Divisional Secretariat - Addalaichenai

Divisional Secretariat - Addalaichenai

Share

To pay the way for rapid development to achieve the highest targets by utilizing the public service for the benefit of the people of the Division.

Be a fecilitator for attainment of sustainable Development.

26/11/2025
07/11/2024

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் நன்மை பெறத் தகுதியடைந்தும் இதுவரை வங்கிக் கணக்கை ஆரம்பிக்காத பயனாளிகளின் பெயர்ப்பட்டியலைக் காட்சிப்படுத்தல்.
📌 📌 📌 📌 📌 📌 📌

கீழ்க்காணும் அறிவித்தலுக்கும், பெயர்ப்பட்டியலுக்கும் அமைவாக, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் நன்மை பெறத் தகுதியடைந்தும்
இதுவரை தமது வங்கிக்கணக்குகளை ஆரம்பிக்காத பயனாளிகள் உடனடியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவிற்குச் சென்று, அஸ்வெசும வங்கிக்கணக்கினை ஆரம்பிப்பதற்குத் தேவையான கடிதத்தினையும் மேலதிக தகவல்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

👉தொடர்புகளுக்கு :- அஸ்வெசும நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவு
👉தொலைபேசி இலக்கம் :- 0672277336

11/10/2024

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சிகள் வழங்கும் திட்டத்திற்கு அமைய எதிர்வரும் 2024.10.19 காலை 9.00 மணிக்கு பிரதேச செயலகத்தில்
ஒரு நாள் Drone fly workshop. இலங்கையில் அனுபவம் வாய்ந்த பிரபல Droe flyer களை கொண்டு இலவசமாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் onlime application இனை பூர்த்தி செய்து இணைந்து கொள்ளலாம்.

Online Application
https://forms.gle/sB6gJ3TwMB64hcqt8

மேலதிக தொடர்புகளுக்கு.
AR. Muhammed Rifnas DO - 0752864769
MMS. Nalera DO - 706251297

31/07/2024

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்...
Divisional Secretariat Addalaichenai

PHOTOGRAPHY WORKSHOP
புகைப்படத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளுக்கான பயிற்சிப்பட்டறை

*ஒரு கமராவைக் கையாள்வது எப்படி?
*Indoor, Outdoor காட்சிகளை புகைப்படம் எடுப்பது எப்படி?
*கமராவின் வகைகளும், அவைகளை பயன்படுத்தும் முறைகளும்
*சாதாரண ஒரு புகைப்படக் கலைஞன் பெறும் வருமானமும், அவற்றுக்கான வழிகாட்டலும்

Camera Types
Camera Daigram
Aperture, Shutter, ISO,
Exposed Meter
Depth of field
Focul Length
Exposure Mode
Focusing

என பல விடயங்கள் உங்களுக்காக கற்றுத்தரப்படும்.முற்றிலும் இலவசமாக அனுபவம் வாய்ந்த Raseem
Raseem Photography அவர்களால் எதிர்வரும் 2024, ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் புகைப்படத்துறை சம்பந்தமான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை கலந்து பயன்பெறுங்கள்.

DATE: last week on August
TIME : 09.00 AM - 04.00 PM
PLACE: Conference Hall, Addalachenai

தமிழ் மொழியில் நடைபெறும் இந்த பயிற்சிப் பட்டறையில் 20 ஆசனங்களே ஒதுக்கப்பட்டுள்ளதால் உங்கள் பெயர்களையும் பதிவு செய்து கொள்ளுங்கள்.

இந்தப் பயிற்சிப் பட்டறை தொடர்பில் மேலதிக விபரங்கள் தேவைப்படின் அட்டாளைச்சேனை பிரதேச செயலக வியாபாரப் பிரிவை உடன் தொடர்பு கொள்ளுங்கள்.
0752854769, 0755599333

தேவையுடையவர்கள் பயனுடைய இந்தத் தகவலை அதிகம் Share செய்து கொள்ளுங்கள்.

Photos from Divisional Secretariat - Addalaichenai's post 19/06/2024

விவசாயத்தை நவீனமயமாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (19)அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
----------------------------------------------------------------------

விவசாயத்தை நவீனமயமாக்கும் தேசிய வேலைத்திட்டத்தில் எமது அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் உள்வாங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இவ்வேலைத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்று (2024.06.19) பி. ப. 2.30 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் PTM. இர்பான் (sir) அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நவீனமயமாக்கல் குழுக்களை நியமித்து விவசாயிகளை திரட்டி தனியார் பங்களிப்புடன் கிராமிய விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை தற்போது அரசாங்கம் தொடங்கியுள்ளது. இதற்காக 25 பிரதேச செயலகங்கள் அடையாளம் காணப்பட்டு ஒவ்வொன்றிற்கும் 25 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திற்குள் இதற்காகப் பயன்படுத்தப்படும் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை 100 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photos from Divisional Secretariat - Addalaichenai's post 21/04/2024

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (21) குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான இலவச அரிசி விநியோக நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
====================================

இலவச அரிசி விநியோக நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று ( 2024.04.21) அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் Ptm. இர்பான் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவருமான கெளரவ
ஏ. எல். எம். அதாவுல்லா அவர்களும், ஏனைய அரசியல் பிரமுகர்கள், பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர், கிராம நிலதாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அரசால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.

இவ்வாறு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் கடந்த ஆண்டும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அஸ்வெசும பெறும் மற்றும் அதற்கு விண்ணப்பித்துள்ள நபர்களுக்கும், இதற்கு முன்னர் சமுர்த்திப் பயனாளிகளாக இருந்தும் அஸ்வெசும திட்டம் கிடைக்கப் பெறாதவர்களுக்கும், சிறுநீரக நோய், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி போன்றவர்களுக்கு அரசின் இலவச அரிசி வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Want your business to be the top-listed Government Service in Addalachenai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Addalachenai
32350

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15