வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் உலமா கட்சி நிதிகளை சேகரித்து வருகிறது.
இந்நிதிகள் எமது உலமாக்கள் மூலம் சரியாக விநியோகிக்கப்படும்.
உங்களின் நிதியுதவிகளை பின் வரும் வங்கி இலக்கத்துக்கு அனுப்பி விட்டு அதன் ரசீதை வட்சப் பண்ணவும்.
AC no. 103753596664
sampath bank,
Saving Account
maradana
a.m. Mubarak
Sri Lanka Ulama Party
we welcome all Sri Lankan
முஸ்லிம்களின் புனித குர்ஆன் மொழி பெயர்ப்பை சுங்கத்திணைக்களத்திலிருந்து விடுவிக்காமைக்கான காரணம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் குர்ஆனின் சில வசனங்களே என்ற கருத்து உண்மையாயின் ஈஸ்தர் தாக்குதலின் பின்னால் பிள்ளையானும் கோட்டாபயவும் இல்லை என அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா என இலங்கை உலமா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே ஈஸ்தர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசாரணைகள் மூலம் தெரியவருவதாக அண்மையில் ஜனாதிபதி அனுர குமார பகிரங்கமாக கூறியிருந்தார். அப்படியாயின் ஈஸ்டர் தாக்குதலுக்கு குர்ஆனோ அதன் மொழி பெயர்ப்போ காரணம் அல்ல என்பது கௌரவ ஜனாதிபதியின் கூற்றிலிருந்து தெளிவாகிறது.
அப்படியிருந்தும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்ட மறு ஆய்வு கமிட்டி குர்ஆனின் தமிழ் தர்ஜமாவில் சில வசனங்களுக்கு குறிப்புக்கள் இடப்படாமல் அவற்றை வெளியிட முடியாது என பரிந்துரைத்துள்ளதன் மூலம் இந்த கமிட்டி பிள்ளையானையும் கோட்டாபயவையும் காப்பாற்ற துணை போயுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு குர்ஆன் மொழி பெயர்ப்பு காரணமாயின் பிள்ளையானோ வேறு அரசியல்வாதிகளோ காரணம் இல்லை என்பது உறுதியாகிறது.
அப்படியில்லை என்றால் குர்ஆனுக்கும் தீவிரவாதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகிறது. அவ்வாறாயின் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பில் சில விளக்க குறியீடு வேண்டும் என பரிந்துரை கமிட்டி சொல்லியிருப்பது வடி கட்டிய முட்டாள்தனமாகும்.
மேற்படி பரிந்துரை குழு உருவாக்கப்பட்டது கடந்த கால அரசாங்கத்தினால் என்பதால் அவர்கள் ஈஸ்டர் தாக்குதலுக்கான பிரதான அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே குர்ஆன் தர்ஜமாவில் பழி போட்டு அதை சுங்கத்திலிருந்து வெளியிடாமல் தடுத்திருக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.
ஆகவே, மேற்படி பரிந்துரை குழுவின் கூற்று சரியா அல்லது பிள்ளையான் போன்றவர்கள் காரண என்பது சரியா என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும்.
அரசியல்வாதிகள் காரணம் என்றால் ஈஸ்டர் விடயத்தை திசை திருப்பி குர்ஆனில் பழி போட்டு அந்த அரசியல்வாதிகளை காப்பாற்ற மேற்படி பரிந்துரை குழுவினர் முயற்சி செய்தனரா என்பதை அறிய மேற்படி பரிந்துரை குழுவினர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என இலங்கை உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
வள்ளுவர் நபியாக இருக்க முடியாது என பீஜே சொல்கிறார். இதற்கு ஆதாரமாக வள்ளுவரின் சில கருத்துக்கள் பிழை என்கிறார்.
வள்ளுவர் நபியாக இருக்க முடியாது என ஒரேயடியாக கூற முடியாது.
வள்ளுவரின் ஆரம்ப வரிகளே அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு என்பது
பிஸ்மில்லா, அல்ஹம்துலில்லாஹ் என்ற சொல் அர்த்தமே.
அவர் கூறும் கருத்துக்களில் 90 வீதம் இஸ்லாமிய கருத்துக்களாகும்.
ஒரு சிலவை இஸ்லாத்துக்கு முரண்பட்டதாகும். நபியவர்கள் கூறியதாக சில பொய்யான ஹதீத்கள் சரியான ஹதீதுகள் போன்று புகுத்தப்பட்டது போன்று வள்ளுவரின் கருத்தாக புகுத்தப்பட்டிருக்கலாம்.
