Er. K. ராம்குமார் DCE AIPMK கொங்கு மண்டல பொறுப்பாளர்

Er. K. ராம்குமார் DCE AIPMK கொங்கு மண்டல பொறுப்பாளர்

Share

politsion

Photos from Er. K. ராம்குமார் DCE AIPMK கொங்கு மண்டல பொறுப்பாளர்'s post 09/02/2023

அனைவருக்கும் வணக்கம்.

இறைவனின் திருவருளால் சமூக நீதி போராளி அய்யா சி.என்.ஆர் அவர்களின் நல்லாசியுடன் இந்த ஆண்டின் 2023 இரண்டாவது திட்டப் பணி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -2 அரசு ஒப்பந்த திட்டப்பணி தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் இலளிகம் பஞ்சாயத்து இலளிகம் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் சைக்கிள் நிறுத்தும் இடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று இனிதே முடிவடைந்தது.

உடன் ஊராட்சிமன்ற தலைவர் பரிமளா மாதேஷ் குமார் ,நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

உங்கள் கனவு இல்லங்களை நனவாக்கும் நமது நிறுவனம் ஸ்ரீ கே ஆர் வி கன்சப்ஷன் தமிழகம் முழுவதும் உங்கள் நல் ஆதரவை எதிர்நோக்கி என்றும் கட்டுமானத் துறையில்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ற வடிவமைப்பும் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் மதிப்பீட்டில் இக்கால முறைப்படி வலிமையான கட்டுமானம் அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான செயல்பாட்டையும் முன்கூட்டியே தெரிவிக்கப்படும், கட்டுமானத்தின் வரைபடத்தை உங்கள் கண்முன்னே கொண்டு வந்து உங்கள் எண்ணத்திற்கு ஏற்ப எங்கள் கைவண்ணத்தில் உருவாக்கி கொடுக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் மன நிறைவு எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி .

SRI KRV CONSTRUCTIONS

On going project at

SRI KRV CONSTRUCTIONS



Er.K.RAMKUMAR DCE.,
Er.K.VENKATESAN DCE.,
8428129161,9894337021

We
SRI KRV CONSTRUCTIONS
designs committed to bring
Every client dream space
Come 's true

Photos from Er. K. ராம்குமார் DCE AIPMK கொங்கு மண்டல பொறுப்பாளர்'s post 05/01/2023

அனைவருக்கும் வணக்கம்.

இறைவனின் திருவருளால் சமூக நீதிப் போராளி அய்யா சி.என்.ஆர் அவர்களின் நல்லாசியுடன் இந்த ஆண்டின் 2023 முதல் 15 வது நிதிக்குழு மானியம் அரசு ஒப்பந்த திட்டப்பணி தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பாலஜங்கன அள்ளி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நேற்று முடிவடைந்தது.

உடன் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.தடங்கம் சுப்பிரமணி Ex. MLA ,நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் A.S சண்முகம் மாவட்ட கவுன்சிலர், P.C துரைசாமி EX மாவட்ட கவுன்சிலர்,ஊராட்சிமன்ற தலைவர் மா.கோவிந்தசாமி முக்கிய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

உங்கள் கனவு இல்லங்களை நனவாக்கும் நமது நிறுவனம் ஸ்ரீ கே ஆர் வி கன்சப்ஷன் தமிழகம் முழுவதும் உங்கள் நல் ஆதரவை எதிர்நோக்கி என்றும் கட்டுமானத் துறையில்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ற வடிவமைப்பும் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் மதிப்பீட்டில் இக்கால முறைப்படி வலிமையான கட்டுமானம் அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான செயல்பாட்டையும் முன்கூட்டியே தெரிவிக்கப்படும், கட்டுமானத்தின் வரைபடத்தை உங்கள் கண்முன்னே கொண்டு வந்து உங்கள் எண்ணத்திற்கு ஏற்ப எங்கள் கைவண்ணத்தில் உருவாக்கி கொடுக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் மன நிறைவு எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி .

