Akkaraipattu

Akkaraipattu

Share

The beauty of Akkaraipattu

சாதாரண தரம் சித்தியில்லாத 94 ப.ஊ 16/03/2017

“ நமது பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்பிக்கள் உள்ளனர். 196 பேர் தேர்தல் மூலமும் மிகுதி 29 பேர்கள் தேசியப் பட்டில் மூலமும் தெரிவு செய்யப்படுகின்றனர். இதில் அதிர்ச்சியளிக்கும் விடயம் என்ன வென்றால், இவர்களில் 94 எம்பிக்கள் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில்கூட சித்திபெறவில்லை! 25 பேர்கள் மட்டுமே பட்டதாரிகள். இத்தகவல்களை பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ஓ.ஏ.டி சொய்சா மந்தாநாள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இந்த லட்சணத்தில், இவர்கள்தான் இலங்கை அரசின் சட்டவாக்காளர்களாம்” அதற்கு ஒரு நண்பர் “படிப்பு அவசியம் இல்லை, நேர்மையும். [ 258 more words ]

https://onlineakkaraipattu.wordpress.com/2017/03/16/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be

சாதாரண தரம் சித்தியில்லாத 94 ப.ஊ “ நமது பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்பிக்கள் உள்ளனர். 196 பேர் தேர்தல் மூலமும் மிகுதி 29 பேர்கள் தேசியப் பட்டில் மூலமும் தெரிவு செய்யப்படுகின்றனர். இதில் அதிர்ச்சியளிக்கும் விடயம் என்ன வென்றால், …

பல முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் தெளிவான நிலை இல்லை. 14/03/2017

