Aalima nafla aroosiyya Qadhiriyya
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aalima nafla aroosiyya Qadhiriyya, Social service, Colombo.
Assalamu alaikum warahmathullahi wabarakathuhu
🚨🚨🚨
*Quran class details*
🟢Age limit 5 to 14 girls and boys
🟢 online Classes conducted through zoom.
And Home visiting classes
🟢2 days a week
🟢 Individual class available
🟢 Medium : Tamil and Sinhala
We will teach your children:
🟣 Tahleem qur'an
🟣 Quran recitation
🟣 Hifz
🟣Hadees
🟣 Fiqh
🟣Thajweed
🟣Dua
🟣 Islamic history
🟣 Islamic stories
Inbox or contact to join your kids
0771760841, 0729095212
06/02/2024
⚘️மௌனம் ஒரு கடல்,
பேச்சு என்பது நதி.
கடல் உன்னைத் தேடும்போது
மொழியின் நதிக்குள்
நுழையாதே!
கடலின் பேச்சுக்குக்
காது கொடு,
வெட்டிப் பேச்சு
வேண்டாம் நண்பா!
உண்மையின் பிரசன்னத்தில்
மரபான சொற்கள்
உளறல் மட்டுமே.
உளறலோ
பார்வைக்கான
பகரம் மட்டுமே,
🌹🌹🌹🌹🌹
மௌலானா ரூமி
ரஹிமஹுல்லாஹி அலைஹி
06/02/2024
🔷️. உனக்கு புண்ணியம் அளிக்காத இடங்களுக்குச் செல்வதில் உன் இரு பாதங்களையும் உபயோகிக்காதே!
பாப காரியங்களை அறவே தவிர்க்க முடியாததென்று தோன்றும் இடங்களில் அமர்ந்திருக்காதே!
உன் உள்ளத்தில் இறைவனைப் பற்றிய உறுதியையும் விசுவாசத்தையும் வளர்காதவர்களுடன் சிநேகம் வைக்காதே.
இந்த புத்திமதிப்படி நடப்பவர்கள் மிகச் சொற்பமானவர்களே.
குதுபுல் அக்பர் === அபுல்ஹஸன் சாதுலி இமாம்
05/02/2024
#ஆன்மீகத்தை 🚩🚩🚩ஆன்மீகவாதிகளிடம்தான்
கற்றுக்கொள்ள வேண்டும்.!
📍இல்மேரப்பானி
📍இல்மேமலக்கானி
📍இல்மேஷைத்தானி
இந்த மூன்று இல்முகளில்
இல்மேஷைத்தானி
ஷைத்தானை விளங்குவது மிகக் கடினம்.
எத்தனையோ
இறைநேசர்களை
ஷைத்தான்
சருக வைத்து
இருக்கிறான்.
#பாவாஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை
விலக்கப்பட்ட கனியைஉண்ண
வைத்துவிட்டான்.
மாபெரும் இறைநேசர்
#ஜுனைதுல்பக்தாதி
ரஹிமத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் ஒரு ஆலிம் பைஅத் வாங்கி ஷைகின்
ஸுஹ்பத்தில்
இருந்தார்.
"இறைநேசர் அவர்கள்,அவரின்
ஆர்வத்தையும்
பயிற்சியையும்
பார்த்துஅவருக்கு
பல ஆன்மீக
இரகசியங்களை
கற்றுதத்ந்தார்கள்."
ஆனால்
"திடீரென காணாமல் போய்விட்டார்
பல நாட்களாக
கான்காஹ்விற்கு
(தவசாலைக்கு)
வருவதில்லை
இறைநேசரின்
தொடர்பிலும் இல்லை.!"
ஒருநாள் ஹஜ்ரத்
#ஜுனைதுல்பக்தாதி ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்கள்
"எங்கே அந்த
புது ஆலிம் முரீத்?
என விசாரித்தார்கள்.
அவர் கான்காஹ்விற்கு வருவதில்லை.!"என
சீடர்கள் சொன்னதும்
"அறைகுறைஆன்மீகம் ஆபத்தாயிற்றேஎன
ஆலிம்முரீதைதேடி
அவர் வீட்டுக்குச்
சென்றார்கள்."
"அந்த ஆலிம் முரீத்
தன்னை பெரிய
ஷைகை போல் காட்டிக்கொண்டு
மிக மகிழ்ச்சியாக
இறைநேசரை
வரவேற்றார்..!"
"ஏன் கான்காஹ்விற்கு வருவதில்லை..?"
என கேட்டார்கள்.