SRI KRV CONSTRUCTIONS

On going project at

SRI KRV CONSTRUCTIONS



Er.K.RAMKUMAR DCE.,
Er.K.VENKATESAN DCE.,
8428129161,9894337021

We
SRI KRV CONSTRUCTIONS
designs committed to bring
Every client dream space
Come 's true

01/01/2023

அனைத்து உறவுகளுக்கு வணக்கம்.

தன் சார்ந்த சமூகத்திற்கும் பிற சமூக மக்களுக்கான தேவைகளை சட்ட நுணுக்கங்களை அணுகி அறிவாயுதம் ஏந்தி பல போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்டு பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செய்யூர் மரக்காணம் அனல் மின் நிலையம் அமைத்ததும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக பிள்ளையார் சுழி போட்டு அதனில் வெற்றி கண்டவர்.

1980 களில் வன்னியர் சங்க காலத்தில் பயணித்த மூத்த தலைவர்

வன்னியர் ஒதுக்கிட்டு பல கட்ட போராட்டங்களை வித்திட்டு தலைமை தாங்கி நடத்தியவர்.

MBC 20% ஒதுக்கீட்டில் அன்றைய முதல்வர் கலைஞர் உடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்.

இது போன்று பல சமூக பணியை தன் வாழ்நாள் முழுதும் செய்து கொண்டிருக்கிறார்.

வன்னியர் மக்களின் முன்னோர்களால் விட்டுச் சென்ற பல லட்சம் கோடிக்கு மேலான சொத்துக்களை மீட்டு எடுத்து அதனை சட்ட போராட்டத்தின் மூலமாக வன்னியர் பொது சொத்து நலவாரியம் அமைத்துக் கொடுத்தவரும்,

வன்னியர் உள் ஒதுக்கீடு, வன்னியர் நல வாரியம் ஆகியவற்றை சட்டப் போராட்டத்தின் மூலமாக வென்றெடுத்து இன்றளவும் போராடிக் கொண்டிருக்கும் சமூக நீதி போராளி அய்யா CNR அவர்களின் வழியில் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி AIPMK தமிழகம் முழுவதும் களம் காண ஆயத்தமாகி கொண்டிருக்கிறது. இதன்படி உறுப்பினர் சேர்க்கை, மாநில,மாவட்ட, ஒன்றிய, பேரூர் கிளை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அய்யாவின் கொள்கையை ஏற்று அறிவாயுதம் ஏந்துவோம் என்ற கொள்கையை பின்பற்றி அனைத்து தரப்பு மக்களிடமும் இணைந்து பயணிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் கட்சியில் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளோர் தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

Er.K.ராம்குமார் DCE.,
கொங்கு மண்டல பொறுப்பாளர்
8428129161

31/12/2022

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.

வருகிறது புத்தாண்டு
முடிகிறது இவ்வாண்டு ​!

​​வந்திடும் ​விடியலென
வரவேற்க காத்திருக்கும்
​வறுமையும் ஏழ்மையும் ​!

அச்சத்தில் நடுங்குகிறது
​அழிந்திடுவோம் நாமென ​
​அரசியல் அநாகரிகங்கள் ​!

​பதுங்கி ஓடுகிறது
பலியாகும் சமுதாய​த்தில் ​
​பழிவாங்கும் சாதிவெறி !

ஒழிந்திடும் நிச்சயமென
நினைக்கிறது மனங்களும்
ஊழலும் அநீதிகளும் !

உறங்காத விழிகளுடன்
கண்ணீருடன் காத்திருக்கு
மீனவ குடும்பங்களும் !

அழிவது உறுதியென
ஆட்டம் கண்டுள்ளது
அதிகார வர்க்கமும் !

ஆவலுடன் காத்துள்ளது
அழைப்பும் வந்திடுமென
நேர்மையும் நியாயமும் !

