ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி

ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி

Share

United Front Party (UFP) එක්සත් පෙරමුණ පක්ෂය

அரசியலால் தமக்கு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அரசியலை வைத்து நம் நாட்டிற்கும் சமூகத்திற்கும் என்ன செய்யலாம் என்பதை சிந்திப்போம்.

30/10/2024

ச‌மூக‌த்தை கொள்ளைய‌டித்த‌ எம்பிமாருக்குத்தான் திசை காட்டியை பார்த்து பய‌ம்.
நேர்மையாக‌ அர‌சிய‌ல் செய்யும் க‌ட்சிக்கு எந்த‌ ப‌ய‌மும் இல்லை.
அத‌னால் இது வ‌ரை எம்பீக்க‌ள் கிடைக்காத‌ க‌ட்சிக்கு வாக்க‌ளிப்போம்.

ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ்.

உண்மை, நேர்மை கொண்ட‌ ஒரே க‌ட்சி.

24/10/2024
24/10/2024

ம‌க்க‌ளின் வாக்குக‌ள் என்ற‌ அமானித‌த்துக்கு துரோக‌ம் செய்து, ஊழ‌ல், ஏமாற்று என்ப‌தையே தொட‌ர்ந்து 20 வ‌ருட‌மாக‌ செய்யும் ப‌ழைய‌ இரும்புக்க‌டை க‌ட்சிக‌ளை நிராக‌ரிப்போம்.
ஊழ‌ல‌ற்ற‌ புதிய‌ க‌ட்சியில் புதிய‌வ‌ர்க‌ளை திகாம‌டுல்ல‌ மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ஆத‌ரிப்போம்.

ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ்

Photos from ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி's post 09/10/2024

முஸ்ன‌த் முபாற‌க் த‌லைமையிலான‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சுக்கும் பிர‌பா க‌ணேச‌ன் த‌லைமையிலான‌ ஜ‌ன‌நாய‌க‌ தேசிய‌ கூட்ட‌ணிக்குமிடையில் தேர்த‌ல் புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.

இந்நிக‌ழ்வு கொழும்பு சின‌ம‌ன் லேக் ஹோட்ட‌லில் நடை பெற்ற‌து.

07/10/2024

முஸ்லிம் அர‌சிய‌லின் த‌னித்துவ‌ம் என்ப‌து க‌ட்சியின் பெய‌ரில் முஸ்லிம் என்று இருப்ப‌தோ அல்ல‌து முஸ்லிம் என்ற‌ சொல் இல்லாத‌ க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ முஸ்லிம் ஒருவ‌ர் இருப்ப‌தோ அல்ல‌.

த‌னித்துவ‌ம் என்ப‌து சாராச‌ரி அர‌சிய‌லைவிட்டும் மாறுப‌ட்ட‌தாக‌ இருக்க‌ வேண்டும்.
பொய், ஏமாற்று, வாக்குக‌ளுக்காக‌ ப‌ண‌ம், சாராய‌ம் வ‌ழ‌ங்க‌ல், இசைக்கு அடிமையாக்க‌ல், பொய் வாக்குறுதி வ‌ழ‌ங்க‌ல், ப‌ண‌ம், அமைச்சு ப‌த‌விக்காக‌ குர‌ங்கு பாய்ச்ச‌ல் பாய்த‌ல் போன்ற‌தை இல்லாத‌ முஸ்லிம் அர‌சிய‌லே த‌னித்துவ‌ அர‌சிய‌லாகும்.

இவ்வாறு அர‌சிய‌ல் செய்தால் வெல்ல‌ முடியுமா என‌ கேட்க‌லாம்.

என்ன‌ ப‌ளாய் செய்தாவ‌து வெல்ல‌லாம் என்ப‌து முஸ்லிம் த‌னித்துவ‌ அர‌சிய‌ல் அல்ல‌, அது சாக்க‌டை அர‌சிய‌ல்.

தோற்றாலும் ப‌ர‌வாயில்லை இத்த‌கைய‌ த‌னித்துவ‌த்தை விட‌மாட்டோம் என்ப‌துதான் முஸ்லிம் த‌னித்துவ‌ அர‌சிய‌லாகும்.

முபாற‌க் முப்தி
உல‌மா க‌ட்சி.

01/10/2024

தேசிய‌ ம‌க்க‌ள் ச‌க்தி த‌லைவ‌ர் அநுர‌குமார‌ திசாநாய‌க்க‌ ஜ‌னாதிப‌தி ப‌த‌வியை ஏற்ற‌து முத‌ல் நாட்டை சிற‌ப்பாக‌ வ‌ழிந‌ட‌த்துவ‌தையிட்டு எம‌து ம‌கிழ்ச்சியை தெரிவிக்கிறோம் என‌ உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்துள்ளார்.