கரையோர மாவட்டம் என்பதற்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கும் சம்பந்தமில்லை. எனவே தீர்வு தொடர்பான பேச்சுக்களில் தனி அலகு கோரிக்கையை முன்வைக்கலாமே தவிர அங்கு கரையோர மாவட்டத்தை பேசவேண்டியதில்லை என்பதைக்கூட அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கின்றது..... -------------------------------------------------------- வடக்கு, கிழக்கு இணைப்பும் கரையோர மாவட்டமும் ! ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது’ என்று சொல்வார்கள். எந்தவொரு விடயத்திலும் பக்குவப்படாத, அதனை விளங்கிக் கொள்ளாத, அதன் தார்ப்பரியத்தை அறிந்திராத சிறிய பிள்ளைகள் அல்லது சிறுபிள்ளைத்தனமானவர்களின் முயற்சிகள் வெற்றிபெறுவது நிச்சயமில்லை என்பதுதான் இதன் உள்ளர்த்தமாகும். முஸ்லிம் அரசியல் பரப்பில் தம்மை பெருந்தலைவர்கள் போல காட்டிக் கொள்கின்ற அரசியல் தலைவர்களும் அவர்கள் விடுகின்ற அறிக்கைகளும் அவ்விடயம் பற்றி ஆழஅகலமாக சிந்திப்போருக்கு சிறுபிள்ளைத்தனமாகவே தெரிகின்றன. இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலும் முஸ்லிம்களின் அபிலாஷைகள் விடயத்திலும் சில அரசியல்வாதிகள் நடந்து கொள்கின்ற முறையை பார்த்தால் அவர்கள் விளக்கமற்ற குழப்பத்திற்கு ஆளாகி இருப்பதும் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அதனால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்த விடயத்திலும் முஸ்லிம்களுக்குரிய பங்கு உறுதிப்படுத்தாமல் விடப்பட்டு விடுமோ என்ற நியாயமான சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, கல்முனை கரையோர மாவட்டம், முஸ்லிம்களுக்கான தனி அலகு பற்றிய எந்த தெளிவான நிலைப்பாடுகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் இல்லை. ஒரு முக்கியமான பரீட்சைக்காக முன்கூட்டியே படிக்காமல் பரீட்சை நிலையத்திற்கு சென்று, அந்த சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகின்ற எதையோ எழுதிவிட்டு வருகின்ற ஒரு மாணவனைப் போல, அந்தந்த சந்தர்ப்பத்தை சமாளிப்பதற்காக எதையாவது உளறி வைக்கின்ற போக்குகளை முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் பரவலாக காணமுடிகின்றது. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. ஒரு குறிப்பிட்ட தலைவரோ அரசியல்வாதியோ பிழை செய்கின்றார் என்றோ மற்றையவர்கள் எல்லோரும் மிகச் சிறப்பாக செயற்படுகின்றார்கள் என்றோ வரையறுக்க முடியாது. எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே விதமான போக்கையே கொண்டுள்ளனர். தமது அரசியல் எதிர்காலத்திற்கு அல்லது தான் சார்ந்திருக்கின்ற பெருந்தேசிய கட்சிக்கு ஏற்றாற்போல அடிக்கடி கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மாற்றிக் கொண்டு போகின்றனர். அதற்காக மக்களை முட்டாளாக்கும் நியாயங்களையும் முன்வைக்கின்றனர். எந்தப் பெரிய பிழையையும் சரியென நிரூபிப்பதற்கான சூட்சுமத்தை அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். தீர்வுக்கான நேரத்தில் இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஏதோ ஒரு அடிப்படையில் முன்வைக்கப்படப் போகின்றது. அரசியலமைப்பை மறுசீரமைப்பதிலும், செயன்முறைகளிலும் சில தாமதங்கள் ஏற்பட்டிருந்தாலும் அரசாங்கம் தீர்வை முன்வைத்தேயாக வேண்டிய ஒரு நிலைக்கு வந்துள்ளமை கண்கூடு. இந்நிலையில், தமிழர் தரப்பு இணைந்த வடகிழக்கில் ஒரு நிரந்தர தீர்வை வேண்டி நிற்கின்றது. இதற்காக வடக்கு, கிழக்கை இணைப்பதற்கான பகீரத பிரயத்தனங்களை கடந்த சில வருடங்களாக தமிழர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள் என்று சொல்லலாம். ஆரம்பத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கை இணைக்கும் சாத்தியம் இருப்பதாக சொல்லப்பட்டது. மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமின் போக்குகளும் அந்த சந்தேகத்தை வலுப்படுத்தியிருந்தன. ஆனால், அதன்பிறகு கிழக்கு மாகாண முஸ்லிம்களிடத்தில் இருந்து இவ் இணைப்பிற்கு எதிராக கடுமையான ஆட்சேப அலைகள் எழுந்தன. இணைப்பைக் கோருவோரும், அதற்கு ஆதரவளிப்போரும் விமர்சிக்கப்பட்டனர். ஆதலால் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல், கிழக்குமாகாண அரசியல்வாதிகளின் ஒப்புதல் இல்லாமல் வேறு யாருடைய சம்மதத்தை பெற்றுக் கொண்டும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியாது என்ற நிதர்சனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது உணர்ந்து கொண்டுள்ளது எனலாம். மறுபுறத்தில், தேசிய அரசியலிலும் இதற்கான நிகழ்வுகள் சற்றுக் குறைவடைந்திருக்கின்றன என்றே தோன்றுகின்றது. எனவே, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் ஒப்புதலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாகவே இப்போது கோரி வருகின்றது. மு.