02/10/2026
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI கட்சி சார்பில் புதுக்கோட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டை, அக். 2:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் சார்பில் இன்று (02.10.2026) வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் K. முகமது சாதிக் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை தொகுதித் தலைவர் தௌலத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். புதுக்கோட்டை தொகுதி துணைத் தலைவர் ஷேக் முகமது தொகுப்புரை வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் M.அபுபக்கர் சித்திக்
மாவட்டப் பொருளாளர் ஜியாவுதீன், SDTU மாவட்டத் தலைவர் அப்துல் மஜீத், SDPI வர்த்தகர் அணியின் மாவட்டத் தலைவர் ஹக்கீம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் SRM சர்புதீன் மற்றும் கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் ரஷீத் அஹமது, மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் TSM ஜமால், பொறியாளர் அணி மாவட்ட தலைவர் ஆசிக் முகமது,WIM மகளிர் அணியினர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மாவட்ட, நகர மற்றும் தொகுதி நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக புதுக்கோட்டை தொகுதிச் செயலாளர் முகமது கனி நன்றியுரை நிகழ்த்தினார்.
SDPI கட்சி – புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்.