அவ‌ர் தொட‌ர்ந்து கூறிய‌தாவ‌து,

யார் ஜ‌னாதிப‌தியாக‌ இருக்கிறாரோ அவ‌ரோடு முர‌ண்ப‌டாம‌ல் இருப்ப‌தே சிறுபான்மை ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து என்ப‌தே எம‌து க‌ட்சி கொள்கையாகும். இத‌னை நாம் சொல்லிலும் செய‌லிலும் ந‌டைமுறைப்ப‌டுத்தி வ‌ருகிறோம்.

தேர்த‌ல் என்று வ‌ருகின்ற‌ போது ஒருவ‌ரை ஒருவ‌ர் எதிர்த்து நிற்க‌லாம். அது ஜ‌ன‌நாய‌க‌ம் த‌ந்த‌ உரிமை. ஆனால் ஒருவ‌ர் வெற்றிபெற்ற‌ பின் அவ‌ரோடு கைகுலுக்கிக்கொள்வ‌தே சிற‌ந்த‌ ப‌ண்பாகும். இந்த‌ வ‌கையில் கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வின் நல்ல‌ திட்ட‌ங்க‌ளுக்கும் ஊழ‌ல் ஒழிப்புக்கும் உல‌மா க‌ட்சி முழு ஒத்துழைப்பும் வ‌ழ‌ங்கும்.

இவ‌ர்க‌ளுக்கும் ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் கொடுத்து பார்க்க‌ வேண்டும் என்ற‌ ம‌னோ நிலை ம‌க்க‌ளிட‌ம் இருந்த‌தால் அநுர‌குமார‌ ஜ‌னாதிப‌தியாக‌ தெரிவு செய்ய‌ப்ப‌ட்டுள்ளார். ஜ‌னாதிப‌தி த‌லைமையிலான‌ அர‌சாங்க‌த்தின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை பார்க்கும் போது ம‌க்க‌ளின் எதிர்பார்ப்பு ஓர‌ள‌வு நிறைவேறுவ‌தாக‌வே தெரிகிற‌து.

நாட்டின் அர‌சிய‌ல்வாதிக‌ள் ம‌ற்றும் அர‌ச‌ ஊழிய‌ர்க‌ள் ம‌த்தியில்தான் ஊழ‌ல்க‌ளும் மோச‌டிக‌ளும் அதிக‌ம் உள்ள‌ன‌. அத்த‌கைய‌ ஊழ‌ல் மாபியாக்க‌ள் ஒழிக்க‌ப்ப‌டும் என்ற‌ ந‌ம்பிக்கை எம‌க்கு தெரிகிற‌து. இத‌ற்கான‌ ஜ‌னாதிப‌தியின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் இல‌ங்கை ம‌க்க‌ள் முழு ஒத்துழைப்பும் வ‌ழ‌ங்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

17/09/2024

நோன்பு பெருநாள், ஹ‌ஜ் பெருநாள் என்ப‌ன‌வே பிரிட்டிஷ் கால‌ம் முத‌ல் முஸ்லிம்க‌ளுக்கான‌ அர‌ச‌ விடுமுறையாக‌ இருந்த‌து.

டி பி ஜாயா த‌லையிட்டு ந‌பிய‌வ‌ர்க‌ள் பிற‌ந்த‌ தின‌த்துக்கும் அர‌ச‌ விடுமுறை தேவை என‌ கேட்டு பெற்றுத்த‌ந்தார்.

ச‌ந்திரிக்கா ஜ‌னாதிப‌தியாக‌ம் முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் அஷ்ர‌ப் அமைச்ச‌ராக‌ இருந்த‌ போது முஸ்லிம்க‌ளுக்கு அர‌ச‌ விடுமுறை தின‌ங்க‌ள் அதிக‌ம் என்ற‌ பிர‌ச்சினையை ச‌ந்திரிக்கா எழுப்பினார்.

அத‌னைத்தொட‌ர்ந்து மூன்றில் இர‌ண்டுதான் த‌ர‌ப்ப‌டும், எது தேவை என‌ தீர்மானிக்கும்ப‌டி அஷ்ர‌பின் முன் வைக்க‌ப்ப‌ட்ட‌து. அவ‌ர் மீலாத் விடுமுறையை தெரிவு செய்தார். அத‌னால் ஹ‌ஜ் பெருநாள் விடுமுறை தின‌ம் ச‌ந்திரிக்கா அர‌சால் நீக்க‌ப்ப‌ட்ட‌து.

ஸ்ரீல‌ங்கா ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மா க‌வுன்சில்.

Want your business to be the top-listed Government Service in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Colombo