26/10/2026
அறிவிப்பு
வீரம், தியாகம், ஆன்மிகம் என உயரிய பண்புகளின் அடையாளமாகத் திகழ்ந்த தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119-வது பிறந்த நாள் மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் நிகழ்வில்,
1. திரு. வசந்தராஜன்
2. திரு. மகா சுசீந்திரன்
3. திரு. பாண்டுரங்கன்
4. திரு. தரணி முருகேசன்
5. திரு. நாச்சியப்பன்
6. திரு. சோழன் பழனிசாமி
7. திரு. பண்ணைவயல் இளங்கோ
ஆகியோர், நமது We The Leaders அமைப்பின் சார்பில், தேவர் திருமகனாரின் திருக்கோவிலில் மரியாதை செலுத்தி, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் உருவச்சிலைக்கு மாலையணிவித்து, அவரது தியாகத்தையும் சமூக நல்லிணக்கத்திற்கான பங்களிப்பையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவார்கள்.
விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்பாலும், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக எடுத்த முயற்சிகளாலும், மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்ற தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது வரலாறும் சிந்தனைகளும், வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும். K.Annamalai We The Leaders Foundation Suriya MK We The Leaders - K V Kuppam We The Leaders - Coimbatore Tamil Elango E Prabakaran Munusamy Balaji Uthamaramasamy We The Leaders - Chennai