Kanniyakumari District Police

Call Directions

Kanniyakumari District Police Public of Kanniyakumari District are welcome to share the information/grievances

🚨 கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்...
04/11/2026

🚨 கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடைரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




🚨கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு!நவம்பர...
04/11/2026

🚨கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு!

நவம்பர் 04, 2026

✨கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அன்ஷூல் நாகர் IPS அவர்கள், பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார் மனுக்களைப் பெற்றுக்கொண்டு, மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார்கள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார்.

✨மேலும், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டப்படி துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



🚨பொதுமக்களின் கவனத்திற்குஇன்றைய (04.11.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்த...
04/11/2026

🚨பொதுமக்களின் கவனத்திற்கு
இன்றைய (04.11.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.
உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள்.




🚨சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு...நவம்பர் 04,2026✨கன்னியாகுமரி மாவட்டத்தி...
04/11/2026

🚨சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு...

நவம்பர் 04,2026

✨கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம்–ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அன்ஷூல் நாகர், IPS., அவர்களின் பரிந்துரையின் பேரில், தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

✨ அதன் தொடர்ச்சியாக இரணியல் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய திங்கள் நகர் செட்டியார்மடம் பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகன் நவநீதகிருஷ்ணன்(44) என்பவர் மீது இரணியல் காவல் நிலைய குற்ற எண் 577/2026 U/S 296(b),232(1),351(2) of BNS சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

✨இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் திரு. M. பிரதாப், IAS., அவர்கள் நவநீதகிருஷ்ணன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.



🚨கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை 04.11.2026 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அன்ஷுல் நாகர் IPS அவர்களின் உத்தரவுபடி இன்று ...
04/11/2026

🚨கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை

04.11.2026

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அன்ஷுல் நாகர் IPS அவர்களின் உத்தரவுபடி இன்று மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது



🚨கோவில் உண்டியல் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கைது!நவம்பர் 4 2026,கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நி...
04/11/2026

🚨கோவில் உண்டியல் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கைது!

நவம்பர் 4 2026,

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற உண்டியல் திருட்டு சம்பவம் தொடர்பாக, களியக்காவிளை காவல் நிலையத்தில் குற்ற எண் 352/2026, BNS பிரிவு 303(2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இவ்வழக்கில், குளப்புரம், மன்னன்விளை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரது மகன் ஜித்து என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



🚨டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) மோசடி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை...
04/11/2026

🚨டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) மோசடி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை...



🚨இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.1.45 கோடி மதிப்பிலான 830 செல்போன்கள் மீட்பு – உரியவர்களிடம் ஒப்படைப்பு!நவம்பர் 4, 2026.🟡...
04/11/2026

🚨இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.1.45 கோடி மதிப்பிலான 830 செல்போன்கள் மீட்பு – உரியவர்களிடம் ஒப்படைப்பு!

நவம்பர் 4, 2026.

🟡கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாகப் பெறப்பட்ட புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, காணாமல் போன செல்போன்களைக் கண்டறிந்து மீட்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அன்ஷூல் நாகர் IPS அவர்கள் உத்தரவிட்டார்.

🟡அவரது உத்தரவின்பேரில், மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு காணாமல் போன செல்போன்களைக் கண்டறிந்து மீட்டு வருகின்றனர்.

🟡இதன் தொடர்ச்சியாக, தற்போது சுமார் ரூ.52 இலட்சம் மதிப்பிலான 250 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

🟡மேலும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் ரூ.1.45 கோடி மதிப்பிலான மொத்தம் 830 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு, அவற்றின் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

🟡 சைபர் பிரிவு போலீசார் மேற்கொண்ட தொடர் முயற்சிகளையும், அவர்களின் சிறப்பான பணியையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.

செய்தியாளர்களுடன் கலந்துரையாடல்

செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது செல்போன்கள் மீட்கப்பட்ட விவரங்கள், மாவட்டத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

செல்போன் தொலைந்தால் பொதுமக்கள் செய்ய வேண்டியவை:

1. அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் மனு அளிக்க வேண்டும்.
2. தமிழ்நாடு காவல்துறையின் Citizen Portal (https://eservices.tnpolice.gov.in) இணையதளம் வாயிலாகவும் புகார் பதிவு செய்யலாம்.
3. மத்திய அரசின் CEIR இணையதளம் (https://www.ceir.gov.in/) மூலம் தொலைந்த செல்போனின் IMEI எண்ணைப் பயன்படுத்தி அதனை முடக்குவதற்கும், கண்டறிவதற்கும் கோரிக்கை அளிக்கலாம்.

பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவுரை:

* திருட்டுப் பொருட்களை வாங்குவதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும்.

* பொதுமக்கள் யாரேனும் செல்போனைக் கண்டெடுத்தால், அதனை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

* பயன்படுத்திய செல்போன்களை வாங்கும்போது அவற்றின் உரிமை மற்றும் IMEI விவரங்களைச் சரிபார்த்து மிகுந்த எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும்.



04/11/2026

🚫 மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்!

உங்கள் ஒரு தவறான முடிவு, பல உயிர்களைப் பாதிக்கலாம். மது தவிர்ப்போம்; உயிர்களைக் காப்போம்!

🚫 Don't Drink and Drive!

One wrong decision can put many lives at risk. Say no to drunk driving. Save lives!

Address

District Police Office
Nagercoil
629001

Telephone

+917010363173

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanniyakumari District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share