Vanikar Sangankalin Peramaippu Kanyakumari Dist

Directions Website

Vanikar Sangankalin Peramaippu Kanyakumari Dist Business

கன்னியாகுமரி மாவட்ட மொபைல் விற்பனையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.பாபு...
24/10/2026

கன்னியாகுமரி மாவட்ட மொபைல் விற்பனையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.பாபு தலைமை வகித்தார்.

சங்கிலித் தொடர் கடைகளின் போட்டியை எதிர்கொள்வது, ஆன்லைன் வணிகத்தின் பாதிப்பை சமாளிப்பது எப்படி? சிறு விற்பனையாளர்களின் நலனைப் பாதுகாப்பது, வரவிருக்கும் பண்டிகைக் கால விற்பனைக்குத் தயாராவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

விற்பனையாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வலியுறுத்தப்பட்டதுடன், பல்வேறு தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

மகிழ்வான தருணம்! ✨நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் எதிரே உள்ள டார்லிங் ஷோரூமின் 4-ஆம் ஆண்டு விழாவில், நாகர்கோவில் மாந...
23/10/2026

மகிழ்வான தருணம்! ✨

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் எதிரே உள்ள டார்லிங் ஷோரூமின் 4-ஆம் ஆண்டு விழாவில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மரியாதைக்குரிய திருமதி. பிரின்சி லதா அவர்கள், ,TVK கட்சியின் கன்னியாகுமரி (கி) மாவட்ட செயலாளர் திரு. மாதவன் அவர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் திரு. கே. பாபு அவர்கள் மற்றும் மாவட்ட பொருளாளர் திரு. ஏ. ஆதிசிவன் அவர்கள் இணைந்து குத்துவிளக்கேற்றி சிறப்பித்த மகிழ்வான தருணம். 🪔✨
#கேபாபு

கன்னியாகுமரி மாவட்ட மொபைல் விற்பனையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.பாபு...
23/10/2026

கன்னியாகுமரி மாவட்ட மொபைல் விற்பனையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.பாபு தலைமை வகித்தார்.

சங்கிலித் தொடர் கடைகளின் போட்டியை எதிர்கொள்வது, ஆன்லைன் வணிகத்தின் பாதிப்பை சமாளிப்பது எப்படி? சிறு விற்பனையாளர்களின் நலனைப் பாதுகாப்பது, வரவிருக்கும் பண்டிகைக் கால விற்பனைக்குத் தயாராவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

விற்பனையாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வலியுறுத்தப்பட்டதுடன், பல்வேறு தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

#கேபாபு

🙏 சரஸ்வதி பூஜை விழா – ஆசாரிப்பள்ளம் வட்டார வர்த்தக சங்கம் 🙏தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு – கன்னியாகுமரி கிழக்கு...
20/10/2026

🙏 சரஸ்வதி பூஜை விழா – ஆசாரிப்பள்ளம் வட்டார வர்த்தக சங்கம் 🙏

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு – கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் கிளை சங்கமான ஆசாரிப்பள்ளம் வட்டார வர்த்தக சங்கத்தின் சார்பில், சரஸ்வதி பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் கே. பாபு அவர்கள் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார்.

மேலும், விழாவின் சிறப்பம்சமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

வணிகர்களின் ஒற்றுமை, நலன் மற்றும் சமூகப் பொறுப்பை முன்னிறுத்தி நடைபெற்ற இவ்விழா அனைவரின் பாராட்டையும் பெற்றது.

வணிகர்களின் ஒற்றுமையே நமது பலம்!
வணிகர்களின் நலனே நமது இலக்கு!

🙏 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🙏

 #கேபாபு  #பேரமைப்பு  #இளைஞரணி             யூபிஐ சேவை கட்டணத்தை திரும்பப் பெற நடவடிக்கை – மத்திய நிதியமைச்சர் உறுதியூபிஐ...
12/10/2026

#கேபாபு #பேரமைப்பு #இளைஞரணி
யூபிஐ சேவை கட்டணத்தை திரும்பப் பெற நடவடிக்கை – மத்திய நிதியமைச்சர் உறுதி

யூபிஐ பணப் பரிவர்த்தனையில் விதிக்கப்பட உள்ள 0.04% சேவை கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 12.10.2026 அன்று மாநிலம் தழுவிய விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

இதனைத் தொடர்ந்து, பேரமைப்பின் மாநிலத் தலைவர் திரு. ஏ. எம். விக்கிரமராஜா அவர்கள், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை புதுதில்லியில் நேரில் சந்தித்து, யூபிஐ கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற கோரிக்கை விடுத்தார்.

கோரிக்கையை பரிசீலித்து, யூபிஐ சேவை கட்டணத்தை திரும்பப் பெறுவது குறித்து ஆலோசித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக மத்திய நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.

 #இளைஞரணி            #தமிழ்நாடு       தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  #பேரமைப்பு அறிவுறுத்தலின்படி, வருகிற 12.10.2026 அன்ற...
10/10/2026

#இளைஞரணி #தமிழ்நாடு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் #பேரமைப்பு அறிவுறுத்தலின்படி, வருகிற 12.10.2026 அன்று கன்னியாகுமரி மாவட்ட வணிகர்கள், பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்பட உள்ள 0.04% கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர்.

இதற்காக கடை முன்பு எதிர்ப்பு ஸ்டிக்கர் ஒட்டியும், எதிர்ப்பு பேட்ஜ் அணிந்தும் வணிகர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்ய இருப்பதாக கன்னியாகுமரி (கி) மாவட்ட தலைவர் #கேபாபு தெரிவித்து உள்ளார்.

22/07/2026

             #நாகர்கோவில்  #வடசேரி  #கனகமூல சந்தையில் அடிப்படை வசதிகளை செய்ய தவறிய  #மாநகராட்சி
19/07/2026


#நாகர்கோவில் #வடசேரி #கனகமூல சந்தையில் அடிப்படை வசதிகளை செய்ய தவறிய #மாநகராட்சி

16/07/2026

15/07/2026

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகாமையில் உள்ள ஈத்தங்காடு கிராமத்தை சேர்ந்த சபரிவர்மன் என்பவர் புகையிலை பொருள் விற்பனை செய்ததாக கூறி கைது செய்யப்ட்டு நாகர்கோயில் சிறையில் அடைத்த நிலையில் மர்மமான நிலையில் உயிரிழந்தார்.*
நாகர்கோவில் சிறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
கை, கால்கள், நெஞ்சு பகுதிகளில் காயம்; வலது கையில் முறிவு
கை, கால்களை கட்டிப் போட்டு தாக்கியதற்கான அடையாளம் உள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தை போன்றே குமரி மாவட்டத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வணிகர்களிடையே மிக பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

💥 இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

💥 தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

💥 உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டை அரசு வழங்கி கருனை அடிப்படையில் அன்னாரது மனைவிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்

💥 என்ற கோரிக்கைகளை தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பாக வலியுறுத்த பட்டுள்ளது.

💥 பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வில்லை என்றால் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பாக, விரைவில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவன்

கே.பாபு
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்

Address

Veerapandi Gowmari Amman Temple, Theni District, Tamil Nadu
Periyakulam
625531

Alerts

Be the first to know and let us send you an email when Vanikar Sangankalin Peramaippu Kanyakumari Dist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category