01/11/2026
ஸ்கந்தபுரத்தில் தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபை உருவாக்கம்!
தேசிய மக்கள் சக்தியின் வட்டார மட்ட அமைப்புகளைக் கட்டியெழுப்பி, மக்களின் பங்கேற்புடன் சமூகக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், ஸ்கந்தபுரம் வட்டார சபை அமைக்கும் நிகழ்வு கடந்த 31.10.2026 அன்று தோழர் பார்த்தீபன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் தோழர் வசந்த சமரசிங்க கலந்துகொண்டார்.
மேலும், கிளிநொச்சி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும் Clean Sri Lanka இணைப்பாளருமான தோழர் மருங்கன் மோகன், கரைச்சி பிரதேச சபையின் Clean Sri Lanka இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினரும் கண்டாவளைப் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருமான தோழர் சஜீவன், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் தோழர் சுஜீவன், பிரஜாசக்தி தலைவர்கள் உள்ளிட்ட பிரதேச மட்டப் பிரதிநிதிகள் மற்றும் ஸ்கந்தபுரம் வட்டாரப் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஸ்கந்தபுரம் வட்டார சபை உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட்டதுடன், வட்டார மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவர்களின் நேரடிப் பங்கேற்புடன் சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வட்டார மட்டத்தில் அமைப்புக் கட்டமைப்பை விரிவுபடுத்துதல், மக்களுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் அடிமட்ட மக்களின் தேவைகளை உரிய முறையில் முன்வைத்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மக்களின் பங்கேற்பு, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் வட்டார மட்ட அமைப்புகளின் ஊடாக சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.