Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship

Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship

Share

THE OFFICIAL FACEBOOK PAGE OF SHARON GLOBAL REVIVAL MINISTRIES & NAVI MUMBAI PRAYER FELLOWSHIP

Brief Information about Dr. R S A Williams – Founder & President of SGRM/ NMPF
(An anointed servant of God carrying Lord’s word in Tamil & English across the Globe)

- Motivational Speaker to Global Audience on Management Subjects (with Biblical base)
- Anointed Speaker on Evangelism and Spiritual Topics
- Faculty in Seminars/ Retreats and Conventions with the guidance of Holy Sp

Photos from Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship's post 08/06/2026

🔴⚪🔴2002-வது நாளின் காலைத்தியானம் 09/06/2026 !!!

இந்த காலைவேளையில், "கிறிஸ்து உங்களுக்கு மன்னித்துபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" ….. “REMEMBER THE LORD FORGAVE YOU, SO YOU MUST FORGIVE OTHERS” என்று (COLOSSIANS) கொலோசெயர் 3:13-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

கிறிஸ்து நமது பாவங்களை நிபந்தனையின்றி மன்னித்ததுபோல, நாமும் மற்றவர்களின் தவறுகளை முழுமையாக மன்னிக்க வேண்டும் என்று வேதாகமம் வலியுறுத்துகிறது.

மன்னிப்புக் கேட்பதும், மன்னிப்புக் கொடுப்பதும் மனிதர்களுக்கு எளிதான காரியம் அல்ல. தவறு செய்ததை அறிந்திருந்தாலும் அதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்க பலர் தயங்குகிறார்கள். அதுபோல, தன் தவறை உணர்ந்து வருகின்ற மனிதனை, மன்னித்து ஏற்றுக்கொள்வதும் பலருக்கு கடினமாக இருக்கிறது.

நாம் அனைவரும் தவறு செய்கிறவர்களே. ஆனால் நமது தவறுகளை உணர்ந்து, சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்புக் கேட்டு சீர்பொருந்திக்கொள்வது நல்ல சாட்சியாகும். அதேபோல், மன்னிப்புக் கேட்பவரை மன்னித்து ஏற்றுக்கொள்வது தேவ அன்பின் வெளிப்பாடாகும்.

மத்தேயு 6:14-ல், "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்" என்று ஆண்டவர் போதிக்கிறார்.

எனவே பிரியமானவர்களே, சிலுவையில் தம்மையே தியாகம் செய்து, நம்மை மன்னித்த கிறிஸ்துவைப் போல, நம் இருதயத்திலுள்ள கசப்புகளை அகற்றி, மற்றவர்களின் குற்றங்களை மனதார மன்னிப்போம். மன்னிப்பு மன சமாதானத்தையும் தேவனுடைய ஆசீர்வாதத்தையும் நமக்குக் கொண்டுவரும்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, கிறிஸ்துவாகிய நீர் எங்களுக்கு மன்னித்ததுபோல, நாங்களும் ஒருவருக்கொருவர் மன்னிக்க எங்களுக்கு உதவிசெய்யும்படி ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7 - 9967228488.
WhatsApp 74004 72200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

Photos from Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship's post 07/06/2026

🟤⚪🟤2001-வது நாளின் காலைத்தியானம் 08/06/2026 !!!

இந்த காலைவேளையில், "நாம் கிரகிக்ககூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்" ..... "HE DOES GREAT THINGS BEYOND OUR UNDERSTANDING” என்று (JOB) யோபு 37:5-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இந்த உலகத்தில் அறிவியல், எத்தனையோ மடங்கு பெருகினாலும், கர்த்தருடைய செயல்களை ஒருவராலும் ஆராய்ந்து முடியாது. மனித அறிவுக்கும் மற்றும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட விதத்திலே மகாபெரிய காரியங்களை நம் கர்த்தர் செய்கிறார்.