நம்பிக்கை நெஞ்சமுடன்
​நம்நிலையும் மாறுமென
​விவசாய சமுதாயமும் !​

​எதிர்பார்த்து நிற்கிறது
ஏக்கங்கள் எரிந்திடுமென
​இளைய தலைமுறையும் !

கிட்டிடும் வேலையும்
காண்போம் பாதையென
வேலையிலா இளைஞர்கள் !

​நிகழ்ந்தால் இத்தனையும் ​
​நிம்மதியும் நிலைக்குமென ​
​நினைக்கிறது என்மனமும் !​

​​வரவேற்போம் ​மகிழ்வுடன்
நிறைவேற்றும் நிச்சயமென
​​வருகின்ற புத்தாண்டை !

வருகிறது புத்தாண்டு
முடிகிறது இவ்வாண்டு ​!
​​​விடை பெறட்டும் 2022
​வரவேற்போம் 2023.

வருகின்ற ஆண்டுகளில் சமூக நீதி போராளி அய்யா சி.என்.ஆர் அவர்கள் வழியில் AIPMK தமிழகம் முழுவதும் களம் காணும் என்பதை எதிர்நோக்கி அய்யா வழியில் பயணிப்பேன். வாழ்க CNR வளர்க AIPMK

Photos from Er. K. ராம்குமார் DCE AIPMK கொங்கு மண்டல பொறுப்பாளர்'s post 26/12/2022

அனைவருக்கும் வணக்கம்.

இறைவனின் திருவருளால் அய்யா சமூக நீதி போராளி சி.என்.ஆர் அவர்களின் நல்லாசியுடன் இந்த ஆண்டின் மூன்றாவது மற்றும் இறுதி 15 வது நிதிக்குழு மானியம் ஒன்றிய பொது நிதி அரசு ஒப்பந்த திட்டப்பணி தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் ஏ.ஜெட்டிஅள்ளி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இனிதே முடிவடைந்தது.

உங்கள் கனவு இல்லங்களை நனவாக்கும் நமது நிறுவனம் ஸ்ரீ கே ஆர் வி கன்சப்ஷன் தமிழகம் முழுவதும் உங்கள் நல் ஆதரவை எதிர்நோக்கி என்றும் கட்டுமானத் துறையில்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ற வடிவமைப்பும் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் மதிப்பீட்டில் இக்கால முறைப்படி வலிமையான கட்டுமானம் அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான செயல்பாட்டையும் முன்கூட்டியே தெரிவிக்கப்படும், கட்டுமானத்தின் வரைபடத்தை உங்கள் கண்முன்னே கொண்டு வந்து உங்கள் எண்ணத்திற்கு ஏற்ப எங்கள் கைவண்ணத்தில் உருவாக்கி கொடுக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் மன நிறைவு எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி .

SRI KRV CONSTRUCTIONS

On going project at

SRI KRV CONSTRUCTIONS



Er.K.RAMKUMAR DCE.,
Er.K.VENKATESAN DCE.,
8428129161,9894337021

We
SRI KRV CONSTRUCTIONS
designs committed to bring
Every client dream space
Come 's true

17/12/2022

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.

மாவீரன் வன்னியர் சங்க நிறுவன தலைவர் திரு. வி.ஜி.கே. மணி அவர்களும் வன்னியர் சமூகத்தின் வளர்ச்சிக்காக சமூக அவலங்களை தைரியமாக முகநூலில் பதிவிட்டுவரும் Bala Jee அவர்களும் மரியாதை நிமித்தமாக இன்று வன்னியர் கூட்டமைப்பு தலைமை அலுவலகத்தில் சமூக நீதி போராளி அய்யா சி.என்.ஆர் அவர்களை சந்தித்த மிகவும் மகிழ்வான தருணத்தில் உடன் நான்.

வன்னிய சமுதாயத்தின் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதித்தோம்.

அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு விரைவில் செயல்படுத்திட அனைவரும் இணைந்து போராடுவோம்.

Photos from Er. K. ராம்குமார் DCE AIPMK கொங்கு மண்டல பொறுப்பாளர்'s post 06/12/2022

அனைத்து உறவுகளுக்கு வணக்கம்.

