We The Leaders - Mudukulathur

Directions

We The Leaders - Mudukulathur அறம் செய்ய விரும்பு.

முதுகுளத்தூர் சட்டமன்ற மக்களின் மாற்றத்திற்கான தளம்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் குருபூஜை வி...
30/10/2026

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் குருபூஜை விழாவில் We The Leaders Foundation சார்பாக தலைவர்கள் கலந்து கொண்டு வணங்கினர்.

K.Annamalai We The Leaders Ramanathapuram

ஆன்மீகமும், தேசிய உணர்வும் சமூகப் பற்றும் ஒருங்கே கொண்ட தெய்வத் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின...
30/10/2026

ஆன்மீகமும், தேசிய உணர்வும் சமூகப் பற்றும் ஒருங்கே கொண்ட தெய்வத் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் இன்று.

சுதந்திரப் போராட்ட வீரராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த மக்கள் தலைவராகவும் விளங்கியவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

தன்னலமற்ற பொதுவாழ்வு, அஞ்சாத நெஞ்சம், உறுதியான கொள்கைப்பற்று, தெய்வ பக்தி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்.
- தலைமை சேவகர் திரு. K.Annamalai Ex IPS அவர்கள்.

We The Leaders Foundation We The Leaders Ramanathapuram

 #அறிவிப்பு We The Leaders அமைப்பிற்காகப் பிரத்யேகமாக அனுமதி பெறப்பட்டுள்ளது!பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற...
29/10/2026

#அறிவிப்பு

We The Leaders அமைப்பிற்காகப் பிரத்யேகமாக அனுமதி பெறப்பட்டுள்ளது!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா – அக்டோபர் 30 | காலை 12:00 மணி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, அக்டோபர் 30 அன்று காலை 12:00 மணிக்கு பசும்பொன் விழாவில் பங்கேற்க We The Leaders அமைப்பிற்குப் பிரத்யேகமாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஒன்றுகூடும் இடம்: பரமக்குடி பைபாஸ் – பசும்பொன் செல்லும் சந்திப்பு
ஒன்றுகூடும் நேரம்: காலை 10:00 மணி
விழாவில் பங்கேற்க அனுமதி பெறப்பட்ட நேரம்: காலை 12:00 மணி

காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, சிவகங்கை, மதுரை மற்றும் விருதுநகர் பகுதிகளைச் சேர்ந்த We The Leaders தன்னார்வலர்கள் அனைவரும் அக்டோபர் 30 அன்று காலை 10:00 மணிக்குப் பரமக்குடி பைபாஸ் – பசும்பொன் செல்லும் சந்திப்பில் தவறாமல் ஒன்றுகூடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அங்கிருந்து அனைவரும் ஒன்றிணைந்து ஊர்வலமாகப் பசும்பொன் நோக்கிச் செல்வோம்.

அனைவரும் தவறாமல் பெருமளவில் கலந்துகொள்வோம்! தேவர் ஐயாவின் ஆசி பெறுவோம்!

We The Leaders
முதுகுளத்தூர் சட்டமன்றம்.

K.Annamalai We The Leaders Foundation We The Leaders Ramanathapuram Dharani R Murugesan We The Leaders - Thiruvadanai We The Leaders- பரமக்குடி

27/10/2026
27/10/2026
27/10/2026

பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

கடந்த 2023 ஆம் ஆண்டு, நாங்கள் DMK Files வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை. அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை.

திரு. அன்பில் மகேஷ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்?

இந்த விவகாரத்திலும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
- தலைமை சேவகர் திரு. K.Annamalai அவர்கள்.

We The Leaders Foundation We The Leaders Ramanathapuram

அறிவிப்புவரும் அக்டோபர் 27ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நடைபெற உள்ள மாவீரர்கள் மருது பாண்டியர்களின் 225 ஆ...
26/10/2026

அறிவிப்பு

வரும் அக்டோபர் 27ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நடைபெற உள்ள மாவீரர்கள் மருது பாண்டியர்களின் 225 ஆவது குருபூஜை விழாவில், நமது We The Leaders அமைப்பின் சார்பில் கலந்து கொள்ள,

1. திரு. தரணி முருகேசன்,
2. திரு. நாச்சியப்பன்,
3. திரு. பாண்டுரங்கன்,
4. திரு. மகா சுசீந்திரன்,
5. திரு. சோழன் பழனிசாமி,
6. டாக்டர் ஆனந்த்,
7. திரு ராமேஸ்வரன்

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவீரர்கள் மருது பாண்டியர்கள் புகழ் ஓங்குக!
- தலைமை சேவகர் திரு. K.Annamalai அவர்கள்.

We The Leaders Foundation We The Leaders Ramanathapuram Dharani R Murugesan

அறிவிப்புவீரம், தியாகம், ஆன்மிகம் என உயரிய பண்புகளின் அடையாளமாகத் திகழ்ந்த தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் ...
26/10/2026

அறிவிப்பு

வீரம், தியாகம், ஆன்மிகம் என உயரிய பண்புகளின் அடையாளமாகத் திகழ்ந்த தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119-வது பிறந்த நாள் மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் நிகழ்வில்,

1. திரு. வசந்தராஜன்
2. திரு. மகா சுசீந்திரன்
3. திரு. பாண்டுரங்கன்
4. திரு. தரணி முருகேசன்
5. திரு. நாச்சியப்பன்
6. திரு. சோழன் பழனிசாமி
7. திரு. பண்ணைவயல் இளங்கோ

ஆகியோர், நமது We The Leaders அமைப்பின் சார்பில், தேவர் திருமகனாரின் திருக்கோவிலில் மரியாதை செலுத்தி, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் உருவச்சிலைக்கு மாலையணிவித்து, அவரது தியாகத்தையும் சமூக நல்லிணக்கத்திற்கான பங்களிப்பையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவார்கள்.

விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்பாலும், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக எடுத்த முயற்சிகளாலும், மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்ற தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது வரலாறும் சிந்தனைகளும், வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும்.
- தலைமை சேவகர் திரு. K.Annamalai அவர்கள்.

We The Leaders Foundation We The Leaders Ramanathapuram Dharani R Murugesan We The Leaders - Thiruvadanai We The Leaders- பரமக்குடி

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சமையல் கலைஞர் திரு. செஃப் தாமு அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது தனித்துவமான சம...
25/10/2026

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சமையல் கலைஞர் திரு. செஃப் தாமு அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது தனித்துவமான சமையல் திறமையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன், இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்.

திரு. செஃப் தாமு அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!

-தலைமை சேவகர் திரு K.Annamalai அவர்கள்.

Address

Mudukulathur

Website

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders - Mudukulathur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category