தேவனுடைய வார்த்தையினால் உலகம் உண்டானது, மண்ணிலிருந்து மனுஷனை உருவாக்கினது, செங்கடல் இரண்டாகப் பிளந்தது, யோர்தான் நதி குவிந்தது, மரித்தவன் உயிரடைந்தது, இன்னும் எத்தனையோ நமது அறிவுக்கு எட்டாத காரியங்களை நம் கர்த்தர் செய்திருக்கிறார்.

நடக்கவே நடக்காது, சாத்தியமே இல்லை என்று நாம் நினைக்கும் காரியங்கள் எல்லாம் நம் தேவனால் மிக சாதாரணமாக, எளிதாக நடந்திருப்பதைக் காணமுடிகிறது.

பக்தன் யோபு “ஆராய்ந்து முடியாத பெரியகாரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” என்று யோபு 9:10-ல் கூறியுள்ளார்.

நம் வாழ்விலும் படிப்பில் வெற்றி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், மனசமாதானம், கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை என அனைத்தும் கிடைக்குமா என்ற சந்தேகங்கள் நம் உள்ளத்தில் இருக்கக்கூடும். மனிதனால் இது கூடாததுதான், தேவனால் எல்லாம் கூடும்.

எனவே பிரியமானவர்களே, எல்லா சூழ்நிலைகளிலும், விசுவாசத்தோடு கர்த்தரை நோக்கிப் பார்ப்போம். நிச்சயமாகவே நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை, கர்த்தர் நம் வாழ்வில் செய்து நம்மை நிறைவாய் ஆசீர்வதிப்பார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, நாங்கள் கிரகிக்கக்கூடாத பெரியக்காரியங்களை கர்த்தராகிய நீர் எங்களுக்குச் செய்கிறீர் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7 - 9967228488.
WhatsApp 74004 72200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

Photos from Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship's post 06/06/2026

🟢⚪🟢2000-வது நாளின் காலைத்தியானம் 07/06/2026 !!!

இந்த ஓய்வுநாளின் காலைவேளையில், “அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்"…... "THEN YOU WILL CALL ON ME AND COME AND PRAY TO ME, AND I WILL LISTEN TO YOU” என்று (JEREMIAH) எரேமியா 29:12-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

நம் வாழ்வில் தனி ஜெபம் சிறந்தது என்றாலும் குடும்பமாக, விசுவாசிகளாக அல்லது சபையாக கூடி இணைந்து, தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது, தேவனுடைய பிரசன்னம் நம்மை நிரப்புகிறது. அவர் செவிகொடுத்து பெரிய காரியங்களைச் செய்கிறார்.

மத்தேயு 18:20-ல் “ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்று இயேசு கூறியுள்ளார்.

ஏரோது ராஜா, பேதுருவை சிறைச்சாலையில் அடைத்து வைத்தபோது, சபையார் அனைவரும் கூடி, அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடு ஜெபம்பண்ணினார்கள் என்று அப்போஸ்தலர் 12: 5 மற்றும்12-ல் பார்க்கிறோம்.

சபையாரின் விண்ணப்பத்தை கர்த்தர் கேட்டு, ஒரு தூதனை சிறைச்சாலைக்கு அனுப்பி, பேதுருவின் விலங்குகளைத் தளர்த்தி, அற்புதமாக விடுதலையாக்கினார்.

நமது இக்கட்டான சூழ்நிலைகளில், குடும்பமாக ஒருமனப்பட்டு ஜெபிக்கும்போது, நாம் வேண்டிக்கொள்ளுகிற காரியம் பரலோகப் பிதாவினால் நமக்கு உண்டாகும் என்று பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, இந்த ஓய்வுநாளிலும், ஆலயத்திற்குச் சென்று, கர்த்தரை தொழுதுகொண்டு, நமது தேவைகளுக்காக விண்ணப்பம் செய்வோம். நிச்சயமாகவே நமது ஜெபத்திற்கு பதில் உண்டு.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, நாங்கள் கூடிவந்து உம்மைத் தொழுதுகொண்டு, உம்மை நோக்கிக் விண்ணப்பம் பண்ணும்பொழுது; நீர் எங்களுக்குச் செவிகொடுப்பீர் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488 WhatsApp-7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

Photos from Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship's post 05/06/2026

🔵⚪🔵1999-வது நாளின் காலைத்தியானம் 06/06/2026 !!!