கா. தலைவர் ஊடாகவோ அல்லது வேறு கட்சிசார் அரசியல்வாதிகளின் ஊடாகவோ மக்களின் ஆதரவை முழுமையாக திரட்ட முடியாது என்று நினைத்தோ என்னவோ, தமிழ் அரசியல்வாதிகள் ஊடகங்கள் வாயிலாக முஸ்லிம்களின் நிலைப்பாட்டை கோரி வருவதை அவதானிக்க முடிகின்றது. இது நல்லதொரு சமிக்ஞையும் ஆகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளடங்கலாக அக்கூட்டமைப்பில் உள்ள பலரும் யதார்த்தத்தை புரிந்து கொண்டு முஸ்லிம்களின் வேண்டுதலை எதிர்பார்த்திருக்கின்றனர். அண்மையில் கிழக்கிற்கு வருகைதந்த வடமாகாண முதலமைச்சரும் முஸ்லிம் தரப்பு கோரிக்கை என்ன என்று கேட்டுவிட்டுச் சென்றிருக்கின்றார். வாழாவிருத்தல் ஆனால், இவ்வளவு நடந்த பிறகும் முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இந்த மக்களுக்கு என்ன தேவை என்ற கோரிக்கையை உரிய முறையில் முன்வைக்கவில்லை என்பது மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. உண்மையில் முஸ்லிம்கள் தமக்கு என்ன தேவை என்பதை தமிழ் தரப்பிடம் அன்றி அரசாங்கத்திடமே முன்வைக்க வேண்டும். ஏனெனில் இரண்டு தரப்பிற்கும் தீர்வை வழங்கப் போவது அரசாங்கமே ஆகும். ஆனால், இனப் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்டு, தீர்வுத்திட்டம் ஒன்றை பெறுவதற்காக கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் தரப்புடனும்; முஸ்லிம்கள் பேசி இணக்கம் காண வேண்டும். கடைசியில், தங்களுக்கு என்ன தேவை என்பதை கூட்டாக தீர்மானித்து, அதனை ஒரு ஆவணமாக முறைப்படி அரசிடம் சமர்ப்பிப்பதுடன், அதிலுள்ள விடயங்களை தமிழ் தரப்பிற்கும் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் இதனை எந்த முஸ்லிம் தலைமையும் இதுவரைச் செய்யவில்லை. முஸ்லிம் காங்கிரஸூம் சரி மற்றைய காங்கிரஸ்களும் சரி அரசியல்வாதிகளும் சரி….. ‘எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது’ என்ற மாயையை உருவாக்கிவிட்டு ஒன்றுமே செய்யாமல் வாழாவிருக்கின்றனர். தீர்வுத்திட்டத்தில் என்ன தேவை என்பதை கேட்காமல் இருப்பது ஒருபுறமிருக்க, முஸ்லிம்களுக்கு என்ன தேவை? அதன் உள்ளடக்கம் என்னன?அதன் வடிவம் என்ன என்பது பற்றிய தெளிவும் இல்லாதவர்களாவே முஸ்லிம் அரசியல்வாதிகள் இருப்பதாக தெரிகின்றது. விளக்கமில்லா அறிக்கை வடக்கு, கிழக்கு இணைப்பு, முஸ்லிம் தனிஅலகு அல்லது மாகாணம், கரையோர மாவட்டம் என்ற கருப்பொருட்கள் முக்கியமானவை. ஆயினும், முஸ்லிம்கட்சித் தலைவர்கள் இவை பற்றி எல்லாவற்றையும் நன்றாக விளங்கிக் கொண்டுள்ள போதும் நிலைமைகளை சமாளிப்பதற்காக பாரதூரம் அறியாத கருத்துக்களை வெளியிடுகின்றனர். இதேவேளை கிழக்கில் இருக்கின்ற சில அரசியல்வாதிகளுக்குக் கூட கரையோர மாவட்டத்திற்கும் வடக்கு கிழக்கு இணைப்பிற்கும் தனிஅலகுக்கும் இடையில் இருக்கின்ற வித்தியாசமே தெரியாது. முஸ்லிம் அரசியலில் சிறுபிள்ளைத்தனங்கள் இப்படித்தான் இருக்கின்றன. அண்மையில் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவர் “வடக்கு, கிழக்கு இணைப்பை மு.கா. எதிர்க்கவில்லை என்றும், கரையோர மாவட்டம் அல்லது முஸ்லிம் அலகு என்ற நிபந்தனையுடன் வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து பேசிவருகின்றோம்” என்ற கருத்தை தெரிவித்திருந்தார். தேசிய ஊடகங்களிலும் இது பிரசுரமாகியிருந்தது. முஸ்லிம் அரசியல் அவதானிகள் இக்கருத்தை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றனர். கரையோர மாவட்டம் என்பது என்ன? வடக்கு கிழக்கு இணைப்பு என்பது என்ன? என்ற அடிப்படை விளக்கமில்லாமல் அவர் இருக்கின்றாரா என்ற சந்தேகத்தை இந்த கேள்வி தோற்றுவித்திருக்கின்றது. இது ஒருபுறமிருக்க மு.கா.வுக்குள் பிளவுகள் ஏற்படத் தொடங்கியிருக்கின்ற காகட்டத்தில், கடைசியாக நடைபெற்ற பேராளர் மாநாட்டின் தீர்மானங்களில் கரையோர மாவட்டக் கோரிக்கை உள்ளடங்கி இருக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவரால் முன்வைக்கப்பட்டு வந்த இக் கோரிக்கை கிட்டத்தட்ட எல்லா பேராளர் மாநாட்டின் தீர்மானங்களிலும் உள்வாங்கப்பட்டிருந்தது. செயலாளர் நாயகமாக பதவி வகித்த எம்.ரி.ஹசன்அலி இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இந்நிலையில், தனிவழியில் பயணிக்க ஆரம்பித்திருக்கின்ற எம்.ரி. ஹசன்அலி அணியினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிந்தவூரில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இக் கூட்டத்திற்கு யாரும் எதிர்பாராத அளவுக்கு பெருமளவிலான மக்கள் வந்திருந்தனர். இங்கு உரையாற்றிய ஹசன்அலி, கரையோர மாவட்டம் தொடர்பில் கட்சிக்குள் சிலருக்கு விருப்பம் இருக்கவில்லை என்று கூறிய அவர், இதனைப் பெற்றுக் கொள்வதில் காட்டப்பட்ட அசிரத்தை சம்பந்தமாகவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பசில் ராஜபக் க்ஷவிடம் தான் அழைத்துச் செல்லப்பட்டதையும் கரையோர மாவட்டம் குறித்து அங்கு பேசப்பட்ட விடயங்களையும் கூட அவர் பிரஸ்தாபித்தார். இப்பின்னணியில், மு.கா. தலைவர் உள்ளடங்கலாக சகல முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மக்களும் இதுபற்றி பூரண தெளிவை பெற்றுக் கொள்ள வேண்டும். உரிமைகளை, பங்கை கேட்டுப் பெறுவதற்கு முன்னர் நமக்கு அதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். தெளிவுபெற வேண்டியவை தீர்வுத்திட்டமானது வடக்கு, கிழக்கு இணைந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தமிழ் தரப்பு கருதுகின்றது. எனவே வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தேசிய இனப்பிரச்சினையுடன் தொடர்புபட்டதான விடயமாகும். ஆனால் கரையோர மாவட்டம் என்பதற்கும் இனப்பிரச்சினைக்கும் சம்பந்தமில்லை. அது தற்போதிருக்கின்ற அம்பாறை மாவட்டத்திற்குள் இன்னும் ஒரு மாவட்டத்தை உருவாக்குவது பற்றிய பொதுநிர்வாக செயன்முறையாகும். இதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்கில் உள்ள தமிழர்களுடன் கிழக்கு தமிழர்களும் இணைந்து ஒரு அதிகார மையத்தின்கீழ் வாழ விரும்பினால் அதை கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் கொச்சைப்படுத்த முடியாது. ஆனால், வடக்கு, கிழக்கை இணைத்தால் தனி தமிழ் மாகாணம் ஒன்றும், தனி முஸ்லிம் மாகாணம் ஒன்றும் உருவாக்கப்பட வேண்டுமென