ஆகவே வள்ளுவர் நபி என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும் நபியாக இருக்க முடியாது எனவும் கூற முடியாது.
முபாறக் முப்தி
உலமா கட்சி
பன்றி இறைச்சிக்கடையில் ஆட்டிறைச்சி.
வங்கி முறை ஹராம் என கூறிய உலமா சபை இஸ்லாமிய வங்கி ஹலால் என அறிவித்தது.
இதனால் கதிகலங்கிப்போன முஸ்லிம் அல்லாதோரின் வங்கிகள் உடனே முக்கியமானவர்களை தொடர்பு கொண்டு தமக்கும் வசதி செய்து தரும்படி முறையிட்டனர்.
இதனை பயன் படுத்தி நாட்டின் முஸ்லிம் அல்லாத வங்கிகளில் "இஸ்லாமிய பிரிவு" என்ற ஒன்றை ஆரம்பித்து அதற்கு சில உலமாக்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்பட்டது. அந்த பிரிவுக்கு அரபு பெயர்களை வைத்து முஸ்லிம் சமூகம் ஏமாற்றப்பட்டது.
சமூகத்தை யார் ஏமாற்ற முயன்றாலும் அனுமதிக்க முடியாது.
இது பன்றி இறைச்சிக்கடையில் ஆட்டிறைச்சியை விற்பதாகும்.
பல வேளைகளில் ஆட்டிறைச்சி எது பன்றி இறைச்சி எது என்று பிரிக்க முடியாமல் ஏமாறுவோர் அதிகம்.
ஆட்டிறைச்சி ஆயினும் அதில் நிச்சயம் பன்றி ரத்தம் இருக்கத்தான் செய்யும்.
முப்தி
உலமா கட்சி
ஒரு பொருளில் வட்டி எப்போது வரும்.
ஒரு பொருளையோ, பணத்தையோ ஒருவருக்கு கடனாக கொடுத்து தனக்கு அதை திருப்பி தரும் போது மேலதிகமாக தர வேண்டும் என நிபந்தனை இட்டால் அந்த மேலதிகம் வட்டியாகும்.
அதாவது வட்டி என்பது கடனில்தான் ஏற்படும்.
அது போல் ஒருவரிடம் மேலதிகமாக தருவது என்ற நிபந்தனை இல்லாமல் கடன் பெற்றுவிட்டு அந்த கடனை திருப்பி செலுத்தும் போது மேலதிகமாக எதையும் கொடுத்தால் அது வட்டியாகாது.
நபி (சல்) அவர்கள் அவர்கள் ஒட்டகம் ஒன்றை கடனாக பெற்றுவிட்டு திருப்பி கொடுக்கும் போது அதை விட சிறந்த ஒன்றை வழங்கினார்கள். அதன் போது, சொன்னார்கள், அழகிய முறையில் திருப்பிகொடுப்பவர்தான் உங்களில் மேலானவர் என்றார்கள். ஆதாரம் முஸ்லிம்.
அழகிய முறையில் திருப்பி கொடுப்பது என்பது மேலதிகமாக கொடுப்பதாகும். நம்மில் பலர் மேலதிகம் என்ற நிபந்தனை இன்றி கடன் பெற்றுவிட்டு திருப்பி கொடுக்கும் போது மேலதிகம் இன்றி திருப்பி கொடுக்கிறார்கள். இது கூடாது. கடனை திருப்பி கொடுக்கும் போது மேலதிகமாக சேர்த்து கொடுப்பது நபி வழியாகும்.
அது போல் ஒருவரிடம் ஒரு பொருளை அல்லது பணத்தை பாதுகாப்புக்காக அல்லது சேமித்து வைப்பதற்காக கொடுத்து வைத்து அதனை அவர் பாவித்து திருப்பி தரும் போது ஏதும் அதிகமாக தந்தால் அது வட்டியாக மாறாது. இங்கு நாம் பணத்தை சேமிப்புக்காகத்தான் கொடுக்கிறோமே தவிர கடனாக கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
فقد استقرض رسول الله ـ صلّى الله عليه وسلم ـ جملاً، وأعطى صاحبه أحسن منه، كما رواه مسلم وغيره وقال: “خيركم أحسنُكم قضاءً
عن عبادة بن الصامت رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «الذهب بالذهب، والفضة بالفضة، والبُر بالبُر، والشعير بالشعير، والتمر بالتمر، والملح بالملح، مثلًا بمثل، سواء بسواء، يدًا بيد، فإذا اختلفت هذه الأصناف فبيعوا كيف شئتم إذا كان يدًا بيد؛ رواه مسلم.
