KM/Al-Hilal Vidyalaya Sainthamaruthu

Call Directions

KM/Al-Hilal Vidyalaya Sainthamaruthu Official page of the KM/Al-Hilal Vidyalaya, Sainthamaruthu.

அல் - ஹிலால் வித்தியாலயத்தில் தேசிய மனநல வார நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு!தேசிய மனநல வாரத்தை முன்னிட்டு, கல்வி அமைச்சின...
20/10/2026

அல் - ஹிலால் வித்தியாலயத்தில் தேசிய மனநல வார நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு!

தேசிய மனநல வாரத்தை முன்னிட்டு, கல்வி அமைச்சின் சுற்றுநிருப அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் ஒக்டோபர் 09ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை ஐந்து வேலை நாட்களை உள்ளடக்கிய பல்வேறு மனநல விழிப்புணர்வு நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டன.

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே மனநலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், மன அழுத்தங்களை ஆரோக்கியமான முறையில் கையாளும் திறனை வளர்த்தல், உணர்வுகளைச் சரியான முறையில் வெளிப்படுத்துவதற்கான வழிகாட்டல்களை வழங்குதல் மற்றும் நேர்மறையான சிந்தனைகளை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அத்துடன், மாணவர்களின் உணர்வுசார் நலனை மேம்படுத்தி, அச்சம், கவலை, மன அழுத்தம் போன்ற சவால்களை அடையாளம் காணவும், அவற்றை எதிர்கொள்வதற்கான பொருத்தமான வழிமுறைகளை அறிந்துகொள்ளவும் உதவுவதோடு, பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான கற்றல் சூழலைப் பாடசாலையில் உருவாக்குவதற்கும் இத்திட்டம் முக்கியத்துவம் அளித்தது.

இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக அங்குரார்ப்பண விழாவும், தேசிய மனநல நினைவுச் சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகள் மனநலத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதோடு, மனநலப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை பாடசாலைச் சமூகத்திடம் ஏற்படுத்தும் நோக்கத்தையும் கொண்டிருந்தன.

தொடர்ந்து, தரம் 5 முதல் தரம் 10 வரையிலான மாணவர்களுக்கும், பாடசாலை மாணவர் தலைவர்களுக்கும் மனநலம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இக்கருத்தரங்குகள் மூலம் மனநலத்தைப் பேணுதல், மன அழுத்தங்களை நிர்வகித்தல், சுயமதிப்பை வளர்த்தல், உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல், சக மாணவர்களுடன் நல்லுறவைப் பேணுதல் மற்றும் பிரச்சினைகளை நேர்மறையான முறையில் அணுகுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.

மேலும், மனநல விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் பரவலாக்கும் நோக்கில் விழிப்புணர்வுப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், மனநலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சுலோகங்கள் மற்றும் கவிதைப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இச்செயற்பாடுகள் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கும், மனநலம் தொடர்பான கருத்துக்களை ஆக்கபூர்வமான முறையில் பகிர்ந்துகொள்வதற்கும் வாய்ப்பளித்தன.

இந்நிகழ்வுகளில் வளவாளர்களாகக் கலந்துகொண்ட பல்வேறு துறைசார் நிபுணர்கள், மாணவர்களுக்கு மனநலத்தின் அவசியம், மன அழுத்தங்களைக் கையாளும் வழிமுறைகள், உணர்வுகளைச் சரியான முறையில் வெளிப்படுத்துதல், நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுதல் மற்றும் சவாலான சூழ்நிலைகளில் தகுந்த உதவியை நாடுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயனுள்ள விளக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

மனநலப் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தாமல், அவற்றை உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, நம்பிக்கைக்குரிய ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் உரிய நிபுணர்களின் உதவியைப் பெறுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. இதன் மூலம் மனநலம் தொடர்பான தவறான எண்ணங்களை நீக்கி, ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் மனப்பாங்கை மாணவர்களிடையே வளர்ப்பதற்கும் ஊக்கமளிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் இறுதி நாளில் நடைபெற்ற பாடசாலை காலை ஆராதனையின்போது, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் பாராட்டி, மனநல விழிப்புணர்வுச் செயற்பாடுகளில் அவர்களின் ஆர்வத்தையும் பங்கேற்பையும் மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.