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 65வது நினைவு தினம் இன்று.

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'நவ புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.

இவரின் நினைவு நாளில் அய்யா சமூக நீதி போராளி சி.என்.ஆர் அவர்களின் தலைமையில் வன்னியர் உள் ஒதுக்கீட்டை சட்ட போராட்டத்தின் மூலமாக வென்றெடுப்போம் என்று உறுதி கூறுவோம்.

04/12/2022

நம் முன்னோர்கள், நாட்டை ஆண்ட அரசர்கள் முக்கியமாக ஏன் கோயிலை காட்டினார்கள்? நாம் ஏன் கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம்??? என்றாவது நீங்கள் சற்றே யோசித்து பார்த்ததுண்டா......? இன்று தமிழனின் குரலாக யோசிப்போம்.....

சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும் தான்.....

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066-ல் நிறுவப்பட்டது.

தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311-ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான்.
ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.

உலகிலேயே ஒரே சீராக 80இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன. பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.

அசுவசாஸ்திரம் என்ற குதிரைப் பராமரிப்பு நூல் எழுதப்பட்டது. முதன் முதலில் குதிரைகளுக்கு லாடம் அடிக்கும் முறையைக் கண்டு பிடித்தவர்கள் சோழர்களே...!

நாட்டை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விசாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை காட்டினார்கள்???

கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன????

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான்????

உலகின் குருவாகவும் உலகின் பெரும்பாலான இடங்களில் தமிழ் பரவியது எப்படி???

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு பொருளாதார திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.

இதையேதான் நம்முடைய கோயில்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னமே செய்தன....

"கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்" ன்னு அதைத்தான் சொல்லி வைத்தார்கள்.

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை.

நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என,
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஆலயங்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,

ஊரை சுற்றியே, ஓர் "தன்னிறைவு வாழ்க்கை"

இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிரைவு வாழ்க்கை.

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.

அனைத்து சமூகமும் ஒரே முகமாக இந்து சமயம் என்ற ஒரு குடையின் கீழ், தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை நமக்கு அளித்ததே நமது தர்மமும், நமது கோயில்களும் மட்டும்தான்.

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு "தன்னிறைவு பொருளாதாரத்தை" உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக இன்றும் திகழ்கிறது.

- தஞ்சையும் சோழர்களும்
என்ற நூலில் இருந்து எடுத்த தகவல்...

01/12/2022

அர்ஜுனன் உடைத்த #சக்கர_வியூகத்தின் மாபெரும் கணிதம்

மகாபாரதம் இந்திய வரலாற்றின் அசைக்க முடியாத அடையாளம்.பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இடையே நடந்த இந்தப் போரில் கிட்டத்தட்ட பூமியின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் இறந்தனர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய இந்தப் போரில் காக்கும் கடவுளான திருமால் கிருஷ்ணர் அவதாரமாய் முக்கியப்பங்கு வகித்தார். போரில் பாண்டவர்களுக்கு பெரும் இழப்பைத் தந்தது போரின் பதிமூன்றாம் நாளாகும். அதற்குக் காரணம் அன்று துரோணாச்சாரியார் அமைத்த சக்கர வியூகம்.

பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப் போரில் ஒவ்வொரு நாளும் இரண்டு படைகளும் ஒவ்வொரு வியூகத்தை அமைத்தனர். வியூகத்தில் கூர்ம வியூகம், திரிசூல வியூகம், கிரௌஞ்ச வியூகம் எனப் பல வியூகங்கள் இருக்கின்றன. இதில் மிகவும் கடினமான வியூகம் சக்கர வியூகம்தான். சக்கர வியூகத்தை உடைக்கத் தெரிந்தவர்கள் பூமியில் மிகச் சிலரே ...பீஷ்மர், துரோணாச்சாரியார், பரசுராமர், அர்ஜுனன், கர்ணன், துருபதன். இந்த சக்கர வியூகத்தில் போர்த்திறமை மட்டுமின்றி கணிதமும், அறிவியலும் இருக்கிறது. அதனால்தான் அதனை உடைப்பது அவ்வளவு கடினமானது. சக்கர வியூகத்தின் பின் இருக்கும் அறிவியலைப் பற்றி இங்குக் பார்க்கலாம்.

