Tamil Arasu Saanakkiyan

Tamil Arasu Saanakkiyan

Share

Nothing is impossible.

17/01/2026

வட்டக்கச்சி விவசாய அரச பண்ணையில் 415 ஏக்கர் நிலப்பரப்பு இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது

வெள்ளாங்குளத்தில் 500 ஏக்கர் விவசாய பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது

தேராவிலில் 1,200 ஏக்கர் விவசாய பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது

முட்கொம்பனில் 100 ஏக்கர் தென்னம் தோட்டம் இராணுவம் வசம் இருக்கிறது

முழங்காவிலில் 1,800 ஏக்கர் மரமுந்திரிகை தோட்டத்தில் பெரும்பகுதி இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது

சாந்தபுரத்தில் 680 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது

ஜெயபுரத்தில் 120 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது

மலையாளபுரத்தில் 798 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது (ஏக்கர் அளவை தனிப்பட உறுதிப்படுத்த முடியவில்லை)

தேறாங்கண்டல் பல நூறு ஏக்கர் விவசாய பண்ணையும் இன்னமும் இராணுவம் ஆக்கிரமித்து இருக்கின்றது

இது போதாதென்று யாழ்ப்பாணத்தில் 2,500 ஏக்கருக்கு மேற்பட்ட வளமான விவசாய நிலமும் இராணுவம் வசம் இருக்கின்றது

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாய பண்ணைகளை விருத்தி செய்தால் வடக்கு மகாணமே இலங்கை தீவின் விவசாய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திற்கு கணிசமாக பங்களிக்க முடியும்

குறிப்பாக இந்த பண்ணைகளில் சேமிப்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வடிகால் வெள்ளத்தடுப்பு அணைகளை மேம்படுத்தி உற்பத்தித்திறன் மேம்பாடு, பௌதிக வள மேம்பாடு, நிலத்தடி நீர் முகாமைத்துவம்,போன்ற மாற்றங்களை செய்து விவசாய சமூகத்தை வலுவடைய செய்ய முடியும்

உள்ளூர் விதை உற்பத்தி , சேவைகால பயிற்சிகள் , விவசாய தொழில்நுட்ப விரிவாக்கம் போன்ற பல்வேறு விடயஙக்ளுக்கு மேற்படி பண்ணைகளை பயன்படுத்த முடியும்

அதே போன்று சரியான உள்ளூடுகள் , இயற்கை உரம் போன்ற அடிப்படை விடயங்களை விவசாயிகளுக்கு உரிய நேரங்களில் இந்த பண்ணைகளை மக்கள் மயப்படுத்துவதன் ஊடக பெற்று கொடுக்க முடியும்

மறுபுறம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன.

அதேபோல் மன்னாரில் 140,000 கால்நடைகள், வவுனியாவில் 130,000 கால்நடைகள் உள்ளன.

இவ்வாறு தேசிய பால் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய வன்னி பெருநிலப்பரப்பில் உள்ள 370,000 கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை இராணுவம், வன வள திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட ஒற்றையாட்சி கட்டமைப்புகள் ஆக்கிரமித்து இருக்கின்றன

அதாவது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வடக்கின் விவசாய மற்றும் விலங்கு வேளாண்மை சார்ந்த பொருளாதாரத்தை இன்னமும் முழுமையாக முடக்கி வைத்திருக்கின்றார்கள்

இவ்வாறு முடக்கப்பட்டு இருக்கும் விவசாய பொருளாதாரத்திற்கு குறைந்த பட்ச தீர்வை பெற்று கொடுக்க இனவாத ஜேவிபி ஆட்சியாளர்கள் தயாரில்லை

ஆனால் இந்த அட்டூழியங்களை மறைத்து விட்டு அரச பொது நிதியில் அனுரா குமார திசாநாயக்க எனும் பொய்யர் யாழ்ப்பாணத்தில் தை பொங்கல் கொண்டாடி கதை சொல்லுகின்றார்

தங்களின் அதிகாரத்தை தமிழர்கள் ஏற்று கொண்டு விட்டார்கள் என நடிக்கின்றார் .

யாழ்ப்பாண வீதியில் நடந்து ஏமாற்றுகின்றார்

இதை தான் மஹிந்த ராஜபக்சே அவர்களும் செய்தார் .

யாழ்ப்பாண கடற்கரைகளில் நடந்து படம் போட்டார் .

இப்போது அவரின் இனவாத வாரிசு அனுரா குமார திசாநாயக்க என்கின்ற பொய்யரும் செய்கின்றார்

Same Script

20/11/2025
15/08/2025
Photos from Shritharan Sivagnanam's post 03/06/2025
20/05/2025

பதில் தலைவர் சொல்லியிருக்கிறார். மக்கள் கருத்தும் ஆதரவாளர்கள் கருத்தும் இதே நிலைப்பாடா?

19/05/2025

19/05/2025

2029 இலும் சஜித்திற்கே வாக்களிப்போம்

19/05/2025

உலகமெல்லாம் பிச்சையொடுத்து கடன் கட்டவே வழி இல்லாமல் இருக்கும் நமக்கு IMF தந்த காசில் இந்த பகடும், வெட்டிச்செலவும் தேவையா குமாரு.

தேவையென்றா சொந்தமா உழைச்சு கொண்டாடிக்கோங்க ...

Want your business to be the top-listed Government Service in Amparai?

Click here to claim your Sponsored Listing.

Tamilwin AMPARAI AVENGERS

Official Page of AMPARAI AVENGERS Football Team

Full Sponsored by TAMILWIN

Location

Category

Address


430 Beach Road, Sainthamarthu, Kalmunai
Amparai
32000