LJK - Latchiya Jananayaka Katchi

Directions

LJK - Latchiya Jananayaka Katchi Marching towards a புதுமையான புதுச்சேரி Under the Dynamic Leadership Of kamarajnagar MLA Jose Charles Martin.

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற தைவான் நாட்டின் 115-வது தேசிய தின விழாவில், நமது தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மா...
07/10/2026

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற தைவான் நாட்டின் 115-வது தேசிய தின விழாவில், நமது தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் MLA அவர்களின் சார்பாக, அவரது தாயார் திருமதி. லீமா ரோஸ் மார்டின் MLA அவர்களுடன் இணைந்து, நமது LJK நிர்வாகப் பொதுச் செயலாளர் திரு. ராம்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சி, சென்னையில் செயல்பட்டு வரும் Taipei Economic and Cultural Center சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

லட்சிய ஜனநாயக கட்சியை மேலும் வலுப்படுத்துதல், உறுப்பினர் சேர்க்கையை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பணிகள் குறித்து...
06/10/2026

லட்சிய ஜனநாயக கட்சியை மேலும் வலுப்படுத்துதல், உறுப்பினர் சேர்க்கையை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பணிகள் குறித்து, நமது தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி, LJK நிர்வாகப் பொதுச்செயலாளர் திரு. ராம்குமார் அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் H1N1 காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் ப...
06/10/2026

புதுச்சேரியில் H1N1 காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், H1N1 காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என லட்சிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

கனடா விமானப் பயிற்சி விபத்தில் உயிரிழந்த புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர் மனோஜ் சிவகுமாரின் உடலை புதுச...
04/10/2026

கனடா விமானப் பயிற்சி விபத்தில் உயிரிழந்த புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர் மனோஜ் சிவகுமாரின் உடலை புதுச்சேரிக்கு கொண்டு வர, நமது தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார்.

உடல் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், மனோஜ் சிவகுமாரின் தந்தையிடம் நமது தலைவர் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு, தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். மேலும், தலைவரின் சார்பில் LJK முக்கிய நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய; இரவு நேரங்களிலும் புகார்களைக் கவனிக்க களப்பணி...
04/10/2026

புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய; இரவு நேரங்களிலும் புகார்களைக் கவனிக்க களப்பணியாளர்களை நியமிக்கக்கோரி மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் திரு. ஆ.நமச்சிவாயம் அவர்களுக்கு, காமராஜ் நகர் தொகுதியின் MLA திரு.ஜோஸ் சார்லஸ் மார்டின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதனை LJK-யின் நிர்வாகப் பொதுச்செயலாளர் திரு. ராம்குமார் அவர்கள், அமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மின்சாரத் துறை சார்ந்த பல்வேறு முக்கியப் பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும், ...
02/10/2026

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மின்சாரத் துறை சார்ந்த பல்வேறு முக்கியப் பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஊழியர்கள் பற்றாக்குறையைச் சரிசெய்யக் கோரியும், நமது தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி, LJK நிர்வாகப் பொதுச் செயலாளர் திரு. ராம்குமார் அவர்கள் மாண்புமிகு புதுச்சேரி மின்சாரத் துறை அமைச்சர் திரு. A. நமச்சிவாயம் அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்கினார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாண்புமிகு அமைச்சர் அவர்கள், கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

புதுச்சேரி தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், அவர்களின் தினசரி ஊதியத்தை ரூ.290-லிருந்து ரூ.424 ஆக...
02/10/2026

புதுச்சேரி தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், அவர்களின் தினசரி ஊதியத்தை ரூ.290-லிருந்து ரூ.424 ஆக உயர்த்தி அறிவித்துள்ள மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு. N. ரங்கசாமி அவர்களின் இந்த அதிரடி நடவடிக்கையை லட்சிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

நமது தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் MLA அவர்களின் ஆலோசனைப்படி, LJK நிர்வாகப் பொதுச் செயலாளர் திரு. ராம்குமார் அவர்கள...
02/10/2026

நமது தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் MLA அவர்களின் ஆலோசனைப்படி, LJK நிர்வாகப் பொதுச் செயலாளர் திரு. ராம்குமார் அவர்கள் தலைமையில், தமிழகப் பொதுச் செயலாளர் திரு. நெல்லை ஜீவா அவர்களுடன், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, லட்சிய ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர்கள் பட்டியலை அரசியலமைப்புச் சட்டத்தின்படி முறையாக அமைப்பது மற்றும் கட்சியின் விரிவாக்கம் குறித்து, புதுவை மாநில லட்சிய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் லட்சிய ஜனநாயக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் கலந்துகொண்டனர்.

02/10/2026

படிக்காத மேதை’ பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளையொட்டி, புதுச்சேரி ராஜா தியேட்டர் சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, நமது தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி, LJK நிர்வாகப் பொதுச் செயலாளர் திரு. ராம்குமார் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில், LJK பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திரு. பிரபாகரன் மற்றும் LJK-வின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Address

Pondicherry

Website

Alerts

Be the first to know and let us send you an email when LJK - Latchiya Jananayaka Katchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share