இந்த காலைவேளையில், “மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்"…... "FOR THE LORD SEES NOT AS MAN SEES: MAN LOOKS ON THE OUTWARD APPEARANCE, BUT THE LORD LOOKS ON THE HEART” என்று (1 SAMUEL) 1 சாமுவேல் 16:7-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

மனிதர்களாகிய நாம் மற்றவர்களின் வெளித்தோற்றம், கல்வி, செல்வம் மற்றும் திறமைகளை மட்டுமே பார்க்கிறோம். ஆனால் நம் தேவன் நம்முடைய இருதயத்தின் ஆழத்தைப் பார்க்கிறார்.

இஸ்ரவேலின் புதிய ராஜாவைத் தேர்ந்தெடுக்க சாமுவேல் தீர்க்கதரிசி, பெத்லகேமுக்குச் சென்றபோது, ஈசாயின் மூத்த மகனான எலியாபின் தோற்றத்தைக் கண்டு அவனே ராஜாவாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்.

ஆனால் கர்த்தர், "மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" என்று அறிவுறுத்தினார்.

மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீதின் இருதயத்தை தேவன் கண்டார். அவனுடைய உண்மையும் பக்தியும் கர்த்தருக்குப் பிரியமாயிருந்ததால், அவனை இஸ்ரவேலின் ராஜாவாக உயர்த்தினார்.

எரேமியா 17:10
“கர்த்தராகிய நானே… இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்” என்று கர்த்தர் கூறுகிறார்.

எனவே பிரியமானவர்களே, நமது இருதயத்தை பரிசுத்தமாய் காத்துக்கொள்வோம். நாம் மற்றவர்கள் பார்வையில் தகுதியில்லாதவர்களாயிருந்தாலும், கர்த்தர் நம்மை உயர்த்தி மேன்மைப்படுத்துவார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, எந்த மனுஷனும் எங்களைப் பார்ப்பது போல் நீர் எங்களைப் பார்ப்பதில்லை: மனுஷன் முகத்தைப் பார்ப்பான், நீரோ எங்கள் இருதயத்தைப் பார்க்கிறீர் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488 WhatsApp-7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

Photos from Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship's post 04/06/2026

🟢⚪🟢 1998-வது நாளின் காலைத்தியானம் 05/06/2026 !!!

இந்த காலைவேளையில், “உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்”... “YOUR PEACE WOULD HAVE BEEN LIKE A RIVER, YOUR WELL-BEING LIKE THE WAVES OF THE SEA” என்று (ISAIAH) ஏசாயா 48:18-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிப்போம்.

கர்த்தருடைய கட்டளைகளின்படி நாம் நடக்கும்போது, நம்முடைய சமாதானம் வற்றாத நதியைப்போல் ஓடிக்கொண்டே இருக்கும். நம்முடைய நீதி மற்றும் நற்கிரியைகள், சமுத்திரத்தின் அலைகளைப்போல் ஒன்றன்பின் ஒன்றாக இடைவிடாமல் வந்து கொண்டேயிருக்கும் என்று இந்தநாளின் வசனம் விளக்குகிறது.

குடும்பத்திலும் சமுதாயத்திலும் சமாதானத்தைத் தேடி அலைகிற பலர் இருக்கிறார்கள். மனிதன் இழந்துபோன சமாதானத்தை அளிக்கவே இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு மனிதனாக வந்தார்.

இயேசு பூமியில் வாழ்ந்தபோது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாய் இருந்த ஸ்திரீ, இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டு சுகமடைந்தபோது, இயேசு அவளைப் பார்த்து: “மகளே, திடன்கொள்; உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது; சமாதானத்தோடே போ” என்று கூறினார். இதை லூக்கா 8:43-48-ல் வாசிக்கிறோம்.

“கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி அவர்களை ஆசீர்வதிப்பார்” என்று சங்கீதம் 29:11-ல் பார்க்கிறோம்.

மேலும், ஏசாயா 56:1-ல் “நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்” என்று கர்த்தர் சொல்கிறார்.

