Divisional Secretariat Thunukkai

Call Directions Website Contact the organization

Divisional Secretariat Thunukkai Service Public Service

பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் SEC/2026/E/07 இலக்க 22.09.2026 திக...
02/10/2026

பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு
📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் SEC/2026/E/07 இலக்க 22.09.2026 திகதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில்,

2026 நவம்பர் 01 ஆம் திகதி தொடக்கம் வாகன வரி அனுமதிப்பத்திரத்தை (Revenue Licence) பெற்றுக்கொள்வதற்கு

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (Taxpayer Identification Number – TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, வாகன வரி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் பொதுமக்கள் முன்கூட்டியே TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

TIN இலக்கத்தைப் பெறுவதற்கான பதிவுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளம்/தொடர்புடைய அலுவலகங்கள் ஊடாக மேற்கொள்ளலாம்.

பொதுமக்கள் தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஊடகப் பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கான காணிக்கச்சேரி=================================...
01/10/2026

துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கான காணிக்கச்சேரி
========================================================

துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் காணி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சட்ட பூர்வமான காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், காணிக்கச்சேரிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

30.09.2026 – அனிஞ்சியன்குளம் கிராம அலுவலர் பிரிவு

அனிஞ்சியன்குளம் கிராம அலுவலர் பிரிவில் 30.09.2026 அன்று காலை 9.00 மணிக்கு காணிக்கச்சேரி நடைபெற்றது.

இக்காணிக்கச்சேரியில் மேட்டுக்காணிக்காக விண்ணப்பித்த 34 பேருக்குரிய 34 காணித்துண்டுகளின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 29 விண்ணப்பதாரர்கள் நேரடியாகக் கலந்துகொண்டு தங்களது காணி தொடர்பான விடயங்களை முன்வைத்து பயன்பெற்றனர்.

இக்காணிக்கச்சேரி துணுக்காய் பிரதேச செயலாளர் திரு. இ. ரமேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. காணிக் கிளை உத்தியோகத்தர்கள், அனிஞ்சியன்குளம் கிராம அலுவலர், கிராம அபிவிருத்திச் சங்கம், கமக்கார அமைப்பு உள்ளிட்ட சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது விண்ணப்பதாரர்களின் குடும்ப நிலை, காணியின் தற்போதைய பயன்பாடு, குடியிருப்பு நிலை, காணி தொடர்பான ஆவணங்கள் மற்றும் காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான தகைமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டன.

காணி அனுமதிப்பத்திரங்கள் மூலம் மக்களின் சட்டப்பூர்வமான காணி உரிமையை உறுதிப்படுத்துவதும், நீண்டகாலமாக காணிகளைப் பயன்படுத்தி வருகின்ற குடும்பங்களுக்கு உரிய சட்டப்பூர்வ காணி ஆவணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் இக்காணிக்கச்சேரிகளின் முக்கிய நோக்கமாகும்.

மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்தி, அவர்களின் வாழ்வாதார மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட சிறந்த பொதுச் சேவையை வழங்கும் நோக்கில் துணுக்காய் பிரதேச செயலகம் இத்தகைய காணி தொடர்பான சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

ஊடகப்பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

2026 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒன்பதாவது பிரதேச செயலாளர் மாநாடு துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது=...
30/09/2026

2026 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒன்பதாவது பிரதேச செயலாளர் மாநாடு துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது
===========================================================
மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் ஊடாக பொதுமக்களுக்கு வினைத்திறனானதும் பயனுறுதியானதுமான அரச சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒன்பதாவது பிரதேச செயலாளர் மாநாடு நேற்று (29.09.2026) காலை 8.30 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாடு, 2026 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாட்டுத் தொடரின் ஒன்பதாவது மாநாடாக அமைந்தது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சுற்றறிக்கைகளுக்கு அமைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடுகள், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக, இம்முறை மாநாடு துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு வருகைதந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர், முதலில் துணுக்காய் பிரதேச செயலகத்தின் அலுவலகச் சூழல், அலுவலக முறைமைகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் முதலில் ஆராயப்பட்டதுடன், மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு நிர்வாக, அபிவிருத்தி மற்றும் சமூக நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக,