"எஜமானே!
தங்களிடம் பல ஆன்மீக
விஷயங்களை கற்றுக்
கொண்டேன், அதனால்
உயர்ந்த அந்தஸ்தை
அடைந்து விட்டேன்.!"
என்றார்.
"இறைநேசர்
#ஜுனைதுல்பக்தாதி ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்கள்
உயர்ந்த அந்தஸ்தை
அடைந்துவிட்டீர்களா?"
"நான்உங்களுக்கு
கலீஃபா பதவிகூட கொடுக்கவில்லையே
எப்படி..?" என்று
கேட்டார்கள்.
"ஷைக் அவர்களே!
நான் இரவில்
தூங்கும் போது
தினமும் எனக்கு
சுவர்க்கம் காட்டப்
படுகிறது..!"
"இரவு முழுவதும்
சுவர்க்கத்தில்
மகிழ்ச்சியாக உலா வருகிறேன்.!"
என சொன்னதும்
உடனே
இறைநேசர்அவர்கள்
புன்னகைத்தபடி
சொன்னார்கள்:
"இன்றிரவு நீங்கள்
சுவர்க்கத்தைஉலா
வரும் போது.."
"லாஹவ்ல வலா
குல்லத்த இல்லா
பில்லாஹில்
அலியுல் அளீம்
எனசொல்லுங்கள்."
என்றுசொல்லிவிட்டு
வந்து விட்டார்கள்.
"அன்று இரவு
ஆலிம் முரீத்
சுவர்க்கத்தை உலாவரும்போது...
லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என
சொன்னதும்.."
"அடுத்த நொடி
திடீரென கனவு
கலைந்துதிடுக்கிட்டு
எழுந்தார்.அதன்பின்
அதுபோன்றகனவே
வரவில்லை...!"
உடனே "அந்த
ஆலிம் முரீத்
இறைநேசர்
அவர்களிடம்வந்து
நடந்தவிஷயத்தை
சொன்னார்."
இறைநேசர்
#ஜுனைதுல்பக்தாதி ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்கள்
சிரித்து கொண்டே
சொன்னார்கள்.
"நீங்கள் இதுவரை
பார்த்த கனவுகள்
அல்லாஹ்வின்
புறத்திலிருந்து
வந்ததல்ல..ஷைத்தானின் சூழ்ச்சியால்வந்தகனவு.!"
"ஷைத்தான் எந்த
ரூபத்தில் வந்து
வழிகெடுப்பான்
என தெரியாது
எச்சரிக்கையாக
இருங்கள்."
"எப்போதும்ஷைகின்
தொடர்பில்இருங்கள்."
என அறிவுரை சொன்னார்கள்.
02/02/2024
#இமாம்_ஜஃபர்_சாதிக் (ரழி )அவர்கள் அல்லாஹ் பற்றிய ஞானத்தை அழகாக விவரிப்பார்கள்.
பாமரனுக்கு அவன் விளங்கிக் கொள்ளும் வகையில் புரிய வைப்பார்கள்
இமாம் அபூ ஹனீபா போன்றவர்களுக்கு அவர்களின் ஞானத் தேடலுக்கு தகுந்தவாறு மஃரிபத்துடன் பேசி இறையில் இணைத்து வைப்பார்கள்.
ஒரு நாள் இமாம் ஜஃபர் சாதிக் (ரழி) அவர்கள் தஜ்லா நதிக்கரை ஓரத்தில் அமர்ந்து சீடர்களுக்கு
இறைவன் பற்றியும் அவனது சக்தி பற்றியும் போதித்துக் கொண்டிருந்தார்கள்.
அச்சமயம் அவ்வழியாக வந்த நாத்திகன் ஒருவன் செவியில் இறைவன் பற்றிய செய்திகள் விழுந்ததும்
நேராக இமாம் ஜஃபர் சாதிக் அவர்களிடம் வந்தான்.
இறைவன் என்பது ஏதும் இல்லை.
மக்களின் கற்பனா சக்தியில் தான் இறைவன் உருவாக்கப் பட்டான்
என்றான்.
அப்படியில்லை தோழரே !
நம்மை படைத்து பரிபாலனம் செய்வது இறைவன் தான்.
அவனை மறுத்தல் ஆகாது என்று பதிலளித்தார்கள்.
அவன் விடாப்பிடியாக இறைவனை மறுத்துக் கொண்டே இருந்தான்.
இமாம் ஜஃபர் சாதிக் அவர்களும் இதம் பதமாக விளக்கங்கள் தந்து கொண்டே இருந்தார்கள்
அவன் கேட்பதாக இல்லை.
