சொர்க்கமே என்றரலும் அது நம்ம ஊர போல வருமா-கம்பம்

சொர்க்கமே என்றரலும் அது நம்ம ஊர போல வருமா-கம்பம்

Share

Cumbum town is located in the Theni District of Tamil Nadu, near Kerala State, geographically located between 9°30′N and 10°11′N, and between 77°E and 77°3

24/07/2020
Photos 29/05/2017

*தேனினா என்ன........ நினைத்தீர்கள்...??*🤔🤔
💢 *அடங்க மறுத்த* ஊரு இது!
💢அன்னியனை *அடித்த விரட்டிய* ஊரு இது!
💢 *வீரம்* விளைஞ்ச ஊரு இது!
💢 *அன்பால்* உருவான ஊரு இது!
💢அண்ணன் தங்கை பாசத்தில் *சிவந்த* ஊரு இது!
💢 *பாசத்தை* பங்கு வைச்ச ஊரு இது!
💢பகைவனையும் *பாசத்துடன்* பார்க்கும் ஊரு இது!
💢 *ஆட்டுகறிக்கு* அடித்து
கொள்வோம்!
*கோழிகறிக்கு* கூடிக்கொள்வோம்!
💢 *எமனே* வந்தாலும்
எதிர்த்து நிற்கும் ஊரு இது!
💢தாய்மாமன் *சீரு* தகதகக்கும்!
💢 *மும்பைல* *மெட்ராஸ்காரன்னா* பயப்புடுவான்,
அந்த மெட்ராஸ்காரன்லய *தேனி* காரனா தெறிச்சு ஓடுவான்.
🤗நானும் *தேனி காரன்* என்பதில் பெருமை படுகிறேன்.🤗
💢தாகத்துக்கு *"முல்லை பெரியாறு"*
💢பாவம் தீர்க்க *"சுருளி அருவி"*
💢காதல்செய்ய
*"வைகை அணை"*
💢போராட்டம் பண்ண *"தேனி புது பஸ்ஸ்டாண்ட்"*
💢உலகமே திரும்பி பாக்கும் *"வீரபாண்டி காேயில் "*
💢வம்புக்கு *"பசங்க"*
💢அழகுக்கு *"சின்னமனூர்"*
💢பார்த்து ரசிக்க *"மேகமலை"*
💢அன்பா பேசுனா *"உயிர தருவோம்"*
💢வம்பா பேசுனா *"உயிர எடுப்போம்"*
💢இது தாம்பா எங்க *தேனி ஜில்லா...!!*
💢 *நீங்களும் தேனினா*
💢 *அப்போ பகிர்ந்த கொள்ளுங்கள்....!!!*

Photos from சொர்க்கமே என்றரலும் அது நம்ம ஊர போல வருமா-கம்பம்'s post 11/05/2017

சுருளி அருவி (y)...

Photos from சொர்க்கமே என்றரலும் அது நம்ம ஊர போல வருமா-கம்பம்'s post 26/03/2017

தமிழ் நாட்டில் நாம் பார்த்து ரசிக்க வேண்டிய இடம் கொழுக்குமலை !!!

தேனி - போடி - போடிமெட்டு - கொழுக்குமலை பஸ் வசதி உண்டு. ஜீப்பிலும் போகலாம். போடிமெட்டில் தங்க நல்ல உணவு விடுதிகள் உண்டு

நம்ம ஊரில் இருந்து வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டு இருப்பவர்கள் .நம்ம ஊருக்கு போன நல்ல ஒரு இடத்திற்கு போய் சுற்றி பார்க்க வேண்டும் என்று நினைபவர்கள் நிறைய நண்பர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு இந்த இடம் கண்டிப்பாக அந்த சந்தோசத்தை கொடுக்கும் .

உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் தேயிலை விளையும் ஒரே இடம்தான் கொழுக்குமலை. வருடம் முழுவதும் குளிந்தே இருக்கும் மலையும் இதுதான். இந்தக் கொள்ளை அழகு கொண்ட குளு குளு கொழுக்குமலை அமைந்திருப்பது தமிழகத்தில் என்பதே சிறப்புதான்! வாருங்கள். குளு குளு மலைக்குப் பயணிப்போம்.

