07/09/2026
♿ விசேட தேவையுடைய குழந்தை ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கிவைப்பு
****************************************
கிழக்கு மாகாணத்தில் இயங்கி வருகின்ற புகழிடம் நிறுவனத்தின் அனுசரணையில், வெருகல் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சமூக சேவைப் பிரிவினால் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடைய குழந்தை ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு இன்று (2026.09.07) நடைபெற்றது.
வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் , சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்கள், புகழிடம் நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
“அனைவருக்கும் சம வாய்ப்பு – அனைவரையும் உள்ளடக்கிய சமூகமே எமது இலக்கு.” ♿🤝
#வெருகல் _பிரதேச_செயலகம் #சமூகசேவை #விசேடதேவையுடையசிறுவர்கள் #சக்கரநாற்காலி #சமூகநலன்