05/09/2026
🏆 முதலாவது Mayor’s Challenge Trophy 2026 – Bolton S.C சம்பியன்!*
புத்தளம் மாநகர சபையின் தலைமையில், Puttalam Football League உடன் இணைந்து நடாத்தப்பட்ட முதலாவது Mayor’s Challenge Trophy 2026 கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி 2026.09.04 அன்று Puttalam District Ground இல் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் Bolton S.C மற்றும் New Stars S.C அணிகள் மோதிய நிலையில், Bolton S.C 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
இந்நிகழ்வின் பிரதம மற்றும் விசேட அதிதிகளாக, ஆளும் அரசாங்கத்தின் அமைப்பாளரும், புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி அமைப்பாளருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் Gayan Janaka மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Mohamed Faizal ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புத்தளம் மாநகர முதல்வர் Eng. Rinsad Ahamed அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெற்றி பெற்ற அணிகள் மற்றும் போட்டியில் பங்குபற்றிய அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள், பணப்பரிசுகள், விசேட விருதுகள் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இச்சுற்றுப்போட்டியை சிறப்பாக வழிநடத்திய Puttalam Football League நிர்வாகத்தினருக்கு, புத்தளம் மாநகர சபையின் சார்பில் எமது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ⚽🏆
🏆 පළමු Mayor’s Challenge Trophy 2026 – Bolton S.C ශූරතාව දිනාගනී!
පුත්තලම මහ නගර සභාවේ මූලිකත්වයෙන්, Puttalam Football League සමඟ එක්ව සංවිධානය කළ පළමු Mayor’s Challenge Trophy 2026 පාපන්දු තරගාවලියේ අවසන් මහා තරගය 2026.09.04 දින Puttalam District Ground හිදී පැවැත්විණි.
අවසන් මහා තරගයේදී Bolton S.C සහ New Stars S.C කණ්ඩායම් තරග වැදුණු අතර, Bolton S.C කණ්ඩායම ගෝල 3–1ක් ලෙස ජයග්රහණය කර ශූරතා කුසලානය දිනාගත්තේය.
මෙම අවස්ථාවට ප්රධාන හා විශේෂ ආරාධිතයන් ලෙස, ආණ්ඩු පක්ෂ සංවිධායක සහ පුත්තලම දිස්ත්රික් ජාතික ජන බලවේගයේ සංවිධායක, ගරු පාර්ලිමේන්තු මන්ත්රී Gayan Janaka මහතා සහ පුත්තලම දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී Mohamed Faizal මහතා සහභාගී වී උත්සවය වර්ණවත් කළහ.
පුත්තලම නගරාධිපති Eng. Rinsad Ahamed මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැති මෙම අවස්ථාවේදී ජයග්රාහී කණ්ඩායම් සහ තරගාවලියට සහභාගී වූ කණ්ඩායම් සඳහා කුසලාන, මුදල් ත්යාග, විශේෂ සම්මාන සහ තවත් ත්යාග රැසක්** පිරිනමා ගෞරව දැක්වීය.
මෙම තරගාවලිය සාර්ථකව මෙහෙයවූ Puttalam Football League පරිපාලනයට පුත්තලම මහ නගර සභාව වෙනුවෙන් අපගේ විශේෂ ස්තූතිය පළ කරමු. ⚽🏆