சக்கர வியூகம்
************

மகாபாரதத்தில் சக்கர வியூகம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சிலர் இந்த வியூகத்தைப் பற்றி அறிந்திருந்தாலும் அர்ஜுனன் மட்டுமே இந்த வியூகத்தை உடைத்து வெற்றிகண்டதாக மகாபாரத்தில் கூறப்பட்டிருக்கும். அப்படி என்ன இந்த வியூகம் சிறப்பு வாய்ந்தது? பெயருக்கேற்றாற்போல் சக்கர வடிவத்தில் இருக்கும் வியூகத்தில் ஏழு அடுக்குகள் இருக்கும், ஒவ்வொரு அடுக்கிலும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும். வியூகத்தின் மையத்தில்தான் படைத்தலைவர் இருப்பார். ஒருவேளை வியூகத்திற்குள் எதிரி நுழைந்து விட்டால் வீரர்களைக் கொல்லக் கொல்ல அந்த இடத்திற்கு மற்றொரு வீரர் வந்து சுழன்று கொண்டிருப்பார். இதனால் உள்ளே நுழைபவர் எந்த அடுக்கில் இருக்கிறோம் என்று குழம்பி உளவியல்ரீதியாக பாதிக்கப்படுவர். மேலும் சக்கரவியூகத்தை முறியடிக்கும் கணக்குத் தெரிந்தால் மட்டுமே அதை விட்டு வெளியே வர முடியும். அது தெரியாததால்தான் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கி உயிரிழந்தான். சக்கர வியூகத்திற்குப் பத்ம வியூகம் என்ற பெயரும் உள்ளது.

சேனை பலம்
**********

பாண்டவர்களிடம் ஏழு அஃரௌனி சேனைகள் இருந்தன, கௌரவர்களிடம் பதினொரு அஃரௌனி சேனைகள் இருந்தன. ஒரு அஃரௌனி சேனையில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்து பதினெட்டாயிரம் வீரர்கள் இருப்பார்கள். மொத்தத்தில் குருஷேத்திரப் போரில் கிட்டத்தட்ட முப்பத்தி ஒன்பது இலட்சம் வீரர்கள் பங்கேற்றனர். கௌரவர்களின் சேனை பலம் அதிகமாக இருந்தும் அவர்கள் தோற்றதற்குக் காரணம் பாண்டவர்களின் பக்கம் இருந்த தர்மம்தான்.

அபிமன்யு
*******

பதின்மூன்றாம் நாள் போரில் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கியதால் கொல்லப்பட்டான். ஏனென்றால் அபிமன்யுவிற்கு சக்கர வியூகத்திற்குள் செல்லத் தெரியுமே தவிர வெளியே வரத் தெரியாது. அபிமன்யு சக்கர வியூகத்தை உடைக்கத் தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே கற்றுக்கொண்டுவிட்டான். ஆனால் அதனை விட்டு வெளியே வருவதை அர்ஜுனன் கூறுவதற்குள் சுபத்திரை தூங்கிவிட்டதால் அபிமன்யுவால் வெளியே வரும் வித்தையைக் கற்றுக்கொள்ள இயலவில்லை. போரில் தர்மனைப் பாதுகாப்பதற்காக சக்கர வியூகத்திற்குள் நுழைந்த அபிமன்யு ஏழு மாவீரர்களால் கொலைசெய்யப்பட்டான். அந்தப் பாலகனைக் கொல்ல ஏழு மாவீரர்கள் தேவைப்பட்டபோதே புரிந்துகொள்ளுங்கள் அபிமன்யுவின் வீரத்தை.