எனவே பிரியமானவர்களே, கர்த்தருடைய கற்பனைகளைக் கைக்கொள்வோம். அப்போது நமது சமாதானம் நதியைப்போலும், நமது நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் தொடர்ந்து பெருகும்.

ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படி எங்கள் சமாதானம் நதியைப்போலும், எங்கள் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் பெருக அருள் செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7 – 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai, India
NMPF - Mumbai, India

Photos from Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship's post 03/06/2026

🟣⚪🟣 1997-வது நாளின் காலைத்தியானம் 04/06/2026 !!!

இந்த காலைவேளையில், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்"…... "GOD IS OUR REFUGE AND STRENGTH, AN EVER-PRESENT HELP IN TROUBLE” என்று (PSALM) சங்கீதம் 46:1-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இவ்வுலகில், நம்மைச் சுற்றி எப்பேர்ப்பட்ட ஆபத்துக்கள் சூழ்ந்தாலும், நாம் பாதுகாப்பாக ஓடி ஒளிந்து அடைக்கலம் பெற்றுக்கொள்ளக்கூடிய உறுதியான கோட்டையாக நம் தேவன் இருக்கிறார்.

மேலும், நமது பலவீனமான நேரங்களில், நமக்குத் புதிய பெலனையும், தைரியத்தையும் அவரே நமக்கு அளிக்கிறார்.

நமது ஆபத்துக்காலத்தில், உடனடியாக உதவும் உற்ற துணையாக அவர் இருக்கிறார். இதனை ஆங்கிலத்தில் "AN EVER-PRESENT HELP IN TROUBLE” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆம், ஏசாயா 25:4-ல் “…. நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்” என்று கூறப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை அக்கினிச்சூளையிலே தூக்கிப் போட்ட ஆபத்தான வேளையில், கர்த்தரே அடைக்கலமும், பெலனும், அனுகூலமான துணையுமாயிருந்து, அக்கினியின் நடுவிலே அவர்களோடு உலாவி, எந்த சேதமுமின்றி அவர்களைப் பாதுகாத்தார் என்று தானியேல் 3:20-26-ல் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, நம் வாழ்க்கையில் கொடிய புயலும் வீசினாலும், நமக்கு விரோதமாக தீய மனிதர்கள் எழும்பினாலும், கன்மலையாகிய கிறிஸ்துவை புகலிடமாக்கிக் கொள்வோம். அவரே நமக்கு அடக்கலமாயிருந்து, நம்மை பாதுகாத்து வழிநடத்துவார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, தேவனாகிய நீர் எங்களுக்கு அடைக்கலமும், பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488 WhatsApp-7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

Photos from Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship's post 02/06/2026

🔵⚪🔵 1996-வது நாளின் காலைத்தியானம் 03/06/2026 !!!

இந்த காலைவேளையில், “பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்"…... "TO OBEY IS BETTER THAN SACRIFICE” என்று (1 SAMUEL) 1 சாமுவேல் 15:22-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

நாம் கர்த்தருக்குச் செலுத்தும் வெளிப்புற காணிக்கைகளை விட, தேவக்கட்டளைகளைக் கைக்கொண்டு, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதே தேவனுக்கு பிரியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட கீழ்ப்படிதல்தான் எல்லா பலியைப் பார்க்கிலும் மிகவும் உயர்ந்தது எ்ன்று நாம் பார்க்கிறோம்.

பிதாவின் அன்பை ருசிக்கிற பிள்ளைகளாகிய நாம், வேத வசனங்களை உத்தமமாயும், தாழ்மையாயும் ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கிறவர்களாய்க் காணப்பட வேண்டும் என்றே கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

சங்கீதக்காரனாகிய தாவீது, “பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல” என்று சங்கீதம் 51:16-ல் அறிக்கை பண்ணியிருப்பதைப் பார்க்கிறோம்.

யோனா, தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் அவருடைய சமுகத்தினின்று விலகி, ஓடிவிட முயற்சித்ததினால் இராப்பகல் மூன்றுநாள் மீன் வயிற்றிலே இருக்க நேரிட்டது. தன் தவறை உணர்ந்து, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினபோது, கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிப்போட்டது.

“கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ?” என்று சாமுவேல் கூறிவிட்டு, பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே பிரியமானவர்களே, தேவனுடைய சித்தத்துக்கும், சத்தத்திற்கும் செவிசாய்த்து, முழுமனதோடு அவருக்குக் கீழ்ப்படிந்து அவருக்குப் பிரியமாய் வாழ்வோம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம் என்பதை உணர்ந்து செயல்பட எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெபதேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488 WhatsApp-7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

Photos from Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship's post 02/06/2026

🟠⚪ 🟠 1995-வது நாளின் காலைத்தியானம் 02/06/2026 !!!

இந்த காலைவேளையில், "மரணபரியந்தம் நம்மை நடத்துவார்" …... "HE WILL BE OUR GUIDE EVEN UNTO DEATH” என்று (PSALM) சங்கீதம் 48:14-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இந்த நாளின் தியானப்பகுதி, நமக்கு நம்பிக்கையும், தைரியமும் கொடுக்கும் வாக்குறுதியாகக் காணப்படுகிறது. ஆம், நம் தேவன் நமது வாழ்வின் மரணபரியந்தம் நம்மை சிறப்பாக நடத்துவார்.

நாம் துன்பங்களைக் கடந்துவந்த நாட்களில் நம்மைக் கைவிடாமல் சமாதான வழியில் நடத்தினதுபோல, நமது இறுதி மூச்சுவரை கர்த்தர் நம்மை வழிநடத்துவார்.

சங்கீதக்காரனாகிய தாவீது, “அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்” என்று சங்கீதம் 23:3-ல் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்” என்று அறிக்கை செய்கிறார். ஆம், நம் இயேசு மரணத்தின்மீது ஜெயம் கொண்டவர்.

உலக ஜனங்கள் மரணத்தை நினைத்து பயந்து, அடுத்து என்ன சம்பவிக்குமோ என்று ஒரு நிச்சயம் இல்லாமல் காணப்படுகிறார்கள். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கோ ஒரு நிச்சயம் உண்டு. கர்த்தர், தமது இராஜ்யத்திற்கு நம்மை நடத்திச் சென்று அதை நமக்குச் சுதந்தரமாய்த் தருவார்.

ஆகையால் சம்பவிக்கிற காரியங்கள் எதுவாயிருந்தாலும், கவலைப்படத் தேவையில்லை. தேவையானது ஒன்றே ஒன்று. இயேசுவின் பாதத்தில் அமர்ந்து காத்திருப்பது மட்டுமே.

எனவே பிரியமானவர்களே, நம் தேவன் கடைசி வரையிலும் வழிகாட்டியாக இருந்து, செவ்வையான பாதையிலே நம்மை நடத்திச் செல்வார் என்பதை நம்பி தைரியத்தோடு முன்னேறிச் செல்வோம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்கள் தேவனாகிய நீர் மரணபரியந்தம் எங்களை நடத்துவீர் என்ற விசுவாச எதிர்பார்ப்புடன் ஜெபிக்கிறோம் . இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7 - 9967228488 WhatsApp-7400472200.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

Photos from Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship's post 31/05/2026

🟢⚪🟢1994-வது நாளின் காலைத்தியானம் ... 01/06/2026 !!!

*💐PROMISE - JUNE 2026*

இந்த புதிய மாதத்தின் முதல் நாள் காலைவேளையில், "நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்" …... "YOU WILL BE LIKE A WELL-WATERED GARDEN, LIKE A SPRING WHOSE WATERS NEVER FAIL” என்று (ISAIAH) ஏசாயா 58:11-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

’நீர்ப்பாய்ச்சலான தோட்டம்’ என்பது செழிப்பையும் மற்றும் பசுமையையும் குறிக்கிறது. ‘வற்றாத நீரூற்று’ என்பது எப்போதும், எல்லாக் காலங்களிலும் இருக்கும் கர்த்தரின் ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது.

