Kattankudy Urban Council

Call Directions Contact the organization

Kattankudy Urban Council Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kattankudy Urban Council, Government Official, Kattankudi.

தேசிய வாசிப்பு மாதம் – 2026 “வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்” என்னும் தொனிப்பொருளுக்கமைவாக , காத்தான்குடி நகர சபை பொது...
03/11/2026

தேசிய வாசிப்பு மாதம் – 2026

“வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்”
என்னும் தொனிப்பொருளுக்கமைவாக , காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்புப் மாதத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ம‌ற்று‌ம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக, 03.11.2026ம் திகதி இன்று செவ்வாய்க்கிழமை நகர முதல்வர் SHM. அஸ்பர் (JP, UM) அவர்களின் வழிகாட்டலில் காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தினால் மட்/மம/ ஹஸனாத் வித்தியாலய மாணவர்களுக்கு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஒன்றான, மாணவ‌ர்க‌ளி‌ன் அறிவையும் சிந்தனைத் திறனையும், ஆக்கத்திறன் என்பவற்றை மேம்படுத்தும் நோக்கிலும் கைவினைப் பொருட்கள் தயா‌ரிப்பது தொடர்பான பயிற்சி வகுப்பொன்று நகர சபை தையல் பயிற்சி ஆசிரியை திருமதி. ஜீவமலர் அவர்களை கொண்டு நடாத்தப்பட்டது. இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், நூலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வை ஆரம்பிக்கும் முகமாக பாடசாலை மாணவியினால் இறை வசனம் ஓதப்பட்டதுடன் பாடசாலை அதிபரினால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது. இவ்வுரையின் போது நூலக அறிமுகம், பொது நூலகத்தின் முக்கியத்துவம், நூலகத்தைப் பயன்படுத்து

தேசிய வாசிப்பு மாதம் – 2026 “வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்” என்னும் தொனிப்பொருளுக்கமைவாக , காத்தான்குடி நகர சபை பொது...
02/11/2026

தேசிய வாசிப்பு மாதம் – 2026

“வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்”
என்னும் தொனிப்பொருளுக்கமைவாக , காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்புப் மாதத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ம‌ற்று‌ம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக, காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தின் கிளை நூலகங்களில் ஒன்றான மட்/மம/ ஸாவியா மகளிர் வித்தியாலத்தின் தே‌சிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி . அஸ்மியா றிஸ்வி அவர்களின் தலைமையில் 02.11.2026ம் திகதி (திங்கட்கிழமை) இன்று ஏற்பாடு செய்யப்பட்டு ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபை பொது நூலகதின் நூலகர் பெளமியா ஷறூக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் நூலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவி பாத்திமா ஹனா அவர்களினால் இந் நிகழ்வை ஆரம்பிக்கும் முகமாக இறை வசனம் ஓதப்பட்டதுடன் பாடசாலை அதிபரினால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நூலகரினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டதுடன் இவ்வுரையின் சிறப்பம்சமாக, நூலக அறிமுகம், பொது நூலகத்தின் முக்கியத்துவம், நூலகத்தைப் பயன்படுத்துவதன் பயன்கள், வாசிப்புப் பழக்கத்தின் அவசியம் மற்றும் வாசிப்பின் மூலம் அறிவை விருத்தி செய்துகொள்ளும் வழிமுறைகள் தொடர்பான பயனுள்ள கருத்துகளும் வழிகாட்டல்களும் மாணவர்களுக்கு முன்வைக்கப்பட்டன.

மாணவ‌ர்க‌ளி‌ன் அறிவையும் சிந்தனைத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் வாசிப்புடன் தொடர்புடைய போட்டிகள் நடத்தப்பட்டது. அ‌த்துட‌ன் இவ்வாண்டிற்கான தேசிய வாசிப்பு மாத போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றன.

அத்துடன் இந் நிகழ்வில் புத்தகக் கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டதுடன் இந் நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.

காத்தான்குடி நகர சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு தயாரிப்பதற்கான மக்களின் கருத்துக்களைப் பெறும் விசேட கலந்துரையாடல்!கா...
29/10/2026

காத்தான்குடி நகர சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு தயாரிப்பதற்கான மக்களின் கருத்துக்களைப் பெறும் விசேட கலந்துரையாடல்!

