Kanchi-North-District Congress Committee

Kanchi-North-District Congress Committee

Share

KANCHI (NORTH) DISTRICT CONGRESS COMMITTEE

23/07/2023

தாமாகவில் இருக்கும் முக்கால் சங்கிகளே குப்பையை கோபுரத்தோடு ஒப்பிடாதீர்கள் 😡

22/07/2023

G.K.Vasan Vidiyal S Sekar Yuvaraja Muthusamy

Photos 29/12/2016

பழைய ரூபாய் நோட்டு தடை விவகாரம் : பிரதமர் மோடிக்கு ராகுல் 5 கேள்வி, 11 யோசனைகள்

புதுடெல்லி : பழைய ரூபாய் நோட்டு தடை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ரூபாய் நோட்டு செல்லாத விவகாரம் குறித்து நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு பற்றி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சில விஷயங்களை தெளிவுப்படுத்த வேண்டும். இந்த பிரச்னை பற்றி பிரதமர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதற்கு முன் கீழ்கண்ட கேள்விகள், கோரிக்கைகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.

* நவம்பர் 8ம் தேதிக்கு பின் எவ்வளவு கருப்பு பணம் வெளியே வந்துள்ளது?.
* இத்தனை நாட்களாக பணம் கிடைக்காத பிரச்னையால் இந்திய பொருளாதாரம் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது?
* இந்த அறிவிப்புக்கு பிறகு எத்தனை பேர் இறந்தனர் என்பதை அரசு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். எத்தனை பேருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. நஷ்டஈடு வழங்கவில்லை என்றால் ஏன் வழங்கப்படவில்லை?
* ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை வெளியிடும் முன் பிரதமர் மோடி இதுபற்றி யாரிடம் எல்லாம் ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்தார்? அந்த நிபுணர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்.
* ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு முன்பு ரூ.25 லட்சத்துக்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தவர்கள் பற்றிய பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் ரூபாய் நோட்டு விவகாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது வங்கிக்கணக்கில் தலா ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும். பணமதிப்பை இழக்கச் செய்த முடிவு 50 நாட்களை நெருங்கி விட்டது. எனவே பிரதமர் மோடி உடனடியாக பணம் எடுக்க விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும். முதலீடு செய்த மக்களுக்கு 18 சதவீத ஆண்டு வட்டி கணக்கிட்டு வழங்க வேண்டும். மின்னணு பணபரிவர்த்தனை செய்யும் போது விதிக்கப்படும் அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு இதுவரை ஏற்பட்ட இழப்பை மத்திய அரசு சரி செய்ய வேண்டும். சிறுவியாபாரிகள், தொழில் அதிபர்களுக்கு 50% வருமான வரி, விற்பனை வரி தள்ளுபடி வழங்க வேண்டும்.

ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் அடிப்படை வேலை வழங்கும் நாளை இந்த ஆண்டு இருமடங்காக கூட்ட வேண்டும். நவம்பர் 8ம் தேதி முதல் இன்று வரை வேலை இழந்த தொழிலாளர்கள் பற்றி கணக்கெடுக்க சிறப்பு குழுவை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு மார்ச் 31 வரை குறைந்தபட்ச ஊதியம் அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். மோடியின் இந்த நடவடிக்கையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். அவர்களது பயிர்கள் மீது 20 சதவீத போனஸ் தொகையை அறிவிக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ரேஷன்கார்டுகள் வைத்திருக்கும் அனைவருக்கும் பாதித்தொகையில் பொருட்கள் வழங்க வேண்டும்.
சுவிஸ் வங்கி கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்கள் விவரத்தை பிரதமர் மோடியிடம், அந்த நாட்டு அரசு கொடுத்து விட்டது. இந்த பட்டியலை பிரதமர் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார். பொது மக்களுக்கு தெரியும் வகையில் சுவிஸ் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். மக்களவை, மாநிலங்களவையில் அவர் பகிரங்கமாக இந்த பெயர்களை அறிவிக்க வேண்டும். இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் போராட்டம்

பழைய ரூபாய் நோட்டு விவகாரம் மற்றும் மோடியின் ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தொடர் போராட்டங்களை அறிவித்து உள்ளது. ஜனவரி 2,3 நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படுகிறது. ஜனவரி 6,7ல் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடக்கிறது.

நன்றி: தினகரன்.

Photos 29/12/2016

இந்தியாவுடனான காங்கிரஸ் கட்சியின் உறவு என்பது இந்தியாவின் போராட்டங்கள், அதன் வலிகள் மற்றும் அதன் விதி ஆகியவற்றில் பங்கு கொள்வதே.

27/11/2016

"ஆர்ப்பாட்டம்"

வணக்கம்! ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் படும் அவதிக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை 28.11.2016 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில் குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி சாலை, பேருந்து நிறுத்தம், முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜிவ் காந்தி திருவுருவச்சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தேசிய நெஞ்சங்கள் அனைவரும் மூவர்ணக்கொடியேந்தி திரளாக பங்கேற்று சிறப்பிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
வி.ஆர்.சிவராமன்,
மாவட்ட தலைவர்.

Tambaram Agitation 21/11/2016

"ஆர்ப்பாட்டம்"
வணக்கம்!
அவசரகதியில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பொறுப்பற்ற முறையில் அறிவித்து அனைத்து தரப்பு மக்கள் மீது பொருளாதார தாக்குதலை நடத்தியுள்ளார் மோடி. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்தும், அசாதாரண சூழலில் இருந்து மக்களை பாதுகாக்கவும், இதை கண்டித்து குரல் கொடுக்கவும் இன்று 21.11.2016 காலை 10.00 மணி அளவில் காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் திரு.வி.ஆர்.சிவராமன் அவர்கள் தலைமையில் தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி எதிரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 300 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் தற்பொழுது தாம்பரம் SGS தி௫மண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

12/11/2016
Photos 26/09/2016

இன்று பிறந்தநாள் காணும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Photos 26/09/2016

ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தின் உண்மை நிலவரம்...!!!

மேக் இன் இந்தியா என நாடு முழுவதும் பிரசாரம் செய்துவிட்டு திரு மோடி ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் செய்தது என்ன?

மக்களே சிந்திப்பீர்...

Photos from Indian National Congress - Tamil Nadu's post 14/09/2016
Photos 13/09/2016

Want your business to be the top-listed Government Service in Tambaram?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Tambaram
600045,600047 AND 600059