மாறாக எனக்கு விளக்கங்கள் எதுவும் தேவையில்லை இறைவன் இருந்தால் எனக்கு காட்டித் தாருங்கள் என்றான்.
இமாம் ஜஃபர் சாதிக் அவர்களும் இனி இவன் "மொழி"யிலேயே இவனுக்கு விளக்கம் தந்து விட வேண்டியது தான் என்று முடிவெடுத்து கொண்டு
இறைவனை உனக்கு காட்டித் தருகிறேன் பார் என்று கூறிவிட்டு
நிமிட நேரத்தில் தமது சீடர்களுக்கு கண்ணசைவின் மூலமாக
இவனை தூக்கி தஜ்லா நதியில் வீசி எறியுங்கள் என்று ஆணையிட்டார்கள்.
எதிர்பாராத விதத்தில் அவன் தூக்கி எறியப்பட்டு நீச்சல் தெரியாத காரணத்தால் உயிர் பயத்தில்
கைகால்களை அடித்துக் கொண்டு
ஜஃபர் சாதிக் காப்பாற்றுங்கள்
ஜஃபர் சாதிக் காப்பாற்றுங்கள் என்று கத்தினான்.
உன்னை எல்லாம் காப்பாற்ற முடியாது செத்துப் போ என்று பதிலுக்கு கத்தினார்கள்.
அய்யோ யாராவது என்னை காப்பாற்றுங்களேன் என்று தண்ணீரில் முங்கி முங்கி தொண்டைக்குள் நீர் நுழைய கத்திப் பார்த்தான்.
யாரும் காப்பாற்றாத நிலையில்
கடவுளே ! படைத்தவனே ! அல்லாஹ்வே ! என்று உரத்த குரலில் அரற்ற ஆரம்பித்தான்.
இது போன்ற வார்த்தைகள் செவியில் விழுந்ததும் சீடர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்
உடனடியாக நீந்திச் சென்று அவனை காப்பாற்றிக் கொண்டு வந்தார்கள் சீடர் பெருமக்கள்.
கரையேறிய அவனிடம் இமாம் ஜஃபர் சாதிக் கேட்டார்கள்
என்ன, இறைவனை பார்த்தாயா?
அவனிடம் பேசியதைக் கூட நாங்கள் கேட்டோமே என்றார்கள்
ஆம் பார்த்தேன்.இக்கட்டான நிலையில் தவிக்கும் போது அவன் திரை நீக்கி காட்சி தருகிறான்.
நன்றாக பார்த்துக் கொண்டேன் என்று பதிலளித்தான்.
அதைத்தான் 27 : 62 வேத வசனத்தில் அவனும் தன்னைப் பற்றி கேள்வியாக முன் வைக்கிறான்
கடும் துன்பத்திற்குள்ளாக் கப்பட்டவன் அழைத்தால் அவனுக்கு பதிலளித்து அவன் துன்பத்தை நீக்குபவன் யார்?
அவனே அல்லாஹ்.இறைவன்.
என்பதாக கூறி விளக்கம் அளித்தார்கள்.
அவர்களின் கரங்கள் பிடித்து
லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று கலிமா கூறி கரங்களில் முத்தமிட்டு விடை பெற்றுச் சென்றான் அந்த நாத்திகன்
இல்லையில்லை விடை பெற்றுச் சென்றார் இறைநேசர்.
யா அல்லாஹ் !
எம் பெருமானாரின் கண்குளிர்ச்சி
மௌலா அலீயின் மறுபதிப்பு
இமாம் ஜஃபர் சாதிக் அவர்களின் பார்வை எம் மீது பட்டு நாங்களும் இறை நேசராக ஆவதற்கு கிருபை செய்வாயாக.ஆமீன்.
By
Mueenudeen Ibrahim
01/02/2024
#இமாம்_ஜஃபர்_சாதிக் (ரழியல்லாஹ் அன்ஹு) அவர்களை சந்திப்பதற்காக ஈராக்கிலிருந்து மதீனா வந்தடைகிறார்கள்
இமாம் அபூ ஹனீபா.
நுஃமான் பின் ஸாபித் ரஹ்மதுல்லாஹி அலைஹி என்றழைத்து வரவேற்றார்கள் இமாம் ஜஃபர் சாதிக். ரழியல்லாஹு அன்ஹு
அழைத்து வந்து அபூ ஹனீபா என்று கூறி அறிமுகம் செய்த நபர்
அபூ ஹனீபாவை பார்த்து முழிக்கிறார்.
