08/10/2026
https://www.facebook.com/100065207542465/posts/1485337210316516/
සංහිඳියාවට නව මාධ්ය පාලමක් — ONUR වෙතින් ‘සංහිඳියාව සඳහා මාධ්ය සංසද’ නියමු ව්යාපෘතියක්
https://www.smn24.lk/?p=10514
මාධ්ය ආචාරධර්ම, සත්යවාදීත්වය සහ මනුෂ්යත්වය කේන්ද්ර කරගනිමින් මාධ්යවේදීන්ගේ වගකීම පිළිබඳ තෙදින වැඩසටහනක් අතුරුගිරියේදී
ශ්රී ලංකාවේ ජාතික සමගිය, සහජීවනය සහ සංහිඳියාව ශක්තිමත් කිරීමේ ක්රියාවලියේදී මාධ්යයේ භූමිකාව තවදුරටත් පුළුල් කිරීමේ අරමුණින් ජාතික සමගිය හා ප්රතිසන්ධානය සඳහා වන කාර්යාලය (ONUR) විසින් ‘සංහිඳියාව සඳහා මාධ්ය සංසදය’ පිහිටුවීමේ නියමු ව්යාපෘතියක් ක්රියාත්මක කර තිබේ. එම නියමු වැඩසටහන පසුගිය 05 වැනිදා සිට 07 වැනිදා දක්වා අතුරුගිරිය NIPM ආයතනයේදී සාර්ථකව පැවැත්විණි.
ONUR පෙන්වා දෙන්නේ ගැටුම් පරිවර්තනය සහ සංහිඳියාව සඳහා මාධ්යයට සුවිශේෂී භූමිකාවක් පවතින බවයි. විශේෂයෙන්ම ජනතාව අතර සංවාදය ගොඩනැගීම, විවිධත්වය පිළිගැනීම සහ මෙතෙක් අඩුවෙන් අවධානයට ලක්වූ හඬවල් සමාජයට ගෙන ඒම සඳහා මාධ්යය භාවිත කළ හැකි බව එම කාර්යාලයේ මාධ්ය හා සන්නිවේදන වැඩසටහන් මගින් අවධාරණය කරයි.
මාධ්ය ආචාරධර්ම හා සංහිඳියාව පිළිබඳ විශේෂ අවධානයක්
නියමු වැඩසටහනේදී මාධ්ය ආචාරධර්ම සහ විනය පිළිබඳ විශේෂ අවධානය යොමු කරමින් ‘සත්යවාදීත්වය’, ‘මනුෂ්යත්වය වෙනුවෙන් සන්නිවේදනය’, ‘මාධ්ය ග්රාහක සුසංවාදය’, ‘හෘද සාක්ෂ්ය’ සහ ‘අනාගතවාදීත්වය’ යන සංකල්ප හා මොඩියුල කේන්ද්ර කරගත් සාකච්ඡා සහ ක්රියාකාරකම් පැවැත්විණි.
මෙහි මූලික අරමුණ වූයේ වාර්තාකරණයේදී සත්යය හා වගකීම ආරක්ෂා කරමින්, ජාතික හා ආගමික විවිධත්වයට ගරු කරන සහ සමාජ බෙදීම් වෙනුවට සංවාදය හා සහජීවනය ප්රවර්ධනය කරන මාධ්ය භාවිතයක් පිළිබඳ අවබෝධය ශක්තිමත් කිරීමයි.
ONUR විසින් දැනටමත් සංහිඳියාවට අදාළ මාධ්ය ආචාරධර්ම පද්ධතියක් පිළිබඳ වැඩසටහන් ක්රියාත්මක කරමින් සිටින අතර, වෛරී ප්රකාශ, සංවේදී සිදුවීම් අතිශයෝක්තියෙන් ඉදිරිපත් කිරීම සහ මාධ්ය භාවිතය හරහා සමාජ බෙදීම් ඇතිවීම වැනි කරුණු සම්බන්ධයෙන් වගකීම් සහගත මාධ්ය භාවිතයක අවශ්යතාව අවධාරණය කරයි.