தேனி மாவட்டம் மேற்குத் தொடர்சசி மலைக்குக் கீழ் அமைந்துள்ள பசுமையான மாவட்டம். தேனியிலிருந்து மேற்கு திசையில் பார்த்தால் உயர்ந்த மலைக் குன்றுகளை சுற்றிச் சுற்றி மேகங்கள் விளையாடியடி தெரிவதுதான் மேற்குச் தொடர்ச்சி மலை.

மலைகள் எப்போதும் ஆகாயத்துடன் பேசிக்கொண்டே இருக்கும் அவ்வளவு உயரம் மலைகளும் மேகங்களும் ஆகாயம் தொட்ட அழகிய இடம்தான் கொழுக்குமலை.

தேனி- போடி கடந்து மூணாறு சாலையில் பயணித்தால் பசுமையை ரசித்தபடி வளைந்து நெளிந்து செல்லும் போடி மெட்டுசாலை. இங்கேயே குளிர் நம்மை ஒட்டிக்கொள்ளும் பரவசம், இதமாக போடி மெட்டு கடந்து பசுமைப் பயணம் தொடர வருவது பூப்பாறை.

தேயிலை மலைத்தோட்டம் நிறைந்த பூப்பாறை கடந்து பெரிய கானல், சின்னக்கானல், அதனருகே ரம்மியமான பரந்து விரிந்து கிடைக்கும் டேம்தான் யானை இரங்கல் டேம்.

தேக்கடிபோல் தேயிலை மலைகளின் காலடியில் வளைந்து வளைந்து செல்லும் நீண்ட நீர்த்தேக்க டேம். பார்த்து ரசித்து பரவசமடையும் ரம்மியமாக அமைந்துள்ளது.

அடுத்து சூடு பார்க்காத மலை நகரம் சூரியநெல்லி, கொழுக்குமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நுழைவுவாயில்தான் சூரியநெல்லி.

இங்கிருந்து கொழுக்கு மலைக்கு ஜீப்பில்தான் செல்லமுடியும். அவ்வளவு உயரமான மலைச்சாலை. சுற்றியுள்ள சில மலை கிராமங்களுக்கு இன்றைக்கும் குதிரை சுமையாகத்தான் உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

கொழுக்குமலைக்குச் செல்வதற்கு முன் கண்ணுக்கு எட்டிய தூரம் தேயிலைத் தோட்டங்கள்தான். அந்த பசுமையோடு குளிர்ந்த மேகக் கூட்டம் நம்மோடு கொஞ்சி விளையாடிக் கொண்டே வரும்.

அதோடு சாரல் மழையும் நம்மோடு சங்கம்மாகும். அழகான மலையும் சாரல் குளிர்க்காற்றும் நம்மை குஷிப்படுத்தும் உணர்வே தனி சுகம். கடல் மட்டத்தில் இருந்து 8100 அடி உயரத்தில் அமைந்த பசுமையான மலைதான் கொழுக்கு மலை.

இந்த மாலையில் விளையும் தேயிலை உலக அளவில் ஃபேமஸ். ஆர்கானிக் இயற்கை முறைப்படி தயாராகும் இந்த தேயிலை உற்பத்தியை சுற்றுலாப் பயணிகள் ஃபேக்டரிக்குள் சென்று பார்க்கலாம்.

வருடம் முழுவதும் குளிரும் தமிழகத்தின் தலைசிறந்த இடமான இங்கிருந்து போடி, குரங்கணி, தேனி மாவட்ட பள்ளத்தாக்குப் பகுதிகளையும், கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன் என பசுமையான பகுதிகளையும் பார்த்து ரசிக்கலாம்.

Photos from சொர்க்கமே என்றரலும் அது நம்ம ஊர போல வருமா-கம்பம்'s post 10/03/2017

கம்பத்தில் செம மழை...

Photos 20/02/2017
Want your business to be the top-listed Government Service in Tamizhagam?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Cumbum Theni District
Tamizhagam
625516