Drvkrajeevtvk

Directions

Drvkrajeevtvk திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்
சொல்வதற்காக அல்ல…
செய்வதற்காக வந்தவர்
மக்களுடன் • மக்களுக்காக

மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர் V. K. ராஜீவ் அவர்கள், இன்று சிவகங்கை மா...
24/10/2026

மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர் V. K. ராஜீவ் அவர்கள், இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள மாவீரர்கள் மருது பாண்டியர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வீரத்தின் அடையாளமாகவும், விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்த மருது சகோதரர்களின் தியாகம் என்றும் போற...
24/10/2026

வீரத்தின் அடையாளமாகவும், விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்த மருது சகோதரர்களின் தியாகம் என்றும் போற்றுதலுக்குரியது!

தாய்மண்ணின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த மாவீரர்களின் வீர வரலாற்றை நினைவுகூர்ந்து, அவர்களின் தியாகத்திற்கும் நாட்டுப்பற்றிற்கும் தலைவணங்குவோம்.

மருது சகோதரர்களின் புகழ் காலங்கள் கடந்தும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கட்டும்!

மாண்புமிகு அமைச்சர் திரு. V. K. ராஜீவ் அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ₹25 லட்சம் ம...
22/10/2026

மாண்புமிகு அமைச்சர் திரு. V. K. ராஜீவ் அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ₹25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட வன உயிரினப் புத்தாக்க வளர் மையத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மா. சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப. அவர்கள் உடனிருந்தார்.

20/10/2026

மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மருத்துவர் V. K. ராஜீவ் அவர்கள், ஆயுத பூஜையை முன்னிட்டு சமத்துவக் குடிலில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து கொண்டாடினார்.

மேலும், சமத்துவக் குடிலில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் நலப் பணிகள் மற்றும் சமூக நல முன்னெடுப்புகள் குறித்து உரையாற்றியதுடன், அனைவருடனும் கலந்துரையாடினார்.

புதிய தொடக்கங்களுக்கும், அறிவு மற்றும் ஆற்றலின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் விஜயதசமி திருநாளைக் கொண்டாடுவோம்!கல்வி, கலை ...
20/10/2026

புதிய தொடக்கங்களுக்கும், அறிவு மற்றும் ஆற்றலின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் விஜயதசமி திருநாளைக் கொண்டாடுவோம்!

கல்வி, கலை மற்றும் புதிய முயற்சிகளில் வெற்றியை நோக்கிப் பயணிக்கவும், நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் இலக்குகளை அடையவும் இத்திருநாள் ஊக்கமளிக்கட்டும்.

அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் வளமும் வெற்றியும் பெருகட்டும்!

தமிழ் இலக்கியத்திற்கும், கவிதை உலகிற்கும் பெருமை சேர்த்த நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையின் பிறந்தநாளில் அவரைப் ...
19/10/2026

தமிழ் இலக்கியத்திற்கும், கவிதை உலகிற்கும் பெருமை சேர்த்த நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையின் பிறந்தநாளில் அவரைப் போற்றுவோம்!

தேசப்பற்றையும், தமிழ்ப்பற்றையும் தனது படைப்புகளின் மூலம் மக்களிடையே விதைத்த அவரது சிந்தனைகளையும் இலக்கியப் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து, தமிழ் மொழியின் பெருமையையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்.

Address

Ramanathapuram
Ramanathapuram
623501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Drvkrajeevtvk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category