වැඩසටහනේ ආරම්භක දේශනය ජාතික සමගිය හා ප්රතිසන්ධානය සඳහා වන කාර්යාලයේ සභාපති විජිත් රොහාන් ප්රනාන්දු මහතා විසින් පවත්වන ලදී. වැඩසටහනේ ප්රධාන සම්පත්දායකයා ලෙස ජ්යෙෂ්ඨ මාධ්යවේදී විමල් කැටිපේආරච්චි මහතා එක්වූ අතර, සම සම්පත්දායකයින් ලෙස ප්රවීණ මාධ්යවේදී සහ ලේඛක චන්දන තිලකරත්න, ලේක්හවුස් කර්තෘ මණ්ඩල අධ්යක්ෂ සහ ජ්යෙෂ්ඨ මාධ්යවේදී සිසිර යාපා, ප්රවීණ ලේඛක හා මාධ්යවේදී කසුන් පුස්සවෙල, ජ්යෙෂ්ඨ මාධ්යවේදීනී ඉෆ්තියා කාදර්, ජ්යෙෂ්ඨ මාධ්යවේදීනී රන්සි රණසිංහ, ජ්යෙෂ්ඨ මාධ්යවේදීනී ප්රමිශ්කා සහ කථිකාචාර්ය නුවන් සුභසිංහ යන මහත්ම මහත්මීහු එක්වූහ.
වැඩසටහන මෙහෙයවීම ජාතික සමගිය හා ප්රතිසන්ධානය සඳහා වන කාර්යාලයේ සහකාර අධ්යක්ෂ එච්. එස්. ලක්මාල් මහතා විසින් සිදුකරන ලදී.
මාධ්යය සංහිඳියාවේ මෙවලමක් කර ගැනීම
ශ්රී ලංකාවේ විවිධ ජනවාර්ගික, ආගමික හා සංස්කෘතික කණ්ඩායම් අතර අවබෝධය සහ විශ්වාසය වර්ධනය කිරීමේදී මාධ්යයට කළ හැකි දායකත්වය සම්බන්ධයෙන් ONUR දිගුකාලීන වැඩසටහන් රැසක් ක්රියාත්මක කර තිබේ. එහි මාධ්ය හා සන්නිවේදන වැඩසටහන යටතේ ධනාත්මක සන්නිවේදනය, සංවාදය, ජනවාර්ගික විවිධත්වය පිළිබිඹු කිරීම සහ ප්රජාවන්ගේ හඬ ශක්තිමත් කිරීම වැනි අංශ කෙරෙහි අවධානය යොමු කර ඇත.
එමෙන්ම මාධ්යවේදීන් සඳහා පුහුණු වැඩසටහන් පැවැත්වීමද ONUR හි පුළුල් සංහිඳියා ක්රියාකාරකම්වල කොටසකි. 2026 වසරේදී ශ්රී ලංකා ගුවන්විදුලි සංස්ථාව සමඟ එක්ව ගුවන්විදුලි මාධ්ය පුහුණු වැඩසටහන් ද මේ හරහා ක්රියාත්මක කර තිබේ.
නිමාවූ, මෙම නියමු ව්යාපෘතිය හරහා මාධ්යවේදීන් අතර සංහිඳියාව පිළිබඳ පුළුල් සංවාදයක් ඇති කරමින්, අනාගතයේදී සංහිඳියාව වෙනුවෙන් ක්රියා කරන මාධ්යවේදීන්ගේ සහ මාධ්ය වෘත්තිකයන්ගේ ජාලයක් හා මාධ්ය සංසදයක් ගොඩනැගීම සඳහා පදනමක් සකස් කිරීම අපේක්ෂාව වී තිබේ.
ONUR යනු ජාතික සමගිය සහ සංහිඳියාව ප්රවර්ධනය කිරීම සඳහා පිහිටුවන ලද ආයතනයක් වන අතර, එහි ප්රධාන අරමුණ වන්නේ විවිධත්වය සමරන අතරම සියලු ජන කොටස්වල මූලික අයිතිවාසිකම්, නිදහස, සමානාත්මතාව සහ අන්යෝන්ය ගෞරවය තහවුරු වන සමාජයක් ගොඩනැගීමයි. ඒ වෙනුවෙන්, 2015 අප්රේල් 8 දිනැති කැබිනට් තීරණය මත ONUR පිහිටුවා ඇති අතර, 2015 දෙසැම්බර් 18 දිනැති ගැසට් පත්රය මගින් ජාතික සංහිඳියාවට අදාළ කටයුතු එම කාර්යාලයට පවරන ලදී. 2020 අගෝස්තු 9 දිනැති අතිවිශේෂ ගැසට් පත්රය මගින් එය අධිකරණ අමාත්යාංශයේ විෂය පථයට ඇතුළත් කර ඇති අතර, 2024 අංක 1 දරන ජාතික සමගිය හා ප්රතිසන්ධානය සඳහා වන කාර්යාල පනත මගින් එය ව්යවස්ථාපිත ආයතනයක් බවට පත් කර තිබේ.