காத்தான்குடி நகர சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீட்டைத் (வரவு - செலவுத் திட்டம்) தயாரிப்பதற்காகப் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெறும் விசேட கலந்துரையாடல் கூட்டம் 28.10.2026 நேற்றைய தினம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

காத்தான்குடி நகர முதல்வர் SHM. அஸ்பர் J.P., U.M. அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் நகரின் அபிவிருத்தி சார்ந்த விடயங்களை நேரடியாக உள்வாங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலில் காத்தான்குடி நகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், நகர சபையின் செயலாளர், கணக்காளர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியாகத்தர் உள்ளிட்ட நகர சபை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன், நகரின் அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள், முதியோர் சங்கப் பிரதிநிதிகள், இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இதன்போது, வருகை தந்திருந்த பல்வேறு தரப்பினரும் தமது பிரிவுகளுக்கும் சமூகத்திற்கும் வழங்கப்பட வேண்டிய சலுகைகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியதுடன், தமக்குத் தேவையான முக்கிய விடயங்களை 2027 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் உள்வாங்குவதற்கான முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

ஊடகப்பிரிவு

காத்தான்குடி நகர சபை பொது நூலக ஏற்பாட்டில் "தேசிய வாசிப்பு மாதம் - 2026" வாழ்நாள் முழுவதும்- எழுத்தே நண்பன் என்னும் தொனி...
29/10/2026

காத்தான்குடி நகர சபை பொது நூலக ஏற்பாட்டில் "தேசிய வாசிப்பு மாதம் - 2026"

வாழ்நாள் முழுவதும்- எழுத்தே நண்பன் என்னும் தொனிப்பொருளின் கீழ், தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் சுற்றறிக்கையின் பிரகாரம், காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதம் 2026 ற்கான செயற்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றன.

இந் நிகழ்வுகளில் ஓர் அங்கமாக இன்று (29.10.2026) வியாழக்கிழமை, காத்தான்குடி நகர சபையின் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நகர முதல்வர் SHM அஸ்பர் (JP, UM) அவர்களின் வழிகாட்டலுக்கமைய நூலகர் பெளமியா ஷறுக் அவர்களின் தலைமையில் இணையம் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி சரியான தகவல்களை தேடுவது குறித்து மாணவர்கள் மற்றும் வாசகர்களுக்கு தெளிவூட்டும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தகவல்களை தேடுத‌ல் மற்றும் பாதுகாப்பான இணையத்தள பயன்பாட்டிற்கான சிறந்த வழிமுறைகள் தொடர்பான கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்து நடாத்தப்படது.

இக்கருத்தரங்கில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், நூலக வாசகர்கள், பொதுமக்கள் என பலரும் கல‌ந்து கொண்டு பயனடைந்தனர்.

காத்தான்குடி நகர சபையின் கழிவகற்றல் சேவைக்கு நவீன Mahindra 215 இயந்திரம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பு!2026 ஆம் ஆண்டுக்கா...
28/10/2026

காத்தான்குடி நகர சபையின் கழிவகற்றல் சேவைக்கு நவீன Mahindra 215 இயந்திரம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான PSDG திட்டத்தின் கீழ், காத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவு அகற்றல் சேவையை மேலும் வினைத்திறனாக்கும் நோக்கில் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட நவீன Mahindra 215 ரக இயந்திரம், இன்று 28.10.2026 நகர சபையின் கழிவகற்றல் முகாமைத்துவ மையத்திற்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இலங்கையின் உள்ளூராட்சி மன்ற வரலாற்றில் முதன்முறையாக இவ்வகையான நவீன இயந்திரத்தைக் காத்தான்குடி நகர சபை கொள்வனவு செய்துள்ளமை விசேட அம்சமாகும்.

காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள குறுகிய மற்றும் சிறிய வீதிகளுக்குள் இலகுவாகச் சென்று, குறுகிய நேரத்தில் அதிகளவான கழிவுகளைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அகற்றுவதற்கு இந்த இயந்திரம் பெரிதும் துணைபுரியும். இதன் மூலம் நகரின் சுகாதார மற்றும் தூய்மைப் பராமரிப்புப் பணிகள் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தப்படவுள்ளன.

இன்றைய கையளிப்பு நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் முதல்வர் SHM. அஸ்பர் JP UM, சபையின் செயலாளர் திருமதி ரினோஸா முப்லிஹ், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவின் பொறுப்பதிகாரி, சுகாதாரப் பரிசோதகர் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தேசிய வாசிப்பு மாதம் – 2026“வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்”காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தேசிய வாச...
28/10/2026

தேசிய வாசிப்பு மாதம் – 2026

“வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்”

காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நகர முதல்வர் SHM. அஸ்பர் (JP, UM) அவர்களின் வழிகாட்டலுக்கமைய, இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சரியான தகவல்களை தேடுவது குறித்து மாணவர்கள் மற்றும் வாசகர்களை தெளிவூட்டும் வகையில் 29.10.2026ம் திகதி ( வியாழக்கிழமை) ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பின்வரும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று
நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1. பாதுகா‌ப்பான இணையத்தள பாவனை.
2. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாடசாலை மாணவர்கள் எவ்வாறு பயன்பெறலாம்

