08/09/2022
எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை உதைப்பந்தாட்ட அணிக்கான புதிய மேலங்கிகள் வெளியீடு
---------------------------------------
எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இன்று (07/09/2022) காலை பொது ஆராதனை ஒன்றுகூடல் நிகழ்வின் போது எதிர்வரும் 10 ஆம் திகதி மாகாண மட்ட உதைப்பந்தாட்ட போட்டிக்காக செல்லவுள்ள எம்முடைய மாணவர்களை மேலும் உற்சாகம் ஊட்டும் விதமாக உதைப்பந்தாட்ட அணிக்கான புதிய மேலங்கிகள் பாடசாலை அதிபர் A.C.M.ஹரீஸ் சேர் அவர்களின் தலைமையில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வினை எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர் A.R.M.ஆசிக் சேர் மற்றும் ஒழுக்காற்றுக்குழு செயலாளர் A.L.முஹமட் இல்யாஸ் சேர் ஆகியோர் ஒழுங்கமைத்ததுடன் உடற்கல்வி ஆசிரியர்களானA.L.நௌபர் சேர், A.பௌசுல் அமீர் சேர்,N.M.முஹமட் ஸாலிக் சேர்,M.M.ரிப்கி அகமட் சேர், K.ரிஜ்ஹானா ஆசிரியை மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் M.A.M.றஸ்பாஸ் ஆகியோர் முன்னின்று நடாத்தினர்.
இம்மேலங்கிகளுக்குறிய அனுசரனையை வெளிநாட்டில் தொழில் புரியும் எமது அட்டாளைச்சேனையை சேர்ந்த சகோதரர் R.M ரகீப் அவர்கள் வழங்கியிருந்தார் எம் மாணவச்செல்வங்களின் நலனில் அக்கறை கொண்டு பேருபகாரம் வழங்கிய இந்த சகோதரருக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் பாலித்து பேருபகாரம் வழங்க போதுமானவனாக இருக்கிறான்.
மற்றும் இம்மேலங்கிகளை குறிப்பிட்ட சகோதரர் மூலமாக பெற்றுத்தர முழு மூச்சாக பாடுபட்ட ஆசிரியர் R.M.ஜெஸீல் அவர்களுக்கு எமது பாடசாலை சமூகம் சார்பான மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்
மேலும் எமது பாடசாலையில் நடைபெறும் நிகழ்வுகளுக்காக அனுசரனை வழங்கிவரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை சமூகம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
என கூறியவாறு
மாகாண மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் இம்மாணவர்கள் வெற்றி வாகை சூட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்குமாறு சகலரையும் வேண்டிக்கொண்டவனாக.
அல் ஹம்துலில்லாஹ்
07/09/2022
இன்று(07) எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் தரம் 11 மாணவர்களின் பெற்றோர்களுடனான ஒன்று கூடல் பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் A.C.M.ஹரீஸ் சேர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலை ஒழுக்காற்று குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஒன்று கூடலில் மாணவர்கள் சம்பந்தமான ஒழுக்கக்கோவை தயாரிக்கப்பட்டு அது வாசித்து காட்டப்பட்டதுடன் அதில் பெற்றோரும் மாணவர்களும் கையொப்பம் இட்டமையும் அவதானிக்க முடிந்தது.
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் மாணவர் ஒழுக்க நடைமுறைகளை மேம்படுத்தி அவர்களை சிறந்த கல்வி மான்களாக மாற்றும் நோக்கோடு முதற்கட்டமாக இந்த செயற்பாடு உதவி அதிபர் A.R.M.ஆசிக் சேர் மற்றும் ஒழுக்காற்று குழு செயலாளர் A.L.முஹமட் இல்யாஸ் சேர் ஆகியோரினால் ஒழுங்கமைக்கப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் அடுத்தடுத்த தரங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதில் உள்ளடக்கப்பட்டு ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனி கோவைகள்
பெறப்பட்டு அவர்களுடைய ஒழுக்காற்று நடவடிக்கை சம்பந்தமான சகல விடயங்களும் கோவைப்படுத்தப்படவுள்ளன.
06/09/2022
எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள தரம் 11 மாணவர்களுக்கான அடைவு மட்டத்தை பரிசீலிக்கும் பரீட்சை ஒன்று பாடசாலை பரீட்சைக்குழுவினரால் அண்மையில் நடாத்தப்பட்டது.
