04/10/2026
ம.இ.கா சிலாங்கூர் மாநிலத் தொடர்புக் குழுவின் 80-ஆம் ஆண்டு பேராளர் மாநாடு. இடம் IDCC Convention Centre, Shah Alam, 04 அக்டோபர் 2026 ஞாயிற்றுக்கிழமை.
ம.இ.கா சிலாங்கூர் மாநிலத் தொடர்புக் குழுவின் 80-ஆம் ஆண்டு பேராளர் மாநாடு இன்று IDCC Convention Centre, Shah Alam-இல் சிறப்பாக நடைபெற்றது.
இம்மாநாட்டில் ம.இ.கா கோலசிலாங்கூர் தொகுதி காங்கிரஸ் தலைவர் திரு. பி. நாகப்பன் A.M.N, P.J.K, தொகுதி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஈஜோக், மெலாவத்தி, ஜெரம் சட்டமன்றத் பகுதிகளுக்குட்பட்ட ம.இ.கா கிளைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் ம.இ.கா தேசிய தலைவர் மாண்புமிகு டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், சிலாங்கூர் மாநில பாரிசான் நேஷனல் & அம்னோ மாநிலத் தலைவர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மெகாட் சுல்கர்னயின், ம.இ.கா தேசிய துணைத் தலைவர்கள் டத்தோ அசோஜன், டத்தோ தி. முருகையா, டான்ஸ்ரீ ராமசாமி, ம.இ.கா தேசிய செயலாளர் டத்தோ டாக்டர் ஆனந்தன், பாரிசான் நேஷனல் உறுப்பு கட்சிகளின் மாநிலத் தலைவர்கள், ம.சி.சி., பிபிபி, IPF, மக்கள் சக்தி, கிம்மா தலைவர்கள், ம.இ.கா மத்திய செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் கிளைத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் முக்கிய அம்சங்கள்
ம.இ.காவின் அடுத்தகட்ட நகர்வுகள், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் 16-ஆவது பொதுத் தேர்தல் தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து முக்கிய கருத்துகள் பகிரப்பட்டன.
மேலும், கட்சியின் ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
நன்றி & பாராட்டு
ம.இ.கா சிலாங்கூர் மாநிலத் தொடர்புக் குழுவின் 80-ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை சிறப்பாகவும், ஒழுங்காகவும் ஏற்பாடு செய்த மாநிலத் தலைவர் டத்தோ சங்கர் ராஜ் அயங்கர், துணைத் தலைவர் திரு. ஸ்ரீதரன், செயலாளர் திரு. சசித்தரன் மற்றும் ம.இ.கா சிலாங்கூர் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
• 80 ஆண்டுகால சேவை
• 80 ஆண்டுகால ஒற்றுமை
• 80 ஆண்டுகால முன்னேற்றம்
ம.இ.கா – 80 ஆண்டுகளாக சமூகத்துடன், சமூகத்திற்காக!
KONVENSYEN PERWAKILAN KE-80 BADAN PERHUBUNGAN MIC NEGERI SELANGOR DI IDCC Convention Centre, Shah Alam
Ahad, 4 Oktober 2026.
Konvensyen Perwakilan ke-80 Badan Perhubungan MIC Negeri Selangor telah berlangsung dengan jayanya pada hari ini di IDCC Convention Centre, Shah Alam.
Konvensyen ini turut dihadiri oleh Ketua Bahagian MIC Kuala Selangor, Tuan P. Nagappen A.M.N, P.J.K, barisan Ahli Jawatankuasa Bahagian serta para Ketua-Ketua Cawangan MIC dari tiga kawasan Dewan Undangan Negeri (DUN), iaitu DUN Ijok, DUN Melawati dan DUN Jeram.
Turut hadir ialah Presiden MIC, YB Tan Sri Dato’ Sri Dr. S.A. Vigneswaran, Pengerusi Barisan Nasional (BN) dan UMNO Negeri Selangor, YB Dato’ Sri Megat Zulkarnain, Naib-Naib Presiden MIC, Dato’ Asojan, Dato’ T. Murugiah dan Tan Sri Ramasamy, Setiausaha Agung MIC Dato’ Dr. Ananthan, para Pengerusi parti-parti komponen Barisan Nasional di peringkat negeri, termasuk MCA, PPP, IPF, Makkal Sakti dan KIMMA, Ahli Jawatankuasa Kerja Pusat (CWC) MIC serta para pemimpin bahagian dan cawangan.
Perkara Utama Konvensyen
Pelbagai perkara penting berkaitan hala tuju MIC, gerak kerja dan agenda masa hadapan parti serta persediaan menghadapi Pilihan Raya Umum ke-16 (PRU-16) telah dibincangkan dan dikongsikan dalam konvensyen ini.
Selain itu, Laporan Tahunan serta Laporan Kewangan turut dibentangkan dan dimaklumkan kepada para perwakilan.
Penghargaan & Terima Kasih
Setinggi-tinggi penghargaan dan ucapan terima kasih kepada Pengerusi MIC Negeri Selangor, Dato’ Shanker Raj Ayanger, Timbalan Pengerusi Tuan Sritheran, Setiausaha Tuan Sash*tharan, serta seluruh barisan Jawatankuasa MIC Negeri Selangor atas segala usaha, komitmen dan kerjasama dalam memastikan Konvensyen Perwakilan ke-80 ini berlangsung dengan lancar, tersusun dan berjaya.
• 80 Tahun Berkhidmat
• 80 Tahun Bersatu
• 80 Tahun Membawa Kemajuan
MIC – 80 Tahun Bersama Masyarakat, Berkhidmat Untuk Masyarakat!
MIC – 80 Years of Service.
80 Years of Unity.
80 Years of Progress.
#மஇகா