துரியோதனின் சதி
*****************

பீஷ்மரின் வீழ்ச்சிக்கு பிறகு துரோணாச்சாரியார் கௌரவ படைகளுக்கு தலைமை வகித்தார். சகுனியின் ஆலோசனைப்படி போரில் தர்மனை சிறைபிடித்து தருமாறு துரியோதனன் துரோணரிடம் கோரிக்கை வைத்தான். ஏனெனில் தர்மனை சிறைபிடித்தால் மற்ற பாண்டவர்களும் சரணடைந்துவிடுவார்கள் அவர்களை மீண்டும் சூதாட்டத்திற்கு அழைத்து தோற்கடித்து வனவாசம் அனுப்பிவிடலாம் என்பது சகுனியின் சதியாக இருந்தது. துரோணரும் தர்மனைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் இதற்கு ஒப்புக்கொண்டார்.

ஜயத்ரதன்
********

சிந்து ராஜன் ஜயத்ரதன் வனவாசத்தில் இருந்தபோது திரௌபதியை கவர்ந்து செல்ல முயன்றதால் பாண்டவர்களால் அவமானப்படுத்தப்பட்டான். அதற்கு பழிவாங்க சிவபெருமானிடம் இருந்து ஒருநாள் மட்டும் தன்னை யாரும் தோற்கடிக்காதபடி வரம் ஒன்றை வாங்கினான். அந்த வரத்தை போரின் பதிமூன்றாம் நாள் பயன்படுத்த எண்ணினான். அர்ஜுனனை மேற்கு நோக்கி போர் புரிய அனுப்பிவிட்டு இங்கே தர்மனை சிறைபிடிக்க திட்டமிட்டனர். அதன்படி சக்கர வியூகம் அமைக்கப்பட்டது.

அபிமன்யுவின் முடிவு
********************

பாண்டவர்கள் தரப்பில் துருபதன் மற்றும் அர்ஜுனனுக்கு மட்டுமே சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்லவும், வெளியே வரவும் தெரியும். ஏனெனில் துரோணரும், துருபதனும் ஒரே குருகுலத்தில் சக்கர வியூகத்தை பற்றி படித்தவர்கள். ஆனால் ஜயத்ரதன் துருபதனை மூர்ச்சையாக்கி விட, சக்கர வியூகம் தங்கள் படையை நாசமாக்குவதை கண்ட அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்ல முடிவெடுத்தான். அவனை தொடர்ந்து பீமனும், தர்மனும் உள்ளே சென்று அவனை பாதுக்கப்பதாக முடிவெடுத்தார்கள்.

சக்கர வியூகத்தில் அபிமன்யு
****************************

தான் கர்ப்பத்தில் இருந்தபோது கற்ற வித்தையை பயன்படுத்தி சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே சென்றான் அபிமன்யு. மற்றவர்கள் அவனை தொடர்வதற்குள் ஜயத்ரதன் வந்து அவர்களை தடுத்தான். சிவபெருமானின் வரத்தால் அவனை எவராலும் வெல்ல இயலவில்லை, அதேசமயம் சக்கர வியூகமும் மூடிக்கொண்டது. வியூகத்தின் உள்ளே சென்ற அபிமன்யு வழியில் இருந்த அனைத்து வீரர்களையும் கொன்றுகொண்டே முன்னேறினான், அதில் துரியோதனின் மகனும் ஒருவன். இதனால் ஆத்திரமடைந்த துரியோதனன் துரோணர், கர்ணன், துச்சாதனன் அனைவர்க்கும் அபிமன்யுவை கொல்ல உத்தரவிட்டான். இறுதியில் கர்ணன் அபிமன்யுவின் உயிரை எடுத்தான்.