பிரதான பாடங்களை மாத்திரம் உள்ளடக்கிய இப்பரீட்சையில் சகல பாடங்களிலும் திறமை சித்தி பெற்ற மாணவர்கள் (05/09/2022) அன்று நடைபெற்ற காலை ஆராதனை நிகழ்வின் போது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
பாடசாலை அதிபர் A.C.M.ஹரீஸ் சேர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வினை உதவி அதிபர் A.R.M.ஆசிக் சேர்,ஒழுக்காற்று குழு செயலாளர் A.L.முஹமட் இல்யாஸ் சேர் ஆகியோர் ஒழுங்கமைத்தனர.
பாடங்களில் விசேட கவனம் செலுத்தவும் பரீட்சைகளில் கூடுதலான புள்ளிகளை பெறவும் ஏனைய மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக நடாத்தப்பட்ட இப்பரிசளிப்பு நிகழ்வில் பாடசாலையின் அதிபர்,உதவி அதிபர்கள்,சிரேஷ்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசுப்பொதிகளை வழங்கி கௌரவித்தனர்.
இப்பரிசுப்பொதிகளுக்கான அனுசரனையை அட்டாளைச்சேனையை சேர்ந்த வர்த்தக நிறுவனங்களான வெல்பிட் கோனர்,A.S.M.Distributor,பாரிஸ் ரேடர்ஸ்,நளீம் ரேடர்ஸ் ஆகியவற்றின் உரிமையாளர்கள் வழங்கியிருந்தனர் அவர்களுக்கு எமது பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
அல் ஹம்துலில்லாஹ்
01/09/2022
இன்று 2022/09/01 எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் பாடசாலை சுகாதார கழகத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் மூலமாக ஆசிரியர்களுக்கான நீரிழிவு,குளஸ்திரோல்,உயர் குருதியமுக்கம் போன்ற தொற்றா நோய்கள் சம்பந்தமான இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன்
தரம்7 மாணவர்களின் பற்சுகாதாரம்,கண்பார்வை,உடற்திணிவுச்சுட்டி (B.M.I) ஆகியன பரிசோதிக்கப்பட்டன.
இப்பரிசோதனைகள் யாவும் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்
24/08/2022
அகில இலங்கை தமிழ் தின போட்டி 2022
எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் இம்முறை அக்கறைப்பற்று வலய மட்ட தமிழ் தின போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றீயீட்டியுள்ளனர் அவர்களுக்கு பாடசாலை சார்பாக வாழ்த்துக்கள்
விபரம்
தனி நடிப்பு முதலாம் இடம்
இலக்கணம் முதலாம் இடம்
முஸ்லீம் நிகழ்ச்சி இரண்டாம் இடம்
நாட்டார் பாடல் இரண்டாம் இடம்
முதல் இடம் பெற்ற மாணவர்கள் அனைவரும் மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
24/08/2022
எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை சார்பாக மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டமாணவர்களுக்கான உதைப்பந்தாட்ட பயிற்சிகள் ஆரம்பமாகியுள்ளன
இதற்கிணங்க ஒவ்வொரு நாள் காலை வேளைகளில் தொடர்ச்சியாக பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
23/08/2022
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் கலாசார விழுமியங்களை உலகிற்கு எடுத்தியம்பிய வரலாற்று நிகழ்வு
-----------------------------------------------------------------
கல்வியின் திறவு கோளாக ஒழுக்கமே காணப்படுகின்றது அதன் நிமித்தம் எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை உறுதிப்படுத்துமுகமாகவும் மாணவர்களிடத்தில் மனப்பாங்கு விருத்தியை ஏற்படுத்தவும் பாடசாலை ஒழுக்காற்றுக்குழு புதிய மாணவ தலைவர்களை தேர்வு செய்தது.
அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட சுமார் 72 மாணவத்தலைவர்களுக்கான நியமனமும் சின்னம் சூட்டுதலும் இன்று 22/08/2022 பாடசாலை கேட்போர் கூடத்தில் காலை ஆராதனையை தொடர்ந்து கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பாதகம் ஏற்பாடாத வகையில் உயர்தர வலய மாணவர்களையும் பெற்றோர்களையும் கொண்டு வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வானது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர் A.C.M.ஹரீஸ் சேர் அவர்கள் தலைமை தாங்க ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பொறுப்பான பிரதி அதிபர் M.T.M.சியாத் சேர் அவர்களின்வழிகாட்டலில் இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர் A.R.M.ஆசிக் சேர் மற்றும் ஒழுக்காற்றுக்குழு செயலாளர் A.L.முஹமட் இல்யாஸ் சேர் ஆகியோரின் ஒழுங்கமைப்பு டன் பாடசாலை ஒழுக்காற்று குழுவினரால் செயற்படுத்தப்பட்டது.
இந்த சின்னம் சூட்டுதல் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி W.M.S.B விஜயதுங்க சேர் அவர்களும் விசேட அதிதியாக போக்குவரத்து பிரிவுக்கான பொலீஸ் பொறுப்பதிகாரி K.D.A.திலகசிரி சேர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலையின் பழைய மாணவர்களின் அனுசரனையுடன் இடம்பெற்ற இவ்விழாவில் மாணவ தலைவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன் அவர்களுக்கான நியமனம் தேசிய ரீதியில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் நியமனம் போன்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மிக நீண்ட கால இடைவெளியின் பின் எமது பாடசாலையில் நடைபெற்ற இவ்விழாவானது பாடசாலையின் கலை கலாசார விழுமியங்களை உலகிற்கு பறைசாற்றுவதாகவே அமையப்பெற்றது எனலாம இந்த வரலாற்று நிகழ்வானது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மன மகிழ்வையும் பாடசாலை சம்பந்தமான நல்லபிப்பிராயத்தையும்ஏற்படுத்தியுள்ளது என கூறின் அது மிகையாது.
தெரிவு செய்யப்பட்ட மாணவ தலைவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
22/08/2022
மாணவர் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி
-----------------------------------------------------
அட்டாளைசேனை தேசிய பாடசாலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்வு இன்று 2022/08/20 பாடசாலையின் பழைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உளவளத்துறை மற்றும் உளவியல் ஆலோசகரான A.மனூஸ் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டதுடன் சுமார் 70 மாணவ மாணவியர்கள் பங்குபற்றினர்.
இந்நிகழ்ச்சிதிட்டமானது அதிபரின் வேண்டு கோளுக்கிணங்க பாடசாலை ஒழுக்காற்று குழுவினால் ஒழுங்கமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
19/08/2022
கடந்த 16/08/2022-18/08/2022 வரை அட்டாளைசேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அக்கறைப்பற்று வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகள நிகழ்ச்சிகளில் எமது அட்டாளைசேனை தேசிய பாடசாலை சார்பாக கலந்து வெற்றியீட்டி மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவான மாணவர்கள் விபரம்
இந்த மாணவர்களுக்கு பாடசாலை ஆளனியினர் சார்பாக நல் வாழ்த்துக்கள்
அல் ஹம்துலில்லாஹ்
1. High jump - U 12 - Aalif Abdullah - 1st place.
2. High jump - U 20 - Rusny & Aheel - 1st & 2nd place.
3. Shot put - U 14 - Thakki - 1st place.
4. High jump - U 16 - N. Abdullah - 1st place.
5. Disk throw - U 18 - Afrith - 1st place.
6. Shot put - U 20 - Ihjas - 1st place.
7. 4 × 100 - U 14 - 2nd place.
8. 400mh - U 16 - Zamry - 2nd place.
9. 400mh - U 20 - Aheel - 2nd place.
10. 100mh - U 20 - Aheel - 2nd place.
11. 4 × 100 - U 20 - 2nd place.
