Thangam Thenarasu

Directions Website

Thangam Thenarasu Member of the Legislative Assembly - Tiruchuli | Belongs to the Dravidian stock

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் - திருச்சுழி சட்டமன்ற தொகுதி

26/10/2026

முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்த அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தை மடைமாற்றுவதற்காகவே இந்தக் கைது நடைபெற்றிருப்பதாக கருதவேண்டியுள்ளது.

அடக்குமுறையினால் திராவிட முன்னேற்றக் கழகத்தை முடக்கவும் முடியாது. தடைகளை உடைத்து முன்னேறிய வரலாறுதான் திமுகவின் வரலாறு!

Anbil Mahesh Poyyamozhi

நேற்று கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்....
26/10/2026

நேற்று கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி.

மணமக்கள் திரு. A. வைஷ்ணவ் – திருமிகு. M. விகாஷ்ணி ஆகியோர் நீடூழி வாழ்ந்திட என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டேன்.

சமையல் கலையில் வல்லுநராக விளங்கி, தொலைக்காட்சிகள் வழியே தமிழ்நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் அக்கலையைப் பரப்பி மக்களி...
25/10/2026

சமையல் கலையில் வல்லுநராக விளங்கி, தொலைக்காட்சிகள் வழியே தமிழ்நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் அக்கலையைப் பரப்பி மக்களின் அன்பைப் பெற்ற செஃப் திரு. தாமு அவர்கள் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முதல் சுதந்திரப் பிரகடனத்தை முழங்கி, தாய்மண்ணின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை ஈகம் செய...
24/10/2026

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முதல் சுதந்திரப் பிரகடனத்தை முழங்கி, தாய்மண்ணின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் மருது சகோதரர்களின் நினைவு நாள் இன்று!

சிவகங்கைச் சீமையின் தன்மானக் குரலாய் நின்று, வெள்ளையரின் அடக்குமுறைக்குத் தலைவணங்காமல் வீரத்தின் அடையாளமாக விளங்கிய பெரிய மருது, சின்ன மருது ஆகிய விடுதலைச் சுடர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன்.

மண்ணின் உரிமை காக்க அவர்கள் ஏந்திய சுதந்திரப் போராட்டத் தீப்பொறியை நெஞ்சில் தாங்கி, எதேச்சதிகார அடக்குமுறைகளுக்கு எதிரான நமது மக்கள் உரிமைப் போரில் தொடர்ந்து முன்னேறுவோம்!

கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ள கழக மறுசீரமைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று அண்ணா அறிவா...
23/10/2026

கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ள கழக மறுசீரமைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இன்றையக் கூட்டத்தில் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர், சகோதரர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் அணியின் தற்போதைய செயல்பாடுகள், களத்தில் எதிர்கொள்ளும் நிர்வாகச் சிக்கல்கள், சவால்கள் மற்றும் நெருக்கடிகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக விளக்கினார்.

இக்கூட்டத்தில் என்னுடன் கழக மறுசீரமைப்புக் குழு உறுப்பினர்களான அண்ணன் திரு. சக்கரபாணி எம்.எல்.ஏ., திருமிகு. தமிழரசி ரவிக்குமார், சகோதரர்கள் திரு. முரசொலி எம்.பி., திரு. எஸ்.கே.பி. கருணா மற்றும் திரு. இ. பரந்தாமன் ஆகியோரும் விளக்கங்களைக் கேட்டறிந்தனர். கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

கழகத் தலைவர் திரு. மு. க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் வடக்கு மாவட்டக் கழக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ...
20/10/2026

கழகத் தலைவர் திரு. மு. க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் வடக்கு மாவட்டக் கழக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

எதிர்காலக் களப்பணிகளை மேலும் கூர்மைப்படுத்தும் வகையில், புதிய ஒன்றியங்கள் மற்றும் அவற்றுக்குட்பட்ட கிளைக் கழகங்களுக்கான கட்டமைப்பு விவரப் பட்டியலை கழக நிர்வாகிகளுடன் இணைந்து தலைமைக் கழகப் பிரதிநிதிகளான தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திரு. கலைக்கதிரவன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திரு. இன்பாரகு ஆகியோரிடம் நேரில் ஒப்படைத்தோம்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் உள்ளிட்ட கழக முன்னணியினர் உடனிருந்தனர்.