பாடசாலையின் அதிபர் KL. அப்துல் ஜஃபர் அவர்களின் வழிகாட்டலின் கீழும், வழிகாட்டல் ஆலோசனைப் பொறுப்பாசிரியர் MS. ஷிப்லி ஷம்சுதீன் அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் நெறிப்படுத்தலின் கீழும், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஒத்துழைப்பாளர்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வுகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட்டன.

ஐந்து வேலை நாட்களை உள்ளடக்கிய இத்திட்டத்தின் மூலம் மாணவர்களிடையே மனநலம் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், அவர்களின் உணர்வுசார் நலனைப் பாதுகாப்பதற்கும், மனநலத்திற்கு ஆதரவான பாடசாலைச் சூழலை உருவாக்குவதற்கும் பயனுள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துடன் அவர்களின் மனநலமும் சமமான முக்கியத்துவம் பெற வேண்டுமென்பதை வலியுறுத்திய இத்திட்டம், ஆரோக்கியமான மனநிலையுடன் கூடிய மாணவர் சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த முயற்சியாக அமைந்தது.

இந்நிகழ்வுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கிய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வளவாளர்கள் மற்றும் ஏனைய ஒத்துழைப்பாளர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை விருத்திச் செயலமர்வு – 2026மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, எமது பாடசா...
17/10/2026

பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை விருத்திச் செயலமர்வு – 2026

மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, எமது பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை விருத்திச் செயலமர்வு இன்று (17.10.2026) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.

“Transform for Teachers – From Traditional Teaching to Smart Teaching” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வின் வளவாளராக A. SATHIQUE ARSATH (B.Sc. Hons, PGDE, Mini MBA, SLTS) அவர்கள் கலந்துகொண்டார்.

இச்செயலமர்வின் மூலம் பாரம்பரிய கற்பித்தல் முறைகளிலிருந்து நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் திறன்மிகு கற்பித்தல் முறைகளுக்கு மாறுதல், ஆசிரியர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் கற்றல்–கற்பித்தல் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுத்தல் தொடர்பான விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

இச்செயலமர்வு ஆசிரியர்களின் தொழில்சார் வாண்மையை விருத்தி செய்வதற்கும், நவீன கல்விச் சூழலுக்கு ஏற்ப கற்பித்தல் அணுகுமுறைகளை மேம்படுத்துவதற்கும் பயனுள்ளதாக அமைந்தது.

03/10/2026
01/10/2026
அல்-ஹிலால் வித்தியாலயத்தின்  மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு - 2026எமது பாடசலையில் புதிதாக நியமிக்கப்பட்ட...
28/09/2026

அல்-ஹிலால் வித்தியாலயத்தின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு - 2026

எமது பாடசலையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாணவர் தலைவர்கள், வகுப்பு தலைவர்கள் மற்றும் உதவி வகுப்பு தலைவர்களுக்கான “Prefects & Monitors Badge Pinning and Certificate Awarding Ceremony – 2026” நிகழ்வு செப்டம்பர் 22ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் KL.அப்துல் ஜௌபர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு. Sujith Wedamulla அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

மேலும், இந்நிகழ்வினை பாடசாலையின் வழிகாட்டல் ஆலோசனைக்கு பொறுப்பான ஆசிரியர் Major M. Shibly Shamsudeen ஒழுங்கமைப்பாளராக செற்பட்டு நிகழ்வினை நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் Mrs. Asma A. Maleek, SDEC செயலாளர் Eng. MCK. Nishath ஆகியோர் நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

மேலும், 38ஆவது தேசிய மாணவர் படையணியின் கட்டளை அதிகாரி Major KM. Thameem, சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி Mr. DC. Indhika, அதிபர்களான Mr. MSM. Baishal, Mr. AB. Sheron Dilras, பிரதி அதிபர் Mr. SM. Uwais உள்ளிட்ட விசேட விருந்தினர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் எமது பாடசாலையின் பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஒழுக்காற்றுக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும்
,கல்வி ஆர்வலர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது புதிதாக நியமிக்கப்பட்ட Prefects, Monitors மற்றும் Assistant Monitors ஆகியோருக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன், Prefects களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மாணவர் தலைவர்கள் தமது பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் சேவை தொடர்பான உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், மாணவர்களின் இசை அணிவகுப்பு, பொல்லடி, நடன நிகழ்ச்சிகள், வரவேற்பு நடனம், சிறப்பு உரைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.