இச்செயலமர்வில் மாணவர்கள் ம‌ற்று‌ம் பொதுமக்கள் அனைவரு‌ம் கல‌ந்து கொண்டு பயன்பெருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

காத்தான்குடி நகர சபை மற்றுமொரு வெள்ளி விருது வென்று மாபெரும் சாதனை! ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா 2026.மத்திய சுற்றாடல்...
19/10/2026

காத்தான்குடி நகர சபை மற்றுமொரு வெள்ளி விருது வென்று மாபெரும் சாதனை!
ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா 2026.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான 'ஜனாதிபதி சுற்றாடல் விருது' வழங்கும் விழாவில், உள்ளூராட்சி மன்றங்கள் பிரிவில் காத்தான்குடி நகர சபை வெள்ளி விருதினைப் (Silver Award) பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரிவில் தேசிய ரீதியாக வழங்கப்பட்ட அதிஉயர் விருதாக இது கருதப்படுகின்றது.

19.10.2026 இன்று திங்கட் கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மிக விமர்சையாக நடைபெற்ற இவ்விழாவில், பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரிய, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி, சுற்றாடல் அமைச்சர் கௌரவ (கலாநிதி) தம்மிக்க பட்டபெந்தி ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் விருதுகளையும் வழங்கி வைத்தனர்.

சிறந்த சுற்றாடல் பராமரிப்பு மற்றும் வினைத்திறனான திண்மக்கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளைப் பாராட்டியே காத்தான்குடி நகர சபைக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபை சார்பில் நகர முதல்வர் SHM.அஸ்பர் JP, UM, நகர சபையின் செயலாளர் திருமதி ரினோஸா முப்லி மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவின் பொறுப்பதிகாரி MMM. பைஸ் (MSO) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரிவில் காத்தான்குடி நகரசபை மற்றும் கொழும்பு மாநகரசபை ஆகியவற்றுக்கு மாத்திரம் வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இம்முறை எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் தங்கப் பதக்கம் வழங்கப்படாத நிலையில், இவ்விரு சபைகளும் நாடளாவிய ரீதியில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

'எல் நினோ' தீவிர மழை எச்சரிக்கை: காத்தான்குடி நகர முதல்வர் தலைமையில் அவசர முன்னாயத்தக் கூட்டம்!நாட்டில் எதிர்வரும் நாட்க...
07/10/2026

'எல் நினோ' தீவிர மழை எச்சரிக்கை: காத்தான்குடி நகர முதல்வர் தலைமையில் அவசர முன்னாயத்தக் கூட்டம்!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய ‘எல் நினோ’ (El Niño) காலநிலைத் தாக்கம் காரணமாக, சுமார் 800 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகக் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனப் பிரபல வானிலை ஆய்வாளரும் புவியியல் பேராசிரியருமான நா. பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.

குறிப்பாக எதிர்வரும் 19/10/2026, 05/11/2026, 22/11/2026 மற்றும் 04/12/2026 ஆகிய தினங்களில் கடும் மின்னல், காற்று மற்றும் தீவிர மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான அவசரக் கலந்தாலோசனைக் கூட்டம், நேற்று 06.10.2026 காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி நகர முதல்வர் SHM. அஸ்பர் JP, UM தலைமையில் இடம்பெற்ற இக்கலந்தாலோசனையில் நகர சபையின் செயலாளர், நகர சபையின் உறுப்பினர்கள், நகர சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்இய்யத்துல் உலமா சபை, பள்ளிவாயல்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பு, சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. காலநிலை அனர்த்தங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கங்களில் முன்னெடுக்குமாறு ஜம்இய்யத்துல் உலமா சபையினால் அனைத்துப் பள்ளிவாயல்களுக்கும் வலியுறுத்தப்படுதல்.

2. அனர்த்த நிலைமை ஏற்படும் பட்சத்தில் நகர சபை, பிரதேச செயலகம், பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் உலமா சபை ஆகியவை இணைந்து ஒருங்கிணைந்த குழுவாகக் களத்தில் இறங்கிச் செயல்படுதல்.

3. அவசர நிலைமைகளின் போது பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைப்பதற்காகப் பள்ளிவாயல்கள் சம்மேளனக் கட்டிடம், ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபம் மற்றும் முஹைதீன் மெத்தை பள்ளிவாயல் உள்ளிட்ட வளாகங்களை முழுத் தயார் நிலையில் வைத்திருத்தல்.

4. இடர் வலயங்களில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுதல், அவசர விழிப்புணர்வுகளை உடனுக்குடன் வழங்குதல், முதலுதவி வசதிகளை உறுதிசெய்தல் மற்றும் தற்காலிக மீள்குடியேற்றப் பணிகளைத் துரிதப்படுத்துதல்.

