AISF Thiruvarur District

Directions

AISF Thiruvarur District Study and Struggle

அனைத்ந்திய மாணவர் பெருமன்றத்தில் 91 ஆம் ஆண்டு அமைப்பு தினம் முன்னிட்டு திருவாரூர் மாவட்ட குழு சார்பில் திருவாரூர் கட்சி ...
13/08/2026

அனைத்ந்திய மாணவர் பெருமன்றத்தில் 91 ஆம் ஆண்டு அமைப்பு தினம் முன்னிட்டு திருவாரூர் மாவட்ட குழு சார்பில் திருவாரூர் கட்சி அலுவலகத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் ஜெ.பாரதசெல்வன் தலைமையில் நடைபெற்றது,அமைப்பு கொடியினை மாவட்ட செயலாளர் ஜெ.பி வீரபாண்டியன் ஏற்றினார். அமைப்பின் வரலாறுகளை, உறுப்பினர் அட்டையினை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தில் மாவட்டச் செயலாளர் ஜி சரவணன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட பொருளாளர் க. கோபி,
மாவட்ட துணை செயலாளர்
சே.அருண், இளைஞர் பெருமன்றம் மாவட்ட குழு உறுப்பினர் அஜித்குமார் மாணவர் பெருமன்ற மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெ.அஜய்தாஸ், எம்.அஜய் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

24/07/2026

டெல்லியில் போராடிய மாணவர் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பதவி விலக கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்.

டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்.நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு குளறுபடிகளுக்கு ப...
24/07/2026

டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் மாணவர்கள் மீது துணை ராணும் மற்றும் காவல்துறை நடத்திய காட்டுமிராண்டி தனமான தாக்குதலை கண்டித்து திருவாரூர் ரயில் நிலையம் முன்பு அனத்திந்திய இளைஞர் - மாணவர் பெருமன்றத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் தோழர் எஸ்.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் #வை_செல்வராஜ் எம்.ஏ., எம்.பிஃல்., அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தோழர் கோ.சரவணன் மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் தோழர் ஜெ.பாரதசெல்வன் செயலாளர் தோழர் ஜெ.பி.வீரபாண்டியன் பொருளாளர் தோழர் க. கோபி இளைஞர் - மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் தோழர்கள் பி.சிவபிரசாத் , கே.பாலமுருகன், அ.பழனிவேல் , கலை.அரவிந்த், பா.நெப்போலியன் , கே.சுதாகர், வி.கோபி , என்.செந்தில்வேலன் , எஸ்.அருண் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

✔️  தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் உள்ளிட்ட தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர...
23/07/2026

✔️ தேசிய தேர்வு முகமை
நடத்தும் நீட் உள்ளிட்ட தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்...

✔️ நீட் தேர்வால் தற்கொலை
செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்...

என்பன உள்ளிட்ட கோரிக்கையினை வலியுறுத்தியும்,
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்தும்

இளைஞர் - மாணவர் பெருமன்றத்தின் சார்பில் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்ட போது...

டெல்லியில் போராடிய மாணவர் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், நீட் தேர்வு  முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய ...
23/07/2026

டெல்லியில் போராடிய மாணவர் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர்
தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு கலைக்கல்லூரி முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் ஜெ. பாரதசெல்வன் தலைமையில் வகுப்புகளைப் புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையை விளக்கி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் ஜெ. பி. வீரபாண்டியன் பேசினார், போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சே.அருண் கல்லூரி பொறுப்பாளர்கள் கபிலன், முகேஷ், சௌமியா உள்ளிட்ட 500 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

17/07/2026
17/07/2026
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்திருவாரூர் மாவட்டம்🚩மன்னை இராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் 2500 க்கும் மேற்பட்ட மாணவர்க...
16/07/2026

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்
திருவாரூர் மாவட்டம்🚩

மன்னை இராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் 2500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் உயர்கல்வி துறையை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.தர்சின் தலைமையில் நடைபெற்றது.
இதில் மன்னை இராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சுமார் 7 1/2 ஏக்கர் பரப்பளவில் 12 கோடி மதிப்பீட்டில் அரசு மகளிர் கல்லூரி வர உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது இதனை மாற்றி அமைக்க கோரி மாணவர்கள் நலனை மனதில் கொண்டு அரசு மகளிர் கல்லூரியை வேற இடத்தில் கொண்டு வர வேண்டும் என முதற் கட்டமாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது இதில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ஜெ.பி.வீரபாண்டியன்
மாவட்ட தலைவர்
கே.ஆர். ஜே.பாரதசெல்வன்
மாவட்ட பொருளாளர் க.கோபி மாவட்ட குழு உறுப்பினர் எம்.சந்துரு, ஏன்.அஜித் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் சந்தோஷ்,கிஷோர்,சபரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Address

Thiruvarur

Website

Alerts

Be the first to know and let us send you an email when AISF Thiruvarur District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share