மேலும், பாடசாலையின் கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலையின் ஒழுக்க கட்டுப்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களிடையே தலைமைத்துவம், பொறுப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

"அமைதியான மனம் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும்"  அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்வு.  சாய்ந்தமரு...
26/09/2026

"அமைதியான மனம் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும்" அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்வு.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் "மாணவர்களின் மன அமைதி, ஒருமுகப்படுத்தல் மற்றும் நேர்மறையான சிந்தனையை வளர்க்கும் நோக்கில் “Children Council Meditation Programme” எனும் சிறுவர் தியான நிகழ்வு 2026.09.24 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் KL.அப்துல் ஜஃபர் அவர்களின் ஆலோசனையின் கீழும், ஒழுக்கம் மற்றும் வழிகாட்டல் ஆலோசனைக்கு பொறுப்பான ஆசிரியர் ஷிப்லி ஷம்சுத்தீன் அவர்களின் வழிகாட்டலின் கீழும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் மனதை அமைதிப்படுத்துதல், தன்னம்பிக்கையை வளர்த்தல், கவனத்தை ஒருமுகப்படுத்துதல் மற்றும் கற்றல் செயற்பாடுகளில் நேர்மறையான மனநிலையை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன் இத்தியான நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வின் வளவாளராக கொழும்பு இந்திய கலாச்சார நிலைய முன்னை நாள் யோகாசன போதனாசிரியர் கலாபூஷணம் கா. சந்திரலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான யோகாசன பயிற்சிகளை வழங்கினார்.

மேலும், சாய்ந்தமருதய பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், சிறுவர் நல மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல் உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் அமைதியான சூழலில் தியானப் பயிற்சிகளில் ஈடுபட்டதுடன், மன அமைதி மற்றும் நல்லொழுக்கத்தின் முக்கியத்துவம் தொடர்பான அனுபவத்தையும் பெற்றுக்கொண்டனர்.

எமது பாடசாலையின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவினால் இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதுடன் மாணவர்களின் ஆளுமை விருத்தி மற்றும் நற்பண்புகளை மேம்படுத்தும் வகையில் இத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் இந்நிகழ்வின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

“அமைதியான மனமே ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும்” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களிடையே மன அமைதி, ஒழுக்கம் மற்றும் நேர்மறையான சிந்தனையை வளர்ப்பதற்கான பயனுள்ள நிகழ்வாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

17/09/2026

🎨✨ A Special Invitation to Our Art Exhibition! ✨🎨

Our Art Exhibition will remain open for one more day—tomorrow, Friday—until 6.00 p.m.

We warmly invite all our dear students and respected parents to visit the exhibition,
enjoy the wonderful collection of paintings, drawings, arts and crafts, and other creative works,
and celebrate the artistic talents of our students.

🌟 Your presence, appreciation, and encouragement will inspire our young artists to explore their creativity and reach even greater heights.

📅 Date: Tomorrow – Friday
🕕 Time: Until 6.00 p.m.
📍 Venue: School Auditorium

💚 Come, enjoy, appreciate, and encourage our talented young artists! 🎨🌸

We look forward to welcoming you all!
💚💚💚
Enjoy your day!!!

Al-Hilal Vidyalaya, Sainthamaruthu.

Address

Main Street
Saintamaruthu
32280

Opening Hours

Monday 07:00 - 02:30
Tuesday 07:00 - 02:30
Wednesday 07:00 - 02:30
Thursday 07:00 - 02:30
Friday 07:00 - 02:30

Telephone

+94672222374

Website

Alerts

Be the first to know and let us send you an email when KM/Al-Hilal Vidyalaya Sainthamaruthu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category