முஸ்லிம்கள் கோர முடியும். அல்லது, நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணத்தை கோரலாம். அல்லது, சமஷ்டி முறையை கோர முடியும். அவ்வாறில்லாவிட்டால், தற்போதிருக்கின்ற அடிப்படையிலேயே வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாகவே இருக்க வேண்டுமென கோர முடியும். ஆனால், ஒருபோதும் கிழக்கு முஸ்லிம்கள் தமக்கு இவ்விதமான தீர்வுகள் எதுவும் தராமல் வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். யார் சொன்னாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படின் முஸ்லிம்கள் ஒப்பீட்டளவில் நிறைய இழப்புக்களை சந்திப்பார்கள். அரசியல் அதிகாரம் இழத்தல், நிதி ஒதுக்கீடுகளில் குறைவு, வீதாசாரம் குறைதல் உள்ளடங்கலாக பல பாதிப்புக்கள் ஏற்படலாம். எனவேதான் கிழக்கு மக்கள் அவ்விணைப்பை எதிர்க்கின்றனர். அவ்வாறு இணைப்பதென்றால் தமது பங்கை உறுதிப்படுத்த வேண்டுமென கோருகின்றனர். அப்படிப் பார்த்தால், கரையோர மாவட்டம் என்பது தீர்வுத் திட்டத்தின் கீழான ஒரு சங்கதியும் அல்ல, முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் பங்கும் அல்ல. கரையோர மாவட்டத்தை பெற்றுக் கொண்டு இவ்விணைப்புக்கு இடம்கொடுக்கவும் முடியாது. தீா்வு தொடா்பான பேச்சுக்களில் தனி அலகு கோரிக்கையை முன்வைக்கலாமே தவிர அங்கு கரையோர மாவட்டம் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை. கரையோர மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் பிரிந்த பொழுது ஆயிரத்திற்கும் குறைவான சிங்கள பதிவுசெய்யப்பட்ட வாக்குகளே தற்போதிருக்கின்ற அம்பாறை மாவட்டத்தில் இருந்தன. இருப்பினும் சிங்களப் பிரதேசமான அம்பாறையே மிகத் தந்திரமான முறையில் மாவட்டத்தின் தலைநகராக ஆக்கப்பட்டது. அம்பாறையில் கச்சேரி இருப்பதாலும் பெரும்பான்மை இனத்தவரே அரச அதிபராக கடமை புரிவதாலும் அந்த அகங்காரத்தில் அங்குள்ள சிங்கள அரசியல்வாதிகள் காட்டுகின்ற ஓரவஞ்சனையாலும், அன்றுமுதல் இன்று வரை கரையோரத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் இழந்தது ஏராளம். அன்றாட அரச பணிகள் தொடக்கம், காணிகள் அபகரிக்கப்பட்டது தொட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படாது வரைக்கும் நீண்டுசெல்லும் பல அநியாயமிழைப்புக்களுக்கு அம்பாறையின் அதிகார மையமே காரணம் என்றால் மிகையில்லை. எனவேதான், அம்பாறை மாவட்டத்திற்குள் கல்முனையை தலைநகராகக் கொண்டு கரையோர மாவட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதில் தமிழர் அல்லது முஸ்லிம் அரச அதிபர் பதவிவகிக்க வேண்டுமென்றும் கோரப்பட்டு வருகின்றது. இதனால் இனி இழக்கப் போவதையாவது குறைக்கக் கூடியதாக இருக்கும். கரையோர மாவட்டம் என்பது வெறும் அரசியல் கோஷம் அல்ல. அம்பாறை மாவட்டத்திற்குள் இன்னுமொரு நிர்வாக மாவட்டம் உருவாக வேண்டும் என்று பலமுறை அரசாங்க ஆணைக்குழுக்களே அடையாளம் கண்டுள்ளன. குறிப்பாக 1970களில் மொறகொட ஆணைக்குழு இதனை கல்முனை மாவட்டத்தை சிபாரிசு செய்திருந்தது. அதன்பிறகு அரசாங்கங்களுடன் மு.கா. செய்து கொண்ட ஒப்பந்தங்களிலும் இதற்கு உடன்பாடு காணப்பட்டது. ஆனால், பிற்காலத்தில் மு.கா. முழுமூச்சாக செயற்படாமையாலும், வேறு பல காரணங்களாலும் அக்கனவு நனவாகவில்லை. ஆகவே, கரையோர மாவட்டம் என்பது கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போல ஒரு நிர்வாக மாவட்டமாகும். அது பொதுநிர்வாக அமைச்சின் கீழ் அரசாங்க அதிபரின் அதிகாரத்தின் கீழ் செயற்படும். அது அன்றாட பொதுப் பணிகளை இலகுவாக்குமே தவிர, முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கமாட்டாது. மிகக் குறிப்பாக, தீர்வுத்திட்டத்தின் ஊடாக முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்ற எந்த அபிலாஷையையும் கரையோர மாவட்டம் நிறைவேற்றாது. உண்மையில் கரையோர மாவட்டம், வடக்கு கிழக்கு இணைப்புக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. மு.கா.வுக்கோ ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கோ அரசாங்கத்தின் உதவியும் தைரியமும் அர்ப்பணிப்பும் இருந்தால் ஒரு விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கரையோர மாவட்டத்தை உருவாக்கலாம். இதற்கு யாருடைய சம்மதமும் கட்டாயமில்லை. அரசாங்கம் முடிவெடுத்தால் செய்யலாம். மாகாணங்கள் இணைதல் ஆனால், வடக்கு கிழக்கு என்பது இதிலிருந்து வேறுபட்டது. இது நேரடியாக தீர்வுத்திட்டத்துடன் தொடர்புபடுகின்றது. இதனை இணைப்பது என்றால் முஸ்லிம்கள் சம்மதிக்க வேண்டும். அப்படி சம்மதிக்க வைப்பது என்றால் தனிமுஸ்லிம் மாகாணத்தையோ, சமஷ்டியையோ குறைந்தபட்சம் முஸ்லிம் தனி அலகையோ வழங்க வேண்டும். அதன்படியான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு சம்மதம் தெரிவிக்கலாமே தவிர, கரையோர மாவட்டத்தைப் பெற்றுவிட்டு வடக்கு கிழக்கை இணைத்துக் கொடுக்க முடியாது. இவ்விடயத்தில், பொதுவாக எல்லா முஸ்லிம் தலைவர்களும் இனப்பிரச்சினை தீர்வுத்திட்டம், வடக்கு கிழக்கு இணைப்பு, முஸ்லிம் மாகாணம், முஸ்லிம் அலகு, கரையோர மாவட்டம் என்பவை தொடர்பில் இவ்வாறான குழப்பகரமான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். அவ்வாறானவர்கள் இவற்றின் உண்மையான அர்த்தங்களை கற்றுக் கொள்வதன் மூலம் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்த வேண்டும். முஸ்லிம்களின் அபிலாஷைக்கான அரசியல் நகர்வு என்பது சிறுபிள்ளை வேளாண்மை போல் ஆகிவிடக் கூடாது. - ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 12.03.2017)

