09/08/2026
நற்செய்தி!
எமது திருக்கோவில் கால்நடை வளர்ப்பு பண்ணையாளர் பயிற்சி நிலையத்தில் TVEC சான்றிதழுடன் கூடிய புதிய பயிற்சி நெறிகள்!
எமது திருக்கோவில் கால்நடை வளர்ப்பு பண்ணையாளர் பயிற்சி நிலையத்தில் (Animal Husbandry Farmer Training Centre, Thirukkovil), மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் (TVEC) அங்கீகாரம் பெற்ற சான்றிதழுடன் கூடிய "பால்பண்ணை உதவியாளர்" (Dairy Farming Assistant Course) பயிற்சி நெறியை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ முதற்கட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன!
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாகாண பணிப்பாளர் Dr. MAM. Zulficar Aboobucker அவர்களின் ஆலோசனையிலும், எமது நிலைய பொறுப்பதிகாரி Dr. Mrs. T. Gohulathaash அவர்களின் வழிகாட்டுதலிலும், அபிவிருத்தி உத்தியோகத்தர் Mr. NM. Naushad அவர்களினால் இத்திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டது.
மாகாண பணிப்பாளர் அவர்களின் முழுமையான பரிந்துரையுடன் விவசாய அமைச்சுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து, விவசாய அமைச்சின் செயலாளரினால் TVEC ஆணைக்குழுவிற்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது எமது நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன.
✨ இப்பயிற்சியின் முக்கிய நோக்கங்கள்:
🎯 நவீன பால்பண்ணை முறைகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறைப் பயிற்சிகளை வழங்குதல்.
🎯 கிராமப்புற இளைஞர், யுவதிகளின் தொழிற்திறன்களை மேம்படுத்தி, புதிய சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல்.
🎯 எமது பிரதேசத்தின் கால்நடை உற்பத்தித் திறனை அதிகரித்து, வாழ்வாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்தல்.
இத்திட்டம் சிறப்புற அமைய வழிகாட்டிய கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாண பணிப்பாளர் அவர்களுக்கும்,
எமது கோரிக்கையை ஏற்று முதற்கட்டப் பணிகளை விரைவுபடுத்திய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா, பா.உ. அவர்களுக்கும், விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!