2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் பயன்பாடு
மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம்
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிராமிய அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்
பிரதேச செயலகங்களினூடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள்
பொதுமக்களுக்கான சேவை வழங்கலை மேலும் வினைத்திறனாக்குதல்
பிரதேச செயலகங்களின் நிர்வாக மற்றும் நிதிசார் செயற்பாடுகள்
திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம்
சமூக நலன்புரி மற்றும் சமூக சேவைச் செயற்பாடுகள்
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதன் மூலம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள்
துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் இனங்காணப்பட்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு நடவடிக்கைகள்

உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

மேலும், பிரதேச செயலகங்களின் நிர்வாகம், நிதி, திட்டமிடல், சமூக நலன்புரி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் காணப்படும் முன்னேற்றங்கள், சவால்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இம்மாநாட்டில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர், மாவட்ட நலன்புரி நன்மைகள் சபையின் மாவட்ட இணைப்பாளர், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, வெலிஓயா, ஒட்டுசுட்டான் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களை மையமாகக் கொண்ட வினைத்திறனானதும் பயனுறுதியானதுமான அரச சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் இம்மாநாடு முக்கியத்துவம் பெற்றது.

ஊடகப்பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகும் துணுக்காய் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “துணுக்காய் பிரதேச பண்பாட்டு...
22/09/2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகும் துணுக்காய் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026” நிகழ்வு, 2026 புரட்டாதி 22ஆம் திகதி இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு, துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள “கலைத் திலகம் அமரர் புவனேஸ்வரி நடராசா அரங்கில்” கோலாகலமாக நடைபெற்றது.

துணுக்காய் பிரதேச செயலாளர் திரு. இராமதாஸ் ரமேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக திரு. சிவராஜசிங்கம் ஜெயகாந்த், மேலதிக மாவட்டச் செயலாளர் காணி, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினராக திருவாட்டி தர்ஷினி நிதர்சன், பிரதிப் பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் அலகு, வடக்கு மாகாணம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், கௌரவ விருந்தினராக கலாபூஷணம் திரு. சிற்றம்பலம் சண்முகநாதன், மூத்த கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்வுகள் மற்றும் எமது தமிழர் பண்பாடு, கலை மரபுகள், பாரம்பரிய வாழ்வியல் ஆகியவற்றை எடுத்தியம்பும் பல்வேறு கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

துணுக்காய் பிரதேசத்தின் பாரம்பரிய கலைகள், பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் மரபுகளைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இப்பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், எமது மண்ணின் பாரம்பரிய விவசாயம், நன்னீர் மீன்பிடி, பனை மற்றும் இயற்கை வளங்கள், பாரம்பரிய ஆடை அணிகலன்கள், மரபுவழி உணவு, விருந்தோம்பல் மற்றும் கிராமிய வாழ்வியல் போன்ற பல்வேறு பண்பாட்டு அம்சங்கள் இந்நிகழ்வின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டன.

பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கலைஞர்கள், மாணவர்கள், இளைஞர்கள், அரச அலுவலர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்ற இப்பெருவிழா, துணுக்காய் பிரதேசத்தின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை ஒருங்கிணைத்து வெளிப்படுத்தும் முக்கியமான பண்பாட்டு நிகழ்வாக அமைந்தது.

“கலை இழந்த சமூகம், நிலை இழந்து போகும்” என்ற கருப்பொருளை முன்னிறுத்தி நடைபெற்ற இப்பண்பாட்டுப் பெருவிழா, அழிந்து வரும் பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்து, எமது பண்பாட்டு அடையாளங்களையும் விழுமியங்களையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது.

இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு வழங்கிய வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு, துணுக்காய் பண்பாட்டுப் பேரவை, பிரதம விருந்தினர், சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்கள், கலைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அரச அலுவலர்கள், சமூக அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பேரவையின் மனமார்ந்த நன்றிகள்.

எமது கலை எமது அடையாளம்
எமது பண்பாடு எமது பெருமை
எமது பாரம்பரியம் எமது எதிர்கால தலைமுறையின் சொத்து

ஊடகப்பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026==========================================================கலை இழந்த சமூகம்,...
22/09/2026

துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026
==========================================================

கலை இழந்த சமூகம், நிலை இழந்து போகும்.