https://onlineakkaraipattu.wordpress.com/2017/03/14/%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95

பல முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் தெளிவான நிலை இல்லை. கரையோர மாவட்டம் என்பதற்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கும் சம்பந்தமில்லை. எனவே தீர்வு தொடர்பான பேச்சுக்களில் தனி அலகு கோரிக்கையை முன்வைக்கலாமே தவிர அங்கு கரையோர மாவட்டத்தை பேசவேண்டியதில்லை என்பதைக்கூட …

நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 10) 14/03/2017

சமூகத்தின் பிடிசாபம் ******************************** (ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது "இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது அவர் ஒரு பாவி என்ற காரணங்களுக்காக தனது கடமையை நிறைவேற்றவில்லை எனும் சந்தர்ப்பங்களில் ஒருவர் அவரின் குறைகளை அவரின் மீது அதிகாரம் கொண்டவர்களிடம் குறிப்பிட்டு அவரை நீக்கவோ அல்லது அவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்கவோ முயல வேண்டும்.அல்லது அவருக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் அவரின் குறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் அவரோடு நடந்து கொள்ள வேண்டிய முறையை தெரிந்து கொள்வதோடு அவரால் ஏமாற்றப் படாமல் தவிர்ந்து கொள்ளலாம். [ 47 more words ]

https://onlineakkaraipattu.wordpress.com/2017/03/14/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-6

நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 10) சமூகத்தின் பிடிசாபம் ******************************** (ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது “இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒரு…

போதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை 11/03/2017

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு நமது சமூகம் வழங்கிய வாக்கின் பலத்தினை வைத்துக் கொண்டு, அந்தக் கட்சியானது நமது இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கட்சியிலுள்ள சிலர் நமது பெண்களை படுக்கைக்கு அழைக்கின்றனர்” என்று, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் கவலை தெரிவித்தார். “மு.காங்கிரசின் முக்கியஸ்தர் ஒருவரினால் பாலியல் உறவுக்காக அழைக்கப்பட்ட சகோதரியொருவர், என்னிடம் கண்ணீர் விட்டழுது அந்த விடயத்தைக் கூறினார். அதனை கட்சித் தலைவரிடம் சென்று நான் முறையிட்டேன். ஆனால், அது குறித்து தலைவர் விசாரிக்கவில்லை. விசாரிக்கும் நிலையில் தலைவரும் இல்லை” என்றும் அவர் கூறினார். மரத்தின் வேர்களுக்கு விளம்பல் எனும் தலைப்பில், மு.காங்கிரசின் தலைவரினால் சமூகத்துக்கும், கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலிக்கும் இழைக்கப்பட்ட அநியாயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும், இரண்டாவது பொதுக்கூட்டம், நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொத்துவிலில் இடம்பெற்றது. மு.கா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட, இக்கூட்டத்துக்கு பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் எம்.ஏ. தாஜுதீன் தலைமை தாங்கினார். மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, உயர்பீட உறுப்பினர் அன்சில் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; “நாங்கள் வழங்கிய வாக்கினூடாக மு.காங்கிரசுக்குள் அதிகாரத்துக்கு வந்தவர்கள், பஞ்சமா பாதகங்கள் அனைத்தினையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் நிறுத்தி விட்டு, அவர்களை கறைபடியாத கரங்களையுடையவர்கள் என்றும், தானைத் தளபதிகள் என்றும், எம்மால் இனி ஒருபோதும் புகழ்பாட முடியாது. தானைத் தலைவர் என்று, எங்கள் கட்சியின் தலைவரைப் பார்த்து இனிமேல் என்னால் கூற முடியாது. ஏராளமான பஞ்சமா பாதகங்கள் இந்தக் கட்சிக்குள் நடக்கின்றன. அவ்வாறு பாதகச் செயல்களைப் புரிகின்றவர்களை விசாரியுங்கள் என்று தலைவரிடம் கூறினால், எங்களைக் கேள்வி கேட்பதற்கு, தலைவர் என்ன சுத்தமானவரா என்று, சம்பந்தப்பட்டவர்கள் எங்களிடம் கேட்கின்றார்கள். நமது கட்சிக்குள் நடந்துள்ள அசிங்கங்கள் பற்றி மேலோட்டமாகவே நான் கூறுகின்றேன். அவை குறித்து ஆழமாகப் பேசுவதற்கு கூச்சமாகவுள்ளது. ஆனாலும், அவை குறித்து பேசி வேண்டியேற்பட்டால், பேசுவோம். விடமாட்டோம். அஷ்ரப்பின் கொள்கைகள் இந்தக் கட்சிக்குள் மீளவும் கொண்டு வரப்பட வேண்டும். நாங்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு விட்டதாக சிலர் கூறிக் கொள்கின்றனர். அதனால்தான், இவ்வாறான மேடைகளில் நாங்கள் ஏறுவதாகவும் பேசிக் கொள்கின்றனர். இதுவெல்லாம் தேவையற்ற கதைகளாகும். எங்களை வேறெருவர் மூளைச் சலவை செய்யுமளவுக்கு, நாங்கள் மந்த புத்தியுடையவர்களல்லர். எமது கட்சிக் கீதத்துக்கு எழுந்து நின்று நாங்கள் மரியாதை செய்கின்றோம். அந்தக் கீதத்திலுள்ள கருத்துக்களுக்காவே நாம் அவ்வாறு மரியாதை செய்கின்றோம். அசத்தியம் ஒழிக, சூது ஒழிக என்று நமது கட்சிக் கீதத்தில் கூறப்படுகிறது. ஆனால், அந்த அசத்தியமும், சூதும் நமது கட்சிக்குள் மலிந்து கிடக்கும் போது, நாம் எவ்வாறு நமது கட்சிக் கீதத்துக்கு மரியாதை செய்வது. மு.காங்கிரசின் உயர்பீடத்தில் நேர்மையாகப் பேசி, எதையும் சாதிக்கக்கூடிய நிலைமை இல்லை. அப்படி யாராவது பேசி விட்டால் தலைவர் அதை சாணக்கியமாக கையாண்டு, தட்டிக்கழித்து விடுவார். தலைவர் விரும்பாத ஒரு விடயத்தை உயர்பீடத்தில் ஒருவர் பேசினால், அதற்கு மாற்றுக் கருத்துடையவர்களை பேச வைத்து, சம்பந்தப்பட்டவரை தலைவர் மட்டம் தட்டி விடுவார். மு.காங்கிரசின் உயர்பீடத்தில் கேள்விகளுக்கு இடமில்லை. அங்கு கேள்விகள் கேட்க முடியாது. நீண்ட காலமாக, அங்கு நாங்கள் போராடியிருக்கின்றோம். நாம் பேசிய எந்த விடயங்களும் தீர்மானமாக வருவதில்லை. அதனால்தான், வாக்களிக்கும் மக்களளிடம் இவற்றையெல்லாம் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு வந்தோம். இந்தக் கட்சி, அஷ்ரப்புடைய கட்சியாக மாறவேண்டும். எந்தக் கொள்கைகளுடன் அஷ்ரப் இந்தக் கட்சியினைக் கொண்டு வந்தாரோ, அந்தக் கொள்கைகள் இந்தக் கட்சிக்குள் வரவேண்டும். அதனை செயற்படுத்துவதற்காகத்தான் மக்களிடம் இவ்வாறு நாங்கள் வந்துள்ளோம்

https://onlineakkaraipattu.wordpress.com/2017/03/11/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be

போதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு நமது சமூகம் வழங்கிய வாக்கின் பலத்தினை வைத்துக் கொண்டு, அந்தக் கட்சியானது நமது இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கட்சியிலுள்ள சிலர் நமது பெ…

“பிரம்பு” 11/03/2017

முகம்மது தம்பி மரைக்கார் – ஏட்டிக்குப் போட்டியாக மு.காங்கிரசின் இரண்டு கூட்டங்கள் கடந்த வாரம் நிந்தவூரில் நடைபெற்றன. முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி கலந்து கொண்ட கூட்டம், அவரின் சொந்த ஊரான நிந்தவூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனக்கும், சமூகத்துக்கும் ஏகப்பட்ட அநியாயங்களைச் செய்ததாக, அந்தக் கூட்டத்தில் கூறிய ஹசனலிளூ அவற்றினை பட்டியலிட்டுப் பேசினார். மறுநாள் சனிக்கிழமை, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நிந்தவூருக்கு வந்து, கூட்டமொன்றில் கலந்து கொண்டார். ஹசனலியின் கூட்டத்துக்கு பதிலடியாக அந்தக் கூட்டம் அமைந்தது. ஹசனலியின் கூட்டம் திறந்த வெளியிலும், ஹக்கீமுடைய கூட்டம் பிரதேச சபை மண்டபத்திலும் நடைபெற்றன. ஹசனலியின் கூட்டத்தை, நிர்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான எம்.ஏ.எம். தாஹிர் தலைமையேற்று நடத்தினார். அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் முன்னின்று செயற்பட்டார். ஹசனலியின் கூட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர், அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் காண்பதற்கு வந்திருந்தனர். ஹசனலியின் கூட்டத்தை நடத்துவதற்கு சம்மாந்துறை பொலிஸாரிடம் கூட்ட ஏற்பாட்டாளர்கள் எழுத்து மூலம் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், அனுமதி வழங்க முடியாது என்று, கூட்டம் நடைபெறவிருந்த தினம் சம்மாந்துறை பொலிஸார் கூறிவிட்டனர். இதனையடுத்து, கூட்ட ஏற்பாட்டாளர்கள், விடயத்தை நீதிமன்றம் கொண்டு சென்றார்கள். கூட்டத்தை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஹசனலி தரப்பினருக்கு இது உற்சாகம் தரும் வெற்றியாக அமைந்தது. மு.காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளரும், சுகாதார பிரதியமைச்சருமான பைசால் காசிமும் நிந்தவூரை சொந்த இடமாகக் கொண்டவராவார். இவர் ஹக்கீம் தரப்பைச் சேர்ந்தவர். ஹசனலியின் கூட்டத்துக்கு பைசால் காசிம் தரப்பினர் – களத்தில் நின்று நேரடி எதிர்ப்பினை வெளியிடுவார்களென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியெதுவும் நடக்கவில்லை. ஹசனலியின் கூட்டத்துக்கு பதிலடியாக நிந்தவூரில் நடைபெற்ற மு.கா. தலைவரின் கூட்டத்தை, ஹசனலியின் இளைய சகோதரரான ஜப்பார் அலி என்பவர் தலைமையேற்று நடத்தினார். குறித்த கூட்டத்துக்கு ஹக்கீம் வருகை தருவதற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில், வீதியில் டயர்கள் எரிக்கப்பட்டன. ஹக்கீம் வருவதற்கு முன்பாக, எரிந்து கொண்டிருந்த டயர்களை கூட்ட ஏற்பாட்டாளர்கள் அணைத்து விட்டனர். அந்தக் கூட்டத்தில் மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களில் கணிசமானோர் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றியவர்கள் அனைவரும் ஹசனலியின் கூட்டம் தொடர்பாகவே பேசினார்கள். மு.கா. தலைவர் ஹக்கீமும், ஹசனலியின் கூட்டம் பற்றியும், அதனை முன்னின்று நடத்தியவர்கள் குறித்தும்தான் அதிகம் பேசினார். ஹசனலியின் கூட்டம் மு.கா. தலைவரை வெகுவாகப் பாதித்திருந்ததை அவரின் உரை வெளிப்படுத்தியது. ‘ஹசனலி வேதனையுடன் இருக்கின்றார். அவர் கூட்டம் நடத்துவதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், ஹசனலியை பகடையாக வைத்து, சிலர் சித்து விளையாட்டுக் காட்டுகின்றார்கள்’ என்று, மு.கா. தலைவர் ஹக்கீம், நிந்தவூர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது கூறினார். ஆனாலும், ஹசனலியை பகடையாக வைத்து, சித்து விளையாட்டுக் காட்டுபவர்கள் யார் என, மு.கா. தலைவர் இதன்போது பெயர் குறிப்பிடவில்லை. இருந்தாலும், நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் தாஹிர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில் ஆகியோரைத்தான் ஹக்கீம் அவ்வாறு குறிப்பிட்டார் என்பதை, அவரின் முழு உரையினையும் செவிமடுத்தவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. ‘கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் தொடர்பில் என்னிடம் அவர்கள் முறையிட்டனர். நஸீர் தொடர்பில் நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் கூறினார்கள். நான் பிரம்பெடுக்கத் தொடங்கினால், கட்சியில் ஒருவரும் எஞ்ச மாட்டார்கள். ஆனால், இப்போது எனக்கே பிரம்பெடுத்துள்ளார்கள்’ என்றும் மு.கா. தலைவர் ஹக்கீம் தனது உரையில் குறிப்பிட்டார். மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கூறிய மேற்படி விடயமானது மிகவும் கவனத்துக்குரியதாகும். கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக, தான் தண்டனை வழங்கத் தொடங்கினால், அனைவரும் சிக்கிக் கொள்வார்கள் என்பதைத்தான், பிரம்புக் கதையின் மூலமாக அவர் குறிப்பிட்டார். அதாவது, கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் தண்டிக்கப்படக் கூடிய வகையிலான குற்றங்களைப் புரிந்துள்ளனர் என்பதைத்தான் ஹக்கீம் அப்படிக் கூறினார். மேலும், கட்சியின் முக்கியஸ்தர்கள் செய்த குற்றங்கள் குறித்து தான், அறிந்து வைத்திருப்பதையும், இதனூடாக ஹக்கீம் வெளிப்படுத்தியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. ‘பிரம்பெடுத்தல்’ என்பதற்கு இந்த இடத்தில் ‘தண்டித்தல்’ என்று அர்த்தமாகும். இது இவ்வாறிருக்க, அம்பாறை மாவட்டத்திலுள்ள 17 முஸ்லிம் ஊர்களிலும், நிந்தவூரில் நடத்தியது போன்று, கூட்டங்களை தாம் நடத்தவுள்ளதாக, ஹசனலி தரப்பு அறிவித்துள்ளது. இந்த நிலையில், ‘முடிந்தால் அவ்வாறான கூட்டங்களை நடத்திக் காட்டட்டும்’ என்று, மு.கா. தலைவர் ஹக்கீம் நிந்தவூரில் வைத்து சவால் விடுத்திருக்கின்றார். இது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்துவற்கான உரிமைகளுக்குச் சவால்விடுப்பதை, ஜனநாயக விரும்பிகள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஹசனலியின் நிந்தவூர் கூட்டத்தில் மு.காங்கிரசின் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. மு.காங்கிரசின் கட்சிக் கீதம் ஒலிக்க விடப்பட்டது. கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் மற்றும் கட்சியின் மரச்சின்னம் ஆகிவற்றினை உள்ளடக்கிய பதாகை மேடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்து. அங்கு உரையாற்றிய சட்டத்தரணி அன்சில்; ‘மு.காங்கிரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே, இந்தக் கூட்டத்தை நாங்கள் நடத்துகின்றோம்’ என்று கூறினார். கட்சியின் கொள்கைகளுக்கு முரணகச் செயற்படும் தலைமையின் தவறுகளை அம்பலப்படுத்துவதுதான் தமது நோக்கம் என்றும், தாம் உண்மையின் பக்கம் நிற்பதாகவும் ஹசனலியின் கூட்டத்தில் பேசியோர் தெரிவித்தனர். மேலும், ‘தனிப்பட்ட நலன்கள் குறித்து யோசிப்பவர்களாக நாங்கள் இருந்தால், ஹக்கீமை சார்ந்திருப்பதுதான் எமக்கு லாபமாகும். ஆனால், நாங்கள் உண்மையின் பக்கம் இருக்க விரும்புகிறோம். மு.