30/10/2026
பாடசாலையின் முக்கிய ஆவணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை: அதிபர், பிரதி அதிபர் அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு இரும்புக் கதவுகள் அமைப்பு
எமது பாடசாலையின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு இரும்புக் கதவுகள் அமைக்கும் வேலைத்திட்டம், பாடசாலையின் முக்கிய தேவைகளில் ஒன்றாக இருந்து வந்தது. புதிய அதிபர் 𝐒𝐌.𝐒𝐔𝐉𝐀𝐍 அவர்கள் பதவியேற்ற நாள் முதல், இத்தேவையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வந்தார்.
ஆசிரியர்களின் சுயவிவரக் கோவைகள், பொருட்பதிவேடுகள், சம்பளத் திரட்டுகள், மாணவர் பதிவேடுகள், பரீட்சைப் பெறுபேறுகள் உள்ளிட்ட பல்வேறு பெறுமதிமிக்க ஆவணங்கள் இவ்விரு அலுவலகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாவணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பாடசாலையின் நிர்வாகச் செயற்பாடுகளைப் பாதுகாப்பாக முன்னெடுக்கும் நோக்கிலும் இத்திட்டம் முக்கியத்துவம் பெற்றது.
இந்நிலையில், பாடசாலையின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் 𝐘𝐁𝐀.𝐒𝐔𝐋𝐓𝐇𝐀𝐍 அவர்களின் முயற்சியினால், கட்டார் நாட்டின் நிறுவனத்தின் சமுதாயத் தொடர்பு அதிகாரியான அஷ்ஷெய்க் 𝐔𝐋.𝐉𝐀𝐍𝐎𝐎𝐅𝐀𝐑 அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் இவ்வேலைத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் அதிபர் மற்றும் பிரதி அதிபர் அலுவலகங்களுக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு இரும்புக் கதவுகள் 2026 ஒக்டோபர் 30ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் 𝐒𝐌.𝐒𝐔𝐉𝐀𝐍, பிரதி அதிபர் அஷ்ஷெய்க் 𝐘𝐁𝐀.𝐒𝐔𝐋𝐓𝐇𝐀𝐍 மற்றும் இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பை வழங்கிய அஷ்ஷெய்க் 𝐔𝐋.𝐉𝐀𝐍𝐎𝐎𝐅𝐀𝐑 ஆகியோர் இணைந்து கொண்டதுடன், ஏனைய ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
பாடசாலையின் முக்கிய தேவையை நிறைவேற்றுவதற்காக முழுமையான நிதிப் பங்களிப்பை வழங்கிய அஷ்ஷெய்க் யூ. எல். ஜனூஃபர் அவர்களுக்குப் பாடசாலைச் சமூகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
அவரது இப்பங்களிப்புக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்கி, அவரது ஆயுள், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத்தில் அபிவிருத்தியையும் பரக்கத்தையும் வழங்குவானாக எனப் பிரார்த்திக்கின்றோம்.