சக்கர வியூகத்தின் இரகசியம்
*****************************

சக்கர வியூகத்தில் மிகப்பெரிய கணிதம் ஒன்று ஒளிந்துள்ளது, அதனை அறிந்தால்தான் அதனை முறியடிக்க முடியும். அதனை அர்ஜுனன் துருபதனுடன் நடந்த போரில் சிறப்பாய் செய்திருப்பார். அதவாது சக்கர வியூகத்தில் மொத்தம் ஏழு அடுக்குகள் இருக்கும். எனவே அதனை உடைக்கும் போது 1/7 என்ற அளவீட்டில் கணக்கிட வேண்டும். இந்த கணக்கின் படி 1/7 = 0.142857142857142857 என்று அளவிடும்போது 142857 என்ற எண் திரும்ப திரும்ப வரும். இதுதான் தந்திரம் ஒவ்வொரு சக்கரமும் உடையும்போது அந்த இடத்திற்கு வேறு வீரர்கள் வந்துவிடுவதால் இந்த சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும்.

ஒவ்வொரு அடுக்கையும் கடக்கும் போது ஒரு எண்ணை அதிகரிக்க வேண்டும், இறுதியாக கடைசி சக்கரத்தில் நுழையும் போது ஏழு மடங்கு ஆற்றலுடன் போர் புரிய வேண்டும், அப்பொழுதான் சக்கர வியூகத்தை உடைக்க இயலும்.

இந்த 0.142857-ஐ 7 உடன் பெருக்கும்போது தான் இந்த எண் சூழல் உடையும். 0.142857142857142857*2 = 0.2857142285714285714, 0.142857142857142857*3 = 0.42857142857144285714 இப்படிய நீண்டு கொண்டே இருக்கும், இந்த எண்ணை 7-ஆல் பெருக்கும்போது மட்டும்தான் இந்த சூழல் எண் மாறும். 0.142857142857142857*7 = 0.99999999999999 இப்படித்தான் சக்கர வியூகத்தை உடைக்க முடியும். இதனை அறிந்துதான் போரில் துருபதனை அர்ஜுனன் வீழ்த்தியிருப்பார். ஆன்மீகமும், அறிவியலும் இரட்டை குழந்தைகள் போல என்பதை நிரூபிப்பதற்கான உதாரணம்தான் இந்த சக்கர வியூகம்

நன்றி

28/11/2022

#தமிழனின்_பாரம்பரியம்_பண்பாடு

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...

உண்ணும் உணவு தானியங்களில் நவதானியங்கள் என்று ஒன்பது தானியங்களை நிர்மாணித்தான்

தானியங்களுக்கு அதிபதியாக நவக்கிரகங்கள் என்று ஒன்பது கிரகங்களையும் அமைத்தான்

நெல் சந்திரன்
கோதுமை சூரியன்
துவரை செவ்வாய்
பாசிப்பயறு புதன்
கொண்டைக்கடலை குரு
மொச்சை சுக்கிரன்
எள் சனி
உளுந்து ராகு
கொள்ளு கேது

நவதானியங்கள் ஒன்பது என நிர்மாணித்த தமிழன் திசைகளை எட்டாக பிரித்தான்

கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு

திசையை எட்டாகப் பிரித்த தமிழன்
இசையை ஏழாக கொடுத்தான்...

ச ரி க ம ப த நி

இசையை ஏழாக கொடுத்த தமிழன்
சுவையை ஆறாக பிரித்தான்...

இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு
உவர்ப்பு
துவர்ப்பு

சுவையை ஆறாக பிரித்த தமிழன்
நிலத்தை ஐந்தாக பிரித்தான்...

குறிஞ்சி (மலைப்பகுதி)
முல்லை ( வனப்பகுதி)
நெய்தல் ( கடல் பகுதி)
மருதம் ( நீர் மற்றும் நிலம்)
பாலை ( வறண்ட பகுதி)

நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன்
காற்றை நான்காக பிரித்தான்...

தென்றல்
வாடை
கோடை
கொண்டல்

கிழக்கிலிருந்து வீசும் காற்று
கொண்டல்

தெற்கிலிருந்து வீசும் காற்று
தென்றல்

மேற்கிலிருந்து வீசும் காற்று
கோடை

வடக்கிலிருந்து வீசும் காற்று
வாடை

காற்றை நான்காக பிரித்த தமிழன்
மொழியை மூன்றாக பிரித்தான்...