எமது பாரம்பரிய கலைகள், பண்பாடு, வாழ்வியல் மற்றும் மரபுகளைப் போற்றிக் கொண்டாடும் துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026 நிகழ்வை நேரலையாகக் காணும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

நிகழ்வை நேரலையாகப் பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்

https://www.youtube.com/live/0ehvMMce-tE?si=LRLjzCardSVIPNCa

எமது கலைகள் வாழட்டும்!
எமது பண்பாடு தழைக்கட்டும்!
எமது பாரம்பரியம் தலைமுறைகள் கடந்து தொடரட்டும்!

ஊடகப்பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

#2026

12/09/2026

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்போம்!
=========================================================

இலஞ்சம் கேட்பதும் பெறுவதும் வழங்குவதும் சட்டவிரோதமானது.

அரச சேவையை வழங்குவதற்காக அரச அலுவலர் ஒருவர் இலஞ்சம் கோரினாலோ அல்லது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டாலோ அச்சமின்றி முறைப்பாடு செய்யுங்கள்.

பின்வரும் சந்தர்ப்பங்களில் முறைப்பாடு செய்யலாம்

• அரச சேவையை வழங்குவதற்காக இலஞ்சம் கோருதல்
• பணம் அல்லது வேறு சலுகைகளை சட்டவிரோதமாக கோருதல்
• அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல்
• ஊழல் அல்லது முறைகேட்டில் ஈடுபடுதல்
• இலஞ்சம் வழங்குமாறு நேரடியாகவோ மறைமுகமாகவோ கோருதல்

உங்களிடம் இலஞ்சம் கோரப்பட்டால்

மௌனமாக இருக்க வேண்டாம்!
அச்சப்பட வேண்டாம்!
முறைப்பாடு செய்யுங்கள்!

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் (CIABOC) தெரிவிக்கலாம்.

முறைப்பாடுகளுக்கான தொடர்பு விவரங்கள்

📞 அவசர தொலைபேசி இலக்கம்: 1954
📞 தொலைபேசி: 011 2596360
📠 தொலைநகல்: 011 2595045
📧 மின்னஞ்சல்: [email protected]

முகவரி:
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு
இல. 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.

நினைவில் கொள்வோம்

இலஞ்சம் கொடுக்காதீர்
இலஞ்சம் வாங்காதீர்
ஊழலை அனுமதிக்காதீர்
ஊழலை கண்டால் முறைப்பாடு செய்யுங்கள்

உங்கள் ஒரு முறைப்பாடு
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்!

“இலஞ்சமற்ற சேவை ஊழலற்ற சமூகம் நல்லாட்சி நிறைந்த இலங்கை”

ஊடகப்பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

மல்லாவி நகர அபிவிருத்தித் திட்டமிடல் தொடர்பான விசேட கலந்துரையாடல்==================================================மல்லா...
08/09/2026

மல்லாவி நகர அபிவிருத்தித் திட்டமிடல் தொடர்பான விசேட கலந்துரையாடல்
==================================================

மல்லாவி நகரத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டமிடல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் துணுக்காய் பிரதேச செயலாளர் திரு. இ. ரமேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், துணுக்காய் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர், தொடர்புடைய திணைக்களங்களின் தலைவர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, எதிர்வரும் காலங்களில் மல்லாவி நகரத்தை திட்டமிட்ட முறையில் எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பான பல்வேறு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு, அவை தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், சமூக மட்டப் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் திணைக்களத் தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டதுடன், முன்மொழியப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், எதிர்காலத்தில் துணுக்காய் பிரதேசத்தை மூன்றாம் தர நகரமாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

குறிப்பாக, யோகபுரம் பொதுவிளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்து, நவீன வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டு அரங்காக மாற்றியமைத்தல், நகரப்பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையானதும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததுமான முறையிலும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், கல்விளான் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கழிவகற்றும் இடத்தை நவீன வசதிகளுடன் கூடிய கழிவகற்றல் நிலையமாக மாற்றியமைத்தல், நெல் உலர்த்தும் ஆலையொன்றை அமைத்தல், நகரின் பிரதான மற்றும் இணை வீதிகளைத் தேவைக்கேற்ப விஸ்தரித்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், கலந்துரையாடலில் அடையாளம் காணப்பட்ட விடயங்களை நேரடியாக அவதானிக்கும் நோக்கில் மல்லாவி நகரப்பகுதிக்கு களவிஜயமும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நகரப்பகுதியில் காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், வீதிகளின் நிலைமை, கழிவகற்றல் நடவடிக்கைகள், விளையாட்டு மற்றும் பொது வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் நேரடியாக அவதானிக்கப்பட்டன. அத்துடன், அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலும் களவிஜயமும் மல்லாவி நகரத்தின் எதிர்கால அபிவிருத்தியை திட்டமிட்டதும் ஒருங்கிணைந்ததுமான முறையில் முன்னெடுப்பதற்கான முக்கியமானதொரு நடவடிக்கையாக அமைந்தது.