فقد روى البخاري عن أبي بردة قال: (أتيت المدينة فلقيت عبد الله بن سلام فقال لي: ألا تجيء إلى البيت حتى أطعمك سويقاً وتمراً فذهبنا فأطعمنا سويقاً وتمراً، ثم قال: إنك بأرض الربا فيها فاشٍ -أي منتشر- فإذا كان لك على رجل دين فأهدى إليك حمل تبن أو حمل شعير أو حمل قت فلا تقبله فإن ذلك من الربا)
والقرض يكون من النقود ومن الأطعمة وكل ما له مثل، كما يكون من الحيوانات، على رأي الجمهور،
فقد أجمع المسلمون نقلاً عن نبيهم صلّى الله عليه وسلم أنَّ اشتراط الزيادة في السلف ربا ولو كانت قبضةً من علف ـ كما قال ابن مسعود ـ أو حبّة واحدة، ويجوز أن يرد أفضل ممّا يستلف إذا لم يشترط ذلك عليه كما فعل النبي ﷺ وكما قال، كما رواه البخاري ومسلم: “إنّ خيركم أحسنكم قضاءً.
يؤخَذ من هذا أنَّ ” كل قرض جر نفعا فهو ربا “ليس حديثًا مرفوعًا إلى النبي صلّى الله عليه وسلّم ولا مانع من الأخذ به ما دامت تتّفق دَلالته مع ما ورد من القرآن في تحريم الرِّبا، وعمل الصحابة وفتوى الفقهاء تؤيِّده.
وأما الحكم فخلاصته: إن كان النفع مشروطًا فهو رِبا، وإلا فهو جائز، ومثل الشرط العُرف؛ لقاعدة: المعروف عرفًا كالمشروط شرطًا. والهدايا إن كانت من أجل القَرض فهي حرام، وإلا فهي جائزة.
சுருக்கமாக,
கடன் கொடுக்கும் போது பிரயோசனம் கிடைத்தல் என்பது நிபந்தனை இடப்பட்டால் அது வட்டியாகும். இல்லாவிட்டால் அது ஆகுமாகும்.
முபாறக் அப்துல் மஜீத் முப்தி
வங்கிகள் பொதுவாக ஹராம் ஆனதல்ல என்பதால்தான் அ.இ. ஜம்மியதுல் உலமாவின் தலைமை நிர்வாகிகள் பலர் வங்கிகளின் ஆலோசகர்களாக இருந்து சம்பளம் பெறுகிறார்கள்.
அரபு பெயரில் உள்ள வங்கியிலும் இங்க்லிஷ் பெயர் உள்ள வங்கிகளின் கிளைகளிலும் ஆலோசகர்களாக சம்பளம் வாங்குகிறது.
இவர்களின் பெயர்கள் இணையத்தளத்தில் உள்ளன.
சரி — உங்களுக்காக நான் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் பேரில் இலங்கையில் வங்கிகள்/இஸ்லாமிய நிதி நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக (Shariah advisers / Sharia Supervisory Board / Ulama) செயல்படுகிற முக்கிய உலமா/முஃப்திகள் யாரென்பதை கீழே சுருக்கமாகத் தொகுத்து கொடுத்துள்ளேன்.
1. முஃப்தி M.I.M. Rizwe (M***i M.I.M. Rizwe / Rizwe Mohammed) — All Ceylon Jamiyyathul Ulama (ACJU) தலைவர்களில் ஒருவராகவும், செயல்பாட்டான Shariah ஆலோசகர்களில் ஒருவராகவும் குறிப்பிடப்படுகிறார்.
2. Ash-Sheikh Dr. M***i Muhammad Imran Ashraf Usmani — Amãna Bank-இன் Sharia Supervisory Council பட்டியலில் பெயர் உள்ளது (Amãna Bank — Sharia Supervisory Council).
3. M***i M.I.M. Rizwe (Amãna Bank Sharia Council memberként குறிப்பிடப்படுகிறார்) — (Amãna Bank தளத்தில் Sharia Supervisory Council உறுப்பினராகப் பதிவு).
4. M***i Yoosuf Haniffa — இலங்கையில் இஸ்லாமிய கல்வி, ஷரீஆ ஆதரவு மற்றும் ஷரீஅக் ஆலோசனையில் அறியப்பட்டு வருகிறது; சில Sharia/Advisory பட்டியல்கள் அவரை குறிப்பிடுகின்றன.