12. 4 × 400 - U 20 2nd place
15/08/2022
அட்டாளைசேனை தேசிய பாடசாலையில் மற்றுமொரு வரலாற்றுச்சாதனை
==================================
எமது அட்டாளைசேனை தேசிய பாடசாலை பொலிஸ் கடேற் குழுவில் அங்கம் வகித்து பல பதவியுயர்வுகளை பெற்ற M.N.A.அப்ஸீன் எனும் மாணவன் CQ தரத்தில் இருந்துஞ C.S.M.தரத்துக்காக அண்மையில் நடைபெற்ற பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்
இதன் படி இவர் C.S.M.தரத்துக்கு உயர்வு பெற்றுள்ளார் உயர்தரத்தில் விஞ்ஞான பாடத்தை தெரிவு செய்துள்ள இம்மாணவன் இப்பதவியுயர்வின் மூலம் உயர்தரப்பரீட்சையில் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் போது அவர் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்பு காணப்படுகிறது
எனவே எமது பாடசாலைக்கு புகழ் தேடித்தந்த இந்த மாணவனுக்கு அதிபர் மற்றும் ஆளனியினர் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்
அல் ஹம்துலில்லாஹ்
13/08/2022
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஒழுக்காற்று குழுவுக்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
==================================
எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கான பிரத்தியேகமான அறை ஒன்று பாடசாலை முன் வளாகத்தில் காவலர் விடுதிக்கு அண்மையில் ஒதுக்கப்பட்டுள்ளது அந்த அறையை செப்பனிடும் பணியை அட்டாளைசேனை தேசிய பாடசாலை ஒழுக்காற்று குழு செயலாளர் A.L.முஹமட் இல்யாஸ் சேர் அவர்கள் மேற்க்கொண்டார்கள் மேலும் அதிபர் A.C.M.ஹரீஸ் சேர் ,உதவி அதிபர் A.R.M.ஆசிக் சேர் மற்றும் பாடசாலை S.D.E.C செயலாளர் ஜஃபர் ஆகியோரும் உடன் களத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது
இனிவரும் காலங்களில் பாடசாலைக்குள் முக்கிய பணி நிமித்தம் வருபவர்களை தவிர ஏனையவர்கள் இந்த அறையிலேயே தங்க வைக்கப்படுவர் ஏனெனில் பாடசாலை வளாகத்திற்குள் தேவையற்ற வெளி ஆட்களின் நடமாட்டத்தை தவிர்க்கவே இந்நடவடிக்கையானது புதிதாக உருவாக்கப்பட்ட ஒழுக்காற்று குழுவினால் மேற்கொள்ளப்படுகின்றது
அத்துடன் இடைவேளை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் மாணவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உயர்தர பெண்கள் பிரிவு மற்றும் தரம் 8,9 வலயங்களில் மாணவர்கள் குடி நீரை பெற்றுக்கொள்ள நீர் இணைப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன
18/07/2022
ஜனாசா அறிவித்தல்
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னைநாள் விஞ்ஞான பாட ஆசிரியரும் கொழும்பு இசிபதான கல்லூரியின் பிரதி அதிபருமான ஜனாப்.,K. Hamamudeen sir இன்று கொழும்பில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னார் அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். மர்ஹும் கமால்தீன் ஆசிரியரின் புதல்வராவர். அன்னாரின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு ஜென்னத்துல் பிர்தெளஸ் எனும் உயர்ந்த சுவனம் செல்வதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக, ஆமீன்.
எனது முன்னாள் விஞ்ஞான பாட ஆசிரியர் (தேசிய பாடசாலை, அட்டாளைச்சேனை), சிறந்த விளையாட்டு வீரர், எனது பாடசாலை காலங்களில் என்னைப்போன்ற மாணவர்களுக்கு கல்வியிலும் மற்றும் விளையாட்டுத்துறையிலும் சிறந்த பயிற்சிகளையும் அறிவினையும் வழங்கியவர். எனது மினா இல்லத்தினை பிரதிநிதித்துப்படுத்தியவர். பாடசாலை மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் 1 ம் இடத்தினை நாங்கள் பெறுவதற்கு வழிவகுத்தவர்.
மரணம் அனைவருக்கும் நிச்சயம் வந்தே தீரும் (அனைத்து உயிரினங்களும் மரணத்தை சுவைத்தே தீரும்) இருந்த போதிலும் அன்னாரது இழப்பு எனது அட்டாளைச்சேனை மன்னுக்கும் அட்டாளைச்சேனை தேசியபாடசாலை பழைய மாணவர்கள், கல்விச் சமூகம், விளையாட்டு வீரர்கள், குடும்பத்தார் ஆகியோருக்கு பேரிழப்பாகும்
Fathima Sifana
பழைய மாணவி
தேசிய பாடசாலை
அட்டாளைச்சேனை