கா. தலைவர் தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை, கண்களால் கண்டதன் பின்னர்தான், இவ்வாறானதொரு நிலைப்பாட்டினை நாங்கள் எடுத்தோம்’ என்று, ஹசனலியின் மேடையில் உரையாற்றிய அன்சில் மேலும் கூறினார். இருந்தபோதும், தாங்கள் கண்ணால் கண்ட அந்த ஆதாரங்கள் எவை என்று அன்சில் குறிப்பிடவில்லை. அந்தக் கூட்டத்தில் ஹசனலி இறுதியாக உரையாற்றினார். அவரின் உரை உணர்வுபூர்மாக அமைந்தது. ‘என்னிடமிருந்த செயலாளர் பதவியைப் பறித்தெடுத்து விட்டு, அழுகையுடன் என்னை வெளியேற்றினார்கள்’ என்று ஹசனலி கூறியபோது, கூட்டம் உணர்ச்சிவசப்பட்டது. ‘மு.கா. தலைவருக்கு எதிராக இந்தக் கூட்டத்தை நாங்கள் நடத்தவில்லை, அவரைத் திருத்துவதற்காகவே, இந்த முயற்சியை எடுத்துள்ளோம். மு.கா.வுக்கு ஹக்கீம்தான் தலைவர்’ என்று ஹசனலி தனது உரையைத் தொடர்ந்தபோது, கூட்டத்தைக் காண வந்தோர் ஆக்ரோசமாகச் சத்தமிட்டார்கள். ‘ஹக்கீமின் தலைமை எமக்குத் தேவையில்லை’ என்று, அவர்கள் கோசமிட்டார்கள். அவர்களை அடக்கி விட்டு, ஹசனலியின் உரையைத் தொடரச் செய்வதற்கு, ஏற்பாட்டாளர்கள் பெரும் சிரமப்பட்டனர். ஹசனலி தரப்பினருக்கு நிந்தவூர் கூட்டம் பெரு வெற்றியாக அமைந்தது. ஆனாலும், இவ்வாறான கூட்டங்களை நடத்துவதனூடாக, மு.காங்கிரசுக்குள் அந்தக் கட்சியின் தலைவர் ஹக்கீமுக்குள்ள ஆதரவினை அத்தனை இலகுவாக உடைத்தெறிந்து விட முடியாது என்கிற உண்மையினையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதனை ஹசனலி தரப்பினரும் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். மு.காங்கிரசின் யாப்புத் திருத்தங்களினூடாக, கட்சிக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பு ஹக்கீமுக்கு மிகவும் சாதகமானதாகும். அதாவது, மு.காங்கிரசின் தலைவர் உள்ளிட்ட நிருவாகப் பதவிகளுக்கு நபர்களைத் தெரிவு செய்யும் அதிகாரம், அந்தக் கட்சியின் உயர்பீடத்துக்கு உள்ளது. மு.கா.வின் உயர்பீடத்தில் 90 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 56 பேரை மு.கா. தலைவர்தான் தனது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தெரிவு செய்வார். இவ்வாறான உயர்பீடமானது மு.கா. தலைவருக்கு விசுவாசமாகவே இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே, இப்போதைக்கு, உயர்பீடத்தினூடாக மு.கா.தலைமைப் பதவியிலிருந்து ரஊப் ஹக்கீமை அகற்றுவதென்பது அத்தனை இலகுவான காரியமல்ல. எனவேதான், மக்களை விழிப்புணர்வூட்டுவதனூடாக, எதிர்வரும் தேர்தல்களில் ஹக்கீம் தரப்பினரை தோற்கடித்து, அதனூடாக மு.கா.வின் தலைமைப் பதவியிலிருந்து ஹக்கீமை அகற்ற முடியும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில்தான், ஹசனலி தரப்பினர் பொதுக் கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளனர். தமது இந்த நடவடிக்கைக்கு ‘உண்மையைத் தேடும் பயணம்’ என்று, ஹசனலி தரப்பினர் பெயர் வைத்துள்ளனர். ஹசனலியின் மேற்படி கூட்டத்தில் மு.கா.வின் இடைநிறுத்தப்பட்டுள்ள தவிசாளர் பசீர் சேகுதாவூத்தை பார்வையாளர்கள் பெரிதும் எதிர்பார்;த்தனர். ஆனால், பசீர் கலந்து கொள்ளவில்லை. மு.காங்கிரசின் ஆதரவாளர்களான இளைஞர்களைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடும் நடவடிக்கையொன்றினை ஏற்கனவே, பசீர் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், மு.காங்கிரஸ் அல்லாத அரசியல் பிரமுகர்களை, தமது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில்லை என்று ஹசனலி மற்றும் பசீர் தரப்பு தற்போதைக்குத் தீர்மானித்துள்ளனர் என அறிய முடிகிறது. மு.காங்கிரசுக்கு எதிரானவர்களை ஹசனலி மற்றும் பசீர் தரப்பினர் தமது மேடைகளிலோ பிரசார நடவடிக்கைகளிலோ ஈடுபடுத்துவார்களாயின், அவர்களை ஹக்கீம் தரப்பு மிக இலகுவாக மலினப்படுத்தி விடக்கூடிய சந்தர்ப்பமுள்ளது. ‘ஹசனலியும், பசீரும் எதிராளிகளின் கூட்டாளிகள்’என்று, ஹக்கீம் தரப்பு செய்துவரும் பிரசாரத்தை, அது – உண்மைப்படுத்திவிடும். எனவே, மு.கா.வின் அரசியல் எதிராளிகளை தமது மேடைகளில் ஏற்றுவதில்லை என்று ஹசனலி மற்றும் பசீர் தரப்பினர் எடுத்திருக்கும் முடிவு சாதுரியமானதாகும். இதேவேளை, மு.காங்கிரசுக்குள் தமக்குப் பதவிகளையும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் பெற்றுக் கொள்வதற்காகவே, ஹசனலியும் பசீரும் இவ்வாறு ஹக்கீம் எதிர்ப்பு நடவடிக்கையில் குதித்திருப்பதாக விமர்சனமொன்று இருப்பதையும் மறைத்து விட முடியாது. ஆனாலும், பிரதிநிதித்துவ அரசியலில் இனி ஈடுபடப் போவதில்லை என்று பசீர் சேகுதாவூத் ஏற்கனவே அறிவித்து விட்டமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது. அதாவது, உள்ளுராட்சி மன்றம் தொடங்கி நாடாளுமன்றம் வரையிலான உறுப்பினர் பதவிகளை இனி வகிக்கப் போவதில்லை என்று, பசீர் கூறிவிட்டார். இந்த நிலையில், மு.கா.வின் செயலாளர் பதவியோ, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியோ தனக்கு வழங்கப்பட்டாலும், அதனை – இனிமேல் தான் ஏற்கப்போவதில்லை என்று, நிந்தவூர் கூட்டத்தில் வைத்து ஹசனலி பகிரங்கமாகத் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ஹக்கீமுக்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் எதிர்ப்புணர்வுகள் தோன்றியுள்ள நிலையில், ஹசனலி மற்றும் பசீர் ஆகியோர் எடுத்துள்ள அவதாரங்கள் நிலைமையினை இன்னும் பாரதூரமாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘நகத்தால் கிழிப்பதற்கு, தட்டுக்குத்தியும் ஆப்பும் எதற்கு’ என்று கிராமப்புறத்தில் ஒரு சொற்றொடர் உள்ளது. எளிமையாக முடிக்கும் ஒரு விடயத்தை பெரிதாக்கி கூடவே பிரச்சினையாக்குவதைக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு அந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படும். ஹசனலி மற்றும் பசீர் விவகாரங்களைக் கையாள்வதற்கு, மு.கா. தலைவர் ‘தட்டுக்குத்தி மற்றும் ஆப்பு’ ஆகியவற்றினைத் தெரிவு செய்து விட்டார் என்கிற பேச்சுக்கள், கட்சியின் முக்கியஸ்தர்களிடம் பரவலாகவே உள்ளன. இந்த நிலையில், ஹனசலி தரப்பினர் தனக்கு எதிராக பிரம்பினைத் தூக்கியுள்ளதாக மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்திருப்பதும் இங்கு கவனத்துக்குரியது. அரசியல்வாதிகளின் பிரம்புகளை விடவும், மக்களின் பிரம்புகள் ஆபத்தானவையாகும். தேர்தல்களில் தோற்றுப்போன மந்திரிமார்கள் அதற்கு மிகச் சிறந்த சாட்சிகளாவர். நன்றி தமிழ் மிரர் (07 மார்ச் 2017)

https://onlineakkaraipattu.wordpress.com/2017/03/11/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81

“பிரம்பு” முகம்மது தம்பி மரைக்கார் – ஏட்டிக்குப் போட்டியாக மு.காங்கிரசின் இரண்டு கூட்டங்கள் கடந்த வாரம் நிந்தவூரில் நடைபெற்றன. முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி கலந்து கொண்ட கூட்டம்…

Want your business to be the top-listed Government Service in Akkaraipattu?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Main Street
Akkaraipattu