
30/05/2026
இன்னும் 650 நாட்களில் கும்பகோணம் மகாமக பெருவிழா!
ஒரு கோடி மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த பெருவிழாவிற்கு கும்பகோணம் மாநகரில் நிரந்தர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பொதுமக்கள் கோரிக்கை!
#கும்பகோணம்
30/05/2026
23/05/2026
குடந்தை மாநகர வளர்ச்சிக்கான மக்கள் கோரிக்கை
குடந்தை மாநகரில் கீழ்க்கண்ட பணிகள் போர் கால அடிப்படையில் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்:
குப்பைகள் நிறைந்த காவிரி ஆறு மற்றும் தேப்பெருமாநல்லூர் பிடாரி குளம் வாய்க்கால்கள் தற்போது சாக்கடைகளாக மாறி வருகின்றன. இதனை உடனடியாக சீரமைத்து, தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
குடந்தை நகரை உஜ்ஜைன் போல் இந்தியாவின் சுத்தமான நகரங்களில் முன்னணி இடத்திற்கு கொண்டு வர வேண்டும்.
தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
தற்போதைய பேருந்து நிலையத்தை மாற்றாமல், சிறந்த திட்டமிடல் மூலம் மேலும் 200 பேருந்துகள் இயக்கக்கூடிய வசதிகளை உருவாக்க வேண்டும்.
கிருஷ்ணாபுரத்திற்கு மாற்ற முயற்சிப்பதை தடுக்க வேண்டும். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கூடுதல் ஆட்டோ செலவு குறையும்.
மடத்துத் தெரு, காமாட்சி ஜோசியர் தெரு உள்ளிட்ட பகுதிகள் சிறிய மழைக்கே வெள்ளக்காடாக மாறுகின்றன. மழைநீர் வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
தெருக்களில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதை கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்க வேண்டும்.
அனைத்து கோயில்களின் அடிப்படை கட்டமைப்புகளையும், பக்தர்களின் வசதிக்கேற்ப மேம்படுத்த வேண்டும்.
மகாமகக் குளம் மற்றும் முக்கிய கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள அசைவக் கடைகளை, மாற்று இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கூறிய கோரிக்கைகளை நம் விவசாய அமைச்சர் முழுமையாக நடைமுறைப்படுத்தினால், குடந்தை மக்களின் மனதில் நிரந்தர இடம் பெற்று, தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
23/05/2026
🔥 தேர்தல் மேடையில் வாக்குறுதி கொடுப்பது எளிது…
ஆனா மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது தான் உண்மையான தலைமை!
கும்பகோணம் மாவட்டம் அமைக்க கோரி தனித்து குரல் கொடுத்து போராடியது — தவெக.
இப்போது மக்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான் 👇
“முதல்வரே... வாக்குறுதி கொடுத்தது நினைவில் இருக்கிறதா?
அல்லது தேர்தல் முடிந்ததும் அந்த வாக்குறுதியும் முடிந்துவிட்டதா?”
கும்பகோணம் மாவட்டம் என்பது அரசியல் ஸ்டண்ட் இல்லை!
இது மக்களின் உரிமை... மக்களின் எதிர்பார்ப்பு!
இனி பதில் வேண்டாம்... செயல்தான் வேண்டும்! ⚡
#கும்பகோணம்_மாவட்டம் #மக்களின்_உரிமை
வருகின்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே
கும்பகோணத்தை தனி மாவட்டமாக வேண்டுகிறோம்
04/05/2026
சரித்திரம் மாறியது... கோட்டை தகர்ந்தது! 🏛️💥
கும்பகோணம் மண்ணில் புதிய அரசியல் அத்தியாயம்! திமுகவின் கோட்டையைத் தகர்த்து, வெற்றிக் கொடியை நாட்டியது தமிழக வெற்றிக் கழகம்.
ChangeIsHere