இமாம் அபூ ஹனீபா கூறுகிறார்கள்
ஆம். என் இயற்பெயர் நுஃமான் பின் ஸாபித் தான்.இமாமவர்கள் கராமத்தினால் என்னை அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இப்போது அபூ ஹனீபாவை பார்த்து இமாம் ஜஃபர் சாதிக் கூறினார்கள்
"குர்ஆன் ஹதீஸ்களை ஆய்வு செய்து அற்புதமாக மார்க்க சட்டங்களை மக்களுக்கு ஆக்கித் தருகிறீர்கள் தானே"
"ஆமாம் இமாம் அவர்களே !"
"ஆனால் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் தருவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு வருகிறது
அல்லாஹ்வின் சட்டத்தில் நம் பகுத்தறிவுக்கு வேலையில்லை"
"லப்பைக் யப்ன ரசூலில்லாஹ்!"
"நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள்
மார்க்கத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எது தொழுகையா ? நோன்பா?"
"தொழுகை தான்"
"மாதவிடாய் காலத்தில் விடுபட்ட தொழுகையை களா செய்யத் தேவையில்லை என்றும் நோன்பை களா செய்ய வேண்டும் என்றும் இறைவன் கூறுவதில் நமது பகுத்தறிவை செலுத்தினால் என்ன விடை கிடைக்கும்?"
"மாற்றமான விடை !"
"அது இம்மைக்கும் மறுமைக்கும் மிகப்பெரிய பாதிப்பு அல்லவா?"
"ஆமாம் யப்ன ரசூலில்லாஹ்"
"சரி இன்னொரு கேள்வி கேட்கிறேன்
கொலை, விபச்சாரம் இரண்டில் கொடிய பாவம் மார்க்கத்தில் எது?"
"கொலை தான் எஜமானரே !"
"கொலைக்கு இரண்டு சாட்சிகளும் விபச்சாரத்திற்கு நான்கு சாட்சிகளும் தேவை என்று குர்ஆன் கூறும் கூற்றில் நமது பகுத்தறிவை செலுத்தினால் கிடைக்கும் விடை என்ன?"
"சுப்ஹானல்லாஹ் ! விடை மாற்றமாக வரும். ஆனால்
இமாம் அவர்களே! என் மீது கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது
அதை நிரூபிக்க இப்போது நான் கேள்விகள் கேட்கிறேன்
சிறுநீர்த்துளி,விந்துத்துளி இரண்டில் மிகவும் அசுத்தம் எது மார்க்கத்தில் ?
"சிறுநீர் தான்"
"சிறுநீர் வெளிப்பட்டால் அவ்விடத்தை மட்டும் கழுவினால் போதும்
விந்து வெளிப்பட்டால் முழு உடலையும் கழுவி குளிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுவதில் என் பகுத்தறிவை செலுத்தியிருந்தால்
விந்து தான் அசுத்தம் என்று சட்டம் இயற்றியிருப்பேனே.அப்படிச் செய்யவில்லையே.
"மாஷா அல்லாஹ் ! பாரக்கல்லாஹ்!"
"ஆண், பெண் இருபாலரில் வலுவற்றவர் யார் ?"
"பெண் பாலர் தான்"
"வாரிசுரிமையில் ஆண்களுக்கு இரண்டு பங்கும் பெண்களுக்கு ஒரு பங்கும் தர வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது
பெண் வலுவற்றவளாக இருப்பதால் அவளுக்கு இரண்டு பங்கும் வலுவுடன் இருக்கும் ஆணுக்கு ஒரு பங்கும் தந்தால் போதுமானது என்று பகுத்தறிவு கூறுகிறது.நான் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் தரவில்லையே"
என்று கூறி முடித்தார்கள் இமாம் அபூ ஹனீபா அவர்கள்.
அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்ட இமாம் ஜஃபர் சாதிக் அவர்களின் தோழமையில் இரண்டு வருடங்கள் இருந்து பல வகையான ஞானங்களை கற்றுத் தேர்ந்த பின் கூஃபா திரும்பினார்கள்.
யா அல்லாஹ் !
ஞான மேதை இமாம் ஜஃபர் சாதிக்
சட்ட மேதை இமாம் அபூ ஹனீபா இருவரின் அகமியங்களின் பொருட்டினால் அடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி ஆக்கி வைப்பாயாக.ஆமீன்.
By
Mueenudeen Ibrahim
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Colombo
01
