13/03/2026
#மயிலாடுதுறை மாவட்டம் #மறையூர் கிராமம் ZB. 97. #மறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம்( )-தமிழ்நாடு சார்பில் இன்று 13.03.2026 காலை 10 மணி அளவில் நமது #மறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் #விவசாயிகள்_கருத்தரங்கம் நடைபெற்றது.
இவ்விழாவில் நிறுவனத்தைச் சார்ந்த கள நிர்வாகிகள் திரு. #பரஞ்சோதி மற்றும் திரு. #ராஜேஷ் ஆகியோர் விவசாயிகளுக்கு
#நானோ_தொழில்நுட்பத்தை பற்றியும் #மண்_பரிசோதனை மற்றும்
#மண்வளச் சார்ந்த ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
இறுதியாக வரவேற்புரை மற்றும் நன்றியுரையாக ZB.97. #மறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் திரு. #ராஜதுரை அவர்கள் விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி கூறினார்.
13/01/2025
முற்காலத்தில் #வேதபுரி என்று அழைக்கப்பட்ட (வேதம்=மறை, புரி=புரிதல், வேத பாடசாலைகள் அதிகம் இருந்து வேதங்கள் புரிந்த [கற்பித்தல்] இடம்) #மறையூர் என்னும் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ #முத்தா_தாடங்கவள்ளி சமேத ஸ்ரீ #அகத்தீஸ்வரர் திருக்கோவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது.
சப்த ரிஷிகளில் ஒருவரும் சித்தர்களில் முதன்மையானவருமான மாமுனி ஸ்ரீ #அகத்தியர் வழிபட்ட தென் திசையின் 166 சிவாலயங்களில் 125 வது தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது.
சித்திரை மாதத்தில் சூரியனின் வெளிச்சம் நேராக கருவறைக்குள் செல்லும் சிறப்புடையதாகும்.
ஆண்டுதோறும் மார்கழி மாத #திருவாதிரை நட்சத்திரத்தில் உற்சவமூர்த்தியான நடராஜ பெருமான் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மேள தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி கிரிவலமாக நடராஜ பெருமானும் அம்பாளும் எழுந்தருள செய்து கிராம
மக்கள் வழிபாடு செய்தனர்.
21/12/2023
வீரசோழன் உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் லிட்,.-மயிலாடுதுறை
ஒருங்கிணைப்பில்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வேளாண் பொருளாதார துறை-சிதம்பரம்
மற்றும்
தமிழ்நாடு மாநில உயர் கல்வி குழு (TANSCHE)-சென்னை
இணைந்து நடத்திய
"காவேரி வேளாண் மண்டலத்தில் பல்நோக்கு விவசாயம்"
என்ற வேளாண் பயிலரங்கில் கலந்துக்கொண்டு
13/01/2018
54 ஆம் ஆண்டு முத்தமிழ் மன்ற விளையாட்டு விழா அழைப்பிதழ்
09/12/2017
மயிலாடுதுறை தாலுக்கா, மறையூர் கிராம விவசாயிகளுக்கு 2016-17 ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை வழங்காத கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறையை கண்டித்து 08-09-17 அன்று மாபெரும் முற்றுகைப்போரட்டம்....
09/12/2017
மயிலாடுதுறை தாலுக்கா, மறையூர் கிராம விவசாயிகளுக்கு 2016-17 ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை வழங்காத கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறையை கண்டித்து 08-09-17 அன்று மாபெரும் முற்றுகைப்போரட்டம்....
08/04/2017
அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் (எ) ஸ்ரீ காளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா
இடம் ~ ஆயவலம் மறையூர்.
நாள் & நேரம் ~ 09.04.2017 காலை 6.30 - 8.30 மணிக்குள்.
அனைவரும் வருக !! அம்மன் அருள் பெருக !!!.
24/03/2017
அருள்மிகு ஸ்ரீ #செல்லியம்மன் ஆலய குடமுழுக்கு 48-ம் நாள் வீதி உலா நிகழ்ச்சி....
24/03/2017
எழில் கொஞ்சும் நமது கிராமத்தின் பசுமை நினைவுகள் சில.. கிழே உள்ள கானொலி காண்க...
MARAIYUR 2009 -- 1 .wmv
MARAIYUR-2009, PART-i pooja program , navigates you from chennai through ECR, Pondy,Cuddalore, Chidambaram to Mayiladuthurai. On crossing Mayiladuthurai Jn t...
22/03/2017
அருள்மிகு தர்ம சாஸ்தா ஸ்ரீ ஐயனார்,
ஸ்ரீ அக்னி வீரன் ஆலய வீதி உலா நிகழ்ச்சி...
01/03/2017
மறையூர் ஊராட்சி
அமைவிடம்
நாடு - இந்தியா
மாநிலம் - தமிழ்நாடு
மாவட்டம் - நாகப்பட்டினம்
ஆளுநர் - சி. வித்தியாசாகர் ராவ்
முதலமைச்சர் - எடப்பாடி கே. பழனிச்சாமி
மாவட்ட ஆட்சியர் - எஸ். பழனிச்சாமி இ. ஆ. ப.
ஊராட்சித் தலைவர் - ?????
மக்களவைத் தொகுதி - மயிலாடுதுறை
மக்களவை உறுப்பினர் -
R. K. Bharathi Mohan(அஇஅதிமுக)
மக்கள் தொகை 2,653 (2011ன் படி)
மறையூர் ஊராட்சி
(Maraiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2653 ஆகும். இவர்களில் பெண்கள் 1345 பேரும் ஆண்கள் 1308 பேரும் உள்ளனர்.
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் இணைப்புகள் 179
சிறு மின்விசைக் குழாய்கள் 6
கைக்குழாய்கள் 19
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 0
உள்ளாட்சிக் கட்டடங்கள் 6
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2
ஊரணிகள் அல்லது குளங்கள் 1
விளையாட்டு மையங்கள் 0
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 71
ஊராட்சிச் சாலைகள்
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்
ஊர்குடி
கோவங்குடி
சிறுகோவங்குடி
மறையூர்
நன்றி:வீக்கிப்பிடியா..