இத்திட்டங்களுக்கான விரிவான அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை இறுதி செய்வதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாலோசனைக் கூட்டம், எதிர்வரும் திங்கள்கிழமை 12.10.2026 ஆம் திகதி பிற்பகல் 3:30 மணிக்கு ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

குருநாகல் மாநகர சபை உயர்மட்டக் குழுவினர் காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோகபூர்வ விஜயம். திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்று...
04/10/2026

குருநாகல் மாநகர சபை உயர்மட்டக் குழுவினர் காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோகபூர்வ விஜயம். திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் பெரிதும் பாராட்டு!

நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழும் காத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் முன்மாதிரியான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நேரில் பார்வையிடுவதற்காக, குருநாகல் மாநகர சபையின் முதல்வர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் நேற்றைய தினம் (03.10.2026) காத்தான்குடிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.

குருநாகல் மாநகர முதல்வர் சட்டத்தரணி ஆனந்த சஹபந்து, பிரதி முதல்வர் M. அஷர்தீன் மொயினுடீன், மாநகர ஆணையாளர் W.M.P.P. வீரசிங்க ஆகியோர் தலைமையில் வருகை தந்த இக்குழுவில், மாநகர சபை உறுப்பினர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி நகர சபைக்கு வருகை தந்த இக்குழுவினரை, நகர சபையின் கௌரவ நகர முதல்வர் SHM. அஸ்பர் (JP, UM) அவர்கள் நேரில் வரவேற்றதுடன், நகரத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் இடங்களுக்கு அவர்களை நேரடியாக அழைத்துச் சென்றார்.

இவ்விஜயத்தின் போது, நாட்டின் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் காத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவு அகற்றும் முகாமைத்துவ நிலையம், வரலாற்றுச் சிறப்புமிக்க அல்-அக்ஸா பள்ளிவாயல், காத்தான்குடி நகர சபையினால் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வாவிக்கரை படகு சேவை மற்றும் பூர்வீக நூதனசாலை உள்ளிட்ட முக்கிய இடங்களை இக்குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆராய்ந்தனர்.

குறித்த கள விஜயத்தின் போது, கழிவு முகாமைத்துவ தொழினுட்ப முறைகள், நகர அபிவிருத்திப் பணிகள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து நகர முதல்வர் SHM. அஸ்பர் அவர்களால் குருநாகல் மாநகர சபைக் குழுவினருக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

காத்தான்குடி நகர சபையின் சிறந்த நிர்வாக நடைமுறைகள், திட்டமிடல்கள் மற்றும் முன்மாதிரித் திட்டங்களை குருநாகல் மாநகர சபையின் முதல்வர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் பெரிதும் பாராட்டியதுடன், இத்தகைய சிறந்த நடைமுறைகளைத் தங்களது மாநகரப் பகுதியிலும் சாத்தியமான வரம்பிற்குள் பயன்படுத்துவது குறித்து ஆர்வம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாத அங்குரார்பண நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.தேசிய வாசிப்பு மாதத்தின...
01/10/2026

காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாத அங்குரார்பண நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான வாசிப்பு மாத அங்குரார்பண நிகழ்வு இன்று 01.10.2026 நூலக மண்டபத்தில் நூலகர் பௌமியா ஷறூக் தலைமையில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் கௌரவ நகர முதல்வர் SHM. அஸ்பர் JP, UM அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அத்துடன் நகர சபைச் செயலாளர் திருமதி றினோஸா முப்லிஹ், கணக்காளர் MBM. இத்ரீஸ் SLAcS, நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் அஷ்-ஷுஹதா பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாசிப்பு மாதக் கொடிகள் அணிவிக்கப்பட்டு, தேசிய வாசிப்பு மாதப் பிரகடனம் மொழியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கௌரவ நகர முதல்வர் தனது சிறப்புரையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மாணவர்களுக்கான இலவச நூலக அங்கத்துவ அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, தேசிய வாசிப்பு மாத விழிப்புணர்வுப் பதாதையும் உத்தியோகபூர்வமாகத் திரைநீக்கம் செய்யப்பட்டது.

நிகழ்வின் ஓர் அங்கமாக வாசிப்பின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு உணர்த்தும் வகையிலான விழிப்புணர்வு ஊர்வலமும் பொதுமக்களுக்கான துண்டுப் பிரசுர விநியோகமும் மிகச் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Address

Kattankudi
30100

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00

Telephone

+94652245925

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kattankudy Urban Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kattankudy Urban Council:

Shortcuts

Share


Other Government Officials in Kattankudi

Show All