22/06/2026
19.06.2026 - மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் திருமதி.சகாய ராபின் சாலு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மூலைக்கரைப்பட்டி பஜார் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் வயது மாற்றுத்திறனாளியை, காவல் நிலையத்தின் உதவியோடு மீட்டு, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் மனநல பிரிவில் சிகிச்சை அளித்து மனநல பராமரிப்பிற்காக அன்பின் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அன்பின் இல்லத்தில் இயக்குனர் அருள் திரு. ஆமோஸ் அவர்கள் செய்தார்கள்.