இயல் ( இயற் தமிழ் )
இசை ( இசைத்தமிழ்)
நாடகம் ( நாடகத்தமிழ்)

இம்மூன்றும் தமிழுக்கு இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்து கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது...

இம்மூன்று மொழிகளுக்கும் தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது...

மொழியை மூன்றாக பிரித்த தமிழன்
வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்...

அகம்
புறம்

கணவன் மனைவி வாழும் வாழ்க்கை
அக வாழ்க்கை...

வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம்
புற வாழ்க்கை...

வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்...
ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்...

ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான்
அதை...
உயிரினும் மேலாக வைத்தான்...

இதைத்தான் அய்யன் வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார்...

" ஒழுக்கம் விழுப்பந் தரலான்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் "

அதை கடைபிடித்து வாழ உடலை காத்திட யோகாவை உருவாக்கினான்.

"ஸ்ரீ சக்கரம்" என்பது எங்கோ இல்லை,
நம் உடலில் தான் பதிந்துள்ளது......என்பதை கீழே படத்தில் உள்ளதை உணரலாம்.

Photos from Er. K. ராம்குமார் DCE AIPMK கொங்கு மண்டல பொறுப்பாளர்'s post 14/11/2022

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.

இறைவனின் திருவருளால் சமூக நீதிபோராளி அய்யா சி. என். ஆர் அவர்களின் நல்ஆசியோடு இந்த ஆண்டின் இரண்டாவது 15 வது நிதிக்குழு மானியம் அரசு ஒப்பந்த திட்டப்பணி தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பாலஜங்கன அள்ளி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இனிதே முடிவடைந்தது உடன் தி.மு.க ஒன்றிய செயலாளர் A. S சண்முகம் மாவட்ட கவுன்சிலர்,P. C துரைசாமி EX மாவட்ட கவுன்சிலர்,ஊராட்சிமன்ற தலைவர் மா.கோவிந்தசாமி முக்கிய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

உங்கள் கனவு இல்லங்களை நனவாக்கும் நமது நிறுவனம் ஸ்ரீ கே ஆர் வி கன்சப்ஷன் தமிழகம் முழுவதும் உங்கள் நல் ஆதரவை எதிர்நோக்கி என்றும் கட்டுமானத் துறையில்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ற வடிவமைப்பும் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் மதிப்பீட்டில் இக்கால முறைப்படி வலிமையான கட்டுமானம் அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான செயல்பாட்டையும் முன்கூட்டியே தெரிவிக்கப்படும், கட்டுமானத்தின் வரைபடத்தை உங்கள் கண்முன்னே கொண்டு வந்து உங்கள் எண்ணத்திற்கு ஏற்ப எங்கள் கைவண்ணத்தில் உருவாக்கி கொடுக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் மன நிறைவு எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி .

SRI KRV CONSTRUCTIONS

On going project at

SRI KRV CONSTRUCTIONS



Er.K.RAMKUMAR DCE.,
Er.K.VENKATESAN DCE.,
8428129161,9894337021

We
SRI KRV CONSTRUCTIONS
designs committed to bring
Every client dream space
Come 's true

24/10/2022

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.

தீபங்களை வரிசையாக அடுக்கி, தீபங்களின் ஒளியில் இறைவனை வணங்கி வழிபடும் நாளே தீபாவளி.

மனதின் ஒளியை மறைக்கும் ஆவணம், கோபம், குரோதம் போன்ற தீய எண்ணங்கள் விலகி, ஞான ஒளி மனதிலும், வாழ்விலும் நிறைய தீப ஒளி திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.

அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

என்றும் அய்யா CNR வழியில் நான் வாழ்க CNR வளர்க AIPMK

நன்றி.

Want your business to be the top-listed Government Service in Tamizhagam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Tamizhagam