5. பல்வேறு வங்கிகள் (Commercial Bank, CDB, மற்றும் பிறவுகள்) — சில பெரிய வர்த்தக வங்கிகளுக்கும் (Commercial Bank, CDB Meezan போன்றவை) தனியான Islamic Banking / Shariah Supervisory Board பிரிவுகள்/உறுப்பினர்கள் உள்ளனர்; அவற்றின் Shariah-board உறுப்பினர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் அல்லது அறிவிப்புகளில் குறிப்பிடப்படுகின்றனர். உதாரணமாக Commercial Bank-இன் Islamic Banking தளத்தில் “eminent scholars in the Sharia Supervisory Board” என்ற குறிப்பை காணலாம்.
முஸ்லிம் வங்கி முஸ்லிம் அல்லாத வங்கி என்பதெல்லாம் சுத்த ஏமாற்று. எல்லாம் ஒரே சிஸ்டம்தான்.
வங்கிகளில் ஹராமான நடவடிக்கைகளும் உண்டு ஹராமானவையும் உண்டு. ஆனாலும் சேமிப்பு வங்கியில் இடப்படும் பணத்துக்கு கிடைக்கும் மேலதிக பணம் ஹராமான வட்டியல்ல என்பதையே உலமா சபையின் ஹாஜிகள் வங்கியில் பணத்தை போட அனுமதித்ததன் மூலம் தெரிகிறது.
முபாறக் முப்தி
உலமா கட்சி
மன்னார் முசலி பிரதேசம் மிக மிக பின்தங்கியுள்ளதை அண்மையில் அங்கு விஜயம் செய்து தெரிந்து கொண்டோம்.
அதிகமான மக்களுக்கு சொந்த வீடு இல்லை, தண்ணீர் பிரச்சினை. மின்சார பிரச்சினை. பாலைவனத்தின் ஒரு பகுதி போல் உள்ளது.
1990ம் ஆண்டு பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் மீண்டும் வழங்கப்படவில்லை. அதில் வேறவர்கள் உள்ளனர்.
இம்மக்களின் ஓட்டு எடுத்த கட்சிகள் பணக்காரர்களுக்கே உதவியதாக மக்கள் கூறினர்.
இந்த நிலையில் NPP ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் வீடு இல்லாதோருக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்கி அவற்றை பயனாளிகளிடம் எந்தவொரு ஆரவாரமும் இன்றி வழங்கியிருக்கிறது.
முபாறக் முப்தி
உலமா கட்சி.
ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டோர் யார், அதற்கு பின்புலமாக இருந்தோர் யார் என்பதை ஏப்ரல் 21க்கு முன் வெளிப்படுத்துவோம் என்ற ஜனாதிபதி அநுர குமாரவின் கருத்து வரவேற்புக்குரியதாகும்.
உயிர்த்த ஞாயிறு சம்பவம் நடந்த போதும் அதன் பின்பும் மூன்று ஜனாதிபதிகள் இருந்துள்ளனர். ஆனாலும் இது பற்றி இன்னமும் அரசுகளால் சரியாக மக்களுக்கு தெளிவு படுத்தப்படவில்லை.
அந்த வகையில் இது பற்றிய முழுமையான தகவல்களை பெறுவதில் ஜனாதிபதி அநுரகுமார அரசாங்கம் முனைப்புடன் செயற்படுவது பாராட்டத்தக்கது.
அத்துடன் இக்குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட ஸஹ்ரான் என்பவன் தற்கொலைக்குண்டுதாரியா அல்லது குண்டு வைக்க முனையும் போது ரிமோட் கன்ட்ரோலினால் வெடிக்க வைக்கப்பட்டவனா என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் உண்டு.
எது எப்படியிருந்தாலும் குற்றவாளிகள் பகிரங்கப்படுத்தப்பட்டு அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதும் இது அநுர குமார அரசில் நடக்கும் என்றும் உலமா கட்சி நம்புகிறது.
முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
உலமா கட்சி
14.4.2025
09/03/2025
🔴 இஸ்லாமிய சட்டம் குறித்த தெளிவில்லாமல், அர்ச்சுனா எம்.பி போன்ற 'கண்ட கண்ட' நபர்களெல்லாம் கதைக்கக் கூடாது: முபாரக் மௌலவி காட்டம்
இஸ்லாமிய சட்டம் குறித்த தெளிவில்லாமல், அர்ச்சுனா எம்.பி போன்ற ‘கண்ட கண்ட’ நபர்களெல்லாம் கதை முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் பற்றி, நாடாளுமன்றத்தில் நேற்று (08) அர்ச்சனா எம்.பி கூறிய விடயங...
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Symonds Road , Colombo 10
Colombo