20/10/2026

கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழ்நாடு அரசு, மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் திரட்டிய கடன் 21% குறைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், குறைந்த அளவு கடன் வாங்கியுள்ளதாகச் சொல்லி அதனை ஒரு சாதனையாக முன்னிறுத்த முயற்சிக்கும் தவெக அரசு, எவ்வாறு இந்த கடன் தேவை குறைந்தது என்பதையும், இந்த முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும் மூலதனச் செலவையும் வெளியிட வேண்டாமா?

கழக ஆட்சியின் கடந்த 2025–26 நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவினங்களுக்கு ரூ.57,231 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் CAG-இன் தற்காலிக மாதாந்திரக் கணக்குகளின்படி, 2025 ஏப்ரல்–செப்டம்பர் காலத்தில் ரூ.13,002.22 கோடி அளவிற்கு மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட்டது. தவெக அரசு, இந்த நிதி ஆண்டில் மூலதன செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், அதே ஏப்ரல்- செப்டம்பர் மாத காலகட்டத்தில் மேற்கொண்ட மூலதனச் செலவு எவ்வளவு? புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிட்டது எவ்வளவு? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளுக்கு இன்னும் தவெக அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? இந்த விவரங்களை எல்லாம் அரசு வெளியிடுமா?

வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்தியும், செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகைகளை வழங்காமலும், பண இருப்பை அதிகமாகக் காட்டி, குறைந்த அளவே கடன் வாங்கிவிட்டு, அதனை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா? வழங்க வேண்டிய தொகைகளை நிலுவையில் வைத்திருப்பது சேமிப்பாகிவிடுமா?

முதல் அரையாண்டில் கடன் குறைந்ததாகக் கூறும் தவெக அரசு, அக்டோபர்–டிசம்பர் காலாண்டில் மட்டும் ரூ.48,000 கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் திரட்டிய ரூ.23,500 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகமல்லவா?

த.வெ.க. அரசின் வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதை விட, குறைந்த அளவிலேயே அரசின் வருவாய் இருந்து வரும் நிலையில், முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் இந்த அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த புள்ளிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதால் சாலைகள் மோசமாக உள்ளன. கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். எனவே, இதனை தங்களின் சாதனை எனச் சொல்லி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவு, செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்னும் விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை ஆகியவற்றின் முழு விவரங்களையும் வெளியிட்டு, தவெக அரசு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.

தனது தனித்துவமான இசையாற்றலால் தமிழ் திரையுலகத்தில் தனிமுத்திரைப் படைத்தவர், தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை இசையால் நனைத்த...
17/10/2026

தனது தனித்துவமான இசையாற்றலால் தமிழ் திரையுலகத்தில் தனிமுத்திரைப் படைத்தவர், தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை இசையால் நனைத்தவர், இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

அவரை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர், விடுதலை போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டப...
16/10/2026

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர், விடுதலை போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவுநாள் இன்று.

ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதி மூச்சு வரை அசாதாரண துணிச்சலுடன் போராடி, நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாக நம் தமிழ் மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குவோம்.

தமிழ்நாட்டின் ஆற்றலையும் அறிவையும் உலகறியச் செய்த மாமனிதர், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், மறைந்தாலும் இளைஞர்களின்...
15/10/2026

தமிழ்நாட்டின் ஆற்றலையும் அறிவையும் உலகறியச் செய்த மாமனிதர், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், மறைந்தாலும் இளைஞர்களின் உள்ளத்தில் தன்னம்பிக்கையின் குறியீடாய் மாறி உத்வேகம் அளிக்கும் போற்றுதலுக்குரிய ஐயா ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளான இன்று எனது புகழ் வணக்கங்கள்!

Address

மல்லாங்கிணர்
Madurai
626109

Alerts

Be the first to know and let us send you an email when Thangam Thenarasu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share