13/10/2026
திருப்பூர் ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் CPIM போராட்டம்: உயிரிழந்த அரசுப்பள்ளி மாணவன் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம்!
திருப்பூர் வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த பட்டியலின அரசுப்பள்ளி மாணவன் பி.ஹரிஷ் குடும்பத்திற்கு நீதி கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது!
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, மாணவனின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக ரூ. 2 லட்சம் நிவாரணம் உடனடியாக வழங்கப்பட்டுள்ளதுடன், மீதி ரூ. 2 லட்சம் இரண்டொரு நாட்களில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதோடு நின்றுவிடாமல், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீடு மற்றும் மாணவனின் தங்கையின் கல்விக்கான முழுமையான உதவிகளை அரசு நிர்வாகம் உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்!