ஊடகப்பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

பிரதேச மட்ட மூன்றாம் காலாண்டு காணிப் பயன்பாட்டுக் குழுக்கூட்டம் – 2026==================================================...
05/09/2026

பிரதேச மட்ட மூன்றாம் காலாண்டு காணிப் பயன்பாட்டுக் குழுக்கூட்டம் – 2026
==================================================

துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு, விவசாயம் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக காணிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிகளைப் பரிசீலிக்கும் நோக்கில், 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக்கூட்டம் 04.09.2026 நேற்று வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு. இராமதாஸ் ரமேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணுக்காய் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், உதவிப் பிரதேச செயலாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், வனவளத் திணைக்கள உத்தியோகத்தர், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர், குடியேற்ற உத்தியோகத்தர், காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர், கிராம அலுவலர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் போது, குடியிருப்பு, விவசாயம் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்ட காணி விண்ணப்பங்கள் தொடர்பாக விரிவான பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது. காணிகளின் தற்போதைய பயன்பாடு, எதிர்காலப் பயன்பாட்டுத் தேவை, நடைமுறை விதிமுறைகள், சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பரிந்துரைகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு, ஒவ்வொரு விண்ணப்பமும் ஆராயப்பட்டது.

இதன் அடிப்படையில், நீண்டகாலக் குத்தகைக்கான 04 காணிகளுக்கும், 78 அனுமதிப்பத்திரக் காணிகளுக்கும் தேவையான அனுமதிகள் வழங்குவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சட்டபூர்வமான, நிலையான மற்றும் திட்டமிட்ட காணிப் பயன்பாட்டை உறுதி செய்வதிலும், காணி வளங்களை முறையாகப் பாதுகாத்து எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துவதிலும் இக்குழுக்கூட்டம் முக்கிய பங்காற்றுகிறது.

ஊடகப் பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

மூன்றாம் காலாண்டு பிரதேச விவசாயக் குழுக் கூட்டம் – 2026==============================================துணுக்காய் பிரதேசத்...
04/09/2026

மூன்றாம் காலாண்டு பிரதேச விவசாயக் குழுக் கூட்டம் – 2026
==============================================

துணுக்காய் பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு பிரதேச விவசாயக் குழுக் கூட்டம், 04.09.2026 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில், துணுக்காய் பிரதேச செயலாளர் திரு. இராமதாஸ் ரமேஸ் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர், பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், பெரும்பாக உத்தியோகத்தர், விவசாயப் போதனாசிரியர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், கமக்காரர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நன்னீர் மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் போது, எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வினால் விவசாய நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய தாக்கங்கள், எதிர்பார்க்கப்படும் காலநிலை மாற்றங்கள் மற்றும் அவற்றினால் விவசாயத் துறையில் ஏற்படக்கூடிய சவால்கள் தொடர்பாக விவசாயப் போதனாசிரியரினால் விரிவான விளக்கம் வழங்கப்பட்டது.

மேலும், எல் நினோ உள்ளிட்ட காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீர்வளத்தை முறையாகப் பயன்படுத்துதல், பயிர்ச்செய்கைத் திட்டமிடல் மற்றும் எதிர்கால விவசாய நடவடிக்கைகளைச் சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், பிரதேச விவசாயிகளின் தற்போதைய தேவைகள், விவசாய நடவடிக்கைகளில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் உரிய கவனம் செலுத்தப்பட்டு, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

“விவசாயம் வளர்ந்தால் கிராமம் வளரும்
கிராமம் வளந்தால் நாடு வளரும்.”

ஊடகப்பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

Address

Thunukkai
Mallavi

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94212285262

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat Thunukkai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Divisional Secretariat Thunukkai:

Shortcuts

Share