சில ஏரி மற்றும் குளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடும். ஆனால் கோடைக் காலம் வரும்போது அவை வற்றிவிடும். ஆனால் நீரூற்றில் இரவும் பகலும், தண்ணீர் சுரந்து கொண்டேயிருக்கும்.

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், நமது குடும்பத்துக்கும், மற்றவர்களுக்கும் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு செழிப்பான தோட்டம். மற்றும் வற்றாத ஆசீர்வாத நீரூற்று. நாம் எந்த சூழ்நிலையிலும் வறண்டு போவதேயில்லை.

ஒரு தீர்க்கதரிசியின் மனைவி வீட்டில், பெரிய குறை காணப்பட்டது. கர்த்தரின் வார்த்தையின்படி அந்த வீட்டில், ஒரு குடத்திலிருந்த கொஞ்சம் எண்ணெய் சுரந்து, பாத்திரங்களை நிரப்பிக்கொண்டேயிருந்தது காலியான பாத்திரங்கள் இருக்கும் வரையிலும் அது வற்றிப் போகவேயில்லை. கடன் பாரம் விலகியது. மீந்ததைக்கொண்டு அந்த விதவையும், பிள்ளைகளும் ஜீவனம்பண்ணினார்கள் என்று 2 இராஜாக்கள் 4:1-7ல் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற நன்மைகள் மற்றும் ஆசீர்வாதங்கள் ஒருபோதும் குறைந்து போவதோ, வற்றிப் போவதோயில்லை. ஆகவே மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் வாழ்வோம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, நாங்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் காணப்பட எங்களுக்கு உதவிசெய்யும்படி ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7 - 9967228488 WhatsApp-7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

Photos from Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship's post 30/05/2026

🔵⚪🔵 1993-வது நாளின் காலைத்தியானம் 31/05/2026 !!!

இந்த ஓய்வுநாளின் காலைவேளையில், "உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்"…. "YOU WILL SEE THE KING IN HIS BEAUTY AND VIEW A LAND THAT STRETCHES AFAR” என்று (ISAIAH) ஏசாயா 33:17-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள ‘ராஜா’ நமது தேவாதி தேவனே. அவருடைய மகிமையை நாம் காணும்போது, பாவம், வேதனை, தோல்வி ஆகிய இருள்கள் விலகி, அவர் செய்யும் அற்புதங்களை அனுபவிக்க முடியும்.

‘தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்’ என்பது மனிதர்களால் முடியாத, எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காரியங்களை தேவன் செய்து நமக்கு காண்பிப்பார் என்பதைக் குறிக்கிறது.

உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஏசாயா பரலோகத்தில் வீற்றிருக்கும் சர்வவல்லமையுள்ள தேவனை, தேவாலயத்திலே தரிசனமாகக் கண்டார். சேராபீன்கள்: “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்; பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” என்று துதித்தார்கள்.

தேவமகிமையைக் கண்ட ஏசாயா, “ஐயோ அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்…. சேனைகளின் ராஜாவை என் கண்கள் கண்டதே” என்று தன் குறைகளை உணர்ந்தார். பின்னர், “இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று மகிமையான தேவபணியைச் செய்ய தன்னை அர்ப்பணித்தார் என்பதை நாம் அறிவோம்.

சங்கீதம் 63:2-ல் தாவீது, “பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்” என்று கூறுகிறார்.

எனவே பிரியமானவர்களே, இந்த ஓய்வுநாளிலும் ஆலயத்திற்கு சென்று தேவனுடைய மகிமையை நாடி, நமது தவறுகளை அறிக்கையிடுவோம். நமது அறிவுக்கு எட்டாத நன்மையான காரியங்களை வாழ்வில் காண்போம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படி, எங்கள் கண்கள் ராஜாவாகிய உம்மை மகிமை பொருந்தினவராகக் காணவும், தூரத்திலுள்ள தேசத்தைப் பார்க்கவும் உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7 – 9967228488 WhatsApp-7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai, India
NMPF - Mumbai, India

Want your business to be the top-listed Government Service in NAVI MUMBAI?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Navi Mumbai