මාධ්යය තොරතුරු සපයන මෙවලමක් පමණක් නොව, සමාජය සුවපත් කිරීමේ, විශ්වාසය ගොඩනැගීමේ සහ විවිධත්වය අතර පාලම් තැනීමේ බලවත් මෙවලමක් බවට පත් කිරීමේ අරමුණින් ආරම්භ කළ මෙම නියමු ව්යාපෘතිය, ශ්රී ලංකාවේ සංහිඳියා ක්රියාවලියට මාධ්යයේ දායකත්වය නව මානයකට ගෙන යාමට වැදගත් පියවරක් ලෙස සැලකිය හැකිය.
நல்லிணக்கத்திற்கான புதிய ஊடகப் பாலம் — ONUR இன் ‘நல்லிணக்கத்திற்கான ஊடக மன்றம்’ முன்னோடித் திட்டம்
ஊடக ஒழுக்கநெறிகள், உண்மைத்தன்மை மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்டு ஊடகவியலாளர்களின் பொறுப்பு தொடர்பான மூன்று நாள் நிகழ்ச்சித் திட்டம் அத்துருகிரியவில்
இலங்கையில் தேசிய ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் செயற்பாட்டில் ஊடகத்தின் பங்கை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) ‘நல்லிணக்கத்திற்கான ஊடக மன்றம்’ ஒன்றை நிறுவுவதற்கான முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த முன்னோடித் திட்டம் கடந்த 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை அத்துருகிரிய NIPM நிறுவனத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
மோதல் மாற்றம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஊடகத்திற்கு தனித்துவமான பங்கு இருப்பதாக ONUR சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, மக்களிடையே உரையாடலை உருவாக்குதல், பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளச் செய்தல் மற்றும் இதுவரை குறைந்தளவில் கவனம் செலுத்தப்பட்ட குரல்களை சமூகத்தின் முன் கொண்டு வருதல் ஆகியவற்றிற்கு ஊடகத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை அந்த அலுவலகத்தின் ஊடகம் மற்றும் தொடர்பாடல் நிகழ்ச்சிகள் வலியுறுத்துகின்றன.
ஊடக ஒழுக்கநெறிகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் விசேட கவனம்
முன்னோடித் திட்டத்தின் போது ஊடக ஒழுக்கநெறிகள் மற்றும் ஒழுக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ‘உண்மைத்தன்மை’, ‘மனிதநேயத்திற்காக தொடர்பாடல்’, ‘ஊடக நுகர்வோர் நல்லிணக்கம்’, ‘மனச்சாட்சி’ மற்றும் ‘எதிர்கால நோக்கு’ ஆகிய கருத்துகள் மற்றும் தொகுதிகளை மையமாகக் கொண்டு கலந்துரையாடல்கள் மற்றும் செயற்பாடுகள் நடத்தப்பட்டன.
செய்தி அறிக்கையிடலின்போது உண்மை மற்றும் பொறுப்புணர்வைப் பாதுகாத்து, தேசிய மற்றும் மத ரீதியான பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்கும், சமூகப் பிளவுகளுக்குப் பதிலாக உரையாடல் மற்றும் சகவாழ்வை ஊக்குவிக்கும் ஊடகப் பயன்பாடு தொடர்பான புரிதலை வலுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாக இருந்தது.
