Aram Educational And Social Charitable Trust

Call Directions Contact the organization

Aram Educational And Social Charitable Trust இப்பூவுலகில் அறம் தழைக்கட்டும்

World happy teacher's day
05/10/2026

World happy teacher's day

உலக ஆசிரியர் தினம் – அக்டோபர் 5ஒரு நல்ல ஆசிரியர் பாடத்தை மட்டும் கற்றுத் தருவதில்லை…ஒரு நல்ல வாழ்க்கையை கற்றுத் தருகிறார...
05/10/2026

உலக ஆசிரியர் தினம் – அக்டோபர் 5

ஒரு நல்ல ஆசிரியர் பாடத்தை மட்டும் கற்றுத் தருவதில்லை…
ஒரு நல்ல வாழ்க்கையை கற்றுத் தருகிறார்.

தன் அறிவை மாணவர்களுக்காக அர்ப்பணித்து,
அவர்களின் கனவுகளுக்கு சிறகுகளைக் கொடுத்து,
தோல்வியில் துவண்டு விடாமல் நம்பிக்கையூட்டி,
வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்
அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்று எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியரின் கையில் இருக்கும் பேனா,
ஒரு மாணவனின் வாழ்க்கையை மட்டுமல்ல…
ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையே எழுதுகிறது!

மாணவர்களை மதிப்பெண்களுக்காக மட்டுமல்லாமல்,
மனிதநேயத்தோடும், ஒழுக்கத்தோடும், பொறுப்புணர்வோடும் வாழக் கற்றுத் தரும்
அனைத்து ஆசிரியர்களுக்கும்
என் இதயம் நிறைந்த உலக ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

ஆசிரியர்களை மதிப்போம்…
அறிவை வளர்ப்போம்…
நல்ல தலைமுறையை உருவாக்குவோம்!

Dr.K.முஹம்மது யஹ்யா
நிறுவனர் & தலைவர்
அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை.,
அறம் உயர் கல்வி வழிகாட்டி மையம்.
பட்டுக்கோட்டை

29/09/2026
Aram centre for career guidance Pattukottai Contact: 9047525222, 9994050550                   #2026
15/09/2026

Aram centre for career guidance
Pattukottai
Contact: 9047525222, 9994050550

#2026

07/09/2026

தூய்மையான தஞ்சை – நமது இலக்கு!

தஞ்சாவூர் மாவட்டத்தை தூய்மையான மற்றும் சுகாதாரமான மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, மக்கும் குப்பை – மக்காத குப்பை என குப்பைகளை முறையாகப் பிரித்து சேகரித்தல், கழிவுகளை முறையாக மேலாண்மை செய்தல், பொதுமக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மிகவும் பாராட்டுக்குரியவை.

இந்த மகத்தான முயற்சிக்கு
அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

“தூய்மை என்பது அரசின் பணி மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும்!”
என்ற அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து தூய்மை விழிப்புணர்வு, குப்பை வகைப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது இடங்களைத் தூய்மையாகப் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் நல்ல முயற்சிகளுக்கு துணை நிற்போம்…
நமது பங்களிப்பால் தஞ்சையை தூய்மையான தஞ்சையாக மாற்றுவோம்!

“தூய்மையான தஞ்சை – நம் அனைவரின் கனவு… நம் அனைவரின் பொறுப்பு!”

Dr.K. முஹம்மது யஹ்யா
நிறுவனர் தலைவர்
அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை
பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் மாவட்டம்

#தூய்மைஇந்தியா

Address

Pattukkottai
614602

Telephone

+919043072750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aram Educational And Social Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aram Educational And Social Charitable Trust:

Shortcuts

Share

Category