ONUR ஏற்கனவே நல்லிணக்கத்துடன் தொடர்புடைய ஊடக ஒழுக்கநெறிக் கட்டமைப்பு தொடர்பான நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தி வருவதுடன், வெறுப்புப் பேச்சுகள், உணர்வுபூர்வமான சம்பவங்களை மிகைப்படுத்தி வெளியிடுதல் மற்றும் ஊடகப் பயன்பாட்டின் மூலம் சமூகப் பிளவுகள் ஏற்படுதல் போன்ற விடயங்களில் பொறுப்பான ஊடகப் பயன்பாட்டின் அவசியத்தையும் வலியுறுத்தி வருகிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற வளவாளர்கள்
நிகழ்ச்சியின் ஆரம்ப உரையை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் விஜித் ரோஹன் பெர்னாண்டோ அவர்கள் நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் பிரதான வளவாளராக மூத்த ஊடகவியலாளர் விமல் கெட்டிபேஆரச்சி அவர்கள் இணைந்துகொண்டார்.
இணை வளவாளர்களாக,
பிரபல ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சந்தன திலகரத்ன,
லேக்ஹவுஸ் ஆசிரியர் குழு பணிப்பாளரும் மூத்த ஊடகவியலாளருமான சிசிர யாப்பா,
பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கசுன் புஸ்ஸவெல,
மூத்த ஊடகவியலாளர் இப்தியா காதர்,
மூத்த ஊடகவியலாளர் ரன்சி ரணசிங்க,
மூத்த ஊடகவியலாளர் பிரமிஷ்கா,
விரிவுரையாளர் நுவன் சுபசிங்க
ஆகியோர் இணைந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் எச். எஸ். லக்மால் அவர்கள் வழிநடத்தினார்.
ஊடகத்தை நல்லிணக்கத்திற்கான கருவியாக மாற்றுதல்
இலங்கையின் பல்வேறு இன, மத மற்றும் கலாசாரக் குழுக்களுக்கு இடையில் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் வளர்ப்பதில் ஊடகம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாக ONUR நீண்டகாலமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன் ஊடகம் மற்றும் தொடர்பாடல் நிகழ்ச்சியின் கீழ், நேர்மறையான தொடர்பாடல், உரையாடல், இனப் பன்முகத்தன்மையை பிரதிபலித்தல் மற்றும் சமூகங்களின் குரல்களை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களுக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதும் ONUR இன் விரிவான நல்லிணக்கச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகும். 2026ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து வானொலி ஊடகப் பயிற்சி நிகழ்ச்சிகளும் இதன் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
நிறைவடைந்துள்ள இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம், ஊடகவியலாளர்களிடையே நல்லிணக்கம் தொடர்பான விரிவான உரையாடலை உருவாக்கி, எதிர்காலத்தில் நல்லிணக்கத்திற்காக செயற்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் துறைசார் நிபுணர்களின் வலையமைப்பையும் ஊடக மன்றத்தையும் உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதே எதிர்பார்ப்பாகும்.
ONUR தொடர்பில்
ONUR என்பது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட நிறுவனமாகும். பல்வகைமையைக் கொண்டாடும் அதேவேளை, அனைத்து மக்கள் குழுக்களினதும் அடிப்படை உரிமைகள், சுதந்திரம், சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை உறுதிப்படுத்தப்படும் சமூகத்தை உருவாக்குவதே அதன் பிரதான நோக்கமாகும்.
இதற்காக, 2015 ஏப்ரல் 8ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் ONUR நிறுவப்பட்டது. பின்னர், 2015 டிசம்பர் 18ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேசிய நல்லிணக்கத்துடன் தொடர்புடைய பணிகள் அந்த அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
2020 ஆகஸ்ட் 9ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அது நீதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. மேலும், 2024ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகச் சட்டத்தின் மூலம் அது சட்டரீதியான நிறுவனமாக மாற்றப்பட்டது.
ஊடகம் என்பது தகவல்களை வழங்கும் ஒரு கருவி மட்டுமல்லாது, சமூகத்தை ஆற்றுப்படுத்துதல், நம்பிக்கையை உருவாக்குதல் மற்றும் பன்முகத்தன்மைக்கு இடையே பாலங்களை அமைத்தல் ஆகியவற்றுக்கான வலிமையான கருவியாகவும் மாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டம், இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாட்டில் ஊடகத்தின் பங்களிப்பை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்லும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படலாம்.
#මාධ්යසංහිඳියාව
#සංහිඳියාව Office for National Unity and Reconciliation - ONUR